1980 களில் நான் படித்த ராஜேஷ் குமார் நாவல்கள்தான் அந்தக்காலத்து ஹைப்பர் லிங்க் ஸ்டோரிஸ். மூன்று அல்லது நான்கு வெவ்வேறு ட்ராக்குகளில் கதை நகரும், ஒவ்வொரு அத்தியாயமும் சஸ்பென்சுடன் முடிக்கப்படும் , அடுத்த அத்தியாயம் வேறு கதையாக இருக்கும். பிறகு நான்கு வெவ்வேறு ட்ராக் கதைகள் ஒரு மையப்புள்ளியில் இணையும். ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் க்தையை விட இந்த மாதிரி ஹைப்பர் லிங்க் ஸ்டோரி எழுதுவதும் சிரமம், அதை நாம் புரிந்து கொள்வதும் சிரமம்
ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஆன சில நேரங்களில் சில மனிதர்கள் கதைக்கும் இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை . 1977ல் அதே பெயரில் படமாகவும் அது வெளி வந்து வெற்றி பெற்றது. இந்தக்கதையின் டைட்டில் ஆக குற்ற உணர்ச்சி என்பதே மிகப்பொருத்தமாக இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு சாலை விபத்து நான்கு வெவ்வேறு இளைஞர்கள் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையின் ஒன்லைன்
நாயகன் ஒரு மொபைல் கம்பெனியில் சேல்ஸ் மேனாக இருக்கிறான். அங்கே பணி புரியும் ஒரு பெண்ணுடன் காதல். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது . திருமணப்பத்திரிக்கை வைக்க அப்பா அழைக்கும்போது நாயகன் மறுக்கிறான். அடுத்த வாரம் அந்த வேலையைப்பார்த்துக்கொள்ளலாம் என்கிறான்
நாயகன் பேச்சை மீறி அப்பா தனியாக பத்திரிக்கை வைக்க நண்பர் வீட்டுக்கு செல்கிறார். நண்பர் தன் உறவின்ர் மகனை பைக்கில் மெயின் ரோட்டில் டிராப் செய்யுமாறு சொல்கிறார். அவன் அவரை டிராப் செய்யாமல் பாதி வழியில் இறக்கி விட்டு நடந்து போகும்படி சொல்லி விடுகிறான்
இன்னும் சில நாட்களில் ஃபாரீன் போய் செட்டில் ஆக இருக்கும் ஒரு இளம் தம்பதி காரில் அந்த ரோடு வழியாக வரும்போது பேசிக்கொண்டே கவனக்குறைவாக நாயகனின் அப்பா மேல் மோதி விடுகிறார்கள் .அவர்கள் நினைத்திருந்தால் ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்க முடியும் , ஆனால் போலீஸ் பயம் காரணமாக நிற்காமல் போய் விடுகிறார்கள்
அந்த வழியே காரில் ஒரு சினிமா டைரக்டரின் மகன் வருகிறான். ஆள் அடிபட்டுக்கிடப்பதைப்பார்த்துக்காரை நிறுத்துகிறான். ஆனால் சிலர் அவன் தான் விபத்துக்காரணம் என நினைத்து அவனை அடித்து விடுகிறார்கள்
இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது ? ச்ந்தர்ப்ப சூழல் காரணமாக , குற்றம் செய்த நான்கு பேரும் தங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி விடுபட்டார்கள் என்பது மீதிக்கதை
நாயகன் ஆக அசோக் செல்வன். மனதில் இருக்கும் அன்பைக்கூட கோபமான வார்த்தைகளால் , சிடுமூஞ்சியாக இருந்து வெளிப்படுத்தும் வித்தியாசமான கேரக்டர். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அது ஓவர் டோஸ் ஆகி ஏன் இவர் எப்போப்பாரு எல்லோரிடமும் எரிந்து விழுகிறார் என எண்ண வைக்கிறது
அப்பாவாக நாசர் . தரமான நடிப்பு . கமல் தன் பெரும்பாலான படங்களில் இவருக்கு ஏன் வாய்ப்பளித்தார் என்பது நன்றாகத்தெரிகிறது . அனுபவம் மிக்க அற்புத நடிப்பு
விபத்தை ஏற்படுத்தும் எஞ்சினியர் ஆக ப்ரவிண் ராஜா ஒரு ஹீரோவுக்கு ஏற்ற முக பாவம் . ஆரம்பத்தில் வில்லன் போல் நடந்து கொண்டாலும் போகப்போக கச்சிதமாக நடித்திருக்கிறார்
பைக்கில் டிராப் செய்யாமல் பாதி வழியில் இறக்கி விடும் இளைஞனாக மணிகண்டன் , படம் முழுக்க குற்ற உணர்ச்சியால் அவர் அவதிப்படுவது நல்ல நடிப்பு
அழுகை , செண்ட்டிமெண்ட் இவைகளில் நம்பிக்கை இல்லாத இளைஞர் ஆக அபிஹாசன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி நன்றாக நடித்திருக்கிறார். பின் பாதியில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் இழுவை
நாயகனின் காதலி ஆக ரேயா நல்ல நடிப்பு , ஆனால் நாயகனுக்கு அக்கா போல் முக முதிர்ச்சி தெரிவ்து மைனஸ்
கே எஸ் ரவிக்குமார் ஒரு டைரக்டர் ஆகவே வருகிறார். யதார்த்தமான நடிப்பு
விஷால் வெங்கட்டின் திரைக்கதை , இயக்கம் அருமை
ரதன் இசையில் மெலோடி இசை கவனம் கவர்கிறது . பல இடங்களில் சோக ராகம் தான், பிஜிஎம் குட் . ஒளிப்பதிவு மெய்யேந்திரன் . காட்சிகளை கண் முன் நடப்பது போல படம் பிடித்து இருக்கிறார்
ஆர்ட் டைரக்சன் பெலிக்ஸ் ராஜா மனோஜ் குமார் யதார்த்தமாக அரங்கமைத்திருக்கிறார். ஜி கே பிரசன்னாவின் எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் செய்திருக்கலாம் என எண்ண வைக்கிறது
சபாஷ் டைரக்டர் (விஷால் வெங்கட்)
1 இயக்குநர் விக்ரமன் பாணியில் வில்லன் கேரக்டர் இல்லாமல் எல்லோரும் நல்லோரே என திரைக்கதை அமைத்த விதம்
2 பெரும்பாலான காட்சிகள் இழவு வீட்டில் நடப்பது போல் பிரமை ஏற்பட்டாலும் சலிப்பு தட்டாத காட்சி அமைப்புகள்
3 சோகமான காட்சிகள் அதிகம் என்றாலும் அது செயற்கையாக இல்லாமல் அந்த நிகழ்வில் நாமும் பங்கெடுத்து இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய விதம்
ரசித்த வசனங்கள்
1 நாம தப்பே பண்ணாதப்ப , நாம சொல்றதை யாரும் நம்பாதப்ப நமக்கு எப்படி இருக்கும் ?
2 நீ தப்பு பண்ணலைனு உனக்குத்தெரிஞ்சா போதும், யாருக்கும் அதை நிரூபிக்க வேண்டும்னு அவசியம் இல்லை
3 எல்லாருக்கும் நல்லவனா இருக்கறவன் இந்த உலகத்தில் யாரும் இல்லை
4 மத்தவங்க வயிற்றெரிச்சல்பட்டு நாம வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
5 எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு , பதறக்கூடாது , அவ்வளவுதான்
6 ஒரு தப்பு பண்ணீட்டு ரொம்ப நாள் மாட்டிக்காம இருக்க முடியாது
7 அநியாயமான இந்த உலகத்துல நியாயமா நடந்துக்கறதே அநியாயம்தான்
8 ஒரு குடும்பத்தில் அப்பா இல்லைன்னா என்ன ஆகும்னு உனக்குத்தெரியாது , எனக்குத்தெரியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அசோக் செல்வன் - ரேயா ஜோடி அடிக்கடி சண்டை போட்டு வாக்குவாதம் செய்வது , காரில் வரும் தம்பதி சண்டை போட்டுக்கொள்வது . , ம்ணிகண்டன் வேன் டிரைவ்ரிடம் சண்டை போடுவது , சினிமா டைரக்டர் கேரக்டர் அடிக்கடி இங்க்லீஷில் பேசுவது இவை எல்லாம் ஒரு கட்டத்தில் நம்மைக்கடுப்பேற்றுகிறது. ஓவர் டோஸ் மாதிரி தோன்றுகிறது
2 நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை , அக்கா தம்பி போல இருக்கிறார்கள்
3 மெயின் கதைக்கும் சினிமா டைரக்டர் கேரக்டருக்கும் அதிக தொடர்பு இல்லை என்பதால் அவர் காட்சிகள் அதிக நீளம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வீக் எண்ட் ஹாலிடே வில் படம் பார்க்கலாம், ஒர்க்கிங் டேவில் ப்டம் பார்த்தால் அடுத்த நாள் ஹேப்பி மூடில் வேலைக்கு செல்ல முடியாது . மனதை பாதிக்கும் நல்ல படம் ரேட்டிங் 3 / 5