Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Saturday, November 24, 2012

கோக்கோகோலா பற்றி சாருநிவேதிதா கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு, எழுதிய கடிதம்


*
 அன்புக்குரிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு,


 கேரளம் சுவீகரித்துக்கொண்டிருக்கும் தமிழ் சாகித்யக்காரனான சாரு நிவேதிதா எழுதுகிறேன். மிகவும் reclusive-ஆன இயல்பு கொண்ட நான் மே இரண்டாவது வாரம் வெளிச்சிக்காலா, செங்கரா, பிளாச்சிமடா, ஆதிரப்பிள்ளி போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கே தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்துவிட்டு வந்தேன்.


 நான் எழுதிக்கொண்டிருக்கும் பட்டறையை விட்டு வெளியே வருவது எனக்கு அத்தனையன்றும் உவப்பானதல்ல. ஆனால், மக்களால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் மந்திரி வேலையை ஒழுங்காகச் செய்யாமல் நீங்கள் பணக்காரத் தொழிலதிபர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதாகத் தெரிவதால், ஒரு சாகித்யக்காரனாகிய நான் என்னுடைய பட்டறையை விட்டு வெளியே வந்து நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டியதாகியது

 அதாவது, பல மாதங்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்தேன். அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தேன். அவர்களோடு உரையாடினேன். இப்போது அவர்களிடமிருந்து கொண்டுவந்த செய்தியை உங்களுக்கு இந்தப் பத்திரிகையின் வாயிலாகத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். 




 சாலக்குடி நதி கேரளத்தின் ஐந்தாவது பெரிய நதி; மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக அடர்த்தியான வனங்களினூடே ஓடும் இந்நதியைச் சுற்றியுள்ள பகுதிகளை எண்ணிறந்த வன மிருகங்கள் தங்கள் உறைவிடமாகக் கொண்டுள்ளன; நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகள் வசிக்கும் இந்திய நதிகளில் சாலக்குடி நதியும் ஒன்று (அப்படிப்பட்ட நதிகள் இமய மலையின் பள்ளத்தாக்குகளிலேயே உண்டு; அதற்கு அடுத்தபடியாகக் கேரளம்தான்). 

 இந்த விபரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதே போல், ஏலம், காப்பி, தேயிலைத் தோட்டங்களுக்காகச் சோலையார், கரப்பாரா போன்ற நதிப்படுகைகளின் வனங்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே அழிக்கப்பட்டுவிட்டன. பரம்பிக்குளம் சமவெளியின் பசுமைக்காடுகள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேக்கு மர உற்பத்திக்காக அழிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்த அந்தக் காரியத்தை இன்றும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.


சாலக்குடி நதியிலும், பரம்பிக்குளம், சோலையார், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் என்ற அதன் உபநதிகளிலும் நதிநீர் மின்சாரத்துக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ஆறு அணைகளால் அந்த உபநதிகள் அனைத்தும் வற்றிப் போய்விட்டன. சாலக்குடியின் புழையோரக் காடுகளில் வசிக்கும் காடர் என்ற பூர்வகுடியினம் இன்று எண்ணிக்கையில் வெறும் 1500ஆகச் சுருங்கிவிட்டது. உலகிலேயே காடர் இனத்தினர் வசிப்பது இந்தக் காடுகளில்தான். இந்திய அரசு புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிக் கவலைப்படுகிறது.


ஆனால் ஒரு பூர்வகுடி இனம் இந்தப் பூமியில் தாங்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்து போவது பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை. 144 கி.மீ. நீளமே உள்ள இந்தச் சிறிய நதியில் தொடர்ந்து அணைகளைக் கட்டிக் கொண்டிருந்த காரணத்தினாலேயே வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட காடர்கள் இன்று முற்றாக அழிந்து போகும் (extinct) நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அப்படியானால் இதுவும் ஒருவகையான இனப்படுகொலை தானே?


சாலக்குடி நதியை ஒட்டியிருக்கும் 25 பஞ்சாயத்துகளிலும், 2 நகரசபைகளிலும் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடிநீர், விவசாயம் போன்றவற்றுக்காக இந்த நதியையே நம்பியிருக்கின்றனர். இவர்களைத் தவிர, இந்நதியை நம்பி வாழும் தமிழ் நாட்டு விவசாயிகளும் அநேகம் பேர் உண்டு.


இந்த நிலையில்தான் உங்கள் அரசு மின்சார உற்பத்திக்காக சாலக்குடி நதியில் ஏழாவது அணையைக் கட்ட முன்வந்துள்ளது. இதனால் என்ன ஆகும் என்றால், சாலக்குடியின் புழையோரக் காடுகளும், அக்காடுகளில் வசிக்கும் காடர், முதுவன் போன்ற பூர்வ குடிகளும், நான்கு வகையான மலமொழக்கி (தமிழில் இது இருவாட்சி என்று அழைக்கப்படுகிறது) பறவையினங்களும், புலி, யானை போன்ற விலங்குகளும், 104 வகை மீன் இனங்களும் அழிந்து போகும். காரணம், சாலக்குடி நதியும் தனது உபநதிகளைப் போலவே அழிந்து போகும். சாலக்குடி மட்டும் அல்ல; கேரளத்து நதிகள் அனைத்துமே அரபிக் கடலில் கலப்பதை நிறுத்திவிட்டன



 கேரள அரசும், அதிகார வர்க்கமும் அந்நதிகளைக் கடலில் கலக்க விடாமல் இடையிலேயே கொன்றுவிடுகின்றன. ஒரே ஒரு மானைக் கொன்றதற்கே ஒரு நடிகருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது என்றால், இப்படி நதிகளையும், நதியோர வனங்களையும், அதில் வாழும் சகல ஜீவராசிகளையும் அழித்துப் போடும் உங்களுக்கு என்ன தண்டனை



சாலக்குடியில் வாழச்சால் மற்றும் ஆதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிகளின் அருகே அமர்ந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து சத்தியாகிரகம் செய்து வருகிறார்கள் சாலக்குடி புழா ஸம்ரக்ஷண ஸமிதியினர். அவர்களை ஆதிரப்பிள்ளியில் சந்தித்து உரையாடி விட்டு, வனப்பாதையின் வழியே கீழே இறங்கி வந்து சாலக்குடியில் சாம்பவா இன மக்களின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டேன். அவர்களுடையது மற்றொரு சோகக் கதை. மூங்கில், நாணல் இரண்டையும் கொண்டு பாய், முறம், கூடை போன்றவற்றைமுடைந்து, அதன் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த அவர்களின் நிலைமை இன்று கற்பனை செய்ய இயலாதபடி அவலமாகிக் கிடக்கிறது.



வனத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு பெரும் தொழில் தேக்கு. அதில் ஈடுபடுபவர்கள் தனவந்தர்கள். ஆனால் அதைத் தவிர்த்து மூங்கில், நாணல் போன்றவற்றை எடுத்து, அதிலிருந்து அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபடுபவர்களான சாம்பவா இன தலித் மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது. காரணங்கள் பல. ஒன்று, நவீன வாழ்வில் செயற்கைப் பொருட்களின் மீதான ஆர்வம்.


உதாரணமாக, மூங்கில், நாணல் போன்றவற்றின் இடத்தை இன்று பிளாஸ்டிக் பிடித்துக் கொண்டுள்ளது. இது குறித்து சிறிய அளவில் விளம்பரம் செய்தாலே போதும், சாம்பவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடையும்; தமிழ்நாடு முழுவதற்குமான கூடைத் தேவையைப் பூர்த்தி செய்யவே ஒரு கேரளம் போதாது. இந்தத் துறையில் உள்ள மற்றொரு பிரச்சினை, தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் கூலிகள். பிழைப்புக்கு எந்தவித ஆதாரமும் இல்லாத இவர்களிடம் இந்தத் துறையில் இருக்கும் இடைத் தரகர்கள் முன் பணமாகக் கடன் கொடுத்து, அந்தக் கடனை அடைக்க இவர்களை மிகக் குறைந்த கூலிக்கு இந்த மூங்கில், நாணல் தொழிலில் அமர்த்துகிறார்கள். இந்தத் தமிழர்கள் மீது குற்றமில்லை. இடைத் தரகர்களே ஒழிக்கப்பட வேண்டும்.



 அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான துறை இது. ஏனென்றால், 1930களில் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ராணுவத்துக்கு இந்த சாம்பவர்கள் தயாரித்துக் கொடுத்த பாய்களைத்தான் கூடாரங்களாகப் பயன்படுத்திக் கொண்டது. இப்போதும் நீங்கள் இந்திய ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளாஸ்டிக், தார்ப்பாலின் போன்றவற்றுக்குப் பதிலாக பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியதைப் போல் இந்த மூங்கில், நாணல் பாய்களைப் பயன்படுத்தச் செய்தால் சாம்பவர் என்ற இந்த தலித் இனம் மட்டுமல்ல, கேரளத்துக்கே அது மிகப் பெரும் பயனையளிப்பதாக இருக்கும்.



சாம்பவர் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இரவு முழுவதும் மாறி மாறி பஸ் பிடித்து (மேலே சாலக்குடியிலிருந்து கீழே இருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு வர வேண்டும்; அதிலும் கோடைக்காலம் பாருங்கள், கூட்டம் அதிகம் . . .) செங்கரா வந்து சேர்ந்தேன். குளிப்பதற்கு மட்டும் ஒரு மணி நேர இடைவெளி கிடைத்தது. செங்கரா வந்தால் அங்கேயும் பழைய கதைதான். கடந்த பத்து மாதங்களாக செங்கராவின் ஆதிவாசிகளும், தலித் மக்களும் தாங்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த நிலமும், மலைகளும் எங்களுடையவை' என்கிறது ஹாரிஸன் கம்பெனி. குத்தகைப் பத்திரமும் அவர்களிடம் இருக்கிறது



முதலமைச்சர் அவர்களே! உங்களை நினைத்தால் எனக்கு இந்த இந்தியாவை கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களிடம் குத்தகைக்கு விட்ட குறுநில மன்னர்களின் நினைவுதான் வருகிறது. பத்து மாதங்களாக ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்த மலைப் பிரதேசத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது இவர்களின் கோரிக்கையைச் செவி மடுக்காமல் உங்களுக்கு வேறு என்ன வேலை? யாரோ ஒரு பணக்காரர் மும்பையில் 4000 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைப் போன்ற பணக்காரர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியாளாகப் போய் விட்டீர்களா நீங்கள்?



 4000 கோடி ரூபாய் வீட்டைச் சுத்தம் செய்ய ஒரு முதலமைச்சர் போன்ற கனவான்தான் தேவை என்று நினைத்து அந்தப் பணக்காரர்கள் உங்கள் கையில் ஒரு தங்கத்தால் ஆன விளக்குமாற்றைக் கொடுத்திருக்கலாம். 4000 கோடி வீடு என்பதால் அதற்கான பணியாள் கூலியும் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கலாம்; ஆனால், 'அந்த' வேலைக்காக மக்கள் உங்களை முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கவில்லையே?


அது சரி, ஜனங்களுக்கு வேண்டி ராஷ்ட்ரமா? அல்லது, ராஷ்ட்ரத்தினு வேண்டி ஜனங்களா? எப்போதோ ஒரு பணக்காரர் இந்த நிலத்தை ஹாரிஸன் நிறுவனத்திடம் குத்தகையாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணக்காரருக்கும் இந்தச் செங்கரா நிலத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், இங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆதிவாசிகள்தான். அதுவும் தவிர, ஹாரிஸன் கம்பெனியின் குத்தகை உரிமையும் 1996இலேயே முடிவடைந்துவிட்டது


 ஆனால் முன்பு ஹாரிஸன் & க்ராஸ்ஃபீல்ட் என்று இருந்த திருநாமத்தை இப்போது ஹாரிஸன் மலையாளம் என்று மாற்றிக் கொண்டு இந்த நிலத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறது அந்தக் கம்பெனி. நூற்றாண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளிடமிருந்து இந்த நிலத்தையும், வனங்களையும், மலைகளையும் ஒரு வெளி நாட்டுக் கம்பெனி பிடுங்கிக்கொண்டு அந்த ஆதிவாசிகளை இங்கிருந்து விரட்டுவதை நியாய உணர்வுள்ள யாரும் ஒப்புக்கொள்ள முடியுமா


 ஆனால் அப்படிப்பட்ட கம்பெனிக்கு உங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாக இருந்து வருகிறது. அதனால்தான் நான் செங்கரா ஆதிவாசிகளிடம் உரையாற்றிய போது உங்களுடைய போராட்டம் ஒரு சுதந்திரப் போராட்டம்' என்று வர்ணித்தேன். செங்கரா ஆதிவாசிகள் புத்தரையும், அய்யன் காளியையும், அம்பேத்கரையும் கடவுளாக வழிபட்டு, அந்த பலத்தில்தான் இப்படி 10 மாதங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை இந்தக் காடுகளிலிருந்து விரட்டினால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி ரப்பர் மரங்களின் மீது ஏறி நின்றுகொண்டதும், தங்களை எரியூட்டிக் கொள்வோம் என்று சொல்லி மண்ணெண்ணெயும் மெழுகுவர்த்தியுமாக ஆயிரக்கணக்கான பேர் முன் வந்து போராடியதும் உங்களுக்குத் தெரியாதா?


 4000 கோடிக்கு வீடு கட்டும் பணக்காரர்களின் புரோக்கராகிவிட்ட நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் இங்கே செங்கராவுக்கு வந்து இந்த ஆதிவாசிகளின் உரிமைக் குரலைக் கேட்க முடியாதா? அப்படிச் செய்வதை விட்டுவிட்டு, உங்களுடைய போலீஸை விட்டு இந்த ஆதிவாசிகளின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்று கைது செய்கிறீர்கள் . . . உங்களுடைய வங்காளத் தோழர்கள் நந்தி கிராமத்தில் செய்ததையே நீங்கள் கேரளத்தில் நடத்திக் காட்டுகிறீர்கள்.


செங்கராவிலிருந்து கிளம்பி பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே பார்த்தால் கொக்கோ கோலா கம்பெனி. கோலா தயாரிப்பதற்காக அந்தக் கம்பெனி அங்கேயுள்ள நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சியெடுத்துவிட்டதால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், கோலா தயாரிப்பினால் வெளியேறும் ரசாயனக் கழிவினால் (sludge) அந்தப் பகுதி நிலமே விஷமாகிறது. ஏனென்றால், கோலா தயாரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவில் காட்மியம் (Cadmium), க்ரோமியம், பாஸ்பரஸ், ஸிங்க், அலுமினியம் என்ற ரசாயனக் கலவைகள் உள்ளன என்று Greenpeace நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது


 இது பற்றி பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களிலும் செய்தி வந்து கேரளத்தின் 'புகழ்' பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரசாயனக் கலவை நிலத்துக்கு உரம் என்று பொய் கூறித் திரிகிறது கொக்கோ கோலா நிறுவனம். நீங்களோ எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோலாவை எதிர்க்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் கோலாவை ஆதரிக்கிறீர்கள். இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்குவீர்களா?



கடந்த ஆறு ஆண்டுகளாக பிளாச்சிமடை மக்கள் கொக்கோ கோலா நிறுவனத்தின் எதிரே பந்தல் போட்டு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களிடம் உங்கள் முதலமைச்சர் யார் என்று கேட்டேன். தெரியவில்லை. அவ்வளவு அப்பாவி மக்கள். கூலித் தொழிலாளிகள். மிக வறிய நிலையில் வாழ்பவர்கள். ஆனால் கோலாவினால் தங்கள் நிலம் விஷமாகிவிட்டது என்பதையும், கோலாவினால் தங்களுக்குக் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். யாரும் போய் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை.


 கோலா கம்பெனியால் அவர்களின் நிலம் விஷமானதையும், குடிநீர் பறி போனதையும் யாரும் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: "பல மாதங்களாக, பல ஆண்டுகளாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்; நகரங்களிலிருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குப் புடவையும் ஜாக்கெட்டும் கொண்டுவந்து கொடுங்கள்; சுனாமி வந்தபோது அப்படிக் கொடுத்தீர்களாமே? அது போல . . ." புரிகிறதா முதலமைச்சர் அவர்களே; இந்த மக்கள் எவ்வளவு கொடுமையான நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று?


மேதா பட்கர் வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தமிழ் நாட்டிலிருந்து நான். கேரள எழுத்தாளர்கள் அரசாங்க விருது வாங்குவது எப்படி என்பதை யோசிப்பதிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதிலும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களை விட்டுவிடுவோம் . . . 


பிளாச்சிமடையிலிருந்து கிளம்பி கொல்லம் மாவட்டம் வெளிச்சிக்காலா வந்தேன். அங்கேயும் அதே பிரச்சினை. அந்த மண்ணில் கிடைக்கும் ரசாயனத்துக்காக சுரங்கம் தோண்டி அந்த மக்களுக்கு இப்போது குடிநீர் பறிபோய்விட்டது. சற்றே வசதியான நிலையில் வாழும் அந்த முஸ்லீம் மக்கள் இப்போது ரோட்டுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் 10.5.2005இலிருந்து தொடங்கி இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது.


 என்னுடன் முத்தங்கா போராளியான சி.கே. ஜானுவும் பேசினார். நானும் ஜானுவும் என்ன பேசினோம் என்று உங்களுடைய போலீஸார் இந்நேரம் உங்களுக்குத் தெரிவித்து இருப்பார்கள். அங்கே நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொன்னேன். கடவுளின் தேசம் என்று உலகம் பூராவிலும் உள்ள மக்கள் ப்ரஸீலைச் சொல்லவில்லை. கேரளத்தைத்தான் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட கேரளத்தை, இந்தக் கடவுளின் தேசத்தை சைத்தான்களின் தேசமாக மாற்றப் பார்க்கிறார் கேரள முதலமைச்சர் என்று என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன்.


கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம்கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது தான். அந்தத் தியரியின்படி ஆப்பிரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார், சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும், நீரையும், காற்றையும், கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது . .

 .
அன்புடன்,

சாரு நிவேதிதா


எதிர்காலத்தை மாற்ற விரும்பவில்லை. இந்த உலகின் கடந்த காலமும் நமக்குச் சொந்தமில்லை. நாம் இங்கிருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. நமது தொழிலைத் தொடர அதிக லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கால எந்திரம் மிக நுணுக்கமாக கையாள வேண்டிய விஷயமாகும். நமக்குத் தெரியாமலே ஒரு விலங்கை, ஒரு பறவையை, ஒரு மீனை . . . ஏன் ஒரு மலரை நாம் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் வளர்ந்து வரும் ஓர் உயிரினத்தின் வம்சாவளியை அழித்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது
'எனக்குப் புரியவில்லை' என்றான் எக்கல்ஸ். 





 'இதோ பார், தவறுதலாக ஒரு எலியைக் கொன்று விடுகிறோம் என்று வைத்துக்கொள். அப்படியென்றால் அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததிகள் அனைத்தையும் நாம் அழித்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

'ஆமாம்.


'அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததியினரின் எதிர்கால சந்ததியினர் அனைவரும் அழிந்து போவர். உன்னுடைய ஒரு தவறால் முதலில் ஒரு எலி, பின்னர் ஒரு டஜன், பிறகு ஆயிரம், ஒரு மில்லியன், ஒரு பில்லியன் எலிகள் அழியும் வாய்ப்பு உள்ளது.


'எலிகள் செத்தால் என்ன?' என்றான் எக்கல்ஸ்.



  'எலிகள் செத்தால் என்னவா? எலிகளை நம்பியிருக்கும் நரிகளின் கதி என்ன? 10 எலிகள் இறந்தால் அதை நம்பியிருக்கும் ஒரு நரியின் பிழைப்பு என்னாவது? 10 நரிகள் இறந்தால் ஒரு சிங்கம் பசியால் வாடாதா? ஒரு சிங்கத்தை நம்பியிருக்கும் புழுப் பூச்சிகள், கழுகுகள், கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்து போகாதா? 59 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டைக்குப் புறப்படும் குகை மனிதனை பற்றி நினைத்துப் பார். உன்னுடைய சிறு தவறால் இந்தப் பகுதியில் எந்த விலங்கும் இருக்காது.


 குகை மனிதனுக்கு உணவு கிடைக்காது. அவன் இறந்தால் என்னவென்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவனிடமிருந்துதான் எதிர்கால தேசமே தோன்றவுள்ளது. அவனிடமிருந்து 10 பிள்ளைகள் தோன்றுவர். அவர்களிடமிருந்து 100 பிள்ளைகள் தோன்றுவர். ஒரு சமுதாயமே உருவாகும். இந்த ஒரு மனிதனை அழிப்பது ஓர் இனத்தையே, ஒரு வரலாற்றையே அழிப்பதற்கு சமம். இவனைக் கொல்வது ஆதாமின் பேரப் பிள்ளைகளில் ஒருவனைக் கொல்வதற்கு சமமாகும்.


 ஒரு எலியைக் கொல்வதன் மூலம் இந்த பூமியையும் அதன் எதிர்காலத்தையும் அசைத்துப் பார்க்கும் ஒரு பூகம்பத்தையே நீ தொடங்கி வைக்கிறாய். ஒரு குகைமனிதனின் இறப்பின் மூலம் கோடிக்கணக்கான அவனது சந்ததிகள் கருவிலே கொலகொல்லப்படுகிறார்கள். ரோமப் பேரரசு தோன்றாமல் போகலாம். ஐரோப்பா ஒரு இருண்ட காடாகவே நிலைத்திருக்கும். ஆசியக் கண்டம் மட்டுமே நாகரீகமடைந்திருக்கும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் சிறு காலடி, பிரமிடுகளை நசுக்கிவிடும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் காலடி கிராண்ட் கேன்ய்ன் போல் கால ஓட்டத்தில் அழியாத மாபெரும் வடுவாக நிலைத்து விடும். குயின் எலிசபெத் எப்போதும் பிறந்திருக்க மாட்டார். டெலாவர் நதியை வாஷிங்டன் கடந்திருக்காது; அமெரிக்கா தோன்றியிருக்காது. எனவே எச்சரிக்கையாயிரு. பாதையோடு ஒட்டி நில; விலகி விடாதே.








ரே பிராட்பரியின் 'எ சவுண்ட் ஆப் தண்டர்' சிறுகதையின் ஒரு பகுதி


நன்றி - உயிரோசை

Sunday, July 08, 2012

சாரு நிவேதிதா. - நகைச்சுவை சிறுகதை - கையருகே ஆகாயம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC_BfKip_CufzCxFgHvY0zElslpq6TWGWwmYY74CwqZkHLF90SeaW9Pavbh65LkWmt-EWOTlE1DcsZiebxEzA6t2Qv8SMemUdj_kAuEmOOpuanFOequLSFVk1t562f5yEtBa7BHpMBqKc/s400/charu02+(1).JPGகதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.


ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார்.


எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம்.


என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா வருடம் டிசம்பர் மாதம் பாரீசுக்குச் சென்று என் பிறந்த நாளை நானே கொண்டாடுவது வழக்கம். ஐரோப்பாவில் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கும். ஊட்டியில் கூட குளிர் காலத்தில் குளிர் ஜீரோ டிகிரிக்குப் போகும் என்றாலும் , அதே ஜீரோ டிகிரி ஐரோப்பாவில் வேறு மாதிரி இருக்கும். காலம் , காலமாக வெப்பத்தைக் காணாமல் குளிரிலேயே உறைந்து கிடப்பதால் ஐரோப்பிய மண்ணின் குளிருக்கு வீரியம் அதிகம். ஆனால் , ராமசாமியால் எப்படி அந்தக் குளிரைத் தாங்க முடியும்.


” நாம் ஏப்ரல் , மே கோடைக் காலத்தில் போகலாம் “ என்றேன். அவர் கேட்கவில்லை. இப்போதே கிளம்பினால் தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றார். ராமசாமி , நாமக்கல்லில் ஒரு கோடீஸ்வரர் ; பண்ணையார். ஏகப்பட்ட லாரிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் , பார்ப்பதற்கு ஏதோ டாஸ்மாக் பாரில் எடுபிடி வேலை செய்பவர் போல் தோற்றம் தருவார். காலில் ரப்பர் செருப்பு ; அதிலும் , ஒரு அறுந்த வாரை ஊக்கு போட்டு மாட்டியிருப்பார். சுருக்கம் விழுந்த சட்டை. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஆட்டோவில் ஏற மாட்டார் ; எல்லாவற்றுக்கும் பஸ் தான்.


” இப்படியெல்லாம் பாரீஸ் வந்தால் குளிரில் விறைத்துச் செத்துப் போய் விடுவீர்!“ என்று எச்சரித்தேன். பாரீஸ் போய் வாங்கினால் , நம்மூர் காசுக்கு விலை ஐந்து மடங்கு ஆகி விடும் என்று சொல்லியும் செவி சாய்க்கவில்லை. பிறகு கட்டாயப்படுத்தி ஷூ , ஸ்வெட்டர் எல்லாம் வாங்கச் செய்தேன்.ஜீரோ டிகிரி குளிரில் வாழ வேண்டுமானால் , ஒருவர் குறைந்தபட்சம் 12 கிலோ எடையுள்ள கம்பளி உடுப்புகளை அணிந்திருக்க வேண்டும்.


கம்பளி சாக்ஸ் , குளிர் நாடுகளுக்கேற்ற ஷூ (அதன் விலை இந்தியாவில் ரூ. 10,000), கையுறை , ஸ்வெட்டர் , கம்பளி கோட்டு , மப்ளர் , குல்லாய் என்று இத்தனை உருப்படி தேவை. ஆனால் , ராமசாமி ரூ. 300 க்கு ஒரு ஷூவை வாங்கினார். கோட்டு இல்லை ; மப்ளர் இல்லை ; கையுறை இல்லை ; எதுவுமே இல்லை! கிளம்பி விட்டார். விமானத்திலேயே பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ராமசாமியிடம் ஒரு விநோத பழக்கம் என்னவென்றால் – அவருக்கு அருகிலேயே , அவரைத் தொடக் கூடிய தூரத்திலேயே நீங்கள் அமர்ந்திருந்தாலும் எங்கோ அடுத்த வயக்காட்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிடுவது போன்ற குரலில் பேசுவார் ; கத்துவார் என்பதே சாலப் பொருத்தம்.


விமானத்தில் அவருக்குப் பக்கத்து சீட்டு தான் எனக்கு. ஆனாலும் , வானில் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு விமானத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரோடு பேசுவதாக நினைத்து , என் செவிச் சவ்வுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் , ராமசாமியிடம் மெதுவாகப் பேசுமாறு கேட்டுக் கொண்ட போது , இரண்டு நிமிடம் அடங்கி விட்டு , பிறகு , மீண்டும் அதே உச்சத்தில் ஆரம்பித்தார். நான் , சைகையில் வெள்ளைக்காரனைக் காண்பித்தேன். உடனே சப்தமாக , ” அவங்கெடக்கான்… நம்ப ஊருக்கு வந்துட்டு அவன் என்ன நம்பள நாட்டாமை பண்றது ? “ என்றார்.



” இது உம்முடைய நாமக்கல் அல்ல ; இப்போது நாம் ஆகாயத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். அநேகமாக துருக்கியாக இருக்கலாம்.. “ என்று அவரிடம் சொல்ல நினைத்தேன்.ஆனால் , அதற்கும் ஏதாவது குதர்க்கமாக பதில் சொல்வார். அதனால் , கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன். தூக்கம் வரவில்லை ; இருந்தாலும் , கண்களைத் திறக்க அச்சமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும் ? பிறகு லேசாகக் கண்ணைத் திறந்து பார்ப்பேன். அவ்வளவுதான் , எலியை கவ்வுவதற்காகப் பாயும் பூனையைப் போல் பாய்ந்து பிடித்துக் கொள்வார்.


பிறகு , மறுபடியும் ஆரம்பிக்கும் கச்சேரி. இப்போது முன்னை விட சுதி ஏறியிருக்கும். ஆமாம் , விமானத்தில் தரும் ஸ்காட்ச் விஸ்கியை அதற்குள் நாலைந்து ரவுண்ட் போட்டிருப்பார். ஏதாவது சுவாரசியமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். எல்லாம் அவருடைய மனைவியைப் பற்றிய புகார் கதைகள். ஆனால் , எனக்கு என்னவோ அந்தப் பெண்மணி மீது மதிப்பு தான் கூடியது. இப்படி 24 மணி நேரமும் தவளையைப் போல் கத்திக் கொண்டிருக்கும் மனிதரோடு இத்தனை வருடம் குடித்தனம் நடத்திஇருக்கிறாளே , அவள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியாக இருக்க வேண்டும்!


பாரீஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் என் தோள் பையைத் திறந்து ஒரு பொருளை எடுத்து , ; இதோ பாருங்கள் பெருமாள்! ; என்று பெருமையுடன் காண்பித்தார் ராமசாமி. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஆண்டு தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் , சுமை எதுவும் தூக்க வேண்டாம்! என்று எச்சரித்திருந்தார் மருத்துவர். ஆக , என் பையையும் ராமசாமியேதான் தூக்கி வர வேண்டியிருந்தது. உண்மையில் எனக்கு இத்தனை உதவி செய்த ஒரு நண்பரைப் பற்றி பொல்லாங்கு சொல்வது பற்றி எனக்கே நாணமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய ? என் தொழில் (எழுத்து) அப்படி!


என் கைப்பையிலிருந்து ராமசாமி எடுத்துக் காண்பித்த பொருளைப் பார்த்ததும் நான் ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். விமானத்தில் போர்த்திக் கொள்வதற்காக போர்வை கொடுப்பர் அல்லவா , அந்தப் போர்வையை என் பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்! அந்தக் குளிரிலும் எனக்கு வேர்த்து விட்டது. மாட்டியிருந்தால் அவமானமாகப் போயிருக்குமே! ” இங்கே குளிர் அதிகமில்லே ? அதுதான் எடுத்து வைத்துக் கொண்டேன் ” என்றார் ராமசாமி. எனக்கு வந்த கோபத்தில் எதுவும் பேசவில்லை.

விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து லாட்ஜில் ரூம் போட்டோம் ; ஆனால் , அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. நாங்கள் சென்ற இடம் கார் துநோர் என்ற பாரீசின் வடக்குப் பகுதி. அங்கே வசிக்கும் பெரும்பான்மையோர் வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பின முஸ்லீம் மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள்.சிறிய லாட்ஜுகளின் உரிமையாளர்கள் பலரும் அல்ஜீரியர்கள். அவர்களிடம் சென்று , “ எங்கள் இருவருக்கும் ஒரே அறை வேண்டும்… ” என்று சொன்னதும் சைத்தானை நேரில் கண்டது போல் , ” ஹராம் , ஹராம்… “ என்று கத்தினர்.


இந்த இடத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. என் நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். அவன் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.விசனத்தில் இருந்த நண்பருக்கு ஆதரவாக என் மற்றொரு


நண்பனான நிக்கி என்ன சொன்னான் தெரியுமா ? “ சந்தோஷப்படுங்கள் , அட்லீஸ்ட் அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானே என்று! “, இன்னமும் புரியவில்லையா ?


அதாவது , அந்த அல்ஜீரியர்கள் என்னையும் , ராமசாமியையும் , ‘ ஹோமோ ‘ என்று நினைத்து விட்டனர். சே… சே… என் வாழ்விலேயே அப்படி ஒரு அவமானகரமான சம்பவத்தை நான் அனுபவித்தது இல்லை. பிறகு ஒரு மூன்றாந்தரமான லாட்ஜில் ரூம் போட்டோம். ஓனர் ஒரு வயதான ப்ரெஞ்சுக்காரி என்பதால் பிரச்னை இல்லை.முதல் நாளே ஆரம்பித்து விட்டது பிரச்னை. குளிர் ஜுரம் கண்டவனைப் போல் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. அறையை விட்டு வெளியே வரவே இல்லை.


மதிய உணவுக்கும் , இரவு உணவுக்கும் மட்டும் தான் வெளியே வந்தார். வடக்கு பாரீசில் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் லா சப்பல். இது ஒரு குட்டி யாழ்ப்பாணம். திரும்பின இடமெல்லாம் தமிழ்க் கடைகள் தான். அதனால் , தமிழ்ச் சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் , இவ்வளவு தூரம் வந்து , இவ்வளவு பணம் செலவு செய்து ரசமும் , சாம்பாரும் சாப்பிட வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இருபத்து நாலு மணி நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து , சாம்பார் சாதம் சாப்பிடுவதற்கு ஒரு ஆள் ஏன் பாரீஸ் வரை வர வேண்டும் ?


அறையில் மற்றொரு பிரச்னை , சிகரட். ராமசாமிக்கு விழித்திருக்கும் நேரமெல்லாம் வாயில் சிகரட் புகைத்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் , அவர் குடிக்கும் சிகரட் , இந்த உலகத்திலேயே படு மட்டமான ரகம். எங்களுடைய நிதி நிலமை தனித்தனி அறைகளில் தங்குவதற்கு மதிக்கவில்லை. இது எல்லாவற்றையும் கூட மன்னித்து விடுவேன். ஆனால் , ஸ்பெய்னிலிருந்து நாங்கள் பாரீசுக்கு வந்த ரயில் பயணத்தில் ராமசாமி செய்த ஒரு காரியத்தை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது.


பிரான்சிலிருந்து ஸ்பெய்ன் சென்று விட்டு , அங்கிருந்து பாரீசுக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். முந்தின தினம் தான் கிறிஸ்துமஸ். அது ஒரு பகல் நேரம். வரும் வழியெல்லாம் கிறிஸ்துமஸ் மரங்களும் மற்றும் பெயர் தெரியாத ஆயிரக் கணக்கான மரங்களிலும் பனித் துகள்கள் பொடிப் பொடியாக விழுந்து , மரங்களையே மறைத்துக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தப் பரவசமான காட்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாதவனாக இருக்கிறேன்.


ஒரு மகா அற்புதம் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேஷன் வரும். அப்புறம் வருவதெல்லாம் அந்த அற்புதம் தான். அந்த ரயிலைத் தவிர அங்கே மனித வாழ்வின் சுவடே தெரியாமல் கிடந்தது. எதிரே தூங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. ஆம் , சொல்ல மறந்து விட்டேன். அவர் சிகரட் குடிக்காத நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். உட்கார்ந்தபடி தூக்கம் , நின்றபடி தூக்கம். மனிதர் சல்லாப நேரத்தில் கூட தூங்கிக் கொண்டிருந்திருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டது


எனக்கு.எழுப்பி விட்டு அந்த அற்புதத்தைப் பார்க்கச் சொன்னேன். கண்களில் எந்த பாவமும் இன்றி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிக்கு பாரீஸ் வந்து சேரும் வரை தூக்கம் தான். ஆனால் , சைத்தான் எனக்குள்ளேயும் இருக்கிறான் என்று தோன்றியது. கடவுள் உனக்கு சொர்க்கத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்து அனுபவிப்பதை விட்டு விட்டு , உன்னை எவன் , பக்கத்திலிருப்பவனின் தூக்கத்தைப் பற்றி எண்ணி எரிச்சலடையச் சொன்னது ? பாரீஸ் வந்ததுமே பயணத் தேதியை முன்னதாகவே மாற்றிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.


சென்னை வந்து இரண்டு வாரம் இருக்கும். ராமசாமிக்கு போன் போட்டேன். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்தது. அப்போது ஒரு நாள் – ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு போன் வந்தது.ராமசாமியின் மனைவி. அப்போது தான் முதல் முறையாக என்னோடு பேசுகிறார். அவர் கேட்ட முதல் கேள்வி:


“ ராமசாமி எங்கே ? “


“அடப்பாவி , நாங்கள் வந்தே இரண்டு வாரம் ஆகிறதே! இன்னுமா அவர் ஊர் வந்து சேரவில்லை ? “


ராமசாமியின் மனைவி உஷ்ணமாகி விட்டார்…


“ராமசாமி காணவில்லை என்று நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன். போலீஸ் உங்களிடம் வருவார்கள். தயாராக இருங்கள்
 http://covers.openlibrary.org/w/id/6276273-M.jpg

Tuesday, April 03, 2012

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

Wednesday, February 22, 2012

ஓ பக்கங்கள் ஞானியை, கலாய்த்த ஓஹோ பக்கங்கள் விஞ்ஞாநி சாருவை கலாய்க்கும் அஞ்ஞானி குமாரு

http://charuonline.com/blog/wp-content/uploads/sujatha-300x236.jpg 

ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.


சி.பி - சாருவுக்கு மனசுக்குள்ள இன்னும் சின்னப்பாப்பான்னே நினப்பு..  டீச்சர், இவன் என்னை கிள்ளிட்டான்.. அவன் என்னை அடிச்சுட்டான்.. 

சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா? 


சி.பி - இல்லண்ணே, சீன் படமா? அது?



 அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?


 சி.பி - ஆஹா, படம் செமயான தீம் போல... பார்த்துடவேண்டியதுதான்..


தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…


சி.பி - எக்சைல் நாவலை படிச்ச மாதிரி சப்புன்னு இருந்திருக்கும்.. ஹி ஹி 

  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!



சி.பி -  உங்க 2 பேருக்கும் ஒரே குறைங்கற ஆதங்கத்துல தெரியாம சொல்லிட்டார்.. விடுங்க்ணா.. கூல்


என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள். 


சி.பி - அண்ணன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. தாத்தா ஆனாலும் அண்ணனோட சிநேகம் எல்லாம் யூத்துங்க கூடத்தான்.. ஹி ஹி 



 ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன். 


சி.பி - கேப்டனையே மிஞ்சிடுவீங்க போல, உங்களுக்கு அரசியல்லயும் நல்ல எதிர்காலம் இருக்குங்க்ணா.. ஏன்னா குடியும் ,கூத்தியும் வெச்சிருக்கிறவங்க தான் அரசியல்ல ஷைன் பண்றாங்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf_XPAyv6WfA1kK9tYrOQVVCanCajiO06CIa_dH0SO0vpgsw3fzVud-11Y0ncbKZqhFFIlsVB40or0S3lUyNh4QTSiU11SGTxdWl1XVEFbKAsNelH1j2rxwW7DrbbX-mhmxdf81nktTv-M/s320/charu+zero3.JPG



 காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன். 

சி.பி - காலங்காத்தால ஒரு வேலை இல்லாம ஒரு மொக்கை நாவல் எழுதும் ஹோமோ மன்னவனே.. என்ன நாவல்? அது என்ன நாவல்? ஓஹோஹோ.. 



  நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான். 

சி.பி - சரக்கு அடிச்சா வாந்திதான் எடுப்பான், பின்னே வாய்ல இருந்து லிங்கமா எடுப்பான்? அவன் என்ன நித்யானந்தாவா?



 நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம். 


 சி.பி - உங்களைப்போன்ற நல்ல மனிதர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டும்.. உங்களின் 2 லட்சம் ரசிகர்களுக்கு என் வாழ்த்துகள்

 இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர். 



சி.பி - லேட் பிக்கப் லத்திகாண்ணே நீங்க.. நித்யானந்தாவை பற்றி   ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொன்னது இதே வாய் தான்.. அப்புறம் அபாயம் போகாதேன்னு லேட்டா சொல்லுச்சு.. ஏண்ணே.. இப்படி?

 தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை. 


 சி.பி - ஓஹோ , வலி வந்தா உக்காந்துக்குவீங்களா? சிட்டிங்க் ரைட்டர் கம் சீட்டிங்க் ரைட்டர்?


 கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன். 


 சி.பி - ஹி ஹி ஹி ஹி நாங்க நம்ப மாட்டோம்..

 நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.



சி.பி - ஹூம், ஆண்டவனை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு, அவரும் தான் பாவம் எத்தனை பாவிங்களை கவனிப்பாரு?

ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.


சி.பி - அட.. ஆமாம்.. நீங்க கூட சித்தர்கள் ராஜ்ஜியம் பிளாக்ல நிறைய  படிச்சேன்னு ரீல் விட்டீங்களே..?


என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன். 


சி.பி - இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?உங்க உடம்பு இரும்புன்னா ஏண்ணே ஹாஸ்பிடல் எல்லாம் போறீங்க? ஹி ஹி  மெக்கானிக் ஷாப்ல போய் சர்வீஸ்க்கு விடலாமே?




 தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை. 


சி.பி - காஃபிக்கு நான் அடிமை.. கிடச்ச சூஃபிக்கு நான் அடிமை.. 



 காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். 

சி.பி - அண்ணே, நீங்க எந்தக்காலத்துல காலைல எந்திரிச்சிருக்கீங்க? மட்டையாகி விடிகாலைலதான் தூங்குவேன், மதியம் 12 மணீக்குதான் எந்திரிப்பேன்னு நீங்கதானே சொன்னீங்க?



 ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது. 

சி.பி - இலக்கிய உலகின் ராஜாஜியே!! நீர் வாழி!

 https://www.nhm.in/img/978-81-8493-204-1_b.jpg

 தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள். 

சி.பி - உங்க நாவலை எல்லாம் ரெகுலரா படிக்கற உங்க வாசகர்கள் தான் சகிப்புத்தன்மை உள்ளவங்கன்னு நினைக்கறேன்.. 



 அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.

 சி.பி - ஓஹோ.. அர்க் ஜெர்க் ஆகிடுமா?

அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 சி.பி - நீங்க சொன்ன ஒரு மேட்டரே  வாசம் தூக்குது.. இதுல இன்னும் 100? அவ்வ்வ்



 இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள். 

 சி.பி - அண்ணன் தேயிலைல கூட ஃபிரெஸ் தான் கேட்பாரு போல..

  இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம். 


 சி.பி - நீங்க அம்பத்தி ஒன்பதா?ஹி ஹி

 ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன். 


சி.பி - நீங்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ஜே சூர்யா எல்லாம் சாதாரணமா பேசுனாலே டபுள் மீனிங் தான்னு எங்களுக்குத்தெரியாதா? இடம் சுட்டி பொருள் விளக்கனுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO44puUY5_K2cQ-taCFAqTtzG984L5yakjlb0gdu-2DT_dW9VQiye_bCEXXLvTeSStIpnwcGfeJdckoPjVE5-FySCGa_lbOWeVb2Jg0rsTW687ycd_VdM_7Y96RVtGhk7idz1dU9l4UXk/s220/charu-blog-pic.tif
 nivedhidhaa chaterjii
 உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.


கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார். 


 சி.பி - அது பொய்.. முதல்ல சுய புராணம், அப்புறமா தான் திட்டல் புராணம்.. நீங்க நெம்ப நெம்ப நல்லவர்ங்க்ணே

 இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.

சி.பி - நீங்க என்னைக்கு சப்ஜெக்ட் சம்பந்தமா பேசி இருக்கீங்க? 

  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.பி - அப்பா சாமி, முடியல.. அண்ணன் மெயின் மேட்டர்க்கு வர ரொம்ப நேரம் எடுத்துக்கறாரு.. 


ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

 சி.பி - ஏஷியன் ஏஜ் லண்டன் பற்றி மக்கள்க்கு தெரிய வந்த ஒரே ஒரு பயன் தான் இந்த கட்டுரைல..

http://gracehopper.org.in/2011/files/2011/09/Srinivasan_Charu-185x300.jpg
 charu srinivasan
 அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …


சி.பி - அண்ணே, இறைவனுக்கு நன்றி சொல்ல ஓரளவுக்காவது நல்லவரா இருக்கனும்ணே.. 


Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…


சி.பி - இதன் மூலம் அண்ணன் தெரிவிப்பது வாசகர்கள் எது கொடுத்தாலும் அண்ணன் ஓ சி யில் வாங்கிக்க தயரா இருக்கார் என்பதே.. ஹி ஹி 


Sunday, January 22, 2012

ரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த சண்டே இந்தியன்

http://lh4.ggpht.com/_3dVzeCbqCSw/Syo66vKLFMI/AAAAAAAABog/JP6fLY0XFfc/charu_thumb%5B3%5D.jpg 

இலக்கிய உலகில் பல சர்ச்சைகளில் சிக்கியவரும் , லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்டவருமான சாரு நிவேதிதா பேட்டி த சண்டே இந்தியன் வார இதழில் வந்திருந்தது.. பேட்டி கண்டவர்கள் சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன்

1. தமிழின் முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்தால் அதில் உங்கள் கதைகளும்    இடம்பெறும்..ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதுவதில்லையே?



சமீபத்தில் மொராக்கோ எழுத்தாளர் Tahar ben jelloun  எழுதிய Leaving tangier என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் உள்ள பல அத்தியாயங்கள் நான் எழுதும் கட்டுரைகளைப் போலவே இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தேன்.  மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நான் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் புனைகதை, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாகவே கருதுகிறேன். 

என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவதைப் போல் என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன.  கட்டுரை, கதை என்று எல்லாமே சேர்ந்து மலையிலிருந்து விழும் அருவியைப் போல் கொட்டுகிறது.  ஒரு சமயத்தில் மூன்று மலையாள வார இதழ்களில் எழுதி வந்தேன்.  ஒன்றில் ராஸ லீலா.  இன்னொன்றில், உலக இசை.  மூன்றாவதில், இலக்கியம், அரசியல், சினிமா என்று பொது விஷயங்கள்.  இந்த மூன்றையும் படித்த என் மலையாள நண்பர் ஒருவர் “மூன்றுமே ஒன்று போல் இருக்கிறது. அனுப்பும் போது மாற்றி அனுப்பி விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அமெரிக்க எழுத்தாளர் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றியும் இப்படித்தான் சொல்வார்கள்.  என் எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருப்பதால் என்னைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை.  என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒருவர் சிறுகதைகளாக வாசிக்க முடியும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதிக்கு நான் எழுதி மலையாள இதழ்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட என் கடிதமே மரியோ பர்கஸ் யோசாவின் நாவலில் ஒரு அத்தியாயமாக எழுதப் பட்டிருக்கும்.  இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது என் மனம் ஒரு பரந்து விரிந்த கேன்வாஸில்தான் யோசிக்கிறது.  200 பக்கங்களுக்குக் குறைவாக என்னால் ஒரு புனைகதையை இனிமேல் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.  


2. எக்சிஸ்டென்சியலிசமும், ஜீரோ டிகிரியும் கூர்மையும், அங்கதமும், புதிய வடிவமும் கொண்ட நாவல்கள்..ஆனால் அவற்றைத் தொடர்ந்து நீங்கள் எழுதிய நாவல்கள் வெறும் செய்திக்குறிப்புகள் மற்றும் டைரிக்குறிப்புகளைப் போல் உள்ளதே?


டைரிக் குறிப்புகள் அல்ல.  ஆட்டோ பிக்ஷன்  சர்வதேச அளவிலேயே ஆட்டோஃபிக்‌ஷனை இதுவரை எழுதிப் பார்த்தவர்கள் என்று இரண்டு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும்.  செர்கி டெப்ரோவ்ஸ்கி என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் அவர்களில் ஒருவர்.  ஆனால் அவருடைய நாவல்கள் எதுவும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.  மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு ஃப்ரெஞ்சை அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள்.  என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு அது அவருடைய எழுத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆட்டோஃபிக்‌ஷன் என்ற இலக்கிய வகையே சர்வதேச இலக்கியத்துக்குத் தமிழ் கொடுத்த கொடை என்று சொல்ல முடியும்.  அப்படிப்பட்ட இலக்கிய வகைமை என் மூலமாகவே வெளியே சென்றது.  இது ஏதோ சுயம்புவாக என் மூளைக்குள் உதித்தது அல்ல.  இந்த வகைமைக்காக நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.  ஒருவர் நகுலன்.  இன்னொருவர், ஃப்ரெஞ்ச் இயக்குனர் கொதார்.  


மேலும், தமிழில் ஒரு பழக்கம் உண்டு.  எல்லா எழுத்தாளர்களிடமுமே இப்படி ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  “உங்களுடைய முந்தைய கவிதைத் தொகுப்பு நன்றாக இருந்ததே?  இப்போது வந்திருப்பது அப்படி இல்லையே?” உண்மையில் இப்படிப்பட்ட கேள்வி ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்தவே செய்கிறது.  இதன் பொருள் ஒன்றுதான்.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் கருதுகிறது.  அந்த அவமதிப்பின் அடையாளமே இப்படிப்பட்ட கேள்விகள்.  இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஸீரோ டிகிரி வந்த காலத்தில் அதை என் சக எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி தவிர வேறு ஒருத்தர் கூட  அதை சிலாகித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.  இப்போது அந்த நாவலுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்து விட்டதால் தவிர்க்க முடியாமல் அதைத் தங்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.  என்னுடைய மற்ற நாவல்களுக்கும் இது நடக்கும்; ஆனால் 20 ஆண்டுகள் ஆகும்
http://www.andhimazhai.com/account/news/new%208.1.09%20003.jpg

3. கேரளச்சூழலை சுந்தர ராமசாமி தொடங்கி நீங்கள் வரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறீர்கள். அங்கு பரந்த வாசகத்தளம் இருக்கிறார்கள். ஆனால் தமிழளவுக்கு ஆழமாக இலக்கிய, விமர்சனச் செயல்பாடுகளும் விவாதங்களும் நடந்திருக்கிறதா...தமிழுடன் ஒப்பிடத்தகுந்த அளவில் சமகால எழுத்தாளர்கள் மலையாளத்தில் உள்ளார்களா? 

இல்லை.  மலையாளத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே இல்லை.  அருந்ததி ராயை விட சிறப்பாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் தமிழில் 50 பேர் இருப்பார்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் முதல் மரியாதை.  அங்கே ஒரு டஜன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன.  அதுவும் அவை வாரப் பத்திரிகைகள்.  இங்கே வாசகர் எண்ணிக்கை கம்மி.  இதுவே வித்தியாசம். 

4. இணையம் சார்ந்த வாசகர்களை ஏராளமாக வைத்திருப்பவர் நீங்கள். அவர்கள் ஆழமான வாசகர்கள் என்று கருதுகிறீர்களா?

இல்லை.  ஆனால் இணையம் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  அதைவிட இது பரவாயில்லை.  ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்லி விட முடியாது.  எனக்குத் தெரிந்து பல்வேறு சீரியஸான விஷயங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.  முன்பு சிறுபத்திரிகைகள் இருந்த இடத்தை இன்று இணையம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இணையத்தைப் பற்றிய சரியான பரிச்சயம் இல்லாதவர்களே இணைய எழுத்தாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பதர்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் நெல்மணிகளும் இங்கே ஏராளம் என்பதை மறந்து விடக் கூடாது.

5. தமிழில் இணையம் வழியாக முதலில் அதிக வாசகர்களை எட்டியவர் நீங்கள்.. ஆனால் தொடர்ந்து சுயதம்பட்டமும் சுயபெருமையும் அதிகமாக உங்கள் எழுத்துகளில் தொடர்கிறது..ஒரு மொழியில் இயங்கும் முக்கியமான எழுத்தாளன் இந்தளவு தனது ஆளுமையை பெரிதாக்கிக் காட்ட அலட்டிக்கொள்ள வேண்டுமா?


ஒரு கதை சொல்கிறேன்.  வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பட்டிக்காடு.  அங்கே பிறந்து வளர்ந்த ஒருவன் வெளியே போய் படித்து விளையாடி ஒரு ஒலிம்பிக் மெடலையும் வாங்கினான்.  அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய பட்டிக்காட்டுக்கு வந்தான்.  தன் தாய்க் கிழவியிடம் காண்பித்துப் பெருமை கொண்டாடினான்.  ஒரு நாணயத்தைப் போல் இருந்த அந்த மெடலை எடுத்துக் கொண்டு போய் பெட்டிக்கடையில் கொடுத்துக் கொஞ்சம் புகையிலை கேட்டாள் கிழவி.  கடைக்காரனோ அதை செல்லாத காசு என்று திருப்பி கொடுத்து விட்டான்.  அந்த ஒலிம்பிக் மெடல் வாங்கியவனின் நிலையில் நான் இருக்கிறேன்.  அந்த கிராமம்தான் தமிழ்நாடு.   நான் வாங்கிய மெடல்களின் பெருமையை அறியாத இந்த ஊரில் நான் தானே அதைப் பற்றிப் பேச வேண்டும்?

உலக ஆட்டோஃபிக்‌ஷனை அறிமுகப் படுத்தியதால் ஒரு ஆங்கில தினசரி அதன் அகில இந்தியப் பதிப்பின் முதல் பக்கத்தில் என் பேட்டியைப் போட்டது. பிரதம மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் அப்படி வரும் என்று சொன்னார்கள்.  பிறகு, கடந்த பத்தாண்டுகளின் சிறந்த பத்து சாதனையாளர்கள் என்ற பட்டியலில் ஒருவனாக வெளியிட்டது.  அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்ற இருவரில் நானும் ஒருவன்.  இன்னொருவர், ரஜினிகாந்த்.  கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை மாடர்ன் ஏசியன் க்ளாசிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைத்திருக்கிறது.  இதையெல்லாம் நான் யாரிடம் போய் சொல்ல?  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சினிமாக்காரர் தும்மினால் கூட அது தலைப்புச் செய்தியாக வருகிறது.

  எழுத்தாளனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.  அதனால்தான் இதையெல்லாம் நானே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.  மேலும், எனக்குப் போலிப் பணிவு பிடிக்காது.  ஒரு மருத்துவர் தான் வாங்கிய பட்டங்களைப் போட்டுக் கொண்டுதானே மருத்துவம் பார்க்கிறார்?  அதைப் போலவேதான் நானும் செய்கிறேன்.  மேலும், நான் என்னைப் பற்றி எதையும் பெரிதாக்கிக் காட்டவில்லை.  உள்ளது எதுவோ அதை மட்டுமே சொல்கிறேன்.  எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளத்தில் இப்படி நானே என் பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை.


6. தமிழ் சினிமா தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக எழுதியும் விவாதித்தும் வருபவர் நீங்கள் . இன்றைய தமிழ்சினிமா பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?


தமிழ் சினிமாவில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமாத் துறையில் செய்த அராஜகத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முடங்கிக் கிடந்தது.  இனிமேல் நிலைமை திருந்தி விடும்.  இது ஒருபுறம் இருக்க, விஷ விருட்சத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் வணிக சினிமாதான் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆபத்து.  நல்ல சினிமா எடுப்பவர்கள் கூட வணிக சினிமாவின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி சில பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  இன்னொரு பிரச்சினை, தணிக்கைத் துறை.  சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சினிமாவை மதிப்பீடு செய்ய என்ன தகுதி இருக்கிறது?  இவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது.  உடனடியாக இந்த அதிகாரிகள் தணிக்கைத் துறையிலிருந்து விரட்டப்பட்டு அங்கே கலைஞர்களும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.  இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப கட்ட வேலை.    
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1lZ703JltrRmx7vIUUL1o81IEpWaUVE1k6JX_j5XHuw2eYV0xvsruRfwSeZ3JrO5xCwZI4nQ6YR29qhmDTxUxG8evRr7jKTxKDQNnUbF3MDHunjSjyg7w3aW91AyFh5VyAPIX3hyphenhyphenegM/s400/CIMG0427.JPG
 
7.ஒரு ஆளுமையை திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தூற்றுவதும் உங்களுடைய செயல்பாடுகளில் தொடர்வதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

 என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது.  நகுலன், ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தர்மு சிவராமு என்று என் முன்னோடி எழுத்தாளர்களை கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன்.  யாரையும் தூற்றியதில்லை.  கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  என்றைக்குமே பாராட்டியதில்லை.  ஆனால் ஒரு சாமியாரைப் பாராட்டினேன்.  அவர் ஒரு போலிச் சாமியார் என்று பிறகுதான் தெரிந்தது.  அப்படித் தெரிந்த பிறகும் நான் ஏற்கனவே பாராட்டியவர் ஆயிற்றே என்பதற்காகத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா?  இன்று என் மனதுக்கு உகந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் நாளையே நடிகர் விஜய்யைப் பாராட்டி கவிதை எழுதினால் அவனைத் தூற்றத்தானே வேண்டியிருக்கும்?

8. உங்களது எழுத்துவாழ்க்கை உங்களுக்கு தந்தது என்ன?

இழந்தைதைச் சொன்னால்தானே பெற்றதைச் சொல்ல முடியும்? இழந்தவை: எழுத்துலக நண்பர்கள், குடும்பம், அன்றாட வாழ்வின் கொண்டாட்டங்களும் சுக துக்கங்களும், பணம், செக்ஸ்.  பெற்றது ஒன்றே ஒன்று: வாசக நண்பர்கள்.  மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற ஒரு பாப் ஸ்டாரின் ரசிகர்களைப் போல் என் மீது உயிரையே வைத்திருக்கும் வாசகர்களும் அவர்களோடு நான் கொண்டுள்ள உறவும்தான் இந்த எழுத்து எனக்குத் தந்தது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsayE5O8A_GSNw-r18O7XPF6CcZ22tDF3ASN3OYZHR2lAD95SzvlBGBetD4mq3aIWVXuexkXay-V6voy2etWEuJaekZtHo-IEuiMf-uoqn4EPwRK-3B8M7ONOz8IMiv8N1YY_v3nQEmU/s400/soro1.jpg


9. இளைஞர்கள் தான் உங்கள் வாசகர்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துகளுக்குள் நவீன வாழ்க்கையின் வேகமயமான மாற்றங்கள் சார்ந்து குறிப்பாக பாலியல் பண்பாடு சார்ந்து ஒரு அசூயை தொடர்ந்து வெளிப்படுகிறதே..இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசூயை வெளிப்படுவது உண்மைதான்.  ஆனால் இது பாலியல் ஒழுக்கம் சார்ந்தது அல்ல.  அன்பும், அறிவார்த்தத் தேடலும் இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி ஒன்றையே ஆதாரமாகக் கொண்ட இன்றைய ஆண்/பெண் உறவையே நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.  இருந்தும் ஏன் இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்கள் என்றால் நான் அவர்களின் உலகில் இருந்து கொண்டு இந்த விமர்சனத்தைச் செய்கிறேன்.  வெளியில் இருந்து அல்ல.  அதன் காரணமாகவே அவர்கள் என் விமர்சனத்தை ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் எதிர்கொள்கிறார்கள். காமரூப கதைகள் மற்றும் ராஸ லீலா ஆகிய இரண்டு நாவல்களும் இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாவல்கள்.   இதை அவர்கள் ஒரு உரையாடலாகவே எடுத்துக் கொண்டார்கள்.  மற்ற எழுத்தாளர்கள் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தாமல் வெளியே நின்று கொண்டு போதனைகளும் அறிவுரைகளும் செய்வதால் இந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.


10. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி பெயர் சர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை உங்கள் புத்தக வெளியீடுக்கு அழைத்துவிட்டு பின்னர் அவரை ஊழல்வாதி என்று விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

உங்கள் கேள்வியில் ஒரு சிறிய தகவல் பிழை உள்ளது.  கனிமொழியையும் ராசாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து நான் கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறேன்.  கனிமொழி என்னுடைய புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய அன்றுதான் ஒரு பிரபல பத்திரிகையில் ’இப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் தேசத் துரோகிகள்; இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினேன். அதையும் படித்து விட்டுத்தான் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே நான் விரும்பினேன்.  தனிப்பட்ட முறையில் அது என் கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் முரணானது.  ஆனால் நான் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.  என்னுடைய புத்தக வெளியீட்டாளரின் விருப்பத்தின் பேரிலேயே கனிமொழி அழைக்கப்பட்டார்.  இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காது.  இனிமேல் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களால் மட்டுமே நடத்தப்படும்.  இனிமேல் என்னுடைய  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிய முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன்.

11. ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று சமீபத்தில் துக்ளக்கில் எழுதியிருந்தீர்கள்..அது மிகையான கூற்றாக உங்களுக்குப் படவில்லையா?


 இல்லை.  ஜெயலலிதா சுயநலம் இல்லாதவர் என்றே நான் நினைக்கிறேன்.  கருணாநிதியின் குடும்பத்தில் சுமார் 500 பேர் இருப்பார்கள்.  தமிழகத்தின் அத்தனை துறைகளும் அவர்கள் கையில்தான் இருந்தன; இருக்கின்றன.  ஜெயலலிதா ஒரே ஆள்.  உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமே இல்லை.