சித்ரகுப்தனை பணிவோம்!
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p44.jpg)
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p44.jpg)
உலக அமைதியும் மகிழ்ச்சியும் தொடர்வதற்குக் கோயில்களும் வேள்விகளும் பேருதவி புரிகின்றன. அதில் கலந்துகொள்ளும் மக்களும் பயன்பெறுவர். தவறான சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் சிக்கித் தவிக்கும் மனிதர்களை அவற்றில் இருந்து விடுதலை பெற, இறைப் பணியில் ஈடுபடச் சொல்கின்றன, புராணங்கள்!
தீர்த்தாடனம் செய்து, கோயிலை வலம் வருவதுடன், இல்லறத்தில் இருந்தபடியே இறைவனை வழிபடும் முறைகளையும் அவை எடுத்துரைக்கின்றன. அன்றாடப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு வழிபாடுகளே உதவும். வீட்டில் இருந்தபடியே, இறைவனுக்கு நம் விருப்பப்படி வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p45.jpg)
மனதின் விருப்பம், உருவமில்லாத இறைவனை உருவத்துடன் பார்க்கிறது. வில்லங்கத்தை அகற்ற ஸ்ரீவிக்னேஸ்வரர்; குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை நிறுத்த சோமாஸ்கந்தர்; எதிரிகளை விரட்ட ஸ்ரீசுதர்சனர்; கல்வியை வழங்கி அறியாமையை அகற்ற ஸ்ரீகலைமகள்; செல்வத்தை அளித்து ஏழ்மையை விரட்ட அலைமகள்; எதிரிகளைத் துரத்த ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி... இப்படியாக, இன்னல்களை அகற்ற இறையுருவங்களை ஏற்கும்போது, நமது தேவைகள் எளிதாக நிறைவேறிவிடும்.
![http://www.trisakthi.com/Issues/ARP%2016-30/Images/Chithragupthan4.jpg](http://www.trisakthi.com/Issues/ARP%2016-30/Images/Chithragupthan4.jpg)
வரவு- செலவுக் கணக்கை ஏட்டில் பதிந்து வைக்கிற முறை தொன்று தொட்டு வருகிற ஒன்று! அவருக்குக் கணகன், கணக்கன் என்று பெயர்கள். சம்ஸ்கிருதத்தில் 'காயஸ்தன்’ என்பர். கணக்கில் உள்ள தவறு, அரசுக்குத் தெரிந்தால், தண்டனை உண்டு; நல்லவிதமாக இருந்தால் வெகுமதி நிச்சயம்!
இயற்கையைச் சீரழிக்கும் செயல்கள் பாபம்; இயற்கையை அனுசரித்துப் போகிற செயல்கள் புண்ணியம். அதிகாரிகளின் கண்ணில்படாதவற்றுக்குக்கூட, இறைவனின் நீதிமன்றம் தண்டனை அளிக்கும். நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது, அபராதி தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே கடவுளின் நீதிமன்றத்தில் கணக்கன் இருக்கிறான். அவனுடைய பெயர், சித்ரகுப்தன். பாவ- புண்ணியங் களைப் பதிவு செய்து, நீதியரசனான எமனிடம் சமர்ப்பிப்பவன் இவன்தான்!
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p46.jpg)
செய்கிற தவறு மனதில் பதிவதுபோல், அவனது பதிவேட்டிலும் பதிந்துவிடும். அவனைப் பணிவதே விடுபடுவதற்கான வழி! எமன் முதலான 14 பெயர்களை உச்சரித்து, சித்ரா பௌர்ணமியின் போது வணங்கினால், நரகத்தின் வேதனையில் இருந்து மீளலாம். நவகோள்களில் கேதுவும் ஒருவன். அவனது பிரத்யதி தேவதையாக இருப்பவன் சித்ரகுப்தன். கேது, மோட்சத்தை அளிப்பவன் என்பதற்கு அவனுடன் இணைந்த சித்ரகுப்தனே சாட்சி! கேதுவை வணங்கியவரை துயரத்தில் இருந்து விடுவித்து, வீடுபேறு அளிக்கிறான் சித்ரகுப்தன்.
![http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg](http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg)
எமன், தர்மராஜன், மிருத்யு, அந்தகன், வைவஸ்வதன், காலன், ஸர்வபூதஷயன், ஒளதும்பரன், தத்னன், நீலன், பரமேஷ்டி, விருகோதரன், சித்திரன், சித்ரகுப்தன் ஆகிய 14 பேரும் நீதிமன்ற அதிகாரிகள். செயல் புலன்கள் ஐந்து, அறிவுப் புலன்கள் ஐந்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கு... ஆக, இந்தப் பதினான்கில் உருப்பெற்ற மனிதனுக்கு உகந்தவாறு 14 பேருடன் நிறைவுறுகிறது!
நீதிமன்றம் 14 வழிகளில் பாவ- புண்ணியங்களைச் சேர்த்துவிடும். பாவம் செய்தவனைத் துயரத்தில் தள்ளுவதும் புண்ணியம் செய்தவனை கடவுளுடன் இணைப்பதும் நீதியரசனின் வேலை.
![https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtLkseMR63vL84kY6pCSh26zuBYGUSe5Rj4SgJnVeuenMMyO6KNowC18ehh2EF-hmzM9K_DRyzxl8OgAClKSpwJnEyDfXkGqS-ELHRI-NaooIwTW9f-DnJgNdcI_KB-uadoPC3EaiJiBgy/s1600/chitragupta+temple.jpg](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtLkseMR63vL84kY6pCSh26zuBYGUSe5Rj4SgJnVeuenMMyO6KNowC18ehh2EF-hmzM9K_DRyzxl8OgAClKSpwJnEyDfXkGqS-ELHRI-NaooIwTW9f-DnJgNdcI_KB-uadoPC3EaiJiBgy/s640/chitragupta+temple.jpg)
இவை அனைத்துக்குமான செயல்களுக்கு ஆணிவேர், சித்ரகுப்தனின் பதிவேடு!
சித்ரம் என்றால் மனிதன் செய்கிற பாவ- புண்ணியம்; குப்தன் என்றால், அதைப் பதிவேட்டில் பதிந்து, தண்டனை அல்லது பெருமை அளிக்கும் வரை காப்பவன் என விளக்கம் தருகிறது சப்த கல்பத்ருமம்.
தியானத்தில் ஆழ்ந்த பிரம்மனின் தேகத்தில் இருந்து தோன்றியவன் சித்ரகுப்தன். கைகளில் ஏடும் எழுதுகோலும் ஏந்தியிருப்பவன்; தர்மராஜனுக்கு உதவுவதற்காக, பிரம்மனால் கணக்கனாக நியமிக்கப்பட்டான் என்கிறது பத்ம புராணம். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் இணைந்த பௌர்ணமியில் சித்ரகுப்தனை வழிபடும்படி பரிந்துரைக்கிறது புராணம். சஷ்டி விரதம்போல், சித்ரகுப்த விரதமும் உண்டு.
கற்றறிந்தவர்கள் வேத முறைப்படியும், பாமரர்கள் 14 பெயர்களைச் சொல்லியும் வழிபடலாம். கைகளில் ஏடும் எழுதுகோலும் இருக்கிற சித்ரகுப்த வடிவத்துக்கு, 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுவது சிறப்பு. 14 அந்தணர்களை நீதி அதிகாரிகளாகப் பாவித்து, அவர்கள் மூலமாக சித்ரகுப்த வழிபாட்டைச் செய்து, பூஜையை நிறைவு செய்யவேண்டும். அத்துடன் அன்னதானம் செய்வதும் விசேஷம். 14 பெயர்களைச் சொல்லி, தண்டனிட்டு வணங்கவேண்டும்.
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p46.jpg)
'தெரிந்தோ தெரியாமலோ தவறு கள் நிகழ்ந்திருக்கும். பதிவேட்டில் எழுதியுள்ள எனது தவறுகளை எமனிடம் சமர்ப்பித்துவிடாதீர்கள். தங்களது அருளால், துன்பத்தில் இருந்து விடுபடவேண்டும். தங்களிடம் கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறேன். அதனை நீதியரசன் ஏற்கும்படி செய்யுங்கள்’ என சித்ரகுப்தனைப் பிரார்த்திக்க வேண்டும். அவரது சிபாரிசு, நிச்சயம் உங்களைக் காப்பாற்றி விடும். ஆகவே, பாவத்திலிருந்து விடுபட, சித்ரகுப்த பூஜை செய்வது அவசியம் என்கிறது புராணம் (சித்ரகுப்த நமஸ்து ப்யம் நமஸ்தே கர்மரூபிணே...).
![](http://new.vikatan.com/sakthi/2011/04/mqywuy/images/p46a.jpg)
ஸெளதாஸன் எனும் அரசன், நல்லவர்களைத் துன்புறுத்தி, துஷ்டர்களை ஆதரித்தான். மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர். அவனது செயல்கள், சித்ரகுப்தனின் பதிவேட்டில் எழுதப்பட்டன. பிறகு, அவன் இறந்ததும் யாதனா தேகத்துடன் எமனின் முன்னே நிறுத்தப்பட்டான்.
பதிவின்படி, நரகத்துக்கு அனுப்ப முயன்றார் எமன். அப்போது சித்ரகுப்தன், ''அரசன் தனது தவற்றை உணர்ந்து தங்களையும் என்னையும் வேண்டி சித்ரா பௌர்ணமியில் விரதம் இருந்தான். மனம் திருந்தி, மன்னிக்க வேண்டினான். எனவே, துயரத்திலிருந்து விடுவியுங்கள்'' என்றான். உடனே, அவனை விடுவித்தார் எமன் என்கிறது பவிஷ்ய புராணம். தவறை உணர்ந்தவனுக்கு மன்னிப்பு உண்டு என்கிறது தர்மசாஸ்திரம். ஆகவே, அன்றைய நாளில் ஏழைகளுக்கு ஏடு, எழுதுகோல் மற்றும் அன்னம் ஆகியவற்றை தானம் செய்தால், சித்ரகுப்தன் மகிழ்வான்.
யமாயதர்மராஜாய மிருத்ய வேசாந்ததாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூதஷயாயச
ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ரா சித்ரகுப்தாயவைநம:
வைவஸ்வதாய காலாய ஸர்வபூதஷயாயச
ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ரா சித்ரகுப்தாயவைநம:
- இந்தச் செய்யுளைச் சொல்லி வணங்கினால், பலன்கள் கிடைக்கும்.
இறையுருவத்தைக் கண்கள் பார்க்க வேண்டும்; நாவு அவனது பெயரையே உச்சரிக்க வேண்டும்; மனமானது, அவனையே நினைக்கவேண்டும்; கைகள், அர்ச்சிப்பதில் ஈடுபட வேண்டும்; செவிகள், அவனது புகழைக் கேட்க வேண்டும்; கால்கள், அவனுடைய ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்; நாசி, அவனுக்கு அளிக்கப்படும் பூக்களின் நறுமணத்தை நுகரவேண்டும்; சிரம், அவனையே வணங்க வேண்டும்... இப்படியாக உடலுறுப்புகள் அனைத்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதே உத்தமம்! வீட்டில் வழிபடும்போது, இவை அனைத்தையும் திறம்படச் செய்யலாம்.
புராணங்களை இயற்றிய வேதவியாசர், மக்களைக் கரையேற்ற எளிய முறையில் வகுத்துத் தந்த வழிபாடுகள், இன்றைய சூழலுக்கும் உகந்ததாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு! அறம், பொருள், இன்பம், வீடு - ஆகியவற்றைப் பெற சித்ரகுப்த வழிபாடு உதவும் (தர்மார்த்தகாம...). சித்ரகுப்தனுக்கு உரிய நாளில், பெண்களும் வழிபடலாம்;
அவர்களுக்கு உரிய பலனும் வந்துசேரும் என நாரத ஸம்ஹிதை தெரிவிக்கிறது. வேதங்களை அறியாதவர்கள் கூட எளிய முறையில் பூஜித்துப் பயன் பெறலாம். 'சித்ரகுப்தாய நம:’ என்று சொல்லி, அனைத்து உபசாரங்களையும் செய்து, அவனது திருநாமத்தை உச்சரித்து வணங்கினால் போதும்!
அன்றாடப் பணிகளுடன் இறை வழிபாட்டையும் செய்ய வேண்டும். காலையில் நீராடி, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மனதாரப் பிரார்த்திக்க வேண்டும். முதலில் இவை நடைமுறைக்கு வந்தால்தான், புராணங்கள் சொல்கிற வழிபாடுகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும். கோயிலில் வழிபடுவது ஒருபுறம்இருப்பினும், வீட்டில் செய்யும் வழிபாடு களைச் செய்யும்போது, இன்னும் அமைதி யையும் சந்தோஷத்தையும் அடையலாம்! அதற்கு, நம் புராணங்கள் அளித்துள்ள வழிபாட்டு முறைகள், மிகச் சிறந்த வரப்பிரசாதம்!
thanx- sakthivikatan
![http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg](http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg)