Showing posts with label சினி்மா விமர்சனம். Show all posts
Showing posts with label சினி்மா விமர்சனம். Show all posts

Saturday, March 09, 2013

சுண்டாட்டம் - சினிமா விமர்சனம்

 
கேரம் போர்டு விளையாட்டை கதைக்களமாக வைத்து வந்திருக்கும் முதல் கமர்ஷியல் தமிழ்ப்படம் என்ற அளவில் இது ஒரு முக்கியமான பதிவு , டி வி சீரியல் (விஜய் டிவி ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் இயக்குநர் பிரம்மா)  இந்த அளவுக்கு ஒரு விறு விறுப்பான கமர்ஷியல் படம்  தர முடியும் என்பதே பெரிய விஷயம். வெல்கம் டைரக்டர் சார்!

ஹீரோ கேரம் ஆட்டத்தில் புலி . அவர் ஒரு ஏரியாவில் ஆல்ரெடி கேரம் சாம்ப்பியனாக இருக்கு ம்  ஒரு கஞ்சா கேஸ் ஆளுடன் மோதி ஜெயிக்கிறார். ஜெயிச்சவனுக்குத்தானே மாலை மரியாதை எல்லாம்? 10 வருஷம் ஃபீல்டுல இருந்தாலும் 11 வது வருஷம் புது ஆள் ஹிட் கொடுத்தா அவரைத்தான் உலகம் கொண்டாடும் , பழைய ஹிட் டர் கண்ணுக்குத்தெரியாது . அந்த வகைல பழைய சாம்பியனை வெச்சு கிளப் ல பணம் சம்பாதிச்ச ஒரு தாதா இப்போ ஹீரோவை கொண்டாடறார். 


 இது பழைய சாம்பியனுக்கு பிடிக்கலை . மனிதனின் மாற்ற முடியாத குணம் பொறாமை. அவன் பண்ற சதி வேலைகள் தான் திரைக்கதை . இது மாமூல் தாதாயிச படம் ஆகிடக்கூடாதுன்னு  ஒரு மெல்லிய , ரசிக்க வைக்கும் காதல் கதையும் உண்டு .


 படத்தின் முதல் ஹீரோ திரைக்கதை , இயக்கம் தான். புது முகங்கள் நடிச்சும் ஒரு சீன் கூட போர் அடிக்காம சீட்டின் நுனியில் அமர்த்தி இருக்கும்  அருமையான இயக்கம். எடிட்டிங்க் , கட்டிங்க்  செம ஷார்ப் . பின்னணி இசை என சொல்லப்படும் பி ஜி எம் அஜித் , விஜய்  ஆக்‌ஷன் படங்களுக்கு நிகராக இருப்பது ஆச்சரியம்!! வெல்டன். இன்னும் பெரிய பட்ஜெட் , பெரிய ஹீரோ படங்கள் கிடைத்தால் கமர்ஷியல் கலக்கல் இயக்குநர் லிஸ்ட்டில் இடம் பிடிப்பார் 


ஹீரோ  புதுமுகம் இர்பான் . கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர். பட ட்ரெய்லரில் இவர் முகம் பார்க்கும்போது  ஹீரோ முகமே சரி இல்லையே என யோசித்தேன் , ஆனால் திரைக்கதை , இயக்கம் சாமார்த்தியத்தால் அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி கவனிக்க வைத்திருக்கிறார். ஓவர் டோஸ் கிஞ்சித்தும் இல்லை , இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்களில் ஒரு புது முகம் சைன் பண்ணுவது அபூர்வம் ( உதயம் தெலுங்கு டப்பிங்க்கில் நாகார்ஜூன் செய்த மாதிரி ) 


ஹீரோயின்  அருந்ததி .  தாமிரபரணி பானு மாதிரி முகச்சாயல் ( உடம்பிலும் )  மிக சாந்தமான முகம், ஹோம்லி லுக் . காதல் கதை பேசும் கண்கள் ( கண் ரொம்ப சிறுசு , ஆனா காதலை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கார் ) அண்ணன் காதலனை மிரட்டும்போது , பின் அவர் சென்ற பின் காதலனிடம் வாதாடும்போது நல்ல நடிப்பு . மாநிறம் கொண்ட மாமணி .


வில்லனாக  வரும் அந்த கஞ்சா கேஸ் நடிப்பு கன கச்சிதம் .  மிரட்டலான நடிப்பு .ஹீரோ வெற்றியை விட்டுக்கொடுப்பதாக சொல்லும்போது அவர் சீறுவது அக்மார்க் ரகுவரன் நடிப்பு 


 ஹீரோவின் தங்கையாக வரும்  ஃபிகர் அடுத்து ஹீரோயினாக வாய்ப்பு உண்டு , கண்ணில் என்னா ஒரு குறும்பு .   ஷால் போடாத சுடியுடன் அவர் ஆடி அசைந்து வருவது கொள்ளை அழகு 


 அதே போல் ஹீரோயினின் தோழியாக 4 நிமிடமே வரும் சிந்தாமணிக்கலர் சுடிதார் கூட கூட்டத்தில் மின்னலாய் மறைந்த தேவதை 


 இது போக ஹீரோவின் நண்பர்கள் குரூப் , வில்லனின் அடியாட்கள் எல்லாருமே நல்ல நடிப்பு 


 
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1.  கேரம் விளையாட்டில் தோற்றுப்போன வில்லன் சோகமாக கடல் கரை ஓரம் அமர்ந்திருக்கும்போது சிச்சுவேஷனுக்கு  மேட்சிங்கா, கேட்சிங்கா பைசா கோபுரம் போல சாய்ந்து இருக்கும் கல் தூணை பின் புலமாக காட்டி இருப்பது நல்ல டச்சிங்க் லொக்கேஷன் 



2. ஹீரோயின் சொந்தக்கார தாத்தா வின் இழவுக்குப்போகும்போது அங்கே வரும் சாவுப்பாட்டு கலக்கல் கானா 


3. ஹீரோவின் பாஸ் ஆக வரும் தாதாவை போட்டுத்தள்ளும் கூட இருந்தே குழி பறிக்கும் புரூட்டஸ் துரோகியாக வரும் ஆள் முகத்தில் எப்போதும் இருக்கும் குழப்ப ரேகைகள் , குற்ற உணர்வு கன கச்சிதம் 


4. ஏக் தோ தீன் குத்தாட்டப்பாட்டில் வரும் நடன தாரகைகள் 4 பேர் முகமும் , ஆடை அலங்காரங்களும் அருமை 


5. பின்னணி  இசை , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு  போன்ற தொழில் நுட்பங்கள் படத்துக்கு பக்க பலம் , ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பும் கவனிக்க  வைக்கும் விதத்தில் 



இயக்குநரிடம் சில கேள்விகள்



1.  ஓப்பனிங்க்கில் கேரம் போர்டு கிளப்பில் ரெய்டு வரும் போலி போலீஸ்  பின் அதே இடத்தில் அப்போதே பங்கு பிரித்து ஈசியா மாட்டிக்குவாங்களா?  ஆல்ரெடி பேசி வெச்சுக்கிட்டு வேற இடத்துல தானே வேறிரு நாளில் தானே பணப்பரிவர்த்தனை நடக்கும் ? 


2. ஹீரோ முதன் முதலாக தாதாவின் ஆட்களால் துரத்தப்படும்போது நண்பனுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்றார், ஆனால் அப்போதே தாதாவுடன் நட்பாகி  சரக்கு அடிப்பதை மட்டும் ஏன் ஃபோன் பண்ணி சொல்லலை? அவங்க பதை பதைப்பா பார்த்துட்டு இருப்பாங்க என தெரியாதா? 


3, ஹீரோ ஒரு காட்சியில் “ நீங்க இல்லாம  எப்போடா சரக்கு அடிச்சேன் ?” கறார் ஆனா தாதாவுடன் தனியாக , தகவல் தராமல் சரக்கு அடிக்கறார் 


4. ஹீரோ நடு ராத்திரியில் கூலிங்க் கிளாஸ் போட்டு அலைவது ஏன்? 


5. கஞ்சா , போதை ஊசி போடும் வில்லன் டிரக் அடிக்ட், அப்படிப்பட்டவர் எப்போதும் கை நடுங்கும் ,. அவர் எப்படி குறி பார்த்து பிரமாதமாக கேரம் ஆட முடியும் ? 


6. கேரம் போர்டு சாம்பியன்களாக வரும் ஆட்கள் எல்லொரும் நகத்தை நீட்டா வெட்டி இருப்பாங்க , ஆனா ஹீரோ , வில்லன் 2 பேருமே லேடீஸ் மாதிரி நீள நகம் வெச்சிருக்காங்க்ளே?


7. வில்லன் பாக்யாவோட ரைட்  ஹேண்டை  முஸ்லீம் வில்லன் விலை பேசும் காட்சி அச்சு அச்சல் தளப்தி படத்தில் அம்ரீஸ் பூரி ரஜினியுடன் பேசும் காட்சியின் உல்டா, அந்த கேரக்டர் கெட்டப் , டயலாக்  டெலிவரி , மாடுலேஷன் எல்லாமே அம்ரீஸ் பூரியின் அப்பட்ட காப்பி 


8. திட்டமிட்ட படி வில்லன் காரில் குறிப்பிட்ட இடத்துக்கு வந்துட்டார் , அப்போ அவரைப்போட்டுத்தள்ள ஆல்ரெடி அங்கே ஆஜர் ஆகி இருக்கும் வில்லன் கூட்டம் 8 பேர் இருக்காங்க, ஹீரோ அங்கே எதேச்சையா வந்தார் என்பதற்காக அவங்க பம்முவது ஏன்? இத்தனைக்கும் ஹீரோ ஒரு ஃபைட்டர் என்பது அவங்களுக்குத்தெரியாது, ஆளும் சின்னப்பையன் மாதிரிதான் இருக்கார், இவங்க 8 பேரும் பொன்னம்பலம் ரேஞ்சுக்கு இருக்காங்க 


9.  ஹீரோயின் நெருங்கிய சொந்தத்து தாத்தா வின் மேரேஜ்க்குப்போறார், ஆனா எப்பவும் கூடவே இருக்கும் அவர் அண்ணன் அப்போ மட்டும் காணோமே? இத்தனைக்கும் லவ் மேட்டர் அண்ணனுக்கு  தெரிஞ்சு கண்டிச்ச பின் வரும் சீன். அவர் எப்டி தனியா தங்கையை விடுவார்? 


10  துப்பாக்கி , விஸ்வரூபம் மாதிரி தீவிரவாதி கதைல வில்லன் முஸ்லீம் என காட்டுவதே பிரச்சனையா இருக்கு. தாதா கதைல எதுக்கு ஒரு பெரிய கேங்கே முஸ்லீம் மாதிரி காட்டி இருக்கு? தேவை இல்லாதது 


11.  க்ளைமாக்ஸ் ல ஃபிரண்ட்ஸ் கிட்டே சொல்லிட்டு வேகமா தனியா ஹீரோ ஆட்டோவை ஸ்டார்ட் பண்றார், அடுத்த கட் ஷாட்ல ஆட்டோவில் இருந்து ஹீரோ இறங்கறார், ஆட்டோ டிரைவர் முன்னால ( கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க்/ ) 


12. படம் பூரா 70 % காட்சிகள் யாராவது தம் அடிச்சுட்டோ ,சரக்கு அடிச்சுட்டோ இருக்காங்க , எபப்டி லேடீஸ் , குழந்தைங்க பார்க்க முடியும் , அதை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 


 
மனம் கவர்ந்த வசனங்கள் 


1. காதல் ங்கறது காத்து மாதிரி.தானா வந்தா தள்ளிப்போகும்.தள்ளிப்போனா தானா வரும்


2. போட்டிலயோ பந்தயத்திலோ ஜெயிக்கும்போது கிடைக்கும் கை தட்டலும் ,பணமும் ஒரு வித போதை.தொடர்ந்து ஜெயிக்க வைக்கும்


3. காதலியோட கமல் படம் பார்க்க குடுத்து வெச்சிருக்கனும்.நாம 2 வருஷத்துல சொல்லித்தர்றதை அவர் 2 மணி நேரத்துல சொல்லிக்குடுத்துடுவார்


4. அவனை ஜெயிக்கறது பெரிய விஷயம் இல்லை.அது அவன் ஏரியா மாதிரி தெரியுது.தோத்துட்டான்னா அவனுக்குப்பெரிய அவமானம் ஆகிடும்னுதாம் யோசிக்கிறேன


5.  என்னை அடிக்க வந்தவங்க கூட வே சரக்கு அடிக்கற அளவு நெருக்கம் ஆகிட்டோம் 


6.  ஒரே இடத்துல வேலை செய்யறவங்களுக்குள்ளே பொறாமை கூடாது , அது அசிங்கம் 


7.  ஏதோ பேசறேன்னு சொல்லிட்டு  பேசாம வர்றே? 

 நிறையா பேசலாம்னு வந்தேன், ஆனா எதுவுமே பேச வர்லை 

 சரி, என் காலேஜ் வந்தாச்சு 


8. என் வீட்டுக்கு எப்டிடா வந்தே? 

 உன் மனசுக்குள்ளேயே வந்தாச்சு , இது பெரிய மேட்டரா? 


9.  பயம் இருக்கறவனுக்கு எதுக்கு லவ்? 


எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - இதுக்கு 44 மார்க் போடனும், ஆனா ஓவர் வன்முறை என்பதால் 41 தான் போடுவாங்க

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க் - ஓக்கே 


ரேட்டிங்க் - 3.5 / 5 

சி . பி கமெண்ட்  - இது ஒரு யு ஏ படம் என சென்சார் சர்ட்டிஃபிகேட் இருந்தாலும் ஏ படம் தான் , வன்முறைக்காட்சிகள் அதிகம்  எனவே மைனர்கள் தவிர்த்து எல்லாரும் பார்க்கும் விதத்தில் தான் படம் இருக்கு . போர் அடிக்காம போகுது .2013 ஆம் அண்டின் முதல் லோ பட்ஜெட் ஹிட் ஃபிலிம்


diSki =

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/03/blog-post_2401.html