ஒரு படத்தின் வசூலில், இணையதளத்தில் பிரபலமான விமர்சகர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் குறும்பதிவுகள் இடுபவர்கள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக திரைப்பட விமர்சனங்களை வெளியிட்டு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பிரபல இணையதள விமர்சகர்களாகத் திகழ்கின்றனர்.
'அஞ்சான்' படம் வெளிவந்தபோது, அப்படத்தின் வசூலுக்கு, இத்தகைய இணையதள விமர்சகர்களால்தான் பாதிப்பு ஏற்பட்டது. பலரும் படம் பார்க்காமல் விமர்சனம் செய்கிறார்கள் என்றெல்லாம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, 'அஞ்சான்' நிலைமையே 'புலி'க்கும் வந்திருக்கிறது என்கிறார்கள். அப்படம் வெளியான அன்று காலை 10 மணிக்கு காட்சி ஆரம்பமானது. இடைவெளி வரும் முன்னரே 'மொக்கை படம்' என்று கருத்து தெரிவித்ததாக கூறுகிறார்கள். முதல் மூன்று நாட்கள் வசூல் என்பது விஜய் படத்துக்கு மிகவும் பெரியது என்பதால், இம்மாதிரியான கருத்துக்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் படக்குழுவினர்.
விமர்சனங்களால் வசூல் பாதிப்பா?
இணையதள விமர்சனங்களின் தாக்கம் குறித்து யூடியூபில் வீடியோ வடிவில் விமர்சனம் பதிவேற்றுபவர்கள், ஃபேஸ்புக்கில் முழுமையான விமர்சனம் எழுதுவோர் என சமூக வலைதளங்களில் பிரபல விமர்சகர்கள் சிலரிடம் பேசினேன். அவர்களில் பலரும், தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துதான் தங்கள் கருத்தைச் சொன்னார்கள்.
"சார்.. எங்களுக்கு என்று சிறப்புக் காட்சி எல்லாம் திரையிடப்படுவதில்லை. நாங்கள் மக்களோடு மக்களாக 120 ரூபாய் செலவழித்து படம் பார்க்கிறோம். அப்படி பார்க்கும்போது, எங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.
நல்ல படமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க "கண்டிப்பாக திரையரங்கில் போய் பாருங்கள். நல்ல படம்" என்று கூறுகிறோம்.
'தனி ஒருவன்' என்ற ஒரு திரைப்படம், காலையில் நாங்கள் டிக்கெட் புக் பண்ணும்போது மாலை காட்சிக்கு கூட டிக்கெட்கள் இருந்தன. சரியாக புக் ஆகவில்லை. இடைவெளியில் அற்புதமான படம் என்று கூறினோம். படம் முடிந்தவுடன் "One of the best movie of this year" என்றோம். அனைத்து விமர்சகர்களுமே நல்லாயிருக்கு என்றவுடன், டிக்கெட் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தன. இரண்டாம் நாள் நல்ல வசூல் பெற்று வெற்றியும் பெற்றது. இதற்கு காரணம் சமூக வலைத்தள விமர்சகர்கள்தான் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?
பத்திரிகையாளர்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கும் போய் விமர்சனம் அடித்து, இணையதளம் அல்லது அலுவலகம் சென்று பதிவேற்ற வேண்டும். நாங்கள் அப்படியில்லை. படம் நல்லாயிருக்கா, நல்லாயில்லையா உடனே கூறிவிடுவோம்.
எங்களை இவ்வளவு குறைச் சொல்கிறார்கள் அல்லவா, ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். நாங்கள் சூப்பர் படம் என்று கூறிய 'குற்றம் கடிதல்', 'கிருமி' ஆகிய படங்களின் வசூல் நிலவரம் என்ன? நாங்கள் எவ்வளவுதான் நல்ல படம் என்றாலும், மக்கள் மிகவும் தெளிவு சார். எங்களை குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். முதலில் நல்ல படம் எடுக்கச் சொல்லுங்கள். அப்புறமாக குறை சொல்ல சொல்லுங்கள்" என்றார்கள் ஆதங்கமாக.
"இன்னொரு விஷயமும் இருக்கிறது. படம் நல்லாயில்லை என்று போட்டுவிட்டால் நாங்கள் படும் அவஸ்தை இருக்கிறதே. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயாரிப்பு தரப்பில் இருந்து போன் பண்ணுவார்கள். ரசிகர்கள் போன் பண்ணி எங்களது குடும்பத்தினர் பற்றி அசிங்க அசிங்கமாக திட்டுவார்கள். இதை எல்லாம் வாங்க வேண்டும். இவற்றை மீறி தான் விமர்சனம் பண்ணி வருகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்" என்றார்கள் கோபமாக.
சமூக வலைத்தள விமர்சனங்களால் தவறில்லை
இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "என் பெயரை வெளியிட்டுவிடாதீர்கள். பிறகு சமூக வலைதள விமர்சகர்களுக்கு கொடி பிடிக்கிறான் என்பார்கள். உண்மையில், சமூக வலைதள விமர்சனம் தான் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம் தெரியப்படுத்தும். என்னைப் பொறுத்தவரை அது வரவேற்கத்தக்கது தான். என்னுடைய படங்களுக்கு சமூக வலைத்தளத்தில் என்ன சொல்கிறார்கள் என்றுதான் முதலில் பார்ப்பேன்.
அஜித் - விஜய் ரசிகர்கள் இணையத்தில் போடும் சண்டையால்தான் 'புலி' படத்தின் விமர்சனத்துக்கு முதலில் பிரச்சினை. நல்லாயில்லை என்ற கருத்து வெளிவந்த அடுத்த நிமிஷம் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதோட புகைப்படம் எல்லாம் கூட இணையத்தில் வந்ததை நான் பார்த்தேன். இப்படியிருக்கும் போது சமூக வலைதள விமர்சகர்கள் உள்ளிட்டவர்களை குறைச் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை. எவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தயாரிக்கலாம், அதற்கு படத்தில் விஷயம் வேண்டும்" என்றார்
என்ன சொல்கிறது 'புலி' படக்குழு?
'புலி' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "இணையத்தில் வந்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், படத்தின் வசூல் இதுவரைக்கும் குறையவில்லை. ஸ்பெஷல் காட்சிகள் போன்றவை இருந்திருந்தால் இன்னும் வசூல் கூடியிருக்கும். வார விடுமுறை முடிந்த நிலையில் இனிதான் தான் மக்களிடையே படம் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரியவரும்" என்றனர்.
இதனிடையே, அஜித், விஜய் ரசிகர்களிடையே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் நடந்து வரும் 'யுத்த' சேதாரங்களையொட்டி, வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ:
கா.இசக்கி முத்து, தொடர்புக்கு: [email protected]
thanx-thehindu
- Nஒரு திரை படத்தை விமர்சிப்பது ,ஒருவரின் ரசனையையும் அவரது தொழில் நுட்ப ஆர்வத்தையும் பொறுத்தது.தற்கால ரசிகர்களின் எதிர்பார்ப்பு காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. ஒரு நக்ஷத்திர நடிகரை வைத்து படத்தை விமர்சிப்பது என்பதே தவறு.கதை அம்சம் ,பொழுதுபோக்கு ,இனிமயான பாடல்கள், நடிப்பு, இவைகளை வைத்தே திரைப்படத்தை விமர்சிக்க வேண்டும்.Points2265(2) · (0)reply (0)
- VVikramவிஜய் ரசிகர்கள் ஏதோ மிக நல்லவர்கள் போல பேசி கொண்டிருகிறார்கள். அஞ்சான் படம் வெளி வந்த போது லிங்குசாமியை சமூக தளங்களில் ஓட ஓட விமர்சனம் செய்தவர்கள் இவர்கள். கொச்சடையான் மிக வித்தியாசாமாக அவதார் போல் முயற்சியில் வெளி வந்த போது அதை குழந்தைகள் படம் என கேலி செய்தார்கள் . லிங்கா படம் வந்த போது ரஜினியை மிக மோசமாக வசைபாடியவர்கள்.Points2195
- GGaneshஎன்ன டா!!! கலர் கலர் ah ரீல் விடுற!!! நான் அஜித் fan உம் இல்ல... விஜய் fan உம் இல்ல!!! துப்பாக்கி, கத்தி கு இந்த மாறி எவனும் troll பண்ணல... துபாக்கி படம் "A -கிளாஸ்" படம்... ஆனா புலி படம் not for விஜய்... costume same like 23-புலிகேசி... மியூசிக் படத்துக்கு மேட்ச் ஆகல... வடிவேலு வெச்சி படம் எடுத்து இர்ருந்தலும் இப்படி தன இர்ருந்து இருக்கும்... ஹன்சிகா படத்துக்கு தேவையே இல்ல... விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, விஜய குமார், நன்திதா... எல்லாரும் weight characters in தமிழ் சினிமா... ஆனா படம் அந்த அளவுக்கு weight இல்ல... and dont compare with baahubali ... its a historical movie ... and ஹீரோ was தி god சிவா... he nli can get to நீர்மலை... thats a history already in our subjects ...about 13 hours ago
- Cchandrakumarபடம் பார்த்து விட்டு சோஷியல் மீடியாவில் கருத்து பதிபவர்கள் இளைய தலைமுறையினர். அவர்கள் அரச கட்டளை,அடிமைப்பெண் போன்ற எம் ஜி ஆர் காலத்தில் வர வேண்டிய இந்த படத்தை பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் என்றெல்லாம் நம்பபடாது.about 13 hours ago
- VVikramஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த படத்துடன் நேற்று வந்த படத்தை ஒப்பிட்டு பார்ப்பதில் இருந்தே தெரிகிறது. நீங்கள் விஜய் ரசிகர்கள் என்று. பின் ஏன் கொச்சடயான் படத்தை விஜய் ரசிகர்கள் கலாயத்தர்கள்??? டோராவின் பயணங்கள் கூட அருமையாக இருந்தது. கத்தி படம் வந்த பொது வந்த நேர்மையான விமர்சனங்களை ஏற்று கொண்ட நீங்கள் இதையும் ஏற்று கொள்ள தான் வேண்டும்.about 13 hours ago
- Cchandrakumarஅட கடவுளே...அடித்து கொள்ள ரெண்டு கை பத்த வில்லை. .நான் ஒன்னு சொன்னா நீங்க ஒண்ணுபுரிஞ்சுக்கிறீங்க...சரி விடுங்க...உங்களுக்கு புரிஞ்சுக்கிற கபசிடி அவ்வளோதான்..about 11 hours ago
- Suriya Narayanan Venkatesanவீட்டில் செய்தால் களி. தியேட்டரில் வச்சு செய்தால் அது புலி.about 14 hours ago
- JJaffnamenanகடந்த 10 வருடங்களில் எந்த படத்துக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனம் புலி பெற்றிருக்கு . பேஸ்புக் ட்விட்டர் மட்டும் அல்லாமல் தெனிந்திய பத்திரிகைகள் தொடங்கி வட இந்திய பத்திரிகைகள் வரை மட்டமாக விமர்சனம் பெற்ற ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் . ஒரு மாஸ் ஹீரோவை வைத்து எப்படி படம் எடுக்கணும்நு தெரியாம வித்தியாச முயச்சின்னு மக்களை ஏமாற்றிய படம்about 15 hours ago
- Vvellaiyansonநானும் ஏதோ சரியில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்றுத்தான் படம் பார்த்தேன். உண்மைலேயே படம் நன்றஹவே இருக்கிறது. மேலும் சொல்லப்போனால் பஹுபளியை விடவும் நன்றஹவே உள்ளது. செட்டிங்க்ஸ், கிராபிக்ஸ், டான்ஸ், முக்கியமாஹா கேமரா, ஆடை அலங்காரம், பி.ஜி.எம். இதுவரை தமிழ் படங்களில் பார்த்திராத ஒன்று. hats off புலி டீம் என்று தைரியமாய் சொல்லலாம். மேலும் குடும்பம் குடும்பம்மாஹா குழந்தை குட்டிஹளுடன் இரவு 10 மணி சாவுக்கு கூட பார்த்துகொண்டிருக்கிரார்ஹல் படத்தை. ஆஹாவே புலி நிஜமஹவே தமிழில் ஒரு மைல் கல் தான் என்பதில் எந்தவித சந்தேஹமும் இல்லை.Points410
- MManikandanநீங்க நல்லாவே வடை சுடுறீங்க , பாகுபலியை விட நல்லா இருக்குன்னு சொல்றீங்களே இதுலே தெரிஞ்சுரும் , ஒரு முறை பார்க்கலாம் அவ்ளோதான்about 15 hours ago
- JJaffnamenanஎன்ன பேசுரம்னு தெரியாமலே பேசிட்டு இருகிங்க போல , இல்ல புலின்னு சொல்லி வேற படம் ஏதும் பார்த்திட்டு வந்திங்களாabout 15 hours ago