இந்திய சினிமாக்களில் முதல் முறையாக போலீஸ் ஆஃபீசராக வரும் ஒருவர் 14 ரீல் படத்தில் ஒரு சீன்ல கூட போலீஸ் யூனிஃபார்மே போடாத கின்னஸ் சாதனையை அன்றே நிகழ்த்திய உலக நாயகன் கமல் அவர்களை வாழ்த்தி வணங்கி வணக்கி விமர்சனத்தை துவங்குவோம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இவரு நோகாம நோம்பி கும்பிடுபவர் . வில்லனால் பாதிக்கப்பட்ட ஒருவர் போலீஸ் இன்ஃபார்மராக அப்பப்ப கடத்தல் கேஸ் பற்றி தகவல் கொடுக்க அதை நூல் பிடிச்சு ஆள் பிடிச்சு இவர் பேர் வாங்கிக்குவார். பெண்களை மட்டம் தட்டுவார். இதுல காமெடி என்னான்னா இவர் மட்டம் தட்டும் பெண்ணே இவரை லவ் பண்ணும், ஆனா நிஜ வாழ்வில் நாம 1008 பொய் சொல்லி பொய்யாப்புகழ்ந்து பொண்ணுங்களை ( !!) லவ் பண்ண வேண்டியதா இருக்கு
ஹீரோவுக்கு ஒரு ஃபிரண்டு இருக்கார் இவர் ஒரு வக்கீல். கோர்ட்ல திறமையா வாதிடுபவர்னு சொல்லிக்கறாங்க. இரண்டு பேரும் திக் ஃபிரண்ட்ஸ்
இப்போதான் ஹீரோயின் எண்ட்ரி பொதுவாவே ஆண்களின் நட்பு என்ப்து மே மு மே பி என இரண்டு வகையாப்பிரியும்., அதாவது மேரேஜூக்கு முன் மேரேஜூக்குப்பின் . அது மாதிரி ஹீரோயின் வந்த பிறகு இவங்க நட்புக்கு பங்கம் வருது
ஹீரோயினைப்பார்த்ததுமே ஹீரோவின் ஃபிரண்ட் ஒருதலைக்காதல் கொள்கிறார். தன் சொத்து பத்து எல்லாத்தையும் போட்டு ஒரு வச்ந்த மாளிகையைக்கட்டறார். மேஸ்திரிக்கு அட்வான்ஸ் கொடுக்கும் முன் அந்த ஸ்த்ரீ கிட்ட்டே விஷயத்தை சொல்லி இருக்கலாம் ஆனா சொல்லலை
ஹீரோயின் மாடர்ன் கேர்ள் அதனால ஓப்பன் யுனிவர்சிட்டில படிச்சேன்கறதைகாட்டிக்க தன் டிரஸ்சிங் சென்ஸை யூஸ் பண்ணிக்கறார் ஹீரோ ஹீரோயினைப்பார்க்கும்போதெல்லாம் எவ்ளோ கேவலமா மட்டம் தட்ட முடியுமோ அவ்ளோ கேவலமா மட்டம் தட்றார். ஹீரோயினும் ஹீரோ ,மேல செம காண்டுல இருக்கார்
ஹீரோவோட ஃபிரண்ட் ரொம்ப ஜெண்டில்மேனா ஹீரொயின் கிட்டே பழகறார். ஹீரோவை விட இவருக்குதான் வசதி அந்தஸ்து எல்லாம் அதிகம்.
ஆனா ஷாக்கிங்கா ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணறார்.இருவர் லவ்வும் டூயட் எல்லாம் முடிச்சு ஒரு லெவலுக்கு வந்தபின் ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோ கிட்டே தன் லவ் பற்றி சொல்றார். ஷாக் ஆன ஹீரோ அதை வெளிக்காட்டிக்காம இருக்கார்
ஹீரோயின் கிட்டே வந்து என்னை விட என் ஃபிரண்ட் தா உனக்கு சரியான ஜோடி அதனால அவனையே மேரேஜ் பண்ணிக்கனு ரெக்கமெண்டேஷன் பண்றார்
வில்லன் க்ரூப் ஹீரோ ஹீரோயின் டூயட் பாடுனப்ப எடுத்த ஸ்டில்ஸை ஹீரோ ஃபிரண்ட் கிட்டே காட்டி உசுப்பேத்தறாங்க ஹீரோவோட ஃபிரண்டுக்கு ஹீரோ தனக்கு துரோகம் பண்ணீட்டான். லவ் மேட்டரை சொல்லலை தான் சொன்னப்பவும் அது பத்தி மூச்சு விடலை அப்டினு ஃபிரண்ட்ஷிப்பை பிரேக்கப் பண்ணிக்கறார்
இப்போ நண்பர்கள் இருவரும் எதிரிகள் ஆகிட்டாங்க .இப்போ ஹீரோ ஒரு சிக்கல்ல மாட்டிக்கறார் போலிஸ் விசாரணைல ஒரு கைதியை அடிக்கும்போது வில்லன் க்ரூப் சதியால குடிதண்ணீர்ல எதையோ கலந்து குடுத்து ஆளைக்கொன்னுடறாங்க கொலைபப்ழி ஹீரோ மேல விழுது
இந்த கேசை எடுத்து வாதாட ஹீரோவோட ஃபிர்ண்டை விட்டா உலகத்துல வேற ஆளே இல்லைனு ஹீரோயின் முடிவு பண்ணி உதவி கேட்கறார் அப்போதான் ஹீரோவின் ஃபிரண்ட் ஒரு கண்டிஷன் போடறார். நான் உன் லவ்வரை காப்பாத்தறேன் பதிலுக்கு நீ என் கூட ஒரே ஒரு நாள் என் கூட வந்து தங்கனும்கறார்
ஹீரோயின் அதுக்கு ஒத்துக்கிட்டாரா? அந்த கேஸ் என்னாச்சு என்பது க்ளைமாக்ஸ்
ஹீரோவா கமல் . ஹேர்ஸ்டைல் பார்த்தாலும் போலீஸ் மாதிரி இல்லை ( டிஸ்கோ கட்டிங் ) பாடி லேங்க்வேஜிலயும் அப்டி இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற நேரத்தை விட ஹீரோயின் கூடதான் அதிக நேரம் இருக்கார் டான்ஸ் காட்ச்களில் கலக்கறார் ஒரு ஆச்சரியமான விஷயம் ஹீரோயினுக்கு லிப் கிஸ் தர்லை
ஹீரோயினா மாதவி அந்த கால கட்டத்தில் டூ பிஸ் டிரஸ் அல்லது ஸ்விம்மிங் டிரஸ் போட்டா அழகா இருக்கும் ஒரே ஒரு நாயகி மாதவிதான் கண்ணழகி இடை அழகி புருவ அழகி இபடி சொல்லிக்கே போகலாம்., கேமரா மேதை இ ஈகரீணைன் இயக்கத்தி;ல் ஜான்சி ராணி படத்தில் மட்டும் நடிக்காம இருந்திருந்தா இவருக்கு மரியாதையான இடம் கிடைச்சிருக்கு,ம்
ஹீரோவின் ஃபிர்ண்டா சரத் பாபு ஜெண்டில்,மேன் ரோல் ஸ்பெஷலிஸ்ட் . நல்லா பண்ணி இருக்கார் அந்தக்காலத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உண்டு
இசை கங்கை அமரன் பாடல்கள் 5 ல 3 பாட்டி செம ஹிட்டு
1 வா வா என் வீணையே ஹா விரல் மீது கோபமா?\
2 தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
3 அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
ரெண்டு பாட்டு சுமார்
4 நண்பனே எனது உயிர் நண்பனே
5 ஒரு நண்பனின்..
சபாஷ் டைரக்டர் ( கே விஜயன் )
1 இது 1980ல் ஹிந்தியில் ரிலிஸ் ஆன தோஸ்தானா என்ற படத்தின் அஃபிஷியல் ரீமேக் , இது தமிழில் ஹிட் ஆனதும் மலையாளத்தில் டப் பண்ணி காசு பார்த்துட்டாங்க . ஹிந்தி ஒரிஜினலில் கை வைக்காம அப்படியே ஃபாலோ பண்ணது குட்
2 இந்தப்படத்தில் கிளாமர் காட்ட்னது மூணு பேர் `1 சில்க் ஸ்மிதா 2 மாதவி 3 கமல் மூணு பேருக்கும் சம வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோயின் அரைகுறையா டிரஸ் பண்றதா ஹீரோ எப்போப்பாரு ஹீரோயினை மட்டம் தட்டிட்டே இருக்கார் ஆனா அவரை விட அரைகுறையா சில்க் ஸ்மிதா ஒரு கிளப்ல ஆடும்போது அவரை எதும் சொல்லலை அவர் கூட இவரும் சேர்ந்து ஆடறார் ஹீரோயினும் அது ப்ற்றிக்கேட்கலை
2 ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் எப்போ ஏன் வந்துச்சுனு காட்டவே இல்லை கோபமாதான் பேசிட்டு இருக்கார்
3 சரத்பாபு மாதவியை ஒரு காலத்துல லவ் பண்ணவர் அப்டி டீசண்ட்டா இருந்தவர் மாதவி கிட்டே கண்டிஷன் போடும்போது மேரேஜ் பண்ணிக்குவியா?னு கேட்கவே இல்லையே?? அப்டி கேட்டு அதுக்கு ஒத்துக்கலைன்னா அட்லீஸ்ட் ஒரு நாளாவது மனைவியா இருனு சொல்லலாம் , மரியாதையா இருந்திருக்கும் . எடுத்ததும் ஒரு நாள் மனைவி என கேட்பது கேவலமா இருக்கு
4 போலீஸ் ஸ்டேஷன்ல மஃப்டில் ஹீரோ இருக்கார் ஓக்கே ஆனா கோர்ட்ல கூட அப்டிதான் வர்றார் ஆனா கோர்ட்ல யூனிஃபார்ம் கம்ப்பல்சரி
5 ஒரு கேஸ்ல ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல இல்லாததால் அவர் போலீஸ்னு கட்சிக்காரர்க்கு தெரியலை என ஒரு வாதம் வருது அப்போக்கூட ஜட்ஜ் ஏன் கோர்ட்டுக்கும் யூனிஃபார்ம் போடாம வந்திருக்கீங்கனு கேட்கலை
6 ஹீரோ ஹீரோயினுக்கு எழுதுன லெட்டர் எப்படி கவரே பிரிக்காம சரத்பாபு வசந்த மாளிகைக்கு போச்சு? அந்தக்கடிதத்துல என்ன எழுதி இருந்ததோ அதை நேர்லயே சந்திச்சுப்பேசியாச்சே?? எதுக்கு லெட்டர் ?
7 போஸ்ட் ,மார்ட்டம் ரிப்போர்ட்ல விசாரனைக்கைதி வயிற்றில் விஷம் இருக்குனு வந்திருக்குமே? அதைப்பற்றி பேச்சு மூச்சே இல்லை அந்த பாயிண்ட்டைப்பிடிச்சா வக்கீலே தேவை இல்லையே?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது தமிழ் ஹிந்தி மலையாளம் மூணு மொழிகளிலும் ஹிட் ஆன படம் பார்க்கலாம் டைம் பாஸ் மூவி ரேட்டிங் 2.5 / 5
சட்டம் | |
---|---|
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | ஆனந்தவல்லி பாலாஜி |
வசனம் | ஏ. எல். நாராயணன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவி சரத்பாபு ஒய். ஜி. மகேந்திரன் ஜெய்சங்கர் |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | மே 21, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |