அட
1.முதல்வர் கருணாநிதி: "மக்களுக்கு சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்யேகமான மின் அஞ்சல் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்' என 2010-11ல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனி மின் அஞ்சல் முகவரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நையாண்டி நாரதர் - தலைவரே,பாதிப்பேருக்கு எழுதப்படிக்கவே தெரியாது,கைநாட்டுக்கெல்லாம் எதுக்கு மெயில் ஐ டி?
2. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அமைச்சராக ஆசைப்படக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பா.ஜ., ஆட்சி தொடர ஒத்துழைக்க வேண்டும்.
நையாண்டி நாரதர் - எல்லாருக்கும் சம்பாதிக்கற ஆசை இருக்காதா?கூடி வாழ்ந்தால் கோடி நன்மைனு வெறும் வாயில் சொன்னா எப்படி?கோடி ரூபா குடுத்தா ஓகே.
3. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: காற்றாலை மின் உற்பத்தி மூலம் கடந்த மாதம் 2,200 மெகாவாட்டும், இந்த மாதம் 2,000 மெகாவாட்டும் கிடைத்துள்ளது. காற்றாலை மின்சாரத்தை நம்ப முடியாது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் மின் வெட்டு குறையும்.
நையாண்டி நாரதர் - காற்றாலை மின்சாரம்கறது தி மு க ஆட்சி மாதிரி,கவுத்துடும்னு சொல்றீங்களா?2011 மேக்கு பிறகு ஆட்சி மாற்றமே ஏற்படபோவுது.
நையாண்டி நாரதர் - காற்றாலை மின்சாரம்கறது தி மு க ஆட்சி மாதிரி,கவுத்துடும்னு சொல்றீங்களா?2011 மேக்கு பிறகு ஆட்சி மாற்றமே ஏற்படபோவுது.
4. தி.மு.க., எம்.பி., கனிமொழி: தஞ்சை பெரியகோவில் ஒரு தொழில்நுட்ப அதிசயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த கோவிலைக் கட்டினார்கள் என்பதை எண்ணும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது.
நையாண்டி நாரதர் - அதை விட ஆச்சரியம் நாத்த்iகம் பேசும் கலைஞர் தஞ்சை பெரியகோயில் வாசல் வழி நுழைந்தால் ஆட்சி போகும் என்ற செண்டிமென்ட்டை நம்பியதுதான்.
5. பத்திரிக்கை செய்தி: விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை விற்கும் வழிமுறைகளை ஆராய கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அக்குழு ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தரும்.
நையாண்டி நாரதர் - அரசு அந்த லிஸ்ட்டை மதுரைக்கு ஃபேக்ஸ் செய்யுமா?
6. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. அதன் தனித்தன்மையை என்றும் இழந்ததில்லை.
நையாண்டி நாரதர் - ஆமா,எப்பவும் அடிச்சுக்கறதும்,கோஷ்டி சண்டை போடறதும்தானே அதன் தனித்தன்மை?
7. தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை : சிமென்ட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் எந்த விலையும் ஏறவில்லை. அரசு வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், சிமென்டின் விலையை ஏறக்குறைய இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இந்த விலை உயர்வு ஆலை முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் தருகிறது. எனவே, தமிழக அரசு, ஆலை முதலாளிகளுக்கு பக்க பலமாக இருப்பதை உணர முடிகிறது.
நையாண்டி நாரதர் - ஆலை முதலாளிகளுக்கு மட்டும்தான் லாபம்னு யார் சொன்னது?ஆட்சில இருக்கற முதலாளிகளுக்குத்தானே அதிக லாபம்?
8. முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர் பேச்சு : மக்கள் அமைதி தான் நாட்டுக்கு முக்கியம். அங்கும் இங்குமாக நடக்கும் சில அசம்பாவித சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது.
நையாண்டி நாரதர் - 2011 ல உங்களுக்கு தி மு க சீட் உண்டு கவலைப்படாதீங்க.
9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: தமிழகத்தில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் இல்லை... நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டேன்.
நையாண்டி நாரதர் - தம்பி டீ இன்னும் வர்லை,அண்ணே எலக்ஷன் இன்னும் வர்லை.
10 . பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: நாம் ஓட்டுக்கு விலை போகிறவர்கள் என்று யாரும் கூறிவிடக் கூடாது. உறுதியான தொண்டர்களை, லட்சியம் நிறைந்த செயல்வீரர்களை பெற்று இருக்கிற ஒரே கட்சி பா.ம.க., மட்டும் தான். நாம் யாரை அடையாளம் காட்டுகிறோமோ அவர் தான் தமிழகத்தின் முதல்வராக முடியும்.
நையாண்டி நாரதர் - ஓட்டுக்கு விலை போக மாட்டீங்களா? அப்போ நல்ல ரேட்டுக்கு விலை போவீங்களா?
11. முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: காங்கிரஸ் கட்சியை கறிவேப்பிலையாக தூக்கி எறிய நினைப்பது இனி நடக்காது. எங்களை பொறுத்தவரை, கூட்டணிக்கு மரியாதை செய்வோம். அதே நேரத்தில் எங்களை கொத்தடிமைகளாக அடக்க நினைத்தால் அது நடக்காது. தமிழகத்தில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.
நையாண்டி நாரதர் - கட்சில ஒருத்தருக்கு மட்டும் ரோஷம் இருந்தா போதுமா?
12 . ட்விட்டரில் நான் கணக்கு தொடங்கவில்லை?என் பேரில் யாரோ மோசடி செய்கிறார்கள் - அசின் பேட்டி
நையாண்டி நாரதர் - காவலன்ல கமிட் ஆனதும் காலை வாரிடுச்சு பாத்தீங்களா?