Showing posts with label சத்யராஜ். Show all posts
Showing posts with label சத்யராஜ். Show all posts

Monday, November 23, 2015

ஒரு நாள் இரவில் - திரை விமர்சனம்:

சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது.
காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அனு மோளையும் வைத்துப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கிவர வெளியே செல்லும் ஆட்டோ டிரை வர், போலீஸில் மாட்டிக்கொள்ள நிலைமை விபரீதமாகிறது.
கோபத்துடன் வெளியே சென் றவர் திரும்பி வரவில்லையே என்று சத்யராஜின் குடும்பம் பதற, பூட்டிய கடைக்குள் சத்யராஜும் அனுமோளும் ஆட்டோ டிரைவருக் காகக் காத்திருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
ஜாய் மேத்யூ எழுதி இயக் கிய ‘ஷட்டர்’ என்ற மலை யாளப் படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கிறது இப்படம். எத்தனை நீளமான படத்தையும் வெட்டித் தள்ளி விறுவிறுப்பாகத் தந்து விடுவார் என்று பெயர் பெற் றிருக்கும் படத் தொகுப்பாளர் ஆன் டனி இயக்குநராக அறிமுகமாகி யிருக்கும் படம். படத் தொகுப் பும் அவரே. 135 நிமிடங்கள் நீளம் கொண்ட மலையாளப் படத்தை 109 நிமிடங்களுக்குத் தமிழில் கொடுத் திருக்கிறார். அப்படியானால் மலை யாளத்தை விட இன்னும் வேகமும் விறுவிறுப்புமாகப் படம் இருக்கும் என்ற எண்ணம் வரலாம். ஆனால் அப்படி இல்லை.
பாலியல் தொழிலாளியுடன் கடைக்குள் மாட்டிக்கொண்ட சத்யராஜ், இது வெளியே தெரிந்தால் தன் குடும்ப கவுரவம் என்னாவது என்று பதறு கிறார். அந்த பெண்ணுக்கும் பெருத்த சங்கடம். இதனால் சத்ய ராஜை கண்டபடி திட்ட ஆரம்பிக் கிறார். அவரை சமாளிக்க வழி தெரியாமல் சத்யராஜ் விழி பிதுங்குகிறது.
இந்த பதற்றமும் தவிப்பும் தான் திரைக்கதையின் அழுத் தத்தை தீர்மானித்திருக்க வேண் டும். ஆனால் துணைக் கதாபாத்திர மான யூகி சேது, பையைத் தவற விட்டுவிட்டு அதைத் தேடி அல்லாடும் பிரச்சினையையும் இதற்கு இணையாகச் சேர்த்துக் கொள்வது திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. சத்யராஜின் நிலைமை மீது மையம் கொள்ளும் பார்வையாளரின் கவனம் சிதறுகிறது.
இந்த பின்னடைவு, மூலப்படத் திலேயே உண்டு. ஆனாலும், மலையாளத்தில் இருந்த சின்னச் சின்ன அழகான தருணங்கள் இக்குறையை ஈடுகட்டின. அது இப்படத்தில் இல்லாததால், வறண்ட சித்தரிப்பாக மாறிவிட்டது.
டிரைவரால் பகலில் கதவைத் திறக்க முடியாது என்பது புரிகிறது. ஆனால் சத்யராஜின் நீண்ட கால நண்பரான அந்த டிரைவருக்கு, பின்புறம் இருக்கும் ஜன்னல் பற்றி தெரியாதா? அதன் வழியே சாப்பாடு கொடுத்திருக் கலாம். செய்தி பரிமாறிக்கொண் டிருக்கலாம். டிரைவர் மாற்று வழியை யோசிக்காமலேயே இருப்பது நம்பும்படி இல்லை.
கடைசியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மூலம் சிக்கல் விடுபடுவது பொருத்தமாகவே காட்டப்பட்டுள் ளது. அதன் பின்விளைவுகளும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ஏ.ராஜேஷின் கலை இயக்கம், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, நவீன் ஐயரின் இசை ஆகிய அம்சங்கள் படத்துக்குத் தோள் கொடுக்கின்றன.
நட்சத்திரத் தேர்வில் இயக்கு நரின் ஆளுமை பளிச்சிடுகிறது. சேகராக வரும் சத்யராஜ், பாலியல் தொழிலாளியாக வரும் அனு மோள், திரைப்பட இயக்குநராக வரும் யூகி சேது, ஆட்டோ டிரைவ ராக வரும் வருண், சத்யராஜின் மகள் தீக் ஷிதா, மனைவி கல் யாணி என அனைவரும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். இமேஜ் உள்ள நடிகர்கள் ஏற்கத் தயங் கும் வேடத்தை எவ்வித மனத் தடையுமின்றி சத்யராஜ் ஏற்று நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
சத்யராஜ் அதிக வசனம் பேசா மல், ஒரு வேகத்தில் ஏற்பட்ட தாபத் தில் பொறியில் சிக்கிய எலியாக பதற்றம், தவிப்பு, பயம், அழுகை எனத் தேவைப்படும் உணர்ச்சி களை மட்டும் அளவாகக் கொட்டி அசத்துகிறார். துளியும் ஆபாசம் வெளிப்படாமல் பாலியல் தொழி லாளியின் நிலையை சித்தரிக் கும் அனுமோள் வசீகரிக்கிறார். வாய்ப்புகள் இல்லாமல் அல்லா டும் விரக்தியின் நடுவே மிச்சமிருக் கும் கொஞ்சம் நம்பிக்கையைக் கால்களில் தேக்கியபடி நடக்கும் யூகி சேதுவின் நடிப்பும் கதா பாத்திரமும் அருமை. ஆனால், திரைக்கதையின் துருத்தலான கதாபாத்திரம் என்பதால் அவர் வெளிப்படுத்தும் அவநம்பிக்கை நம்மை அயர்ச்சியில் தள்ளுகிறது. அதேநேரம், தேவைக்கு அதிக மாக ஒரு வார்த்தைகூட எழுதப் படாத அவரது வசனம் மொத்த படத்துக்கும் பெரிய பலம்.
கதையம்சம், திரைக்கதையில் உருவாகும் பதற்றம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை ஏற்படுத்தும் அயர்ச்சி படம் ஒரு அனுபவமாக மாறுவதைத் தடுத்துவிடுகிறது.


thanx = the hindu

Saturday, November 21, 2015

ஒரு நாள் இரவில் - சத்யராஜ் சிறப்பு


மலையாளத்தில் ஹிட்டடித்த 'ஷட்டர்' படத்தின் ரீமேக், எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் உருவான முதல் படம், 'பாகுபலி'க்குப் பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியாகும் படம் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் இரவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.


படம் எப்படி?

கதை: டீன் ஏஜ் மகள் ஒழுக்கத்தில் கறார் காட்டும் அப்பா, ஒரு கட்டத்தில் தானே அந்த ஒழுக்கக்கேடான செயலில் இறங்குகிறார். அது எது? ஏன்? அதற்குப் பிறகு என்ன ஆகிறது? என்பது மீதிக் கதை.


மலையாளத்தில் உருவான 'ஷட்டர்' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதும் வென்றிருக்கிறது. அந்தப் படத்தை தமிழில் உருவாக்கி இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கும் எடிட்டர் ஆண்டனியை லைக் செய்யலாம்.


த்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.


கறாரான அப்பா, கண்டிப்பான கணவன், சின்னதாய் தோன்றும் சபல எண்ணத்திலும் மோகம் காட்டாத முகம், பதற்றம், பரிதவிப்பு, குழப்பம், பயம், அழுகை, சந்தேகம், யோசனை என அனைத்து உணர்வுகளையும் கண்முன் நிறுத்துகிறார்.கதாபாத்திரத்தின் தேவையறிந்து அதை உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.


பாசாங்கு இல்லாத இயல்பான நடிப்பில் அனு மோல் ஈர்க்கிறார். யூகி சேது, ஆட்டோ டிரைவராக வரும் அறிமுக நடிகர் வருண், சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் தீக்‌ஷிதா கோத்தாரி, சத்யராஜ் மனைவியாக நடித்த கல்யாணி நட்ராஜன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ரெண்டு படிப்பு இருக்கு. பட்டப்படிப்பு... பட்டபின் படிப்பு என்ற யூகி சேதுவின் வசனங்கள் சிம்பிளாய் வசீகரிக்கின்றன.


எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். பல படங்களுக்கு கத்தரி போடும் ஆண்டனி அந்த ஒரு பாட்டுக்கும் யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.


ஜாய் மேத்யூ கதையை ஆண்டனியின் திரைக்கதை ஆக்கிய விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். சத்யராஜ் புரிதலில் உள்ள பிரச்னை, நண்பர்களின் ரியாக்‌ஷன்கள் தெரிந்தும் அதுகுறித்த ஃபினிஷிங் இல்லாதது குறை. அனு மோல் பின்னணி தெரிந்த பிறகு எந்த பதற்றமும் இல்லாமல், அலட்டாமல் சாதாரணமாக யூகி சேது இருப்பது நெருடல்.


அந்தச் சிக்கலான சூழ்நிலையை சத்யராஜ் எப்படி கடந்து வரப் போகிறார்? என்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய யுத்தி. ஆனால், அதில் எந்த பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் 'ஒரு நாள் இரவில்' ஒரு முறை பார்க்க வேண்டிய சினிமா

thanks the hindu

Tuesday, January 14, 2014

கலவரம் - சினிமா விமர்சனம்


ஒரு அரசியல் தலைவர் கம் தாதா வை அவர் பண்ற அக்கிரமத்துக்காக  போலீஸ் கைது செய்யுது.அவரை அரசாங்கம் விடுவிக்கனும்கறதுக்காக அவர் ஆணைப்படியே அவரோட அடியாளுங்க கலவரம் பண்றாங்க.வேணும்னே தூண்டிவிடப்பட்ட அந்த கலவரத்துல பல உயிர்ச்சேதம் நடக்குது. அதில் உயிர் இழந்த மாணவிகள் 4 பேரு.அந்த 4 பேரோட தோழர்கள் 4 பேரும் அவங்க சாவுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்கக்கிளம்பறாங்க.அந்த  4 மாணவிகள் ல ஒரு மாணவியோட அப்பா ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர். அவர் தானா முன் வந்து அந்த கேசை டீல் பண்ண ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அந்த 4 மாணவர்களை யூஸ் பண்ணி வில்லன்களை போட்டுத்தள்ளறாரு.இதுதான் கதை . 


3 வருடங்களுக்கு முன் வெளி வந்த கலவரகாரு எனும் கன்னடப்படத்தின் டப்பிங்க் படம்  தான் இது.சத்யராஜ் நடிச்சிருக்கறதால டைமிங்கா இப்போ  ரிலீஸ் பண்ணி இருக்காங்க .


 போலீஸ் ஆஃபீசர் கம் விசாரணை அதிகாரியா சத்யராஜ் கலக்கறார். படம் போட்ட முதல் 55  நிமிடங்கள் போனதே தெரியல. செம ஸ்பீடு .மம்முட்டி நடிச்ச  சி பி ஐ டைரி குறிப்பு மாதிரி காட்சிகள் பர பரனு நகருது . 

கேப்டன் நடிச்ச உளவுத்துறை , அருண் விஜய் நடிச்ச ஜனனம் படங்களை டைரக்ட் செய்த ரமேஷ் செல்வன் தான் இயக்குநர். இவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்  என்பதால் அதற்கான  பில்டப் எல்லாம் நல்லாவே  தெரியுது. காட்சிகள் கட்டிங்க் , எடிட்டிங்க்  எல்லாம்  குட் . இடைவேளைக்குப்பின்  வரும்  ஃபிளாஸ்பேக் காட்சிகள்  கொஞ்சம்  சோர்வைத்தந்தாலும்   மொத்தப்படமே 132  நிமிடங்கள் தான் என்பதால்  படம்  ஓக்கே  தான் . 


சத்யராஜ்க்கு  ஜோடி  இல்லை என்பது பெரிய ஆறுதல் . ஜோடி  இருந்தா  டூயட், செண்ட்டிமெண்ட் என இழுவைகள்  இருக்கும், அதே போல் காமெடி  டிராக்  என்ற பெயரில்  யாரும்  மொக்கை எல்லாம் போட வில்லை . 


கோவையில் நடந்த பஸ்  எரிப்பு சம்பவம் , மதுரையில் நடந்த  தினகரன்  ஆஃபீஸ் கலாட்டா எல்லாம் கண் முன் விரியுது. இது ஆல்ரெடி  பாலாஜி சக்திவேல் கல்லூரி எனும் படத்தில் செஞ்சிருந்தாலும்  இது வேறு மாதிரி  திரைகக்தை 


 அந்த 4 மாணவ மாணவிகள் எல்லாம்  யாரும்  தெரிந்த  முகமே  இல்லை , ஒரே ஒரு முகம் டி வி  புகழ்  சுஜிபாலா .


இயக்குநர்  ராஜ் கபூர்  ஒரு கேரக்டரில் வர்றார். வில்லனின் நடிப்பு கன கச்சிதம் . 

இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. மயில் சாமி மூலம்  பத்திரிக்கை எடிட்டர் மாதிரி மிமிக்ரி செய்து பேசும்போது அவங்க அப்படியே நம்பி  ஒரு ஃபேக்  நியூசை அதுவும் ஒரு கொலை செய்தி பற்றிப்போடுவது நம்பவே முடியலை. எந்த  ஃபோன்  நெம்பர்ல இருந்து வருது அப்டினு பார்க்க மாட்டாங்களா? எடிட்டர் தான் பேசினார் என்பதை கன்ஃபர்ம் செய்ய மாட்டாங்களா? 


2. ஜெயிலில் இருந்து  தப்பிக்கும் காட்சியில் 4 பேரும்  பேண்ட் சர்ட்டில் ஆர்டினரியா  இருக்காங்க.கைதி டிரஸ் என்னாச்சு ? 


3  செல்  ஃபோன் டவர் கிடைக்காததால்  ரூமை விட்டு  வில்லன் வெளியே வருவான், அப்போ  ஷூட் பண்ணு -னு சத்யராஜ் சொல்றார். வில்லனின்  ஃபோட்டோவைக்காட்ட மாட்டாரா? என்ன அடையாளம் ? வில்லனுக்குப்பதில் அவனின் அடியாள்  ரூமை விட்டு வெளீயே  ஃபோனுடன் 
வந்ததும்  தவறுதலாக அவனை சுட்டதும்  வில்லன் வெளீயே வர்றான். அப்போ   சுட்டிருக்கலாமே? ஏன் ஓடறாங்க ? 


4. வில்லனின்  டிரைவர் வேணும்னே  ரூட் மாறி காரை ஏர்போர்ட் போகும் திசைக்கு எதிர்  திசையில் வண்டியைத்திருப்பும்போது  வில்லன் ஏன் தன் செல் ஃபோனில்  இருந்து மெசேஜ் அனுப்பி   தன் அடியாட்கள் வரும் காரில் இருப்பவர்களுக்கு இன்ஃபார்ம் செய்யக்கூடாது ? 


5. ஒரு  சீன் ல வில்லனை  4 பேரும்  நீண்ட வாள்  கொண்டு  துரத்திட்டு ஓடறாங்க. எதுக்கு வெட்டி வேலை. சத்யராஜ்கொடுத்த கன் இருக்கே ? எடுத்து போட்டுத்தள்ளலாமே? 


6.  மாணவர்களில்  ஒரு ஆள் அடி பட்டு  சீரியசா படுத்திருக்கார். அப்போப்போய்  டெலி கால் மூலம் இண்ட்டர்வியூ செய்வது எதுக்கு. அவ்ளவ் முக்கியமான கலெக்டர் உத்யோகமா அது ? 


7. வில்லன்   திதி  கொடுக்கும் காட்சியில்  அய்யர் “ பிண்டத்தைக்கொண்டு போய்  கடல் ல கரைக்கும்படி சொல்லும்போது கையில் அந்த மாவு உருண்டையை எடுத்துட்டுப்போறார். பொதுவா ஒரு பிளேட் ல போட்டு எடுத்துட்டுப்போய் அந்த பிளேட்டை கழுவிட்டு வருவாங்க . பிண்டத்தை கடலில் கரைப்பாங்க .


8 கலவரக்காட்சியில்   மாணவியின் மேல் வில்லன் பெட்ரோல் ஊத்தும்போது அவ ;பாட்டுக்கு  ஓட வேண்டியதுதானே? அவன் என்ன கையைப்பிடிச்சுட்டா இருக்கான்? சுத்தி ஆளுங்க யாரும்  இல்லை. வேணாம் , வேணாம் அப்டினு சொல்லிட்டு ஏன் அங்கேயே  நிக்குது ? 

9 லேண்ட் லைன் பப்ளிக் பூத் ல இருந்து  ஃபோன் பண்ணி  வில்லனை மிரட்டும் மாணவர்கள்  ஏன் அதே  ஏரியாவில்  இருக்காங்க ? ட்ரேஸ் அவுட் பண்ணி கண்டு பிடிப்பாங்கனு  தெரியாதா? 


10   கொலை செஞ்சது காலேஜ் ஸ்டூடண்ட் என்றதும்  வில்லன் என்னது?22 வயசுப்பையனா>? என்கிறார். 12 வது படிக்கும் பையனுக்கு 12 + 5 = 17  வயசு , காலேஜ் 3 வருசம்  என்றால்  17 + 3  = 20 வயசு தானே ஆகுது ? 

Kalavaram Movie Audio Launch

நச் வசனங்கள் 


1.  எல்லாப்போர்லயும் கடைசில நல்லதுதான் நடந்திருக்கு 



2. என் பத்திரிக்கை முதல் இடத்துக்கு வரனும்னா  நீ மேலிடத்தில் இருக்கனும் , ஐ மீன் சாகனும் 



3. ஆட்சியே  முடிஞ்சாலும் அவங்க ஆரம்பிச்சு வெச்ச விசாரணைக்கமிசன் விசாரணை முடியாது 


4. ஏய் மிஸ்டர்  ஸ்டாப்  தட் என்கொயரி 


 சாரி சார், எல்லா ஒர்க்கையும் முடிச்சுட்டேன்

  என்னய்யா ? ஸ்கூல் பசங்க இம்போசிசன் முடிச்ச மாதிரி ரொம்ப ஈசியா  முடிச்சுட்டேன்னு சொல்றே? 



5.  விசாரனைக்கமிஷன்   ஏன் அமைக்கறோம்? அதுல கமிஷன்  இருப்பதால்  தான் 


6.  ஒவ்வொரு  பொறுக்கியையும் , ரவுடியையும் போட்டுத்தள்ளறது  என்னை மாதிரி  ஒரு போலீஸ் ஆஃபீசரால தான் , என்கவுண்ட்டர்  மூலம் 



7.  வில்லன் - நான் சென்னைக்கு வரும்போது   பிச்சைக்காரனா இருந்தேன் , என்ன பார்க்கறே ?  இப்பவும் அப்படித்தான் இருக்கனா? 


8  யார் நம்மாளைப்போட்டாங்கனு தெரியலை 

 டேய் , கொலை பண்றவன் , குத்தம் பண்றவன் பண்ணிட்டு  விசிட்டிங்க் கார்டு  கொடுத்துட்டா  செய்வான் ? 


9  அவருக்கு வேட்டி கட்டவே  தெரியாது . அப்டியே 4 மாசத்துக்கு  ஒரு தடவை கட்டினாலும் அது அவிழ்ந்து விழுந்துடும் 


அடேங்கப்பா ,  4 மாசத்துக்கு  ஒரு  டைம்  வேட்டி அவிழ்ந்ததுக்கே  4 குழந்தைகள்னா........



சி பி கமெண்ட்  -   படம்   பரபரப்பா  ஓடுது . முன் பாதி ஓக்கே , பின் பாதி  சுமார் தான்.  லேடீசும் பார்க்கலாம் .சத்யராஜை  ரசிப்பவர்கள் பார்க்கலாம். 



 ரேட்டிங்க்  =  2.5 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

குமுதம் ரேங்க் - OK


திருப்பூர்  ஜோதி யில் படம் பார்த்தேன் 




Kalavaram Movie Stills (7)

Wednesday, October 09, 2013

ரஜினி என் படத்துல வில்லனா நடிப்பாரா? சத்யராஜ் ஷங்கரிடம் கேள்வி -@ த ஹிந்து தமிழ்

நடிகர் சத்யராஜ் 

கண் முன்னே மகளின் காதல் முடிந்துபோனதில் இதயம் நொறுங்கி ‘ முதல் ஹார்ட் அட்டாக்’கை எதிர்கொள்ளும் உயர் தட்டு அப்பா. ஊருக்காக மகளின் காதலை எதிர்த்துவிட்டு, இரவோடு இரவாக பை நிறையப் பணம் கொடுத்துக் காதலனோடு மகளை அனுப்பிவைக்கும் முறுக்கு மீசை அப்பா. மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விதான் மாணவர்களின் எதிர்காலம் என்று நம்பி, கடைசியில் தனது மாணவனின் தனித்திறமைக்கு மண்டியிடும் பேராசிரியர்...



வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகிப் பிறகு நாயகனாகப் பரிணமித்த சத்யராஜின் தற்போதைய மென்மையான திரை முகங்கள்தான் இவை. ‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் சத்தியாராஜின் குணசித்திரம் பார்த்து, நம்ம அப்பாவும் இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஏங்காத இளம் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.



பசுமை போர்த்திய கோவையில், தாவரவியல் பட்டதாரியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எம்.ஜிஆரின் தீவிர ரசிகராகச் சுற்றிக்கொண்டிருந்தார் ரங்கராஜ். கோவையை அடுத்த கோபிச்செட்டிப்ப்பாளைத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பு அவரைச் சுண்டி இழுத்துவிட்டது. பிறகு சென்னை வந்து, கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இணைந்தார். போதிய நாடக அனுபவங்கள் கிடைக்கும் முன்பே, சினிமா அரவணைத்துக்கொள்ள, ரங்கராஜ் சத்தியராஜ் ஆனார்.



1978இல் ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரை, ரசிகர்கள் சபிக்கும் அளவுக்குத் தமிழ் சினிமா வில்லன் கதாபாத்திரங்களில் வலிக்க வலிக்க முத்திரை குத்தியது. இவரது கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் ‘24 மணிநேரம்’ படத்தின் மூலம் இவரை திகிலான வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே?” என்று சத்தியராஜ் பேசிய வசனமும் அதைப் பேசிய விதமும், அவரது அடையாளமாகவே மாறிவிட்டன.



நக்கலும் பகடியும் மிக்க வில்லன்னாக வலம் வந்த சத்யராஜை அதே மணிவண்ணன் ‘முதல் வசந்தம்’ படத்தில் ‘குங்குமப் பொட்டு’ கவுண்டராக ஆக்கி, குணசித்திர வில்னனாக மாற்றினார். சத்தியராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் படத்தை.



“நடிகர் சத்தியராஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இல்லையென்றால் சத்தியராஜ் இல்லை. அவர் என்னை நடிகனாக மட்டும் ஆக்கவில்லை. வாசகனாகவும் மாற்றினார். சே குவேராவையும், ஹோசிமினையும் படிக்க வைத்தார். என்னை வரலாற்று மாணவன் ஆக்கினார்” என்று நெகிழும் சத்தியராஜுக்கு மணிவண்ணனின் இழப்பு பெரிய அடி. 



மணிவண்ணனும் சத்தியராஜும் கூட்டணி அமைத்த சுமார் 25 படங்கள், அவர்களுக்கேன்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கின. இவர்களது கூட்டணியில் உருவான ‘அமைதிப் படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் செய்தது. வால்டர் வெற்றிவேல், மக்கள் என்பக்கம், நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை வசூல் நாயகனாகவும் மாற்றின.



ஒரு கட்டத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பு பாணியிலிருந்து விடுபட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’ ஆகியவை சத்தியராஜின் நக்கல் பிம்பத்தைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கிப்போட்டன. “ என்னை கதாபாத்திரமாக மட்டுமே பார்த்து ஏ.எல். விஜய், பொன்.ராம், அட்லீ மாதிரியான இளம் இயக்குனர்கள் நடிக்க கூப்பிடறாங்க. ராஜாராணிக்குப் பிறகு மகளோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மாலுக்கு ஷாப்பிங் போனேன். 



பெண் பிள்ளைகள் ஒடிவந்து கையப் பிடிச்சுக்கிட்டு உருகுறாங்க. இந்த மாதிரியான ஒரு நெகிழ்ச்சி புதுசா இருக்கு” என்று சிலிர்க்கும் சத்யராஜ், “நிஜத்திலும் நான் நல்ல அப்பாதான்” என்று தன்க்கே உரிய முத்திரையுடன் முடிக்கிறார். தன் திரைப் பயணத்தை இதற்கு முன்பு மடைமாற்றிய மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.



ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று இயக்குநர் ஷங்கர் கேட்டபோது அவர் என் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்டதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தன் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாத சுதந்திரக் கலைஞர் சத்யராஜ். ஆனால் அதே ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அப்பாவாக நடித்து வித்தியாசமான வேடங்களில் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் காட்டினார். அதையடுத்து, முன்னணி நடிகைகளின் பாசமுள்ள அப்பாவாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். தீபிகா படுகோனே, ஸ்ரீவித்யா, நயன்தாரா என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது.




சத்யராஜ் தற்போது நடித்துவரும் படங்கள் ஹிட் ஆவதில், அப்பா கதாபாத்திரம் என்றால் சத்யராஜ் என்ற சென்டிமெண்ட் உருவாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற சென்டிமென்ட்களில் நம்பிக்கையில்லாத பெரியாரின் தொண்டரான சத்யராஜ் இதைப் பற்றி என்ன நினைப்பார்? ‘ராஜா ராணி’யில் ஒரு இடத்தில் அப்பா சத்யராஜ் சொல்வதுபோல சென்டிமென்ட் எல்லாம் அவருக்கு “செட் ஆகாது”. வில்லன், நாயகன் என்று மாறிவரும் திரை முகங்களில் இதுவும் ஒன்று என்று அவர் கலைப் பயணம் தொடர்கிறது.


நன்றி - த ஹிந்து தமிழ்

Friday, September 23, 2011

ஆயிரம் விளக்கு - சனாகான் +சத்யராஜ் + சாந்தனு கே பாக்யராஜ் +கூட்டணி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoBOTOTfNIsHcX_GTj0LvQn191GzRssHEsm3K11bApumlKIYe9AJfyzm7utTwzAT9lhg6tujb0XkEAmcCgX83hyphenhyphenXbIrK-_h5iNWrhi7a6rB_WZB48uPAm3tifuP3hgdgdcCzIuTPACV4zH/s1600/av1.jpgசத்யராஜ் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு தாதா.. சாந்தனு ஆள் நல்ல பர்சனாலிடியாக இருந்தாலும் மொக்க ஃபிகர் மோஹனா (சனாகான்)வை லவ்வும் ஒரு சாதா இளைஞன். இந்த சாதா இளைஞனை அந்த தாதா தத்துப்பிள்ளையாக வளர்க்க நினைக்கிறார்... அவர் தாதா என இந்த சாதாவுக்கு தெரியாது..  இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.. 


ஹீரோ சாந்தனு - நேர்ல பார்க்க சாக்லெட் பாய் மதிரி இருக்கும் கே பாக்யராஜ் வாரிசு இந்தப்படத்துல ஏன் தூங்கி எழுந்த விடியா வெள்ளி போல் இருக்கார்னு தெரில.. எப்பவும் ஆள் டல்லா இருக்கார்.. ஹீரோயின் கூட 3 டூயட்டும், சத்யராஜ் கூட ஒரு பாட்டும் பாடறார்.. 2 ஃபைட் போடறார்..  அவ்ளவ் தான்...!


ஹீரோயின் சனாகான் சாதாரண 40 மார்க் ஃபிகர்.. இவர் படம் முழுக்க நடிப்பையும் காட்டலை.....குணச்சித்திரத்தையும் காட்டலைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி .. ஃபேஸ் எக்ஸ்பிரஸ்னா என்ன?ன்னு பாப்பாக்கு சுத்தமா தெரில பாவம்.. ஒரு சீன்ல வாய்க்கால்ல தண்ணியைப்பார்த்ததும் அசால்ட்டா எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாம தாவணியை கழட்டி வீசிப்போட்டுட்டு வாய்க்கால்ல குதிச்சுடறார். அட ஆண்டவா!!! பார்க்கற மத்தவங்கதான் கூச்சப்படறாங்க.. ( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/09/aayiram-vilakku-movie-still.jpg

கிளை வில்லன் சுமன்... அண்ணன் கேப்டன் மாதிரி எப்பவும் மப்புலயே இருப்பார் போல.  இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னான்னா தனது போட்டி தாதாவை அப்பப்ப சவால் விடறது..உறுமுவது .... எமாந்த இ வா எவனாவது வந்தா அவனை கொலை பண்றது. . 

இணை வில்லன் சானா கான்க்கு மாமா பையன். இவருக்கு 24 மணி நேரமும் என்ன வேலைன்னா பைக் பெட்ரோல் டேங்க் உள்ளே ஒரு பெரிய அரிவாள் வெச்சு அலையறது.. எவனாவது தன் முறைப்பெண்ணை கையை ப்பிடிச்சு இழுத்தா அவன் கையை வெட்டறது..  டேய்.. திருந்துங்கடா...

கஞ்சா கறுப்பு. நல்ல குணச்சித்திர நடிகரும், ராம் படம் மூலம் அறிமுகம் ஆன காமெடி நடிகரும் ஆன இவர் இன்னும் எத்தனை நாளுக்கு உப்பு சப்பு இல்லாத படத்துல கிச்சு கிச்சு மூட்டுவாரோ... ஒரு சீன்ல கூட சிரிப்பே வர்ல பாஸ்.. சாரி.. 


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2374&option=com_joomgallery&Itemid=77

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாத்தியார் சார். பசங்க  தப்பு பண்ணுனா  நீங்க மார்க் கம்மியா போடுவீங்க.. நாங்க ஆளையே போடுவோம்..  ( டேய் ரவுடிங்களே.. முதல்ல குளியல் போடுங்கடா!)


2. மிஸ் .. ஐ லவ் யூ..

உங்க மணிபர்ஸ் குடுங்க.

எதுக்கு?

என்னை யார் லவ் பண்ணாலும் அவங்க மணிபர்ஸை செக் பண்ணுவேன். ( சோனாவை விட கேவலமான மைண்ட் தாட்டோ?!!)

3. மிஸ்... உங்க பேக்கை கொடுங்க..  ( யாரும் ஜெர்க் ஆக வேணாம்.. அவரு கேட்கறது ஹேண்ட் பேக்கை ஹி ஹி )

எதுக்கு?

எனக்கும் லவ் பண்றவங்க பேக்கை செக் பண்ணி பழக்கம் .. ( நல்ல வேளை... )

4.  நான் இந்த ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப்போறேன்..

உள்லே தண்ணிப்பாம்பு நிறைய இருக்குமே?

கொத்துமா?


தெரில.. கேட்டு சொல்றேன்.. ( அஞ்சாங்கிளாஸ் தமிழ் நான் டி டெயில்ல வர்ற கதை உல்டா... )



5. லிங்கத்துக்கும், உனக்கும் என்னா லிங்க்.. ?

அவருக்கு நான் தாங்க ரைட் ஹேண்ட்... ( அப்போ அவருக்கு பதிலா நீ தான் ஊட்டி விடுவியா? )


http://indiansamachar.in/wp-content/uploads/2011/09/Tamil-Actress-Sana-Khan-Hot-pictures1.jpg
6.  இவருதான் என் புது ஃபிரண்ட் கண்ணாயிரம்...

பாப்பா யாரு... உன் புது கேர்ள் ஃபிரண்டா..? ( அப்போ நிறைய பழைய கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? அவ்வ்வ்)


7. இந்த சட்டை எங்கப்பாவுது.. ஆனா நான் அவரைப்பார்த்ததே இல்ல.. அவர் சட்டையை நீ போட்டிருக்கறதைப்பார்க்கறப்ப அப்பா மாதிரிதான்யா என் கண்ணுக்கு தெரியறே..

8. அந்த கொதிக்கற பால் தேக்ஸாவை எடு..


எதுக்குங்கய்யா.. குடும்பத்தோட புரூ காஃபி போட்டு குடிக்கவா?

இல்ல... உன் தலை மேல கொட்ட....

9. பெத்தவங்களையே மத்தவங்களா நினைக்கற பசங்களுக்கு மத்தில மத்தவங்களைக்கூட  பெத்தவங்களா நினைக்கற மனுஷங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா...

http://flicksbuzz.com/Assets/Images/Mollywood/Mollywood-News/Sana-Khan-Hot-Stills-Overview.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரூ 2 லட்சம் மார்க்கட்ரேட் உள்ள இடத்தை ஃபேக்டரி கட்ட சாந்தனுவிடம் பேரம் பேசும் ரவுடி 5 லட்சம் தர்றதா சொல்றாரு.. ஓக்கே.. பேரம் படியாம 20 லட்சம் வரை இறங்கி வர்றாரே? அது எப்படி? அவனே ரவுடி... ஏன் பம்பனும்? மிரட்னா சைன் பண்ணிடறாரு.. ?

2. அதே நிலத்தை சாந்தனு அவர் அவசரத்தேவைக்கு விற்க முன் வரும்போது மார்க்கெட் ரேட்டை விட பாதி விலைக்குத்தர்றாரே.. ஏன்? நிலமும், தங்கமும்  எப்போதும் மதிப்பை இழக்காதே?


3. ஹீரோயினை ஹீரோ தான் புளூ கிராஸ் மெம்பர்னு ஏமாத்தி லவ் பண்றாரு ஓக்கே.. அதுக்குப்பிறகு 2 மாசம் கழிச்சு ஹீரோயின் ஹீரோ வீட்ல இல்லாதப்ப ஹீரோ வீட்டுக்கு போறப்ப இந்தா பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அந்த ஏமாத்துனதுக்கான ஆதாரங்களை டேபிள் மேலயே வெச்சிருக்காரே? அது ஏன்?


4. பெரும்பாலான ஹீரோயின்கள் சமூக சேவை செய்யும் ஆண்கள், தாதாக்கள் ரவுடிகளைத்தான் லவ் பண்றாங்க. அப்போ என்னை மாதிரி 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப்பொறவங்களுக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா?


http://7blues.com/wp-content/gallery/sana-khan/sana-khan-movies-stills.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களீலும் 7 நாட்கள் ஓடும்.. ஏன்னா அடுத்த வெள்ளீக்கிழமை வரை வேற படம் எதுவும் வர்லை.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. என் மார்க் - 25

ஈரோடு சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்

பிப்ரவ‌ரி 14 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹோசிமின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவதுப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.




Wednesday, August 24, 2011

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்



நாட்ல பல ஜோதிட சிகாமணிகள் அப்பாவி ஜனங்களை ஏமாத்தி தங்களோட வயிற்றுப்பசியையும், உடல் பசியையும், பெண் இச்சைகளையும் தீர்த்துக்கறாங்க,அதே போல சில சாமியார்கள்!!!அவங்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கற மாதிரியான பெரியாரிச கொள்கைகள் முழங்கும் படம் தான் இந்த லோ பட்ஜெட் படம்..

சிட்டிசன், சாமுராய் ,ரமணா டைப்ல் இதுவும் ஆட்களை கடத்தி வெச்சு சமூகத்தை தன் வசம் திருப்ப யத்தனிக்கற இளைஞர்கள் கதை தான், ஆனா இதுல டிமாண்ட்ஸ் எல்லாம் கிடையாது..  ஜோதிடர்களால், சாமியார்களால் பாதிக்கப்பட்ட  வாரிசுகள் எல்லாருமே பொடுசு அல்லது விடலைப்பசங்க என்பதுதான் படத்தின் பலமும், பலஹீனமும்..

இயக்குநரின் எண்ணம், கதை  KNOT  எதுவும் தப்பில்லை. எங்கே ஸ்லிப் ஆகிட்டார்னா சொல்ல வந்த கதையை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லாம  கடத்தல் கேஸை கண்டு பிடிக்க கிராமத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்  கம் ஹீரோ, அவருக்கு ஒரு காதலி ,  அவங்க காதல் எப்படி நிறைவேறுதுன்னு கொஞ்சம் ரூட் மாறிப்போறதால படத்தோட பேசிக் கெட்டுடுது..

அப்புறம் இந்த மாதிரி டகால்டி வேலை பண்ற ஜோதிடர்களை பொடிப்பசங்க எப்படி கடத்தி இருக்க முடியும்?கறதை பார்வையாளனுக்கு சந்தேகமே வராத மாதிரி காட்ட தவறியது திரைக்கதையின் பலஹீனம்..


படத்தில் சாட்டையடி வசனங்கள்

1. ஹீரோ -  ஏய்.. உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கே? நான் PC  தெரியுமில்லை?  (  P C = POLICE)

யோவ்,, நான்  M B C  தெரியுமில்லை ( MOST BACKWARD COMMUNITY)

2. இந்த சாமியார்கள் காணாமப்போனதைப்பற்றி கவர்மெண்ட் ஏன் இவ்வளவு கவலைப்படுது? அவனுங்க என்ன நாட்டுக்கு சுதந்திரமா வாங்கிக்கொடுத்தாங்க? 

3.  பல குடும்பங்களை குட்டிச்சுவர் பண்ணி அந்த காசுல இவனுங்க பங்களா கட்டிக்கிட்டாங்க.. 

4.  நான் ஏன் தான் இவ்வளவு அழகாப்பிறந்தேனோ தெரியல.. 

டேய்.. மேட்டர்க்கு வா!

அவ என்னை லவ் பண்றா - ன்னு நினைக்கறேன்..

5. ரேடியோ நியூஸ் - அவர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிகிறது

கடத்தப்பட்ட ஜோதிடர்கள்  -  டேய் டேய்.. நாங்க அந்த அளவெல்லாம் ஒர்த் இல்லைடா.. நல்லா தேடிப்பாருங்கடா. பக்கத்துல தான் எங்கேயாவது இருப்போம்.. 



6.  சாமி கும்பிட்டதா சொன்னே! ஆனா நெற்றில திருநீறே இல்லையே?

அடப்பாவி, உனக்கு மூளையே இல்லையா? இப்படியா என்னை மாட்டி விடுவே?

7.   ஹீரோயின் - எல்லாரும் இருக்கறப்ப திட்டறது, தனிமைல இருக்கறப்ப கொஞ்சறது  இதானே ஆம்பளைங்க புத்தி?

8.  யாருமே இல்லாத இடத்துல பேசிட்டு  இருக்கறது, தன்னைப்போல சிரிக்கறது இதுதான் காதலா?

9.  ஏய்.. இது நீ சுட்ட பணியாரம் மாதிரி தெரில, உங்கம்மா சுட்டதை நீ சுட்டுட்டு வந்துட்டே!!! சரியா ?

10. நீங்க 4 பேரும் பெரிய ஜோசியக்காரங்க தானே? உங்க 4 பேரையும் கடத்திட்டு வந்து வெச்சிருக்கோம்,உங்கள்ல யார் முதல்ல சாகறாங்கன்னு ஜோசியம் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்..




11. ரத்தத்துக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சயின்ஸ் சொல்லுது.. செவ்வாய் தோஷம் இருக்கற ஜாதகப்பையனுக்கு செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுதான் கட்டனும்..

12.  நல்ல நேரமா பார்த்து எல்லா குழந்தைகளையும் ஆபரேஷன் பண்ணி  எடுத்திட்டா அப்போ அவங்க வாழ்க்கைல கெட்ட நேரமே வராதா?

13.  ட்வின்ஸ்ல 2 குழந்தைகளும் ஒரே நேரத்துல பிறந்தாலும், அவங்க தலை எழுத்து வேற வேற மாதிரி இருக்கே? அது எப்படி?

14. ஜோசியர்கள் சொல்றபடி எதாவது எதேச்சையா நடந்தாக்கூட  அவங்களை தலையில தூக்கி வெச்சு  கொண்டாடறோம். ஆனா அவங்க சொன்னபடி நடக்கலைன்னா அவங்களை நாம் ஏன் தட்டிக்கேக்கறது இல்லை.. ?

15. செவ்வாய் தோஷமும், நல்ல ஜாதகமும் சேராதுன்னு சொல்றீங்களே எத்தனையோ லவ்வர்ஸ் சேரலையா? அவங்கள்ல எத்தனை பேரு ஜாதகம் பார்த்து சேர்ந்தாங்க?



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்தின் 90% கேரக்டர்கள் புது முகங்கள், கிராமத்து ஆட்களை சரியாக வேலை வாங்குவது..  அழகு

2. கூத்தாடியாக  வருபவரின் நடிப்பு செம..  அவர் ஊரெல்லாம் கிட்டத்தட்ட பிச்சை எடுக்கும் காட்சி உருக்கம். 

3. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர்  ( அலெக்சாண்டர் )சாதா டிரஸ்ஸில் கிராமத்தானாகவும் , போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்கு ஏறுவதும் செம க்யூட். 

4. அரைக்கிறுக்கா... உனக்கிருக்கா பாடல் செம மெலோடி.. சூப்பர் ஹிட் பாடலை எடுத்த விதமும் ஓக்கே..  அந்த பாடலில் ஆங்காங்கே ஃப்ரீசிங்க் ஷாட்ஸ் யூஸ் பண்ணியது அழகு.

5. ஹீரோயின்  பவினா மொக்கை ஃபிகராக இருந்தாலும் போகப்போக அவரது முகம் பழகி விடுகிறது. அவரது  எதார்த்தமான நடிப்பும் ஓக்கே.

6. சத்யராஜை ஒரே ஒரு சீனில் நடிக்க வைத்து அவர் தான் பட ஹீரோ என்பது மாதிரி போஸ்டர்களில் செய்த மார்க்கெட்டிங்க் டெக்னிக் .



இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  கதை சொல்லும் உத்தியில் இயக்குநர் தடுமாறியது ஏன்? ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஓவர், சாமான்யன் எது ஃபிளாஸ்பேக்,?  எது இப்போ நடக்கற கதை?ன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே தடுமாறுகிறான். 

2. கடத்தப்பட்ட 4 பெரை ஒரு கல் தூணில் சாதாரண கயிற்றால் பொடியனுங்க கட்டி வைக்கறானுங்க. .. அந்த கல் கரடு முரடா இருக்கு. அந்த கயிறை  10 டைம் மேலேயும் கீழேயும் தேய்ச்சாலே கயிறு அறுந்துடுமே? கண்காணிக்க ஆள் இல்லாத பட்சத்துல அவங்க ஏன் தப்பிக்க முயற்சி செய்யலை?

3. ஊர்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்ல இருக்கற நேரம் கொஞ்சம் தான், முக்காவாசி நேரம் அவர் மொக்கை ஃபிகர் மோஹனா பின்னால தான் சுத்திட்டு இருக்கார்.. இப்படி இருந்தா எப்படி அவர் மேல மக்களுக்கு மரியாதையும், பயமும் வரும்?

4.  இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்த இன்ஸ்பெக்டர் எந்த துப்பையும் கண்டுபிடிக்கலையே? அவர் என்ன துப்பு கெட்ட மனுஷனா?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கில்மா பண்ண ட்ரை பண்ணும் மந்திரவாதி  கம் பூசாரி ரொம்ப விபரம் இல்லாதவனா இருக்கானே? இம்புட்டு அப்பாவியாவா வில்லன் இருப்பான்?

6. பெற்றோர்களுக்கு தங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உடனே தெரிஞ்சிடும்.. ஹீரோயின் சாமியார்ட்ட இருந்து கண்ணீரோட வந்து அடம் பண்றா.. அங்கே போக மாட்டேன்னு, அவங்களுக்கு அது கூடவா புரியாது?

7. வெளியூரில் தன் மகனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்க்கு சேர்த்தும் கூத்தாடிக்கலைஞர் ஏன் ஜி ஹெச்சில் சேர்த்தவில்லை? கைல பணம் இல்லைன்னா அங்கே சேர்க்கலாமே?

8.  நர பலிக்காக சிறுவனை கடத்தும் காட்சியும், அதன் பின் வரும் பலி காட்சியும் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டாமா?





எல்லா செண்ட்டர்களிலும் 10 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -   பகுத்தறிவாளர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன்

Saturday, March 26, 2011

சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்

http://movies.vinkas.in/files/2011/03/Sattapadi-Kutram.jpg 

சீன் 1 டேக் 1 

விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.

விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..


விஜய் - சரி படத்தோட கதை என்ன?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-wNrGLDlgY0pHpIbcXx9ZdO7DqcYBTAc293CXuKankrGNGyrW0iVfG3AalE3z1eksvCiwZcbv1IQtk36Ug0tJf6bI7DsyrzVq8QlWPfEgv1skz_w1suSTs7mK2lRSqNO4S2PI4MKNN4/s320/sattapadi_kutram_movie_stills_010.jpg
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?


எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...

விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி  ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா? 

எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?

விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...

எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?

விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?

விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliv13pzOjbwynAO3wVAppRVGqbSXTok8pnMDAkSklOX7Ah0VcJ-3U7DcNwUWAIpUQPM2iknalvGEj9hDlQzplJAkMKlVLrjujA_C2V1KqNxMTxjGNVnvcUO7HFfu9uLaCIoqyIayExz8/s1600/sattapadi_kutram_movie_stills_02.jpg
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?

எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?

விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச  பானு நல்ல உருப்படி இல்லையா?

விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaj8PHZ2fZSetyR61sByQ7Vr2a5pEsBczmaQtgDJZ3FVIlbpdqDrnU31AXDradSO-tiV6ZzMTg8UvvsJHIdkBsHmHP-ER5f6ZQsW5nljO3Gg_8L59cOgKSlDQuSXRBeafDlMWnQGtX2zvU/s1600/Sattapadi+Kutram+Audio+Launch+Gallery+%25282%2529.jpg
படத்தின் உயிரோட்டமாய் அமைந்த வசனங்கள்

1.  என் பொண்ணை மட்டுமல்ல.. அவனையே அவன் மறக்கனும்.. புரியலை..? அவனை அடிக்காதீங்க.. அடிக்ட் ஆக்குங்க...


2. நீ காதலை இழந்ததை நினைச்சு கவலைப்படாதே.. நம்பிக்கையை இழக்காதே..


3. தோழர்களே. உங்கள் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . ( சேகுவாரா ,பிரபாகரன் வீர உரையிலிருந்து சுட்டது)

4.  நீங்க உளவுத்துறையா?

ஹூம்.. அந்தப்படத்தைக்கூட நான் பார்க்கலை.. ( நல்ல வேளை தப்பிச்சாரு)

5.  தீவிரவாதியா? அது ஊரை ஏமாத்த நீங்க எனக்கு வெச்ச பேரு.. நான் போராளி.. காட்டுக்குள்ள கூடி இருக்கற கந்தகக்கோட்டை...

6.  அரிசியைக் கடத்துனாங்க, சாராயத்தை கடத்துனாங்க.. இப்போ அரசாங்க ஆஃபீசரையே கடத்தறாங்களே..

7. எம் பி சார் உங்களை பார்க்க ஆசைப்படறார்... 

நான் என்ன சமைஞ்ச பொண்ணா? ( சத்யராஜின் இந்த நக்கல் கமெண்ட்டுக்கு செம கிளாப்ஸ்)

8. தலைவரே.. அந்தாள் கூட எதுக்கு சாவகாசம்..? சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டீங்க

நம்ம இலாகா (POOR ) புவரா இருக்கலாம்.. ஆனா நான் எப்பவும் பவரா (POWER) இருப்பேன்..

9. டியர்.. நான் ஒரு கவிதை சொல்லட்டா?

ம்.. ( முதல்ல நீ சொல்லு.. கவிதையா.. கருமாந்திரமா?ன்னு நாங்க சொல்றோம் # பக்கத்து சீட் ஆள்)

உன் கண்களில் இவ்வளவு மின்சாரம் இருக்கிறதே.., நீ என்ன நிலக்கரிக்கு பிறந்தவளா?   ( அடங்கோ.... அப்பாவை அவமானப்படுத்திட்டு பேச்சைப்பார்...)

10. இதயத்துக்கும்,மூளைக்கும் நடக்கற போராட்டத்துல உருவாகறதுதான் காதல்.. இந்த உலகமே அதுலதானே இயங்கிட்டு இருக்கு..?

11. ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?

நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?

12. ராசாவை  போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

. 13.  எங்களை மாதிரி ஒரு போராளி சாகலாம்.. ஆனா உங்களை மாதிரி ஒரு லீடர் சாகக்கூடாது..அப்புறம் நம்ம இயக்கமே இல்லாம போயிடும்..

14. எனக்காக ஒருத்தி வாழறதை விட , 4 பேருக்காக நான் வாழ ஆசைப்படறேன்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Sattapadi-Kutram-Audio-Launch/Sattapadi-Kutram-Audio-Launch-0022.jpg

கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்

1,  நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?

அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)

காமத்துப்பால் கூட இருக்கு...

அது அவரோட தனிப்பட்ட விஷயம்...

2.  நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)

3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்.. 

4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..

யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR  குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...

5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)

6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)

7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம  போயிடும்.


எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?

விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல்  மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....

எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க்  போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்... 

. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)

டிஸ்கி - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்