Showing posts with label சினிமாவிமர்சனம். Show all posts
Showing posts with label சினிமாவிமர்சனம். Show all posts

Saturday, July 13, 2013

காதலே என்னை காதலி -சினிமாவிமர்சனம்

 

பஞ்சத்துக்குப் பிறந்த  பஞ்சப் பரதேசிங்க  2 பேரு  ஒரு 65 மார்க்ஃபிகரை யாருமே இல்லாத ஒரு அத்துவானக்காட்டில் துரத்தறாங்க. ( டேய், அதான் 3 பேரு இருக்காங்களே, அப்புறம் எப்படி யாருமே இல்லாத காடு ? ) . அட, ஓப்பனிங்க்லயே செம கிளுகிளுப்பா இருக்கேன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா அவனுங்க 2 பேரும் அந்த ஃபிகர் ஹேண்ட் பேக்கை பிடுங்கிப்பார்த்து அதுல காசு ஏதும் இல்லைன்னு அப்படியே அவளைதள்ளி விட்டுட்டுப்போய்டறானுங்க . அடேங்கப்பா , உத்தமவில்லன் கமல் இல்லை. இவனுங்க தான்.


ஹீரோ அங்கே வர்றார்.ஹீரோயினை தூக்கி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போய்டறார்.அகத்தியன் ன்  காதல்கவிதை ரேஞ்சுக்கு 2 பேரும் ஓவரா ஃபீல் பண்ணி லவ்வறாங்க.

இதுல என்ன பிரச்சனைன்னா ஹீரோயின் ஃபாரீன்ஃபிகரு. தம் அடிக்குது , சரக்கு அடிக்குது . இன்னும் என்ன  என்ன எல்லாம் அடிக்குதோ? 




ஹீரோ ஒரு   உலக மகா உத்தமன். எந்த கெட்ட பழக்கமும்  இல்லாதவர், எம் ஜி ஆர் , ராமராஜன்  வரிசைல 


இப்போ தான்  திரைக்கதைல செம ட்விஸ்ட். ஹீரோவோட அப்பா இவங்க மேரேஜ்க்கு  ஒத்துக்கலை. மேரேஜ்க்குத்தானே  ஒத்துக்கலை? நாம லவ்விட்டு  இருப்போம்னு  2  பேரும்  தெருத்தெருவா  ரோடுரோடா  ஹோட்டல் ஹோட்டலா சுத்தறாங்க.. கொடுமை என்னான்னா  எந்த வித சுவராஸ்யமான  சம்பவங்களோ,திருப்பங்களோ இல்லாம சும்மா சுத்திட்டு மட்டும் இருக்காங்க


இப்போ 6 ரீல் முடியுது.இடைவேளை ட்விஸ்ட் வேணுமே?ஹீரோயின் பெட்ரோல் கேன் எடுத்து  தன் மேல  ஊத்திக்கிட்டு   ஹீரோ அப்பாவை   மிரட்ட பத்த வெச்சுக்கறார். டொட்டடொய்ங்க். இடைவேளை



இடைவேளை முடிஞ்சு பதட்டத்தோட வந்து பார்த்தா யாருக்கும்  எதுவும் ஆகலை.ஹீரோவோட அப்பா  ஹீரோயினை கேவலமா  திட்டிடறாரு . கட்சிமாறுன   எம் எல் ஏக்களை கேப்டன் திட்டுன  மாதிரி . ஹீரோ  செம  காண்ட் ஆகி  தேவதாஸ் மாதிரி தண்ணி  அடிக்க ஆரம்பிச்சுடறாரு. 5 ரீல் இப்ப்டியே ரோடுரோடா  மப்புல  கிடக்காரு . காசு  கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே வந்த பாவத்துக்கு   இதை எல்லாம் பார்த்து  தொலைக்க வேண்டி இருக்கு.


 திடீர்னு  ஹீரோ அப்பா மனசு மாறிமேரேஜ்க்கு  ஓக்கே  சொல்லிடறாரு. ஹீரோ  ஹீரோயின்  2 பேரும்  செம சந்தோஷம்  ஆகி காரில்  வரும்போது  ஹீரோ கிஸ்  கொடுக்கறார். டிரைவிங்க்  பண்ணிட்டு  இருந்த ஹீரோயின் விபத்துல மாட்டி ஆள் அவுட். புன்னகை  மன்னன் ரேஞ்சுக்கு திங்க்கிங்க் .


இதுக்குப்பிறகு  என்னாஆகுது  என்பது  கேவலமான சஸ்பென்ஸ்

 



அடங்கப்பாசாமி டைரக்டரு  .. முடியலப்பா 


ஹீரோ சந்தோஷ்தான்  தயாரிப்பாளர் போல . தாடி  , பரட்டைத்தலை, துவைக்காத  பேண்ட் , அயர்ன் பண்ணாத கேவலமான சட்டை, அக்மார்க்  தமிழ் சினிமா ஹீரோ  மாதிரியே...



ஹீரோயின் அனாரா  நிஜமாவே ஃபாரீன்ஃபிகர்  போல.  இலியானாவுக்கு ஒரு தங்கச்சி  இருந்து அதுக்கு  10 நாள் டைபாய்டு காய்ச்சல்  வந்து படுத்தா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு.எந்த மாடல் சுடிதார் போட்டாலும்  துப்பட்டாவே  தேவைப்படாத  ஒல்லி தேகம். ஆனா அவர் இடை இருக்கே இடை .எல்லா தமிழ் ஹீரோயின்களும்  பார்த்து பொறாமைப்படும் உள்ளடங்கிய  ஏழையின் பசி வயிறு மாதிரி அபாரம் .


இவர் காதல் வந்து  தடுமாறும் காட்சிகள்,தமிழ்  கற்கும்  காட்சிகள்  எல்லாம் படு செயற்கை. அதேபோல் வேண்டுமென்றே  வலிய  திணிக்கப்பட்ட   ஹீரோயினின்  தம் அடிக்கும்  தண்ணிஅடிக்கும் காட்சி எடுபடவில்லை.

 ஆனா ஒருவிஷயம்.கிளாமர் காட்டுவதில்  அம்மணி அபாரம் . ஐ லைக் இட்.


படத்துல  பாராட்டவோ , திட்டவோ  வேற யாருமில்லை





இயக்குநர் பாராட்டுப்பெறுமிடங்கள்


1.படம்  முழுக்க  லண்டனில் படமாக்கப்பட்டது என விளம்பரம்  போட்ட போஸ்டர்  ஊர் எங்கும்  ஒட்டியது. ஏதோ   லவ்  க்ரைம்  த்ரில்லர்  ரேஞ்சுக்கு பில்டப்   குடுத்தது.


2.ஹீரோயினுக்கு அழகழகான  டிரஸ் வாங்கிக்குடுத்து  உலாவவிட்டது. கேமராமேனை   நல்லாகவனிச்சு  ஹீரோயினை  சரியான ஆங்கிள்ல கேமரா  ஷாட் வெச்சது


3. ஒளிப்பதிவு  லண்டன்  நகரை அழகாக படம்  பிடித்தது





இயக்குநரிடம் சில கேள்விகள்



1.ஹீரோ  வோட  ஷூ  அழுக்காகி   இருக்கு  ஒருசீன்ல. ஹீரோவோட அப்பா  நிழல்கள் ரவி   தன்   கர்ச்சீப்பால அதை துடைக்கறார் .அடுத்தஷாட்லயே ஹீரோ சாப்பிட  வரும்போது  எனக்கு  சுத்தம் தான்  முக்கியம், போய்வாஷ் பண்ணிட்டு வான்னு  விரட்டறார். ஏனிந்தமுரண்?  



2. டேய்.. நீங்க  எங்கடா  இங்கே? என  ஹீரோ  தன் 4 நண்பர்களிடம்  கேட்பதும்  அவர்கள்  வழிவதும் செம  போர்.  இந்தலட்சணத்துல  3   டைம்  இதே மாதிரி   காட்சிவருவது


3.மனோரமா   மயில்சாமி  சரக்கு அடிக்கும்  காட்சி உவ்வே. மரியாதைக்குரிய  ஆச்சியை  நைட்டியுடன்  காட்டி  சரக்கு அடிக்கவைத்து  இப்படிஅவமானப்படுத்தி இருக்க வேணாம்


4. ஹீரோ ஒரு   சீன்ல   ஹீரோயின் கிட்டே”நீ ஏன் கம்மலே போடறதில்லை? போட்டா   நல்லாருக்கும் அப்டிம்பாரு. ஆனா ஹீரோயின்  4  டைம்காதுல ஸ்டெட்டோடவருது ( நாங்க   ஹீரோயின்  காதை  மட்டும் தான்  கவனிச்சோம்)


5. ஹீரோயின்   சரக்கு அடிச்சுட்டு ஹீரோ மேல  வாமிட் எடுப்பதும்  , ஹீரோ சரக்கு அடிச்சுட்டு  ரோட்டில்  வாமிட்  எடுப்பதும்  உவ்வே. காமிராஆங்கிள்ல யாவது கவுரமா  காட்டி  இருக்கலாம்


6. சார் , படத்துல திரைக்கதை  அப்டினு ஒரு அம்சமேஇல்லையே? நீங்க ஒரு ஃபாரீன்ஃபிகரை  உஷார் பண்ணிட்டு  போறதை   ஒரு படமா  எடுக்கனுமா?





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.வெள்ளைக்காரப்பொண்ணா  இருந்தாலும்  மனசு ரொம்பப்பெருசு


 ஆமா,கொழுக் மொழுக்னு அழகா


 டேய்...... 




2. விண்ட்டருக்கு போர்த்திட்டு   இருந்தவங்க   எல்லாம் சம்மருக்கு   கழட்டி வெச்சிருப்பாங்க



3. டாடி , 15வயசுல இருந்து  25வயசு வரை  தான் பசங்க ஜாலியா சுத்தும் வயசு. ஃப்ரீயா விடுங்க ( அதைஏன் 34வயசான ஹீரோ சொல்றரு, ? ) 



4. அடடா , அவ மிஸ் ஆகிட்டாளே,போய்ட்டாளே 


 மிஸ் ஆகாம  இருந்தா மிசஸ் ஆக்கி  இருக்கலாம்னு  பார்த்தியா? 



5  ஹீரோ பஞ்ச்  - நான்  சரக்கு அடிக்க  மாட்டேன். ஏன்னா நான் தமிழன்  ( அடங்கப்பா சாமி , காது வலிக்குது) 



6.  ஆஃபீஸ்  இருக்குன்னு  சொன்னீங்க,இப்படி  சின்னதா உள்ளடங்கி இருக்கு? 

 சீக்ரெட் ஆஃபீஸ் ஹிஹி 



7.  குற்ற வாளி முத   டைம்   தப்பு  பண்ணும்போதுதான்    பயப்படுவான் , அப்புறம் அவன்  தைரியமா   தப்பு   பண்ணுவான்


8  குடிச்சுட்டு போனா   தூக்கம் தூக்கமா   வருது 


 பின்னே ? வருமானமாவரும் ? 







 ஆனந்த  வி கடன்   எதிர்பார்ப்பு மார்க் - 32


குமுதம்  ரேங்க் - ம்ஹூம்  தேறாது



 ரேட்டிங்க்  -      1  /  5


சி.பி கமெண்ட் -   ஃபாரீன் ஃபிகரை சைட் அடிக்க நினைக்கும் ஆட்கள் மட்டும் போலாம் . மத்தவங்க   எஃப்  டிவி பார்க்கவும்  . இந்த  குப்பையை   சிதம்பரம்  வடுகநாதன் தியேட்டர்ல பார்த்தேன்

Friday, September 07, 2012

RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+

http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg 

படத்தோட கதைக்குள்ளே போறதுக்கு முன்னே ஆண் பெண் காதல், திருமண வாழ்வு பற்றி ஒரு கிளான்ஸ் பார்த்துடலாம். என்ன தான் சின்சியர் லவ்வா இருந்தாலும் பெரும்பாலான  ஆண்க ளின்  காதல் மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்ல காதலின் ஆழம் குறைஞ்சுடும்.பெண்களின் காதல் மேரேஜ்க்குப்பின் தான் அதிகரிக்கும். ஆனா ஆண் அப்போ வெரைட்டி தேட ஆரம்பிச்சுடுவான். பெண்கள் பெரும்பாலும் வெரைட்டிக்கு அலைவதில்லை. பாதுகாப்பான கணவன் அல்லது காதலனின் அரவணைப்பு போதும்னு நினைக்கறவங்க..


படத்தோட மெயின் வில்லி  பிபாஷா பார்வைல கதையை சொல்லலாம். சோனியா அகர்வால் மாதிரி இவங்க ஒரு பிரபல நடிகை..  எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் பிபாஷா பாசா தான் அதுல ஹீரோயின். புகழின் உச்சத்தை தொட்டவங்க.. பல அவார்ட்ஸை அள்ளினவங்க.. அவங்களுக்கு சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் மாதிரி ஒரு டைரக்டர் கூட பழக்கம்.. அவர் தான் படத்தோட ஹீரோ


 சினி ஃபீல்டுல பழக்கம்னா என்ன அர்த்தம்னு சொல்லத்தேவை இல்லை.. கமல் கவுதமி மாதிரி அவங்க மேரேஜ் பண்ணிக்காமயே லிவிங்க் டுகெதரா  வாழந்துட்டு வர்றாங்க.. 


 ஆண்ட்ரியா எப்படி சோனியா அகர்வால் வாழ்க்கைல குறுக்கே வந்தாங்களோ அந்த மாதிரி ஒரு புதுமுக நடிகை திடீர்னு புகழின் உச்சிக்கு வந்துடறாங்க.. அதை பிபாஷா பாசாவால் தாங்கிக்க முடியலை.. தான் மட்டும் தான் நெம்பர் ஒன் ஹீரோயினா வரனும், நிலைச்சு இருக்கனும்னு நினைக்கறாங்க.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Esha-Gupta-Hot-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


அதுக்கு அவங்க கைல எடுக்கும் ஆயுதம் தான் பிளாக் மேஜிக். அதாவது லோக்கம் பாஷைல சொல்லனும்னா பில்லி சூன்யம்.. செய் வினை.. ஒரு மந்திரவாதியின் உதவியோட செய்வினை வைக்கறாங்க.. அப்படி வெச்சா என்ன ஆகும்னா  செய்வினை வைக்கப்பட்ட நபருக்கு விபரீதமான கற்பனை வரும்.. அவங்க கண்ணுக்கு மட்டும் பேய் தெரியும்.. 


 மன உளைச்சலுக்கு ஆளாகி காளி பட ஷூட்டிங்க்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகளை செஞ்ச மாதிரி இந்த புதுமுகம் செய்யறாங்க.. இதுக்கு ஹீரோவான டைரக்டரும் உதவி பண்றாரு,.. அவர் தான் அந்த திரவத்தை புதுமுகத்துக்கு ஊற்றுத்தரும் ஆள்.. அந்த திரவம் உள்ளே போனா கற்பனைல பேய் வரும்.. 



 ஒரு நைட் அந்த புதுமுகம் டைரக்டரை அவ கூடவே தங்கச்சொல்றா.. பயம் தான் காரணம்.. 2 பேருக்கும் கச முசா ஆகிடுது..  இப்போ டைரக்டர்  திடீர்னு நல்லவர் ஆகிடறார். பிபஷா பாசா கிட்டே இனிமே அந்த புதுமுக ஹீரோயினை தொந்தரவு பண்ணாதே.. இனி அவ என் ஆள்.. அப்டிங்கறார்.. 

http://english.samaylive.com/pics/gallery/bips-raaz5_1346233591.jpg
 உடனே பிபாஷா பாசு சன் டிவி நித்யானந்தாவை மிரட்ன மாதிரி ஒரு வீடியோ கேசட்டை காட்டி இதுல நாம 2 பேரும் கில்மா பண்ணின மேட்டர் இருக்கு. ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றா.. அப்படி ரிலீஸ் பண்ணினா அவ மானமும் சேர்த்துத்தானே போகும்கற காமன் சென்ஸ் கூட இல்லாம அந்த லூஸ் டைரக்டர் தொடர்ந்து அந்த புதுமுகத்துக்கு செய் வினை வைக்கறாரு,.,. 



இப்போ புதுமுகம் ஒரு சீன்ல உடம்பூ பூரா ஒட்டுத்துணி கூட இல்லாம ( ஒட்டுத்துணி இல்லாத பிட்டுப்படம் ) ஒரு ஹோட்டல்ல எல்லா மீடியாக்கள் முன்னால அலறி அடிச்சு பேய்க்கு பயந்து வர்றப்போ எல்லாரும் அதை ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போடுடறாங்க..  இதனால அவங்க கவுரவம் (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) பாதிக்கப்படுது. பேர் கெட்டுடுது. நோ சான்ஸ் இன் சினிமா.. பழைய படி பிபாசா பாஸ் நெம்பர் ஒன் ஆகறாங்க.. 


 இந்த சதி வலைல இருந்து அந்த புதுமுகத்தை டைரக்டர் எப்படி காப்பாத்தறார் என்பதே  மிச்ச மீதிக்கதை.. 


 படத்தோட முதுகு எலும்பு, தொடை எலும்பு, எல்லா அலும்பும் பாப்பா பிபாஷா பாஷு தான்.. 42 பல்லும் தெரிய ( 32 + 10 ) சிரிக்க வைக்கும் ஓப்பன் யுனிவர்சிட்டி பாடி.. போனா போகுதுன்னு கொஞ்சூண்டு டிரஸ் மட்டும் போடும் அவரது பூனம் பாண்டித்யம். எல்லாம் அபாரம்.. நடிப்பு? அதுவும் தான்.. அவர் ஏற்று நடிக்கும் முதல் வில்லி கம் பேய்த்தன கேரக்டர் இதான்னு நினைக்கறேன் குட்.. 



 படத்தோட இன்னொரு ஹீரோயின்  இசா குப்தா.. நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஆனா பிரமாதமா ஒண்ணும் நடிக்கலை.. அதே சமயம்  மோசம்னு சொல்ற மாதிரி சொதப்பலை.. சமாளிச்சிருக்கு..  லிப் டூ லிப் கிஸ் வேணா நல்லா குடுக்குது.. எது வருதோ இல்லையோ ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது. ( நமக்கு ஐ மீன் ஆடியன்ஸ்க்கு அதானே தேவை )


 ஹீரோ Emraan Hashmi   கூட பிரமாதமா பண்ணி இருக்க வேண்டிய கேரக்டர் தான்.. ஏனோதானோ என்ற நடிப்புதான்.. இயக்குநர் என்ன நினைச்சுட்டார்னா பிபாஷா பாசா இருக்க பயம் ஏன்? அவர் நடிப்பை மட்டும் கவர் பண்ணுவோம்னு.. யோசிச்சுட்டார் போல.. 



http://www.gulte.com/content/2012/07/news/Raaz-3-Movie-Hot-Photos-106.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எட்டாம் நெம்பர் ஹோட்டல் ரூம் 3 ஆம் நெம்பர் ஆக மாறி உருகி வழிவது செம திகில்.. அந்த காட்சியில் பின்னணி இசை, எடிட்டிங்க் கட் எல்லாம் கலக்கல்.. 


2. புதுமுகம் சிஸ்டமில் ஏதோ பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கை வந்து அவரை இழுப்பது திக் திக் திகில் காட்சி.. 3 டி யில் பார்த்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் ( படம்  3 டி தான், ஆனால் ஈரோட்டில் சாதா) 


3. மந்திரவாதி, வேலைக்காரி இருவரும் கொலை ஆகும் காட்சிகள் த்ரில்லிங்க்.. தியேட்டர்ல ஒரு பய மூச்சு விடலை.. கப் சிப்.. 


4. படத்தில் பிபாஷா பாசாவை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவு யூஸ் பண்ணியது.. அவர் ஸ்விம்மிங்க் பூலில் ( நீச்சல் குளம்ப்பா ) எழுந்து வரும் சீனில் செம கிளு கிளு.. பக்கத்துல ஒரு ஆள் அவனும் எந்திரிச்சுப்பார்க்கறான் ( உக்காந்து பார்ப்பதை விட எந்திரிச்சுப்பார்த்தா ஏதாவது எக்ஸ்ட்ரா தெரியுமா?ன்னு ஒரு நப்பாசைதான் )


5. ஆக்சுவலி இது ஒரு திகில் படம் கம் த்ரில்லர் ஃபிலிம், ஆனா போஸ்டர் டிசைன்,  ஸ்டில்ஸ், டி வி விளம்பரம் எல்லாவற்றிலும் ஏதோ கில்மா படம் மாதிரி விளம்பரம் செஞ்சது மார்க்கெட்டிங்க் டெக்னிக் குட்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiRxDHmcHhVEXY6qKUoP0rH29Qd0sLJSv5knyYBEJ4ZeZvrUbucejYBVrm9w0R2Lweq4HTwTEAf5Pv345pUrdbViW6286RSuLbvMJ780e6v1dvRE-864LM2uQC0f8cctf_bcnY1uVuvY2z/s1600/Photos%252BBipasha%252BBasu%252BLatestt%252BRaaz%252B3%252BMovie%252BHot%252BStills-751971.jpg

 இயக்குநரிடம் பல கேள்விகள்



1. ஒரு வாதத்துக்காக பேய் இருக்குன்னே வெச்சுட்டாலும்  இருட்டுக்குள்ள்ளே ஒளிஞ்சிருக்கும் ஹீரோயினை பேய்க்குத்தெரியாதா? பேய் ஏன் தேடுது? தத்திப்பேயா? பவர் இல்லாத பேயா? 


2.  ஹீரோ பேண்ட் பாக்கெட்ல  அவ்ளவ் பெரிய பாட்டிலை எப்போ பாரு வெச்சுக்கிட்டே சுத்தறாரு. தத்தி ஹீரோயின் ஒரு டைம் கூட அதை என்ன? என கேட்கவே இல்லை.. பொதுவா பொண்ணுங்க எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சைடு பாக்கெட் ஏன் புடைச்ச மாதிரி இருக்குன்னு பார்க்க மாட்டாளா? 


3. செய்வினை கம் பில்லி சூனியம் வைக்க அந்த திரவத்துல சும்மா 4 சொட்டு கலந்தா போதும். அதுக்கு சும்மா குட்டி பாட்டில்  20 மில்லி பிடிக்கும் அளவு பாட்டில் எடுத்துக்கலாமே? என்னமோ சயிண்டிஸ்ட் கணக்கா எதுக்கு விண்ட்டேஜ் ஆஃப் பாட்டில் சைஸ்க்கு அவ்ளவ் பெரிய  பாட்டில்?


4. ஹீரோயின் பயமா இருக்குன்னு ஹீரோவை துணைக்கு தன் வீட்ல படுக்க சொல்றார்.. ஓக்கே.. நடு ராத்திரில சத்தம் கேட்டதும் என்ன இதுக்கோசரம் அந்த லூஸ் தனியா வெளியே போகுது.. ? ஒண்ணா மூடிக்கிட்டு ஐ மீன் கதவை மூடிக்கிட்டு தூங்கனும். அல்லது ஹீரோவை எழுப்பி விடனும்.. 


5.  வில்லி ஹீரோவை கில்மா டிவிடியை ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றது கேனத்தன்மா இருக்கு.. பொதுவா சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் பல களன் கண்டவங்க தான்..  இதனால பெரிய பாதிப்பு ஒண்ணும் வரப்போறதில்லை.. அவர் என்ன ராணுவ அமைச்சரா? அப்படி பயப்பட?அப்படியே ரிலீஸ் செஞ்சாலும் அந்த பத்தினி மேட்டரும் தானே சந்தி சிரிக்கும் ?


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Hot-Bipasha-Basu-in-a-seductive-pose-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


6.  ஏக்தா ஏக்தா தூர் ஹை பாடல் பல்லவிக்கான இசை பஹலா பஹ்லா ப்யார் ஹை பாட்டின் உருவல்..


7.  ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏன் உண்மையை சொல்ல தயங்கறார்? இந்தா பாரம்மா , அவ தான் வில்லி.. அவ தான் இதை கொடுக்கச்சொன்னா.. நீ ஜாக்கிரதைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டா மேட்டர் ஓவர்.. 


8. கதைப்படி பேய் மனுஷ கண்ணுக்கு நேருக்கு நேர் தெரியாதாம். கண்ணாடில பார்த்தா தெரியுமாம்.. அதனால க்ளைமாக்ஸ்ல ஹீரோ கண்னாடில பார்த்து பார்த்து பேய் கூட ஃபைட் பண்றாரு.. நான் பேயா இருந்தா முதல் வேலையா அந்த கண்னாடியை உடைச்சிருப்பேன்;/./ 



 9. பொதுவா இந்த மாதிரி விஷம் கலக்கற வேலை, மருந்து கலக்கற வேலை எல்லாம் அந்தந்த வீட்டு வேலைக்காரங்களை பிடிச்சுத்தான் செய்வாங்க அதான் பாதுகாப்பு. சீப் அண்ட் பெஸ்ட்.. ஏன்னா சம்பந்தப்படது ஒரு பொண்ணோட மேட்டர்.. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வெச்சா என்ன ஆகும்? ஒரே கேரவுன் வேன்ல சிம்புவையும், நயன் தாராவையும் 10 நிமிஷம் விட்டு வெச்சா என்னாகும்? இந்த ஜி கே கூட இல்லாம வில்லி பிபாஷா பாசு  லூஸ் மாதிரி ஹீரோவை  ஹீரோயின் வீட்டுக்கு தனியா அனுப்புவாரா?


10. வில்லி அந்த திரவத்தை ஹீரோயின் சாப்பிடும் மதுவில் கலக்கச்சொல்றா. ஹீரோவுக்கு அதுல இஷ்டம் இல்லை.  ஆனா மிரட்டலுக்காக அதை செய்யறான். மேட்டர் ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஹீரோயின் கிட்டே நீ வெறி பிடிச்ச மாதிரி நடி,.. நான் கலந்துட்டதா அவ கிட்டே சொல்லிக்கறேன்னா மேட்டர் ஓவர்.. 

11. ஒரு சீன்ல மிட் நைட்ல திடீர்னு எந்திரிச்சு வரும் ஹீரோயின் ஹீரோ ஏதோ மிக்ஸ் பண்றதை பார்க்கறா.. அவளுக்கு டவுட்டே வர்லை.. மப்புல இருந்தாளா? 

12. ஓப்பனிங்க் சீன்ல அவார்டு தனக்குத்தான்னு டென்ஷனோட இருக்கும் வில்லி ஏன் தன் ஃபேவரைட் இயக்குநர் ( அவர் தான் ஜட்ஜ்) கிட்டே அவார்டு யாருக்குன்னு கேட்டுக்கலை/)

http://1.bp.blogspot.com/-rhLjDriy7q4/TfNMqKVFefI/AAAAAAAAADc/C6m9eg9ViMQ/s1600/bipasha-basu-10.jpg
 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது உங்களுக்கு நிகழ்ந்த தோல்வி இல்லை.. திறமைக்கு நேர்ந்த அவமரியாதை


2. என் கிட்டே பொறாமைத்தீ பயங்கரமா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த உலகத்தை  விட்டே அவளை துரத்தனும்னு வெறி இருக்கு.. 


3. என்னோட வலி, ஏமாற்றம், துக்கம் எல்லாத்தையும் சரி பண்ண உன்னால மட்டும் தான் முடியும்.. 


4. உங்க கண்ணுக்கு  தெரியும் அந்த கெட்ட ஆவி ஏன் எங்க கண்ணுக்கு தெரியல..? 


5. நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் பின்னால நாய் மாதிரி வருவேன்னு எதிர்பார்க்கிறியா? 



6.. அவளை சிரிச்ச முகத்தோட இனி பார்த்தேன் உன் முகத்துல ஜென்மத்துக்கும் நீ சிரிப்பையே பார்க்க முடியாது 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9mEnHFLMXHlZ0YHNzvTyqbntb3VdEl1MLmqeJOUzMhvWq7y_QOPvzJu0d5UAzZsbjJvLnSdOolUDGrAEAPWsipiyXr_57-8KvzydWcTQzFqmBlf7836OVmnfxLnhWF0a8FDnkkCIQNII/s1600/bipasabasu+hot+pics+%2525282%252529.jpg

 சி,பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள், கில்மா சீன் பிரியர்கள் பார்க்கலாம். அதுவும் 30 வயசுக்கு மேற்பட்டவர்கள்.. பெண்கள் பார்க்க தகுதி இல்லாத படம்.

இந்த அரை குறை கில்மா, திகில் படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன் 


Saturday, December 25, 2010

அரிதுஅரிது - சினிமா விமர்சனம்

Aridhu-Aridhu-Movie-wallpapers.jpg (432×590)sa
சத்தம் கேட்டாலே டென்ஷன் ஆகி விடும் சைக்கோ தனது மனைவியை ஒரு கட்டத்தில் கொலை செய்து விட அதைக்கண்ட சாட்சியான தன் மகனை கொல்ல மனம் இல்லாமல் ஒரு ஆப்பரேஷன் செய்து அவனை நடைப்பிணம் ஆக்குகிறார்.அவனை ஒரு யுவதி காதலிக்கிறாள்.ஒரு தீவிரவாத கும்பல் அவனை மனித வெடிகுண்டாக உபயோகிக்கிறது.முடிவு என்ன என்பது வெண்திரையில்..

அட்டகாசமான ஒன் லைன்,கேட்க்கும்போதே பிரமாதமான திரைக்கதை உருவாக்கி இருப்பார்கள் என தோன்றுகிறதா?ஆனால் எடிட்டிங்க்,திரைக்கதை 2இலும் சொதப்பி விட்டார்கள்.


பள்ளி மாணவிகள் யூனிஃபார்மில் கூட்டமாகப்போகும்போது நமக்கு ரசிக்கத்தோணாது,எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதால்..ஆனால் தனி தனி ஃபிகர் அணிவகுத்து வந்தால் ரசிப்போம்,(என்னே ஒரு கேவலமான கண்டுபிடிப்பு)அது போல இந்தப்படத்தின் சீன்கள் தனித்தனியாக பார்க்க


நல்லாதான் இருக்கு,ஆனா மொத்தப்படமா பார்க்கறப்ப எடுபடலை..அதுக்கு இயக்குநரின் கவனக்குறைவும்,எடிட்டரின் திறமைக்குறைவும்தான்.முக்கியக்காரணம்.



படத்தோட ஓப்பனிங்க் சீன்ல அந்த சைக்கோவின் பாடி லேங்குவேஜ்,நடிப்பு,தடுமாற்றம்,நடுக்கம் எல்லாத்தையும் பார்க்கறப்ப அடிச்சுட்டார்யா சிக்சர் என டைரக்டரை பாராட்டத்தோன்றியது.ஆனால் போகப்போக திரைக்கதையில் சொதப்பல்.சைக்கோ எதிர் வீட்டுப்பெண்ணை கொலை செய்யும்போது திடுக் என்றால் காரில் போகும்போது மனைவி “பேசாம என்னை கொன்னுடுங்க “என சும்மா ஒரு பேச்சுக்கு (?!)சொன்னதுக்கு உடனே காரை மரத்தின் மீது மோதி கொலை செய்வது அட்டகாசமான பதட்டம்.


அதே போல் மனைவியைக்கொன்றது தான்தான் என்பது மகனுக்கு தெரிந்து விட்டது என்றதும் சைக்கோ காட்டும் பதட்டம் கிளாஸ் ரக நடிப்பு.டாக்டரான அவர் உடனே மகனை மூளையில் ஆபரெஷன் பண்ணி ஏதோ நரம்பை கட் பண்ணி அவனுக்கு எந்த நினைவும் இல்லாமல் செய்வது நல்ல திருப்பம்.

அதுக்கப்புறம்தான் திரைக்கதை தள்ளாடுது.ஹீரோயின் வருகை,சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை காதலிப்பது (அது சரி ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலித்துத்தானே ஆகனும்?) பிறகு கதைக்கு சம்பந்தமே இல்லாமல் தீவிரவாதக்கும்பல் வருவது என தேவை இல்லாமல் இடி ஆப்பசிக்கல் திரைக்கதை முடிச்சுகள் எதற்கு?

ஆனா ஹீரோயின் புதுமுகம் செம ஃபிகரு தான் .பால்மணம் மாறா பாலகி (அட..)
aridhuaridhu4.jpg (680×695)
சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் ஹீரோவை மூக்கில் கிளிப் மாட்டி வாயைத்திறந்ததும் ஊட்டி விடும் குழந்தைத்தனம் கலந்த புத்திசாலித்தன நடிப்பு,அவர் சர்வசாதாரணமாக திரைக்கதையை தாங்குவது பிரமிப்பு.
படத்தின் முதல் பாட்டில் ஹீரோயின் போடும் டான்ஸ் ஸ்டெப்கள் மார்வலஸ்.



அதே போல் கவுரவ தோற்றத்தில் வரும் ஆஸ்திரேலியன் ஃபிகர் கூட ஓக்கே ரகம் தான்.ஆனால் அவர் ஒரு அஜால் குஜால் பேர்வழி என்பதும் ஹீரோவை ஒரு முறை யூஸ் பண்ணிக்கிறார் என்பதும் கதைக்கு சம்பந்தம் இலாதது.சும்மா கிளு கிளுப்புக்காக அந்த கேரக்டர் போல.



அதில் ஒரு காதல் ஒளீந்திருக்கிறது பாடல் செம கிக்கான வரிகள்.பாடல்கள் 5.அதில் 4 பாட்டுக்களின் லைன்கள் ஒன்றூகூட புரியவே இல்லை.எல்லாமே ஆங்கில கலப்பு.

படத்தின் முக்கிய பலம் கேமரா.ஆஸ்திரேலியாவின் அழகை அள்ளிக்கொள்கிறது.படத்தின் ரிசல்ட் சட்னி என்பதை சிம்பாலிக்காக சொல்லத்தான் படத்தின் படப்பிடிபை சிட்னியில் வைத்தாரோ?



Aridhu-Aridhu-Latest-Movie-Stills-5.jpg (1000×667)

படத்தின் இயக்குநருக்கு சில கேள்விகள்

1. கதைக்களன் ஆஸ்திரேலியவில் நடப்பதற்கு என்ன காரணம்?

2. ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள்,சைக்கோ கில்லர் நடமாடுகிறான்,ஆனால் போலீஸ் அரிச்சுவடி கூட தட்டுப்படவில்லையே?ஏன்?

3.அம்மாவைக்கொலை செய்த சைக்கோ அப்பாவை மகன் எப்படி திட்டமிட்டு கொலை செய்கிறான் என்பது தன் நீங்கள் எடுக்க இருந்த மெயின் தீம்,அதிலிருந்து ஏன் விலகி சொதப்பினீர்கள்?

4.க்ளைமாக்சில் சைக்கோ அப்பா கேரக்டருக்கு எந்த தண்டனையும் தராதது ஏன்?

5. ஹீரோயின் ஹீரோ மீது காதல் கொள்ள 1% காரணம் கூட காட்டாதது ஏன்?
வசனகர்த்தாவாக ஜொலித்த இடங்கள்

1.  யூ வாண்ட் டூ டை? ( YOU WANT TO DIE?)

 எஸ்,நீங்க கொல்ற கடைசி ஆளா நான் இருக்கனும்னு ஆசைப்படறேன்.

2. நாங்க மனித உரிமைக்கமிஷன்,இந்த உலகத்தின் எந்த மூலைல நீங்க போய்
ஒளிஞ்சிகிட்டாலும் கேள்விகள் உங்களை தேடிட்டு வரும்.

3. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் கடவுள் இருக்கறதா சொல்றீங்களே... நீங்க மனுஷனா இருங்க,நான் கடவுளா இருக்கேன்,கடவுள் பேசமாட்டார்.
சோ இந்த என்கொயரி வேஸ்ட்

4. என்னை யார் தொலைச்சாங்கன்னு இவ தேடிட்டு இருக்கா?இவளுக்குள்ளே நான் தொலைஞ்சு போயிடுவோனோன்னு பயமா இருக்கு.

5. தேவைகள் கிடைக்காதபோதும்,நியாயங்கள் மறுக்கப்படற போதும்,மக்கள் ஒடுக்கப்படற போதும் தீவிரவாதம் பிறக்குது.

6. இந்த லோகத்துல தொலைக்கறது ஈஸி ,கிடைக்கறது கஷ்டம்,கிடைச்சதை ஏன் தேடறீங்க?

7. நான் சாகறதுக்காக விற்கப்பட்டவன்,தீவிரவாதம் வளர்றதுக்காக அழியக்கூடியவன்.

8. எங்க நாட்ல உங்களுக்கென்ன டா வேலை?எத்தனை இந்தையர்களை நாங்க கொல்றது?

9. தான் யார்?னு கூட யோசிக்க முடியாத தண்டனை இந்த உலகத்துல யாருக்குமே வரக்கூடாது.

10 மனிதனைக்கொன்று மனிதனே தெய்வம் ஆகிறான்.

11,  கஷ்டப்படறவங்களைப்பார்த்து ,துயரப்படறவங்களைப்பார்த்து நாம வேதனைப்பட்டா மட்டும் பத்தாது,அவங்களுக்கு ஏதாவது செய்யனும்..

இந்தப்படம் யாரெல்லாம் பார்க்கலாம்?தியேட்டர் இருட்டில் தனி இடம் தேடும் காதலர்கள்.,கள்ளக்காதலர்கள் மட்டும் பார்க்கலாம்,தியேட்டர் காலியாகத்தான் இருக்கு.


இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 10 நாட்கள், பி செண்ட்டர்களில் 7 நாட்கள் ,சி செண்ட்டர்களீல் 4 நாட்கள் ஓடும்.



ஆனந்த விகடன் விமர்சனத்தில் எதிர்பார்க்கப்படும் மார்க் - 36

குமுதம் விமர்சனத்தில் எதிர்பார்க்கும் ரேங்க்கிங்க் - போர்

டிஸ்கி 1 - இந்தப்படம் பார்க்கறப்ப தியேட்டர்ல ஒரு கூத்து நடந்தது,அதை தனி பதிவா போடலாம்னு ஐடியா( படத்தை விட அந்த மேட்டர் செம சுவராஸ்யம்)

டிஸ்கி 2-  

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு



டிஸ்கி 3