ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில ப்ராஜக்ட் டீம் லீடர் தான் ஹீரோ . ஒரு பிரமாதமான பிராஜக்ட் ரெடி பண்றார். அதை ஓக்கே பண்ணிட்டா கம்பெனிக்கு கோடிக்கணக்கில் லாபம் . ஆனா எம் டி அதை ஏத்துக்கலை . ஏதோ டென்சன் ல ரிஜக்ட் பண்ணிடறார். அவர் மூடு அவுட் ஆனதற்குக்காரணம் அவர் பொண்ணு . பசங்க தான் தறுதலையா திரியனுமா? பொண்ணுங்களுக்கு சம உரிமை வேணாமா?னு கேட்பது போல் பாப்பா தம் , கஞ்சா -னு கெட்டுக்குட்டிச்சுவரா ஆகிடுச்சு . எப்போ பாரு பணம் குடு பணம் குடு அப்டினு அப்பாவை டார்ச்சரிங்.
ஆஃபீஸ் க்கே வெறும் டிராயர் , பனியனோட வந்து பணம் கேட்ட அன்னைக்கு தான் டென்சன் ஆகி எம் டி அந்த பிராஜக்டை ரிஜக்ட்டட்.இதனால கடுப்பான ஹீரோ எம் டி யை பழி வாங்க பிளான் போடறார். எம் டி மகளை சந்திக்கறார். அப்போ மகளே ஒரு ஐடியா கொடுக்குது.பொதுவா பொண்ணுங்க ஐடியாக்கள் எல்லாம் பசங்களை ஆபத்தில் சிக்கி விடுவதாத்தான் இருக்கும்.
அதாவது அவ அப்பாவுக்கு ஃபோன் பண்ணி உங்க பெண்ணை கடத்திட்டேன்னு சொல்லி 30 கோடி கேளு. வர்ற தொகைல நீ பாதி நான் பாதி கண்ணா அப்டிங்குது .
அதே மாதிரி பண்ணி 30 கோடி வாங்கிடறான் ஹீரோ. அடுத்த நாள் ஷாக் நியூஸ் . எம் டி பொண்ணை யாரோ கொலை பண்ணிட்டாங்க . இடைவேளை
இதுக்கு மேல் படத்துல 2 ட்விஸ்ட்ஸ் இருக்கு . சொனா சுவராஸ்ய,ம் போய்டும். எனவே மிச்சத்தை திரையில் காண்க
ஹீரோவா நவீன் சந்திரா. கேரக்டருட ன் நல்லா செட் ஆகிட்டார் . திகில் , பயம் மட்டும் முகத்தில் சரியா வர்லை . மத்தபடி ஓக்கே
ஹீரோயினா சலோனி லூத்ரா. அஞ்சே முக்கால் அடி அஞ்சாள். அரேபியன் குதிரை மிடி போட்டுட்டு வந்தா எப்படி இருக்கும் ?(கேவலமா இருக்கும் ) அப்டி இருக்கு . பிரமாதமான உடல் கட்டு . ஹாலிவுட் உதட்டழகி ஏஞ்சலினா ஜூலியை விட நீளமான உதட்டழகி அளந்து பாத்தியா? னு கேட்கக்கூடாது . சும்மா அளந்து விடறதுதான்.ரம்பா என்ன தான் தை(thigh) ஸ்பெஷலிஸ்ட்டா இருந்தாலும் சலோனி டஃப் ஃபைட் குடுக்குது. ஆனா எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிச்சிடும்ம்னு சொல்லிட முடியாது . நீளமான முக வெட்டு .நல்லவள் போல் நடிப்பது . , தெனாவெட்டான தோற்றம், டயலாக் டெலிவரில் எல்லாமே கலக்கல் . நல்ல வாய்ப்பு கிடைத்தால் முன்னேறுவார்
எம் டி யாக நரேன் . இவரது குரல் கட்டையாக இருந்தாலும் இந்த கேர்கடருக்கு நல்லா பொருந்துது .
ஹீரோ , ஹீரோயின் , எம் டி இந்த 3 கேரக்டரை மட்டும் வெச்சுக்கிட்டு சுவராஸ்யமா திரைக்கதை அமைத்தது அபாரம் . போர் அடிக்கும் காட்சி , தேவை இல்லாத காட்சி என எதுவுமே இல்லை . அபாரமான எடிட்டிங்க் . இசை , பின்னணி இசை 2ம் சுமார் ரகம் தான் , பின்னிப்பெடல் எடுத்திருக்க வேண்டாமா? அந்தக்கால டிராமாக்களில் வருவது போல் ஒரு ஏனோ தானோ பிஜிஎம்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ஹீரோயினுக்கான ஓப்பனிங் ஷாட் அபாரம். அவ்வளவு பெரிய கம்பெனி எம் டி மகள் சும்மா துக்ளீயூண்டு டிராயருடன் வருவது அந்த நடை அழகு எல்லாம் பிரமாதம்
2 படத்தின் திரைக்கதையில் வரும் 2 திருப்பங்கள் சாதா ஜனங்கள் யூகிக்க முடியாதவை
3 கச்சிதமான ஒளிப்பதிவு , எடிட்டிங்
4 மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமான க்ரைம் த்ரில்லர் தந்தது /. போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங் எல்லாம் பக்கா
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 தன் சொந்த வீட்டில் இருந்து வெளியேறும் நாயகி ஏன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்கனும் ? வீட்டில் யாரும் இல்லை . கொலை நடந்ததை யாரும் பார்க்கலை . மெயின் கேட் வழியாகவே போய் இருக்கலாம்
2 தன் வீட்டிலேயே இருக்கும் ஒருவரை கொலை செய்ய உகந்த வழி வீட்டிலேயே கொல்வதே . அவர் ஏன் சுத்தி வளைக்க வேண்டும் ?
3 படத்தின் ட்விஸ்ட்கள் மோகன் லால் -ன் மலையாளப்படமான கீதாஞ்சலி , ப்ரியாமணி யின் சாருலதா பார்த்தவர்கள் யூகிக்க க்கூடிய அளவில் இருப்பது பலவீன,ம்
4 ஹீரோ 30 கோடி கைக்கு கிடைத்ததும் அதை ஏன் வேற இடத்தில் மாத்தி வைக்கலை ? பணம் தான் பெருசு என்னும் கொள்கை உள்ளவர் ஏன் அதை ஆட்டையைப்போட முயற்சிக்கலை?
5 எல்லா கெட்ட பழக்கமும் உள்ள ஹீரோயின் ஹீரோ கூட ஏ கில்மா பண்ணலை ? அந்த விஷயத்திலேயே ஆர்வம் இல்லாதவரா இருக்காரே? அப்பா இல்லாத தனிமையில் தனி ரூமில் ஹீரோவுடன் அவர் இருந்தும் சாவித்திரி கண்ணகி போல் நடப்பது எப்படி ?
6 ஒரு அப்பா தன் மகள் குரலை அடையாளம் கண்டு பிடிக்க மாட்டாரா?
7 கோடிக்கணக்கான சொத்து உள்ள எம் டி ஒரு சாதா இன்ஸ்பெக்டருக்கு பயப்படுவது ஏன்?போட்டுத்தள்ளலாம், அல்லது விலைக்கு வாங்கி இருக்கலாம்
8 க்ளைமாக்சில் ஹீரோ தன்னந்தனியாக எந்த தைரியத்தில் வில்லனை சந்திக்கிறார்?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஒருத்தன் ஆபீஸ்க்கு லேட்டா வந்தா அத உங்களுக்கு சாதகமா எடுத்துட்டு கேப்ல கெடா வெட்டாதீங்க # சரபம்
2 சென்னை ல சொந்த வீடு இருந்தா அது சொர்க்கம் # சரபம்
3 பெரிய இடம் னா பிரச்னையும் பெருசாதான் இருக்கும் # சரபம்
4 மத்தவங்க உழைப்பு ,வாழ்க்கை எதையும் புரிஞ்சுக்காதவங்க இந்த மேனேஜர் ,எம் டி வகையறாக்கள் #,சரபம்
5 நமக்குப்பிடிக்காதவங்க ,நம்மைப்பிடிக்காதவங்க லிஸ்ட் எடுத்து ஏதாவது
கெடுதல் செய்யலாம்னு நினைச்சா எழுத அன்ரூல்டு நோட் ஒரு குயர் பத்தாது #
சரபம்
6 யாரால் நாம் அவமானப்படுத்தப்படறோமோ அவங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு தோணும் # சரபம்
7 பணம் பண்ற ரூட்டை எப்பவும் நான் தேடிட்டே இருப்பேன் # சரபம்
8 மாட்டிக்காம தப்பு பண்ண முடியும்னா,அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்னா அதை செய்ய எப்பவும் தயாரா இருக்கேன் # சரபம்
9 ஓட்ற காரை வெச்சுத்தான் இந்த சமூகம் ஒருத்தனை மதிக்குது.பிராண்ட் முக்கியம் # சரபம்
10 போலீஸ் ல உன்னைக்காட்டிக்கொடுக்க மாட்டேன்.ஆனா நீயா மாட்டிக்கிட்டா உன்னைக்காப்பாத்த மாட்டேன்
டீலா?# சரபம்
11 1999 ல சுபா ,பிகேபி வகையறாக்கள் துவைச்சுக்காயப்போட்ட க்ரைம் கதைதான் # சரபம்
12 மொட்டை மாடில போய் யோசிக்கற விஷயம் எப்பவும் கரெக்ட்டாவே இருக்கும் #சரபம்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. சரபம் னா சரசம் ,சல்லாபம் னு அர்த்தம்னே இங்க இருக்கும் கொள்ளைப்பயல்களும் நினைச்ட்டு இருக்காங்க
2 ஒவ்வொருவருக்கும் யாரிடமும் காட்டாத இன்னொரு ரகசிய முகம் இருக்கும்.அதுதான் சரபம் #,டைட்டில் விளக்கம்
சி பி கமெண்ட்-சரபம் - ஏ சென்ட்டர் க்கான குட் க்ரைம் த்ரில்லர்.இன்ட்டர்வல்
ட்விஸ்ட,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் - விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75/5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 42
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.75 / 5
diski -