Showing posts with label சப்தம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label சப்தம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ). Show all posts

Thursday, March 06, 2025

சப்தம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் )


தமிழ் சினிமாவில் மாறுபட்ட  இரு ஹாரர் த்ரில்லர் படங்கள்  1  யாவரும் நலம்  2 ஈரம் . இந்த  ஈரம் படத்தை இயக்கிய  அறிவழகன் வெங்கடாச்சலம்  2009ம் ஆண்டு பரபரப்பாகப்பேசப்பட்டார் . அவரது  கதை சொல்லும் உத்தி அபாரமானதாக இருந்தது . 2014ம் ஆண்டு வெளியான வல்லினம்  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை . 2016ம் ஆண்டு வெளியான  ஆறாது சினம்  நன்றாக இருந்தாலும்  அது மெமரிஸ் என்ற மலையாளப்படத்தின்  அஃபிசியல் ரீமேக் என்பதால்  அவருக்குப் பெரிய பெயர் கிடைக்கவில்லை .2017ம் ஆண்டு வெளியான  குற்றம் 23  நல்ல  வெற்றிப்படம் . சோனி லைவில் வெளியான வெப்சீரிஸ் ஆன தமிழ் ராக்கர்ஸ் (2022) பரபரப்பாகப் பேசப்பட்டது 



28/2/2025 அன்று திரை  அரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் 3  கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசில் ஹிட் அடித்து இருக்கிறது . பாசிட்டிவ் விமர்சனங்களும்  வந்த   வண்ணம் இருக்கின்றன 



 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு தனியார்  மருத்துவக்கல்லூரியில்  அடுத்தடுத்து  மூன்று மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இது  தற்கொலையா? கொலையா?  அல்லது போட்டி காலேஜின் சதியா?  என்பதை  ஆராய வேண்டும். அதற்கு  பேரா நார்மல்  இன்வெஸ்டிகேட்டர் ஆன நாயகனை வர வைத்து  உண்மைகளை வெளிக்கொணர வைக்க கல்லூரி நிர்வாகம் முனைகிறது 


  நாயகன்  அங்கே  வந்து  விசாரிக்கிறார். அவரது சந்தேகம் காலேஜில் லெக்சரர்  ஆகப்பணி புரியும் நாயகி மீது விழுகிறது . இருவருக்கும் நட்பு உருவாகிறது . நாயகி தான் வில்லி ஆக இருப்பாரோ என்று எல்லோரும் சந்தேகிக்கும் தருணத்தில் நாயகி  மீதே  ஒரு அமானுஷ்ய சக்தி வந்து ஆட்டிப்படைக்கிறது. இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் , ஃபிளாஸ்பேக்கில்  வரும் ஒரு கதை , வில்லியை நாயகன் எப்படி வெற்றி கொள்கிறார்? என்பது மீதித்திரைக்கதை  


 நாயகன் ஆக ஆதி  அடக்கி வாசித்து இருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு குட் . நாயகி ஆக  லட்சுமி மேணன்  கச்சிதமான நடிப்பு . நாயகனிடம் அவர் நடந்து கொள்ளும் ஆரம்ப கட்ட அலட்டல் காட்சிகள் எரிச்சலைக்கொடுத்தாலும் போகப்போக சரி ஆகி விடுகிறது . ரெடின் கிங்க்ஸ்லி  காமெடிக்கு.. ஆனால்  காமெடி  ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம் 


 ஃபிளாஸ்பேக்கில்  வரும் சிம்ரன் கேரக்டர்க்கு அதிக  வேலை இல்லா விட்டாலும்  வந்தவரை நிறைவான  நடிப்பை வழங்கி இருக்கிறார் சிம்ரன் . படையப்பா  நீலாம்பரி மாதிரி  வெடிட் ஆன  வில்லி ரோல் லைலாவுக்கு . குருவி தலையில் பீரங்கியை வைத்தது போல் ஆகி விட்டது . அவரது  வில்லி நடிப்பு கலக்கல் எல்லாம் இல்லை , சுமார் ரகம் தான் . 


எம் எஸ்  பாஸ்கர் , ராஜீவ் மேணன்  ஆகியோர் நடிப்பும்  ஓக்கே ரகம் 


எஸ்  தமனின்  இசையில்  இரு பாடல்கள்  ஹிட் லிச்ட்டில் . பின்னணி  இசை  மிரட்டுகிறது . பின் பாதியில் ஓவர் டோஸ் சத்தம் 


சாஜூ ஜோசபின் எடிட்டிங்கில்  படம் 146  நிமிடங்கள் ஓடுகிறது . முதல்  பாதி விறு விறுப்பு . பின் பாதி கொஞ்சம் ஸ்லோ 


அருண் பத்மானபனின் ஒளிப்பதிவு அருமை 


திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் அறிவழகன் 


சபாஷ்  டைரக்டர்


1 கோமாவில் 32  வருடங்களாக  நினைவில்லாமல் இருக்கும் டயானாவை இப்போவே கொலை பண்ணிடறேன் என டாக்டர் ஃபோனில்  பேசி முடித்ததும்  அதே  டயானாவிடம் இருந்து கால் வரும் காட்சி ஆரவாரமான  கை தட்டல்களை அள்ளிய காட்சி 


2  அப்போலோ  ஹாஸ்பிடல் - அம்மா  இட்லி சாப்பிட்டார் , உப்புமா சாப்பிட்டார்   ரெஃப்ரென்ஸ்களை  வைத்து  சிம்ரன் கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  விதம் அருமை


3  பார்த்தேன் ரசித்தேன் (2020) படத்தில்  சிம்ரன் லைலாவுக்கு வில்லி ஆக வருவார். 25  வருடங்கள் கழித்து  வைஸ் வெர்சாவாக லைலாவை சிம்ரனுக்கு  வில்லி ஆக்கிய தாட் பிராசஸ் அருமை 


4   சவுண்ட்  டிசைனிங்  ஒர்க் , அட்டகாசம் , ஒளிப்பதிவில்   திகிலைக்கூட்டும் டார்க்  டோனை வடிவமைத்த ஐடியா 



  ரசித்த  வசனங்கள் 


1   பேரா நார்மல்  இன்வெஸ்டிகேஷன் , பேரா நார்மல்  இன்ஸ்பெக்சன்  இரண்டும் ஒண்ணுதான் . எதையும் கண்டு பிடிக்க மாட்டீங்க 


2  கடவுள்  இல்லைனு ஒரு வரில சொல்லிடலாம், ஆனா இருக்குனு சொல்ல 1000 ப்ரூஃப் தேவைப்படும் 


3  இது தேடும் விஷயம் அல்ல , உணரும் விஷயம் 


4  என்ன ? பேய் ஃபோன் பேசிட்டு வருது ?


5   அந்த  வலி எப்படி இருக்கும்னா? 1000  வவ்வால்கள்  காதுக்குள் கத்தற மாதிரி 


6  இந்த உலகத்தில் எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உலகத்துக்கு வந்தவர்கள் தான் , நான் உங்களைக்காப்பாற்றுவதற்காக வந்தவள்


7 கர்ப்பத்தில்  வாழும் சிசுவுக்கும் , வெளி உலகத்துக்கும் உள்ள தொடர்பே சத்தம் தான் 


8 ஒரு குழந்தையோட அழுகையை நிறுத்தும் அம்மாவோட தாலாட்டு தான் அது கேட்கும் முதல் இசை 


9 இறந்து  போனவங்களுக்கு ஒரு ஏக்கம் இருந்துச்சுன்னா அவங்களைப்பறி  கொடுத்தவங்களுக்கும் ஒரு ஏக்கம் இருக்கும் தானே ? 


10   இவரு  காதில்  எப்படிக்காயம் ? யாரு இவரை அடிச்சது ?


 இவரை யாரும் அடிக்கலை சார், இவரு அவரை அடிச்சாரு , அதனால இவருக்குக்காயம் ஆகிடுச்சு 


 குழப்பாதய்யா 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோமாவில்  32  வருடங்கள் இருந்த  சிம்ரன் அவ்ளோ   லேட்டாக  ஏன் வில்லியைப்பழி   வாங்குகிறார் ?


2   வில்லி ஆன லைலா சி சி டி வி  கேமராவில் ஏன் சிக்கவில்லை ? 


3  முதல் பாதியை  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர் போல காட்டி விட்டு பின் பாதியில் தடுமாறி இருக்கிறார்கள் .


4  ஃபிளாஸ்பேக்  கதை  ஆடியன்சுக்கு சரியாக கனெக்ட்  ஆகவில்லை . அது பெரிய மைனஸ் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு/ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஈரம்  அளவுக்குபிரமாதம்  இல்லை என்றாலும்  ரசிக்க வைக்கும் படம் தான் இது . விகடன்  மார்க் 42 . ரேட்டிங் 2.75/ 5 


Sabdham
Theatrical release poster
Directed byArivazhagan Venkatachalam
Written byArivazhagan Venkatachalam
Produced bySiva
S. Banupriya Siva
Starring
CinematographyArun Bathmanaban
Edited byV. J. Sabu Joseph
Music byS. Thaman
Production
companies
7G Films
AAlpha Frames
Distributed byMythri Movie Makers (Andhra Pradesh and Telangana)
Release date
  • 28 February 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office₹2.95 crore[2]