Showing posts with label சித்தா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சித்தா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, December 06, 2023

சித்தா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

       


  போஸ்டர்  டிசைன், விமர்சனங்கள்  எல்லாம்  பார்த்து  இது  போஸ்கோ  சட்டம் பேஸ்  பண்ணிய  கதையா  இருக்கும்னு  நினைச்சேன், ஆனா  தரமான  க்ரைம் த்ரில்லர்  இது . சித்தார்த் உடைய  சொந்தப்படம்  என்பது  ஒரு  கூடுதல்  தகவல் . 4 கோடி  ரூபாய் பட்ஜெட்டில்  உருவாகி  நான்கு  மடங்கு  லாபம்  ஆக 16 கோடி  வசூல்  செய்த  படம் 

பொதுவாக  இந்த  மாதிரி படங்கள்  பெண்களுக்கும், பெண்  குழந்தைகள் , சிறுமிகளுக்குமான  விழிப்புணர்வுப்படமாகத்தான்  அமையும், இது  ஒரு  படி  மேலே  போய்  அப்பாவி  ஆண்கள்  இந்த  மாதிரி  சந்தர்ப்பு  சூழ்நிலை குற்றச்சாட்டுக்கு  ஆளாகாமல் இருப்பது  எப்படி   என்பதையும்   போகிற  போக்கில்  சொல்லி  இருக்கிறார்கள் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசர் . துப்புரவு  ஆய்வாளர். இவரது  ஆஃபீசில்  புதிதாக  துப்புரவுப்பணியாளர்  ஆக  நாயகி  வருகிறார். நாயகனின்  முன்னாள்  ஸ்கூல்  மேட். + 2  ரிசல்ட்  வந்தபோது  அண்ணனின்  திடீர்  இறப்பால்  நாயகனால்  நாயகியை  சந்திக்க  முடியாமல்  போய் விடுகிறது . அதனால்  நாயகி  நாயகன்  மீது  கடும்  கோபத்தில்  இருக்கிறார்.  இப்போது  இருவருக்கும்  ஊடல்  கலந்த  காதல் 


நாயகனின்  அண்ணி , அண்ணியின்  குழந்தை  இருவருக்கும்  நாயகன்  தான்  கார்டியன். அண்ணன்  மகளின்  க்ளாஸ்மேட்  நாயகனின் நண்பனின்  அக்கா  மகள் . இருவரையும்  பள்ளிக்கு  அழைத்துச்செல்வது  நாயகன்  தான் 


வில்லன்  சிறுமிகளைக்குறி  வைத்து  கடத்தி  பாலியல்  வன்கொடுமைக்கு  உள்ளாக்குபவன். நாயகனின்  நண்பனின்  அக்கா  மகளைக்கடத்தி  வில்லன்  பாலியல்  வன் கொடுமை  செய்து  விடுகிறான். ஆனால்  நாயகன்  தான்  அதை  செய்தது  என  ஆரம்பத்தில்  எல்லோரும்  தவறாக  நினைக்கிறார்கள் .   உண்மை  தெரிந்த  பின்  வருந்துகிறார்கள் 


 இப்போது  நாயகனின்  அண்ணன்  மகள்  வில்லனால்  கடத்தப்படுகிறாள் . அவளை  நாயகன்  எப்படி  மீட்டார்?  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  சித்தார்த் . இவர்  இதுவரை  ஏ செண்ட்டர்  ஆடியன்சை  கவர்  பண்ற  மாதிரி  கேரக்டரில்  தான்    நடித்து  வந்தார் . இதில்  இரண்டு  மாற்றங்கள் . முகத்தில்  டல்  மேக்கப்  போட்டு  மாநிற  கெட்டப்பில்  வருவது . பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவர்  செய்வது  போல  சாமான்யன்  ஆக  வருவது . இரண்டுமே  நல்ல  மாற்றங்கள் . அண்ணி ,  காதலி , நண்பன்  என  அனைவரும்  தன்னை  சந்தேகமாகப்பார்க்கும்போது  கூனிக்குறுகும்  இடம்  அருமை 


 நிமிசா சஞ்சயன்  தான்  நாயகி. த  கிரேட்  இண்டியன்  கிச்சன்  உட்பட  பல  மலையாளப்படங்களில்  நாயகி . தமிழில்  நடிக்கும்  முதல்  படம் . பொதுவாக  இவர்  முகம்  சிடுமூஞ்சி  மாதிரி  இருக்கும் . ஆனால்  இதில்  ஓரளவு  சிரிக்கிறார். மகிழ்ச்சி 


அண்ணியாக  அஞ்சலி  நாயர்  கச்சிதமான  நடிப்பு . சிறுமிகளாக   சஹஸ்ர ஸ்ரீ, அபிநயா  தஸ்னீம்  இருவ்ரும்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்கள் .குறிப்பாக  சஹஸ்ர ஸ்ரீ  நடிப்பு  அடகாசம் . குழந்தை  நட்சத்திரங்கள்  என்றாலே  ஓவர் ஆக்டிங் ,ஓவர்  ஸ்மார்ட், ஓவர்  வாய்  என  பேபி  ஷாலினி  பதித்து  வைத்த  ரெக்கார்டை  இவர்  முறியடித்து  இருக்கிறார். அவ்ளோ  இயல்பான  நடிப்பு 


 லேடி  இன்ஸ்பெக்டர்  ஆக  வரும்  அந்த  கண்ணாடி  போட்ட  பெண்மணி  யதார்த்தமாக  நடித்திருக்கிறார். வில்லன்  ஆக  வருபவர்  பதைபதைக்க  வைக்கிறார்


இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடும்படி  எடிட்  செய்திருக்கிறார்கள் .திபு  நிணன்  இசையில்  நான்கு  பாடல்கள்  ரசிக்க  வைக்கின்றன. விஷால்  சந்திர  சேகரின்  பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்   படத்துக்கு  என்ன  தேவையோ  அதை  கச்சிதமாக  தந்திருக்கிறது  , ஒளிப்பதிவு  பாலாஜி  சுப்ரமணியம் . கச்சிதம் 


எஸ் யூ  அருண் குமார்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்.


சபாஷ்  டைரக்டர்


1  வில்லன்  குழந்தையுடன்  ஷேர்  ஆட்டோவில்  வரும்போது  போலீஸ்  செக்கிங்  நடக்கும்  காட்சி  அற்புதமான  திரைக்கதை  அறிவுக்கு  ஒரு  சோறு  பதம், கலக்கல்  ஆன  மேக்கிங் . அந்த  சீனில்  ஆடியன்ஸ்  பல்ஸ்  எகிறுவது  உறுதி 


2  தோழிக்கு  நிகழ்ந்த  கொடூர  சம்பவத்துக்குப்பின்   அண்ணியின்  மகளுக்கு  குட்  டச்  , பேடு  டச்  சொல்லித்தரும்போது   மகள்  கேள்வி  கேட்பதும், அண்ணி  பதில்  சொல்வதும்  அதைக்கவனிக்கும்  நாயகனின்  ரீ  ஆக்சனும்  அருமை 


3  நாயகன் - நாயகி  இருவருக்குமிடையேயான்  ரொமாண்டிக்  போர்சன்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்   ரசிக்க  வைக்கும்  காட்சி  அமைப்புகள் 



ரசித்த  வசனங்கள் 

1 ஒரு  பொண்ணு  பஸ்ல  ஏறி  இறங்கும்  வரை  எந்த  ஆணாலும்  உரசப்படாமல்  இருந்தால்  அந்தப்பெண்  பெரிய  புண்ணியம்  செய்தவளாக  இருப்பாள் 


2  இந்த  ஆம்பளைங்க  எல்லாம்  ரொம்ப  யோக்கியம்  மாதிரி  சீன்  போடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பிரமாதமாகச்சென்று  கொண்டிருக்கும்  திரைக்கதை க்ளைமாக்சில்  தடுமாறுகிறது, பழி  வாங்கும்  கதை  போல  கொண்டு  போக  நினைத்தது  பெரிய  மைனஸ்


2  பழி  வாங்குதல்  தவறு , சட்டப்படி  தான்  தண்டனை  தர  வேண்டும்  என்ற  வாத  விவாதங்கள்  நடக்கும்போது  மெயின்  வில்லன்  மேல்  இருக்கும்  கோபமே  நமக்கு  டைவர்ட்  ஆகி  விடுகிறது , 


3  வில்லன்  சிறுமியை  அடைத்து  வைத்திருக்கும்போது  நிகழும்  சம்பவங்களை  இவ்ளோ  டீட்டெய்ல்  ஆகக்காட்டி  இருக்க  வேண்டாம் 


4 இரு  சிறுமிகளையும்  கடத்தியது  வெவ்வெறு  வில்லன்கள்  என்ற  ட்விஸ்ட்டும்  தேவை  இல்லாத  ஒன்றே., ஃபோக்கஸ்  குறைகிறது . ஒரே  வில்லன்  என  காட்டி  இருக்கலாம்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  க்ரைம்  த்ரில்லர் . அவசியம்  அனைவரும்  தங்கள்  பெண்  குழந்தைகளோடு  காண  வேண்டிய  விழிப்புணர்வுப்படம் . ரேட்டிங்  3 / 5 


Chithha
Theatrical release poster
Directed byS. U. Arun Kumar
Produced bySiddharth
Starring
CinematographyBalaji Subramanyam
Edited bySuresh A. Prasad
Music by
Production
company
Etaki Entertainment
Distributed byRed Giant Movies
Release date
  • 28 September 2023
CountryIndia
LanguageTamil
Budget₹4 crore
Box office16 crore