வித்தியாசமான த்ரில்லர் படங்களை தமிழ் திரை உலகுக்குத் தந்த தென்னக ஹிட்ச்சாக் என் எஸ் ராஜ்பரத்-ன் முதல்; படமான உச்சகட்டம் பார்த்தபின் அவரது எல்லாப்படங்களையும் பார்க்க ஆர்வம் வந்தது . ஆனா யூ ட்யூப்ல யோ மற்ற ஓ டி டி தளங்களிலோ அவரது சொல்லாதே யாரும் கேட்டால் , தொட்டால் சுடும் ஆகிய படங்கள் கிடைக்கவில்லை. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுரண்டை இதுதான் கிடைச்சுது. தெரிஞ்சவங்க ஸ்பாட் லைட் அடிங்க
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி விழி ஒளி இழந்த கிளி / பிறப்பால் அல்ல. பின் ஏற்பட்ட விபத்தால். அதை சரி செய்ய ஒரு டாக்டர் உறுதி அளிக்கிறார். அவர்தான் ஹீரோ, ஆனா இந்தப்படத்துல ஹீரோ டம்மி அதிக காட்சிகள் இல்லை , வில்லன் தான் மெயின்
வில்லன் ஒரு ஜட்ஜோட பையன், ஜட்ஜ் வீட்டில் இல்லாதப்ப வீட்டு வேலைக்காரன் கூட சேர்ந்து ஜாலியா டான்ஸ் ஆடறது , தண்ணி அடிக்கறது இப்டி பண்ணிட்டு இருக்கான். இன்னும் மேரேஜ் ஆகலை. விழி ஒளி இழந்த நாயகியின் தோழி கிட்டே லவ் ப்ரப்போஸ் பண்றான்
தோழியோட கேரக்ட்ர் என்னான்னா பணக்காரங்கன்னாலே அலர்ஜி ஏன்னா அவனுங்க எல்லாம் பெண்களோட வாழ்க்கைல விளையாடும் ப்ளே பாய்ஸ் எனும் எண்ணம் உள்ளவள் . அதனால வில்லனோட லவ் ப்ரப்போசலை ரிஜெக்ட் பண்றா. இதனால செம காண்ட் ஆகும் வில்லன் ஒரு நாள் தோழியின் ரூம்க்கு வர்றான். தகறாரு பண்றான். ரேப் பண்ண ட்ரை பண்றான். ஆனா அதுக்கு முன்னடி அவ எதிர்பாராத விதமா இறந்துடறா
இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்புல வில்லன் போட்டிருந்த பிரேஸ்லெட் கீழே விழுந்துடுது . சறுக்கல் நெம்பர் 1. கொலை நட்ந்த பின் அவசர அவச்ரமா வில்லன் மாடிப்படி இறங்கி வர்றான் அப்போ அங்கே பக்கத்து வீட்டுக்குழந்தை வில்லனைப்பார்த்துடுது சறுக்கல் நெம்பர்2
வில்லன் போன பின் நாயகி அந்த வீட்டுக்கு வர்றா . கண் தெரியலைன்னாலும் கால் விரல்ல தட்டுப்பட்டதால பிரேஸ்லெட்டை எடுத்து அவ ஹேண்ட்பேக்ல வைக்கறா
போலீஸ் ஸ்பாட்டுக்கு வருது . தடயவியல் நிபுணர்க்ள் வர்றாங்க . ரேகைகளை கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்க வீட்டுக்குப்போன வில்லன் வேலைக்காரன் சுட்டிக்காட்டிய பின் தான் பிரேஸ்லெட் மிஸ் ஆனதைப்பார்க்கிறான். அவனும் ஸ்பாட்டுக்கு வர்றான்
இதுக்குப்பின் இந்தக்கதைல நடந்த திருப்பங்கள் என்ன? வில்லன் மாட்டுனானா இல்லையா? டம்மி ஹீரோ தண்டமா என்ன தான் பண்ணாரு ? ஹீரோயினை லவ் ப்ண்ணுனதைத்தவிர// என்பதை யூ ட்யூப்ல காண்க. அது போக ஜியோ சினிமாஸ்ல நீட் பிரிண்ட்ல யும் கிடைக்குது
வில்லன் பேரு தெரில . ராஜானு விக்கி பீடியாவில் கடலோரக்கவிதைகள் ராஜா ஃபோட்டோவை தவறுதலா போட்டிருக்காங்க ஆள் ஹீரோ மாதிரி ஷோக்காதான் இருக்காரு .
ஹீரோவா டாக்டரா ஸ்ரீநாத். அதிக வாய்ப்பில்லை . வில்லன் கூட வர்ற வேலைக்காரனா ஏ வீரப்பன் என்பவர் வற்றார் நல்லா பண்ணி இருக்கார் கவுண்டமணி காமெடி டிராக் எடுதிய ஏ வீரப்பன் இவரா?னு தெரியலை
நாயகியா சாந்தி கிருஷ்ணா .அழகியமுகம் . கச்சித ஒப்பனை . கர்லிங் ஹேர் கட்டழகி . கண்ணிய உடை ஓவர் ஆக்டிங் ஓமனாவாக இல்லாத பரிதாப பாவனா.
நாயகியின் தோழியா வ்ருபவர் அஞ்சு பிரபாகராம் . சுவலட்சுமி மாதிரி அகணடவிழிகள் . திராவிட நிறம் சுட்டித்தனமான பேச்சு
இசை சங்கர் கணேஷ் . கச்சிதம் பிஜிஎம்மில் இன்னும் மிரட்டி இருக்கலாம்
எடிட்டிங் கனகச்சிதம் ஒன்றரை மணி நேரம் தான் படம்
ரசித்த காட்சிகள்
1 போலீஸ் வில்லனோட ஃபோட்டோ குடுனு கேட்டதும் வேலைக்காரன் வில்லனோட குழந்தை பருவ ஃபோட்டோவை தரும் சீன் செம
2 தோழி கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சீன்
3 வில்லனுக்கும் அந்த வேலைக்காரனுக்கும் உள்ள பாண்டிங். அவன் தானாகவே முன் வந்து எஜமானைக்காப்பாற்ற யத்தனிக்கும் தருணங்கள்
ரசித்த வசனங்கள்
1 சட்டப்படி எதுவும் செய்ய முடியாது ஏன்னா ஹியூமன் ரைட்ஸ்ல தலையிட முடியாது
ஹியூமன் ரைட்ஸ் இல்ல ஹியூமன் ராங்க்( wrong)
2 அனுமதி இல்லாம உள்ளே வர்றது அநாகரீகம், வீடு தேடி வ்ந்தவங்களை
வெளில போகச்சொல்றதுன் அநாகரீகம், எனிவே கம் இன்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வில்லன் தோழி வீட்டில் யாரும் இல்லாதப்ப வரும்போதே அவனை அலோ பண்ணி இருக்க வேண்டிய அவசியமே இல்லை . எதுக்காக உள்ளே விடுது நு தெரியலை
2 வில்லன் மேரேஜ் பண்ணிக்கறேன்னுதான் சொல்றான் பணக்காரன் . அதை ஏன் தோழி வேணாம்கறா? தெரில . லவ்யூ சொல்லி இருந்தா பிடிக்கலைனு சொல்றது ஓக்கே .
3 வில்லன் கொலை நட்ந்த ஸ்பாட்டுக்கு வந்ததே முதல் தப்பு அப்படி வரும் முன் இங்கே கொலை நட்ந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் ? என்ற கேள்வியை போலீஸ் கேட்டா எப்படி சமாளிப்பது என்ற நாலெட்ஜ் உடன் வந்திருக்கனனும்
4 வில்லன் திட்டமிட்டு கொலை செய்யலை . எதிர்பாராத விபத்து ., ஜட்ஜோட மகன் என்ப்தால் சட்ட ரீதியாகவே ஈசியா போராடி ஜெயிச்சிருக்கலாம். ஒரு கொலையை ம்றைக்க இன்னொரு கொலை அதை மறைக்க அடுத்துனு க்ரைம் ரேட் தேவை இல்லாம கூடிட்டே போகுது
5 வில்லன் தோழியின் வீட்டுக்கு வந்தப்ப சோபா கட்டில் கதவு என பல இட்ங்களில் கைரேகை பதிய்து ஆனா அந்த யானை சிலையை மட்டும் துடைச்சு வெச்ட்டு போறான் லூஸ் மாதிரி
4 கொலை நட்ந்த ஸ்பாட்டில் போலீஸ் எப்போதும் காவல் இருக்கும். அந்த பாப்பா சாட்சி சொல்லிடும்னு அதுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தர போலீஸ் இருக்கும்போதே வ்ருவது ரொம்ப ரிஸ்க்
5 சாட்சியான பாப்பாவைக்கொலை பண்ணனும்னா கார் ஏற்றி ஆக்சிடெண்ட் மாதிரி காட்டி இருக்கலாம் அதை விட்டுட்டு பாப்பா அதோட அம்மா என இருவரை தேவை இல்லாமல் கொலை செய்வது பின் தற்கொலைக்கடிதம் ரெடி பண்ணுவது ஓவர்
6 தற்கொலைக்கடிதத்தில் சைன் போடுனு வில்லன் மிரட்டி சைன் வாங்கறான் ஓக்கே ஆனா கடிதத்தை அவன் தானே எழுதறான் ரெண்டு சைனுக்கும் வித்தியாசம் தெரியாதா?
7 பிரேஸ்லெட் இருக்கும் ஹேன்பேக்கோட நாயகி ஹாஸ்பிடல்ல இருக்கா அப்போ அங்கே அவளைக்கொல்ல வரும் வில்லனை அப்பாவின் ந்ண்பர் பார்த்துடறார்னு அவரையும் போட்டுத்தள்ளுவது முட்டாள்த்தனம்
8 பாப்பா டேப் ரிக்கார்டர்;ல பதிவு பண்ணி விளையாடிட்டு இருக்கும்போது வில்லன் வந்து மிரட்டுவது அதில் பதிவாகுது ஆனா வில்லன் அதைக்கவனிக்காமல் விட்டது எப்படி ? கண் முன்னால டேபிள்ல தானே அது இருக்கு ?
9 சினிமாப்படம் ரிலீஸ் ஆனா அதன் அடியோகேசட் கலெக்சன் வாங்கி வைப்போ,ம் அது மாதிரி வில்லன் அசால்ட்டா கொலைகளை பண்ணிட்டே போய்க்கிட்டு இருக்கான் ஒரு கொலையைக்கூட உருப்படியா பண்ணலை எந்தக்கொலையும் தேவையும் இல்லை வேற ஆல்ட்டர்நேட்டிவ் வழி இருக்கு
10 போலீஸ் மோப்ப நாய் தண்டத்துக்கு இருக்கு டக்னு வில்லனை முதல் சீன்லயே பிடிச்சிருக்கலா,ம்.
11 போலீஸ் கேட்டா கொலை நட்ந்த விஷயத்தை ஃபோன் பண்ணி சொன்னேன்னு சொல்லிடுனு வில்லன் ஹோட்டல் ரிசபசன் ஆள் க்ட்டே சொல்றான் ஆனா போலீஸ் க்ராஸ் செக் பண்ணும்போது எந்த டெலிஃபோன் காலும் வர்லைனு கண்டு பிடிச்சிடுவாங்கனு ஏன் கெஸ் பண்ணலை ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - லாஜிக் மிஸ்டேக்சை மறந்துட்டுப்பார்த்தா இது ஓர்ளவு சுவராஸ்யமான படமே ஜியோ சினிமாஸ்ல பாருங்க ரேட்டிங் 2.25 / 5
Chinna Mul Peria Mul | |
---|---|
Directed by | N. S. Rajbharath |
Written by | N. S. Rajbharath |
Produced by | Indra |
Starring | Raja Sreenath Shanthi Krishna |
Cinematography | Tiwari |
Edited by | R. B. Thilak D. S. Maniyam |
Music by | Shankar–Ganesh |
Production company | Indra Creations |
Release date |
|
Running time | 95 minutes |
Country | India |
Language | Tamil |