1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”
“சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”
------------------------------------------------
2. “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”
“செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”
--------------------------------------------------------
3. “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”
“அவரு இந்த எலக்சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”
--------------------------------------------
4. “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”
‘’ஏன்?”
பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”
--------------------------------------------------
5. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”
---------------------------------------------------------
6. “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”
“எவண்டா உன்னை எலக்ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”
--------------------------------------------
7. “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”
“ஏன்?”
“அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”
-----------------------------------------------------
8. “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”
“234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.
-----------------------------------------
9. “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”
“இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”
----------------------------------------------------------
10. “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”
“ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”
-----------------------------------------------------------------
டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச் வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ மேட்டர்ல சொதப்புன மாதிரி......
டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...
டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு) அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?
டிஸ்கி 4 - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )
வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...
டிஸ்கி 5 - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி