பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலையும் மாலையும் மைசூர் சாமூண்டீஸ்வரியை
வணங்குவதாகவும், சசிகலா உள்ளிட்ட யாருடனும் அவர் பேசுவதில்லை எனவும் அவரது
பாதுகாப்பு அதிகாரி ககன் தீப் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக
பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்தும், அடுத்தக்கட்ட
அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிக்
கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ககன் தீப்பை சந்தித்து பேசினோம். அவர் கூறியதாவது:
ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்ற
முறையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன். தினமும் 3 முறை
அவரது உடல்நிலையை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகள்
வழங்கப்படுகின்றன. அதேபோல சிறை மருத்துவர் விஜய குமாரும் அவரது குடும்ப
மருத்துவர் சாந்தராமனும் பரிந்துரைக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன.
சிறைக்கு வந்த சில நாட்கள் ஜெயலலிதா காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
ஆனால் இப்போது அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதில்லை. பெரும்பாலான நேரத்தை
செய்தித்தாள் வாசிப்பதற்காக பயன்படுத்துகிறார். அவருக்காக பிரத்யேகமாக
நியமிக்கப்பட்டுள்ள பெண் சிறைக்காவலர்களிடம்கூட எந்த உதவியும் கேட்பதில்லை.
பெரும்பாலும் தனிமையில் இருக்கிறார்.
தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் கன்னடத்தில்
பேசுகிறார். சில நேரங்களில் அவரை நலம் விசாரிக்கும் சக கைதிகளிடம்
பேசுகிறார். சசிகலா, சுதாகரன், இளவரசியுடன் பேசுவதில்லை. ஒருவேளை நான்
பார்க்காத நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருடைய சிறைக்காவலர் திவ்யாஸ்ரீ யிடம், தசரா
திருவிழாவைப் பற்றி பேசி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனக்கு மைசூர்
சாமூண்டீஸ்வரி படம் வேண்டுமென கேட்டுள்ளார். எனவே உடனடியாக அவருக்கு
சாமூண்டீஸ்வரி படம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலையும் மாலையும் அவர்
சாமூண்டீஸ்வரியை வணங்கியதாக எனக்கு தகவல் கிடைத்தது என அவர் தெரிவித்தார்.
thanx- the hindu
- Ansel Antonyஇவங்க பேசின என்ன பேசாம இருந்தால் என்ன? இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? மக்கள் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்களுக்கு முக்கியம். இந்த மக்கள் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.Points645
- Vaidhyanathan Sankarபேசி பேசி தான் கூட்டு சதி செய்தது போதாதா?Points8595
- chails ahamadஇருவரும் பேசிக் கொள்ளாததால் தமிழகத்தில் பெரிய பிரளயமே ஏற்பட்டுவிட்டது, தேவையற்ற விடயங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுதல் , தவிர்க்கப்படுவது மக்களுக்கு நன்மை பயக்கும்.Points1760
- செ."..... ஒருவேளை நான் பார்க்காத நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளலாம்". - சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ககன் தீப். - தி ஹிந்து. ------- ககன்தீப் திருக்குறள் அறியாதவர் போலும். அதனால், உள்ளார்ந்த மனித நுண்ணுணர்வுகள் மொழியோ, சொல்லோ, குரலோ இல்லாமல் பிறர் உணருமாறு வெளியிடப்படும் விதம் யாதென்று, அதை வள்ளுவம் காட்டும் வழியில் அறிய முடியாமல், ககன் தீப் அவ்வாறு சொல்லியிருக்கலாம். "குறிப்பறிதல்" என்பது காவல்துறையின் "அதிகாரம்" படைத்த அதிகாரிக்குக் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டிய இன்றியமையாத புலனாய்வு நுணுக்கம். மற்றும் காவல்துறையினர் வேறு எதையெல்லாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும் என்பதை ககன் தீப் அவர்கள் நல்லதொரு தமிழாசிரியரிடம் சென்று சிலப்பதிகாரத்தின் கொலைக்களக் காதையில் வரும் 165 ஆம் வரியிலிருந்து 210 ஆம் வரி வரை கற்றுத் தெளியவும். அந்த 55 வரிகளும் IPC குற்றம் ஒன்றை அணு அணுவாக விளக்குவது. காப்பது மட்டும் காவலர் கடமையல்ல. கள்வர்களின் இயல்புகளையும் கற்றறிதல் இன்னொரு கடமை. "தேவர் அனையர் கயவர், அவருந்தான் மேவன செய்தொழுக லான்" - என்பதுவும் 1073 ஆம் திருக்குறளே. அது ஓர் எச்சரிக்கைக் குறள் - குரல்!Points7910
- vettupuliveeranபேட்டி அளிப்பதை தவிர்த்து இருக்கலாம் .Points3480
- ஸ்ரீபாலாஜிஓகே கேமெரா ஸ்டார்ட் .....! ஜெயா பாதுகாப்பு அதிகாரியிடம் : ஷாட் ஓகே வா சார் !? நெக்ஸ்ட் ஸீன்,.... தொடருகின்றது !Points3185
- Narayananஜெயலலிதா காலம் கடந்து இந்த கூடா நட்பை உணர்கிறார். இந்த கூட்டம் முழுவதும் பசு தோல் போர்த்திய நரிகள்.பலமுறை இதை பலர் சுட்டி காட்டியுள்ளார்கள்.ஆனால் விதியின் வலிமை; அந்த சொற்கள் எடுபடவில்லை.இவர்களை ஜெயலலிதாமட்டுமல்ல, தமிழ் மக்களே புறக்கணிக்க வேண்டும்.Points1205
- Venkatraman Gurumurthy at Indian Air ForceIs this man authorized to give interview? Is he a good man or a bad man?Points1925vettupuliveeran Up Voted
- நகேன்.nagenசெஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா!Points1295
- stanislas Perianayagam at Governmentதமிழக மக்கள் பலர் ஜெயலலிதாவின் உறவினர்களாக -ரத்தத்தின் ரத்தங்களாக இருக்கின்றனர்.சசிகலா போன்ற துரியோதன நட்பு தர்மத்தை நேசிக்கும் கர்ணனனுக்கு வேண்டாமே?கேட்ட செவிகளில் இன்னிசை ரீங்காரமிட்டது.இனி நல்ல காலம் தான் !?Points3730raaja Down Voted