எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல் கை வசம் இருக்கும் தைரியம் + விண்ணைத்தாண்டி வருவாயா படத்தால் சிம்புவுக்கு ஏற்பட்ட புது இமேஜ் & மார்க்கெட் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் +அனுஷ்காவின் இளமை இந்த மூன்று மேட்டர்களை கையில் வெச்சுக்கிட்டு இயக்குநர் க்ரிஸ் அதகளம் பண்ணி இருக்கலாம்.. ஆனா...
படத்தோட கதை என்ன?
.ராக் ஸ்டாராக ஆசைப்படும் இளமை துள்ளும் இளைஞன் ( பரத்),மருமகளின் (சரண்யா)கிட்னியை விற்க வரும் மாமனார்,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு, ஹைதராபாத் வருகிற. அயிட்டம் கேர்ள் (அனுஷ்கா),தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன் ( சிம்பு).,ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து போன சோகத்தில் ஒரு முஸ்லிம் (பிரகாஷ் ராஜ் ) இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.
இவர்கள் ஐந்து பேரும் வந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.என்ன நடக்கிறது என்பதே கதை.
சிம்புவுக்கு அல்வா மாதிரி கேரக்டர்.அவர் சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகள் கல கல காமெடி.சினேகா உல்லாள் தான் ஜோடி ( அவர் தங்கை பேர் மேனகா வெளி ஆள்?)ஆனா ஃபிகர் சுமார் தான்.. நடிக்க வாய்ப்பு இல்லாட்டி கூட பரவால்ல.. அவர் திறமையை (!!) காட்டக்கூட வாய்ப்பில்லாம போச்சேன்னு தான் இளவட்டங்கள் வருத்தம்.
அனுஷ்கா .. அருந்ததி மாதிரி கலக்கலான கேரக்டரில்,சிங்கம் மாதிரி கிளாமரான கேரக்டரில் பார்த்து விட்டு இந்த மாதிரி டிக்கெட் கேரக்டரில் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.ஆனா அவர் அசால்ட்டா ந்டிச்சிருக்கார். ஆனா தெலுங்கு பதிப்பை விட தமிழ்ல அவருக்கு அழகும் இளமையும் கம்மி தான்.. (இப்படியே கம்ப்பேர் பண்ணிட்டே இரு. )
பரத் கேரக்டர் வந்த வரை ஓக்கே என்றாலும் படத்துக்கு தேவை இல்லாத கேரக்டர் தான்.
படத்தில் மனம் கவரும் நடிப்பு சரண்யா, அவர் மாமனார், பிரகாஷ்ராஜ் இந்த 3 பேரும் தான்.சோனியா அகர்வால் பார்க்க பரிதாபமாக இருக்கார். செல்வராகவன் விட்டுட்டுப்போனதால் அப்படி இருக்காரா? அவர் அப்படி டல்லா இருக்கறதால அவர் விட்டுட்டுப்போய்ட்டாரா? என்பது சர்ச்சைக்குரியவிஷயம்.
சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
படத்தில் களை கட்டும் கலக்கல் வசனங்கள்
1. என் பைக்கை நான் என் ஒயிஃப் மாதிரி பார்த்துக்கறேன்..
சந்தானம்- அப்புறம் ஏண்டா வாசல்ல நிறுத்தி வெச்சிருக்கறே? வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வெச்சிருக்க வேண்டியது தானே?
2. இங்கே இருக்கறவங்க எல்லாம் பார்த்தியா ஆல் ஹை க்ளாஸ்....
சந்தானம்- - பார்த்தா எச்ச க்ளாஸ் மாதிரி இருக்கு?
3. சந்தானம்- ஏம்ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றேன்.. சிரிக்க மாட்டியா?
பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான்.
சந்தானம்- ஆமாமா.. பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான், விசில் அடிக்க மாட்டான்,ஜாலியை அனுபவிக்க மாட்டான்.. போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான்?
4. டேய்.. நான் ஒண்ணு சொல்லட்டா.. அந்தாள் பைக்கை நைஸா வித்துடலாமா?
சந்தானம்- செத்துடலாமா?ன்னு கேட்டிருக்கலாம். இதுக்கு
5. லேடி - வாங்க இன்ஸ்பெக்டர் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?
ரெகுலரா வர இது என்ன போலீஸ் ஸ்டேஷனா?
6. என்னது? சரோஜா ஒரு ஃபுல் நைட்டுக்கு வேணுமா? நீங்க தான் மேட்ச்ல வீக் ஆச்சே? எதுக்கு அவ?
உன்னை எல்லாம் லாக்கப்ல வெச்சு ஒரு வாரம் கும்முனாத்தான் புத்தி வரும்.
7. எத்தனை தடவை சொல்றது? உங்க கனவை ,ஆசைகளை என் மேல திணிக்காதீங்க..
8. சந்தானம்- பேசாம அம்பானி பொண்ணையே ரூட் விட்ரலாமா? பணக்காரன் ஆகிடலாம் ஈசியா..
ஆனா அம்பானிக்கு பையன் தான்
9. எப்படியாவது ரூ 40000 பணத்தை ரெடி பண்ணனும். 40 பேர்ட்ட ரூ 1000 கேட்கலாமா?
சந்தானம்- ஏன்? 40000 பேர்ட்ட ஆளுக்கு ரூ 1 கேளேன்..
10. சரி சரி.. இந்த செல்ஃபோன்ல இருக்கற எல்லா நெம்பருக்கும் டரை பண்ணு..யாராவது சிக்காமலா போவாங்க? கறந்துடலாம்.
சந்தானம்- கஸ்டமர் கேர் நெம்பர் தவிர எல்லா நெம்பரும் ட்ரை பண்ணீயாச்சு.
11. சந்தானம்- யோவ்.. நீ நல்ல பார்ட்டியா கல்யாணம் பண்ணாம ஒரு பாட்டியைப்[போய் கல்யாணம் பண்ணீ இருக்க..
சரி சரி.. கொலீக்ஸ் முன்னால என் மானத்தை கொலாப்ஸ் பண்னாதே..
12. சந்தானம்- உன் லவ் நல்ல ஒர்த்தா?
ரூ 600 கோடிக்கு அதிபதி.
ஆ.......
சந்தானம்- அதுக்கு ஏன் கார் டிக்கி மாதிரி வாயைப்பிளக்கறெ..?க்ளோஸ்
13. சரி.. ப்ளேன் என்னா>ன்னு சொல்லாம டீ சொல்றே,,?
இன்னுமா புரில..? அவன் ப்ளேனே இன்னைக்கு நம்ம கிட்டே ஓ சி டீ சாப்பிடறது தான்.
14. அந்தக்காலத்துல திருடறவன் பசிக்காக திருடுனான். இந்தக்காலத்துல புட்டிக்கும் குட்டிக்கும் திருடறான்.
15. ஏண்டி.. எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க..
இவங்க இப்படித்தான். சினிமா நடிகையையும், நம்மை மாதிரி பொண்ணுங்களையும் ஒரே மாதிரி பார்ப்பாங்க.. ( ச்சே ச்சே நீங்க நினைக்கறது தப்பு)
16. திரு நங்கை - ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு.. நாங்க எங்கேய்யா போவோம்.?
17. என்னது? நீங்க கன்னித்திருடன்களா? கன்னிப்பொண்ணுங்களை திருடுவீங்களா?
அட நீங்க வேற.. இது எங்க முத திருட்டு..
18. சரி.. நீங்க எப்படி? ஒன்லி திருட்டு தானா? இல்லை கொலை, ரேப் இந்த மாதிரி...?
சந்தானம்- இன்ஸ்பெக்டர் சார்.. என்னது இது சர்வர் மாதிரி வடை பொங்கல் போதுமா ? ரோஸ்ட் வேணாமாங்கறது மாதிரி கேட்கறீங்க?
19. யோவ்.. நாங்க தான் படிக்காதவளுக.. இந்த தொழிலுக்கு வந்துட்டோம். நீ படிச்சவன் தானே.. அரசாங்க வேலை ல தானே இருக்கே? யூனிஃபார்ம் போட்டுட்டு இப்படி சம்பாதிக்க வெட்கமா இல்லை? ( பளார்)
20. போலீஸ்களை நம்பக்கூடாது.. குழந்தையை காணோம்னு புகார் குடுத்தா பொண்டாட்டியை காணாம போக பண்ணிடுவானுங்க.. ( செம க்ளாப்ஸ்)
21. மத்த வேலைகள் செய்ய அனுபவம் வேணும். ஆனா இந்த தொழிலுக்கு அனுபவம் கம்மின்னா பணத்தை அள்ளி வீசுவாங்க.. அனுபவமே இல்லைன்னா கேட்கற பணம் கிடைக்கும்.
22. எனக்காக அவ கிட்டே என்னைப்பற்றின உண்மையை சொல்றியா?
சந்தானம்- ஏன்? நீ சொல்ல மாட்டியா? எத்தனை பொய் சொல்லி இருக்கே?
பொய் சொல்றது ஈஸி.. ஆனா உண்மை சொல்றது ரொம்ப கஷ்டம்.. (க்ளாப்ஸ்)
23. நான் போலீஸ்.. என்னையே டெரரிஸ்ட்னு சொல்றியா?
அப்பாவிகளை கொடுமைப்படுத்தற எல்லாரும் டெரரிஸ்ட்தான்.
24. சந்தானம்- டேய் நாயே.. சீ வெளில வா.. இவரு பெரிய பாரதிராஜா.. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பார்க்கறாரு..
25.. அடப்போடா.. என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிக்க வெச்சுட்டியே..?
சந்தானம்- நீ குடுத்த காசுக்கு உன்னை எலக்ஷன்லயா நிக்க வைக்க முடியும்?
26. எனக்கு இந்த தொழிலே வேணாம்யா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காட்ட முடியாத ஒரு வாழ்க்கையை ஒரு நல்ல சாவு காட்டிடுச்சு...
இயக்குநர்க்கு பொக்கே குடுக்கும் ஷாட்ஸ்
1. பிரகாஷ்ராஜ் தன்னிடம் அடி வாங்கினாலும் ஆபத்து நேரத்தில் தன்னை தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றினார் என்றதும் கை எடுத்துக்கும்பிடும் போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் வடிவமைத்த விதம்
2. யுவன் சங்கர் ராஜாவிடம் செமயான ஹிட்ஸ் சாங்க்ஸ் வாங்கியது.
3.உனக்கும் வேணும் எனக்கும் வேணும் பாடல் காட்சியை படமாக்கிய விதம்.
4. ஹாஸ்பிடல் காட்சியில் திருடிய பணத்தை சிம்பு திருப்பிக்குடுக்க வரும்போது அந்த பெரியவர் நடிப்பு.. அந்த காட்சி மார்வலஸ்
இயக்குநருக்கு சில யோசனைகள் & கேள்விகள்
1. இரண்டு வருஷத்துக்கு ஓட வேண்டிய மெகா சீரியல் ரேஞ்சுக்கு எதுக்கு படத்துல அத்தனை கேரக்டர்.? கசா முசான்னு ஏகப்பட்ட பேர் வர்றதால சாதாரண சினிமா ரசிகன் குழம்ப மாட்டானா?
2. படம் போட்ட முதல் ஒரு மணிநேரம் கதை எந்த திசைல பயணிக்குதுன்னே தெரில.. கதைல சுவராஸ்யம் கூட்ட க்ளைமாக்ஸ்ல பாம் வைக்கப்போற மேட்டரை ஆரம்பத்துலயே காட்டி இருந்தா டெம்ப்போ ஏத்தி இருக்கலாமே?
3. பரத் கேரக்டர் படத்துல எதுக்கு? தயவு தாட்சண்யமே இல்லாம அந்த கேரக்டரையே தூக்கி இருக்கலாம்.
4. அனுஷ்கா கில்மா பாட்டு சீன்ல லாங்க் ஷாட்ல யெல்லோயிஷ் ஷேடும் ,க்ளோஷப் ஷாட்ல ரெட்டிஷ் ஷேடும் எதுக்கு?அதெல்லாம் எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆச்சே?
5. எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல்இப்படித்தான் பிக்சரைசேஷன் பண்றதா? ஏதோ க்ளப் சாங்க் மாதிரி இருக்கு.இந்தப்பாட்டை பட்டாசு கிளப்ப எடுத்திருக்கலாம்.
6. சிம்புவோட காதல் ஆழமா காட்டப்படல.. ஒரு டூயட் வெச்சிருக்கலாம். கோடீஸ்வரி பொண்ணு குப்பத்துப்பையனை ஏன் லவ்வறா? குப்பத்துப்ப்பையன் ஏன் அப்படி மல்ட்டி மில்லியனர் மாதிரி இருக்கான்? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.
7. சிம்பு ஒரு சீன்ல அப்பா டி ஆர் மாதிரி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி அவரை மாதிரியே ஆடி இருக்காரு.. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா அவர் அப்போ செய்யும் ஆபாச சைகை ஓவர். ( சிங்கார வேலன்ல கமல் புதுச்சேரி கச்சேரி பாட்டுல.. பண்ணூவாரே.. அது போல )
8. சோனியாவின் கர்ப்பம் கலைந்ததும் பிரகாஷ்ராஜின் நடிப்பு இயல்பான நடிப்பின் கடைசிப்படியில் இருந்து ஓவர் ஆக்டிங்கின் முதல் படியை தொட்டது ஏன்?
9. பரத் பாடல் காட்சியில் எதுக்கு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி எரியுது,.. கண் வலி வந்தது தான் மிச்சம்..
10 ஹீரோ அறிமுகம் மகா சொதப்பல். 10 ரவுடிங்க வந்து அவர் எங்கே என க்கேட்பதும் அவர் உயரமான இடத்தில் இருந்து குதித்து8 ஓடுவதும் அவர்கள் துரத்துவதும் செம போர். ஏற்கனவே ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படங்கள்ல யும்,. ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆஃப் காட் ல யும் பார்த்து பார்த்து சலிச்சாச்சு.
பரத் கூட 2 ஃபிகருங்க சுத்துது.. அதுங்க பரட்டைத்தலயோட ஏன் இருக்கு? ஒரு ரப்பர் பேண்டோ,க்ளிப்போ வாங்க கூட வசதி இல்லியா? அய்யோ பாவம்... ஆனா அந்த ஓப்பனிங்க் பாடல்ல அந்த 2 ஃபிகரும் மழைல நனைஞ்சு ஒரு குலுக்கல் டான்ஸ் போடறாங்களே அடடா..
இந்தப்படம் ஏ செண்ட்டர்ல 30 நாட்கள். பி செண்ட்டர்ல 20 நாட்கள், சி செண்ட்டர்ல 10 நாட்கள் ஓடும்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
ஈரோடு அபிராமி,ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரணி என 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. நான் அபிராமில பார்த்தேன்
தியேட்டரில் ... ஒருத்தன் தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்
எவண்டா இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்
தியேட்டரில் ... ஒருத்தன் தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்
எவண்டா இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்
என்று பாடி விட்டு செல்கிறான்.. எஹே ஹே ஹேய்