காலை வெறும் வயிற்றில் எந்த உணவோ, பானமோ அருந்தாமல் ரத்த பரிசோதனை செய்தால் 80 முதல் 100 வரை இருந்தால் அவர்களுக்கு சுகர் இல்லை என அர்த்தம், ஆனால் 111 முதல் 125 வரை இருந்தால் அவர்களுக்கு விரைவில் சுகர் வரப்போகிறது என அர்த்தம். ஹெச் பி ஏ1 சி டெஸ்ட் எடுத்தால் கடந்த மூன்று மாதத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதை கண்டறியலாம்
அப்படிப்பட்ட ப்ரி- டயபீட்ஸ் ஆட்கள் தாங்கள் வருங்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் ஆக மாறாமல் தடுத்துக்கொள்ளும் வழி முறைகளைப்பார்ப்போம்
அதற்கு முன் ப்ரி டயபீட்ஸ் ஸ்டேஜ்க்கு நீங்கள் வந்து விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள்
1 அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும்
2 வழக்கத்தை விட அதிகமாகப்பசி எடுக்கும்
3 அடிக்கடி சிறு நீர் கழிப்பீர்கள்
4 கண் கொஞ்சம் மங்கலாக இருக்கும்
5 உடல் எடை குறையும்
6 உடல் அதிக சோர்வாக இருக்கும்
7 புண்கள் ஏற்பட்டால் ஆற தாமதம் ஆகும்
8 கழுத்துப்பின் பகுதி கறுப்பாக மாறும்
9 தொப்புள் பகுதி , கை கிச்சு ( அக்குள் ) பகுதி கறுப்பாக மாறும்
இவர்கள் செய்ய வேண்டியது
1 உடல் பயிற்சி செய்தல்
2 நடைப்பயிற்சி செய்தல்
3 உணவு முறையில் கட்டுப்பாடாக இருத்தல்