நடிகை ரஞ்சிதா என்றால் நாடோடித்தென்றல் என்றது ஒரு காலம்.
அமைதிப்படை அல்வாப்பார்ட்டி என்றதும் ஒரு காலம்.
இப்போதெல்லாம் ரஞ்சிதா என்றாலே நமது நினைவுக்கு வருவதே நித்யானந்தாவும்,கேமராவும்தான்.
கோடம்பாக்கத்தில் இப்போது எந்திரன் படத்துக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படுவது அடுத்து ரஞ்சிதா நடித்து வெளி வர உள்ள படமான ஓடும் மேகங்களே படம்தான்.
இந்தப்படம் எடுக்கப்பட்டு பல மாதங்கள் முடிஞ்சுது.வாங்க ஆள் இல்லாம பெட்டிக்குள்ள தூங்கிட்டு இருந்தது.
இப்போ நித்யாமேட்டரால மவுசு கூடிடுச்சு.ராவணன் படத்துல ஐஸ்வர்யாராய்க்குகூட அவ்வளவு கைத்தட்டல் கிடைக்களை.4 நிமிஷம் தலையை மட்டும் காமிச்ச ரஞ்சிதாவுக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்.பார்த்தாங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்,
இப்போ அதை வாங்க ஒரே அடிதடி.
எப்படியும் படத்தை ஓட்டி விடலாம் என்ற தைரியம்.
சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார் ரஞ்சிதா.நாயகனும், நாயகியும் அவரது சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கும் சைபர் கிரைம் கிரிமினல்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை அடிப்படையாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார்.
நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.
செழியன் என்பவர் இயக்குகிறார்.ஐயாவுக்கு அதிர்ஷ்டம் ஆசிரமத்தை பிய்த்துக்கொண்டு கொட்டப்போகிறது என சினிமா புலிகள் ஆரூடம் சொல்கிறார்கள்.
”பிரான்ஸ், ஜெர்மனி, தமிழ் நாடு என சர்வதேச அளவில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். ரஞ்சிதா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க வருகிறார்” என்று படத்தின் டைரக்டர் கூறுகிறார்..
மலையாள பிட் படங்களுக்கு இணையான வசூலை இப்படம் தரும் என கோலிவுட்டில் பரபரப்பும்,எதிர்பார்ப்பும் உள்ளது.ஆனால் ஒரு முக்கிய செய்தி எல்லோரும் எதிர்பார்ப்பது போல் அவர்
கவர்ச்சியாகவோ,கிளாமராகவோ இதில் நடிக்கவில்லை.(சே,என்ன ஒரு பேடு ட்விஸ்ட்)