மேஜிக் ரியலிசம் எனும் அலிபாபாவும் அற்புத விளக்கும் கான்செப்ட் இந்த வார கலைஞர் டி வி யில் ஞாயிறு காலை 10 .30 மணிக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கொடுத்தாங்க. லட்டு மாதிரி சப்ஜெக்ட்.ஆனா கலந்துக்கிட்ட 4 கதைகள்ல சந்தேகத்துக்கு இடமே இல்லாம எஸ் ராமகிருஷ்ணன் கதை தான் கலக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது.அது கடைசில......
1. தேய் மச்சி தேய் - இயக்கம் ராஜேஷ் குமார் ( எழுத்தாளர் ராஜேஷ் குமார் அல்ல)
க்ரெடிட் கார்டு யூஸ் பண்றது ரொம்ப டேஞ்ஜர்,கைல இருக்கற காசுக்கு தக்கபடி செலவு பண்ணி சிக்கனமா இருக்கனும்கற சாதாரன படிப்பினையை தரும் கதை. ஃபேண்ட்டசி எனும் தளத்துக்கு இவர் எடுத்துக்கிட்ட தீம் ரொம்ப சுமார்தான்.
2 நிமிஷத்துல கிட்டத்தட்ட 120 ஷாட்ஸ்ஸை ஸ்பீடா காண்பிக்கறாங்க. விழலுக்கு இறைத்த நீர். டைம் மிஷின் மாதிரி மினி ரிமோட் கிடைக்கப்பெற்றவன் இப்படி அல்ப சொல்பமா ஒரு ஷாப்பிங்க் மட்டும் தானா போவான்? கற்பனை எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தனும்.....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..
2. கைக்குள் சொர்க்கம் - ரமேஷ்
ஆட்டையைப்போட்டுட்டு வந்த ஒரு செல்ஃபோன்ல தற்செயலா கால் (CALL) சொர்க்கத்துக்கு போகுது... என்ன வேணும்னாலும் கேட்கலாம்.ரொம்ப சாதாரண ஆசைகளை நிறைவேத்திக்கறாரு ஹீரோ.க்ளைமாக்ஸ்ல ஃபோனுக்கு சொந்தக்காரர் வந்து அந்த ஃபோனை பிடுங்கிகறார். லாஜிக்கே இல்லை.
கதைல குறிப்பிட்டு சொல்ற மாதிரி கிராஃபிக்ஸ் ஒர்க் மட்டும் தான் நல்லாருந்தது.அதுவும் செல் ஃபோன் எண் அப்படியே வளைஞ்சு வானத்துக்கு போற சீன் அழகு. எதிர்பார்த்த மாதிரியே அந்த பட கிராஃபிக்ஸ் ஒர்க்கிற்கு பரிசு கிடைச்சுது.
3. வானவில் - கல்யாண்
இது கொஞ்சம் அம்புலிமாமா கதை டைப்பா இருந்தது.பணக்கார வீட்டுப்பசங்க விளையாடறதை ஏக்கத்தோட பார்க்கறான் ஏழைச்சிறுவன்.. அவனோட ஆசை ,லட்சியம் எல்லாமே பிரியா கூட விளையாடனும், அவ்வளவுதான்.குளத்துல இருக்கற மீன், “ நான் தான் தேவதை ,உனக்கு என்ன வேணும்”னு கேக்கறப்பக்கூட பிரியா கூட விளையாடனும்கற அதே பல்லவியைதான் பாடறான்.அவனுக்கு அந்த சான்ஸ் கிடைக்குது.
பிரியா கிட்டே தேவதை பற்றி சொல்றான். அவ நம்பாம ஆற்றங்கரைக்கு வந்து பார்க்கறா.அப்போ இருட்டிடுது. தேவதை வர்ல.( தேவதைங்களுக்கு இருட்டுன்னா பயம் போல..?)உடனே நீ பொய் சொன்னே.. தேவதைனு யாரும் கிடையாதும்ன்னு அந்த பிரியா சொல்லீட்டு போயிடறா..அவ்வளவுதான் கதை.ரொம்ப சுமாரான திரைக்கதை.
4. கொக்கரக்கோ - அருண்
மத்த 3 படங்களும் சொதப்புனதுக்கு வட்டியும் முதலுமா இந்தப்படம் செம கலக்கு கலக்கிடுச்சு. எஸ் ராம கிருஷ்ணனின் கதையைப்படிக்கறப்ப இருந்த அதே பாதிப்பு, உற்சாகம்,பர பரப்பு , சஸ்பென்ஸ் இந்தப்படத்துல அட்சரம் பிசகாம அப்படியே கொண்டு வந்தது இயக்குநரின் சாமார்த்தியம்.
சரவெடி சண்முகம்னு ஒரு அரசியல்வாதி - ஒரு மேடைல அவருக்கு சேவல் டாலர் செயினை பரிசா போடறாங்க. அப்போதிருந்து அவருக்கு பேச்சு வர்றதில்லை.. வாயைத்திறந்தா கொக்கரக்கோன்னு தான் சத்தம் வருது.அதை வெச்சு நடக்கற காமெடி கூத்துக்கள் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸ்ல அவர் மனம் நொந்துபோய் பீச்ல உக்காந்திருக்கறப்ப ஒரு திருடன் வந்து அவர் கிட்டே இருக்கற செயினை பறிச்சிட்டுப்போயிடறான்.இப்போ இவருக்கு பேச்சு வந்துடுது, திருடனுக்கு கொக்கரக்கோ குரல் வந்துடுது.
சரவெடி சண்முகமா வர்ற வரோட நடிப்பு, பாடிலேங்குவேஜ்,வசன உச்சரிப்பு எல்லாமே பிரமாதம்.கலக்கீட்டார் மனுஷன்.இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.ரொம்ப ரேர் (RARE) இந்த மாதிரி கான்செப்ட் கிடைக்கறது. கிட்டத்தட்ட எஸ் வி சேகரின் ஃபார்முலா..
ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)
பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.
என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும்.
இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்.
ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.