Showing posts with label சக்தி விக்டன். Show all posts
Showing posts with label சக்தி விக்டன். Show all posts

Thursday, August 09, 2012

கோகுலாஷ்டமி


http://3.bp.blogspot.com/-w2fdDAHSNWY/Tm-bzn8vzTI/AAAAAAAABw0/JRUT4wiE36k/s1600/Lord-Krishna-Wallpapers-2.jpgவன், நான் தவமா தவமிருந்து பெற்ற பிள்ளை’ என்கிற வசனத்தை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லாதவர்கள், நம் தேசத்தில் மிகக் குறைவுதான். குழந்தை என்பது இங்கே மிகப் பெரிய உன்னதமான வரமாகப் பார்க்கப்படுகிறது. வரம் என்பது தவத்தால் அடையக்கூடியது.



தேடல் இருப்பவர்களே தவம் இருக்க முடியும். அது கடவுள் தேடலாக இருந்துவிட்டால், அந்தத் தவத்தின் பலனைச் சொல்லவே வேண்டாம். அப்படியரு தவத்தின் பலனாக, வரமாகக் கிடைப்பது காணக் கிடைக்காத ரத்தினமாக, பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!



தசரத மகாராஜா, தனக்கும் தன் தேசத்துக்கும் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டார். புத்திர பாக்கியம் இல்லையே என்கிற சோகத்தைத் தவிர, வேறு எந்தச் சோகமும் அவருக்கு இல்லை. புத்திர பாக்கியம் என்கிற ஒரு சந்தோஷம் இருந்துவிட்டால், வேறு எந்தச் சந்தோஷமும் இந்த உலகில் முக்கியமில்லை.



அப்பேர்ப்பட்ட தசரத மகாராஜா, இறைவனை வேண்டித் தவமிருந்தார். கோயில் கோயிலாக அலைந்து தரிசித்து, மனமுருகப் பிரார்த்தித்தார். குருமார்களின் ஆசியுடனும் அறிவுரையுடனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த தவத்தின் பலனாக, யாகத்தின் பலமாக, கேட்ட வரம் அவருக்குக் கிடைத்தது. சந்தான பாக்கியம் கேட்டவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.


இங்கே ராமாயணத்தில் இப்படி என்றால், அங்கே மகாபாரதத்தில் என்ன நிகழ்ந்தது?


'அழகிய மகனைப் பெறுகிற பாக்கியத்தைக் கொடு’ என்று யசோதை வேண்டினாள். நந்தகோபனின் சிந்தனையில் பிள்ளை வரம் தவிர, வேறு எதுவும் இல்லை. இதேபோல், அனவரதமும் வசுதேவன், குழந்தைச் செல்வம் வேண்டும் வேண்டும் என்றே பிரார்த்தித்து வந்தார். மனமுருகி, ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன்... குழந்தை கேட்டு தேவகியும் கண்ணீர்விட்டுப் பிரார்த்தனை செய்தாள்.


நந்தகோபன்- யசோதை, வசுதேவன்- தேவகி ஆகிய நான்கு பேரும் வேறெந்தச் சிந்தனையுமின்றி, 'எனக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்யும் விதமாக குழந்தை வேண்டும்’ என்பதையே வரமாகக் கேட்டனர். அந்த நான்கு பேரின் தவத்தை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார்.



http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lor37s.jpg


அதாவது, ஒரேயருவர் மட்டுமே வேண்டிக்கொள்ள, ஸ்ரீராமபிரான் உட்பட நான்கு பேர் பிறந்தார்கள். இங்கே நான்கு பேர் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்க, ஒரேயரு கிருஷ்ண பகவான் அவதரித்தார். என்ன விளையாட்டு இது?


'சரி, அப்படின்னா... ஒருத்தர் வேண்டிக்கிட்டதுக்காக, நாலு பேர் பிறந்தது உசத்தியா? நாலு பேர் பிரார்த்தனை பண்ணினதுக்காக ஒருத்தர் பிறந்தாரே, அது உசத்தியா?’ என்று கேள்வி எழலாம்.


இதில் உசத்தி என்ன, தாழ்த்தி என்ன? இரண்டு பேருமே உசத்திதான்! அதுவொரு விதம், இதுவொரு விதம்! ஒருவர் விரதமிருந்து நான்கு பேர் பிறந்தனர். அங்கே... மூத்தவருக்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீராம ரத்தினம் என்று பெயர் அமைந்தது. அதேபோல் நான்கு பேர் விரதம் மேற்கொண்டு, பிரார்த்தனை அனுஷ்டித்தனர். அந்தக் குழந்தைக்கு, ஸ்ரீகோபால ரத்தினம் எனும் பெயர் அமைந்தது. அவர்... ராமரத்தினம்; இவர்... கோபால ரத்தினம், இரண்டு பேருமே உலகை உய்விக்க வந்தவர்கள்தான்.


ஆக, தவமிருந்து, விரதம் மேற்கொண்டு பிறந்த ஸ்ரீகண்ணபிரானுக்கு 'மேதேஜ:’ என்று திருநாமம் அமைந்தது. மேதேஜ என்றால் விரதத்தில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம். நான்கு பேர் மட்டுமின்றி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையையும் பிறப்பையும் அவதரிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துப் பிரார்த்தித்தனர்.


அதுமட்டுமா? ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு காரணத்தினாலும் அவதரித்தாராம்!
அதாவது, நந்தகோபனும் யசோதையும், வசுதேவரும் தேவகியும், தேவர்பெருமக்களும் வேண்டிக் கொண்டதற்காக மட்டுமின்றி, இந்த உலக மக்களுக்காக, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, அவதரிக்க வேண்டும் என தாமே விரும்பி, விரதம் போல் உறுதிகொண்டு, பூமியில் அவதரித்தாராம் பகவான் ஸ்ரீகண்ணன்.


இப்படி, தாமே விரும்பி விரத உறுதி கொண்டு, அவதரித்ததால், சமேதஹ என்கிற திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு. கிருஷ்ணாவதாரம் என்பது மிக உன்னதமானது. ஆகவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களில் எல்லாம் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திக்கொள்ளுங்கள்.



ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்து பெரியாழ்வார் பாடும்போது, ரோகிணியில் அவதரித்தவன் என்று நேரிடையாகச் சொல்லவில்லை. அஸ்தத்தில் இருந்து 10-ஆம் நாள் அவதரிப்பவன் என்று குறிப்பிடுகிறார். அதற்கு நேரடியாகவே ரோகிணி நட்சத்திரம் என்று சொல்லியிருக்கலாமே!


ரோகிணி நட்சத்திரம் என்று பளிச்சென்று சொன்னால், அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை, கம்சன் நிமிட நேரத்தில் கண்டுபிடித்துவிடுவான். பிறகு, ஆவேசத்துடன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பான். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் மரண பயமும் கொண்டு திரிகிற கம்சனுக்கு அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் அவதரித்த குழந்தை என்றால், சட்டென்று எந்த நட்சத்திரம் என்று தெரியாதாம்! 


http://wallpaper.365greetings.com/d/2116-2/radhakrishna-1k.jpg


அப்படித் தெரிந்து கொள்வதற்கு சில விநாடிகள் பிடிக்குமாம். தவிர, அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் என்றால் முன்னே வரவேண்டுமா பின்னே செல்ல வேண்டுமா என்று குழம்பித் தவிப்பானாம் கம்சன். இந்தத் தவிப்பு அடங்கி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று தெரிவதற்கு முன்பாக, தன்னை எப்படித் தற்காத்துக் கொள்வது என வியூகம் அமைத்துவிடுவானாம், குறும்புக் கண்ணன்!


பெரியாழ்வாரின் ஸ்ரீகிருஷ்ண பக்தி எத்தகையது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்க நி¬னைக்க... கண்ண பரமாத்மா மீதும் பெரியாழ்வார் மீதும் அளப்பரிய பக்தி வந்து நம்முள் வியாபிக்கிறது!


பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு யசோதை போல், நந்தகோபனைப் போல, வசுதேவரைப் போல, தேவகியைப் போல, ஏன்... நம் பெரியாழ்வார் போல், எத்தனையோ தன்யன்கள் இருக்கிறார்கள். கிருஷ்ண பிறப்பைச் சொல்லிச் சொல்லிப் பூரித்து, அவன் திருவடியை அடைந்தார்கள்.


ஆனால், இந்த உலக மக்களுக்கெல்லாம் அந்த கண்ண பரமாத்மா தன்யனாக இருக்கிறான். நம்மை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். நம் ஒவ்வொருவரின் நலனிலும் அதீத அக்கறை கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு தன்யஹ என்கிற அழகிய திருநாமமும் அமைந்தது.


நாம் அவனுக்குத் தன்யனாவோம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை, அவனுடைய மகா பிறப்பை நினைத்துப் பூரிப்போம். அவன், நமக்குத் தன்யனாவான். நம் வீட்டுக்கு வந்து, இல்லத்தையே சுபிட்சமாக்குவான்



http://www1.sulekha.com/mstore/sagribow/albums/default/Latest%20Radha%20Krishna%20wallpaper.jpg


கோகுலாஷ்டமியும் ஆடி கிருத்திகையும் அடுத்தடுத்து இந்த மாதத்தில் வருகின்றன. கண்ணபிரானுக்கும் கந்தவேளுக்கும் உகந்த திரு நாட்கள் அவை. கண்ணன், கந்தன் இருவருமே தெய்விகக் குழந்தை கள். 'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது கொண்டாட்டத்துக்குக் கேட்கவேண்டுமா? இந்த இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.



ஆடும் மயிலில் முருகன் அசைந்து வருகிறான் என்றால், கண்ணன் மயில் பீலியைத் தலையில் அணிந்த வண்ணம்  ஆடி வருகிறான்.




பகவத்கீதையை அருளிய பரந்தாமனை 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்கின்றன புராணங் கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.



குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்க காலத் தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் 'குழலன், கோட்டன்’ என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.
வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் 'வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’ எனப் பாடி மகிழ்கிறாள்.


கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள்! அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்!


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_1024x768/lord-krishna-768.jpg


தர்மத்தை நிலைநாட்ட, தீயவர்களை அழிக்க கண்ண பெருமான் போர்க்களம் கண்டார். கந்தபெருமானும் சூராதி அவுணர்களை அழித்து தேவர் உலகை வாழச் செய்தார். கீதையில் கிருஷ்ண பகவானே 'சேனைத் தலைவர்களிலே நான் குகப் பெருமானாக விளங்குகிறேன்’ என்று கூறி மகிழ்கிறார்.


கண்ணன் காதல் மன்னன். கந்தனும் தினைப்புனம் சென்று, குறவர் குடிசை நுழைந்து வள்ளி நாயகியாரிடம் புரிந்த லீலைகளைக் கந்தபுராணம் விவரிக்கிறது.
 
 
வள்ளி- தெய்வானை தேவியர் இருமருங்கும் விளங்க முருகன் காட்சி தருவது போலவே பாமா, ருக்மிணி தேவியருடன் பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.
'மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேண்டும்’ என வேலனிடம் வேண்டுகோள் வைக்கும் அருணகிரிநாதர், 'எந்தை வருக! ரகுநாயக வருக! மைந்த வருக!’ என கண்ணுக்கினிய கறுப்பு நிறக் குழந்தை கண்ணனையும் காதலித்து அழைக்கிறார்.


'பாம்புத் தலைமேலே நடம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்!’ எனக் கண்ணனைப் போற்றும் பாரதியார், 'வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்’ என்று முருகனையும் பாடுகிறார். ஆதிசங்கரரோ... சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் இரண்டும் பாடி கந்தன், கண்ணன் இருவரையும் வணங்குகிறார்.


தெய்வக் குழந்தைகள் இருவரிடமும் தீராத பக்தியும், மாறாத அன்பும், ஆறாத காதலும் கொள்வோம்; அன்றாடம் வாழ்வினில் வெல்வோம்!




'உங்க அமெரிக்கப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் எது?’ என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.


'அமெரிக்காவுக்கு இப்போது நான் நாலாவது முறையாகச் சென்றாலும், இந்த முறை என் துணைவியாரும் என்னோடு வந்ததுதான் மறக்க முடியாத அனுபவம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அங்கே அதிகம் போன இடம் கோயில்கள்தான்!' என்று நான் சொன்னபோது, 'என்னது... அமெரிக்காவில் இந்துக் கோயில்களா?' என்று நண்பரும், உடன் இருந்த எல்லோரும் வியந்தார்கள்.


'ஆமாம்! அமெரிக்காவில் இருக்கின்ற 53 மாநிலங்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் இருப்பதாக ஒரு தமிழ் நண்பர் சொன்னார். நியூஜெர்ஸி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளனவாம். அங்கே தமிழ்ச் சங்கக் கூட்டங்களைக் கோயில்களில் வைப்பதன் மூலம் பக்தியும் தமிழும் கைகோப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? 
 
 அமெரிக்காவில் நான் பார்த்த அளவில் புல்வெளிகள், சோலைகள் ஆகியவற்றில் இருந்த அணில்கள் நம்மூர் முயல்கள்போல இருந்தன. அவற்றின் முதுகில் கோடுகள் இல்லை!' என்றேன். 


'அப்ப அது அணிலே இல்லை' என்றார் ஒருவர். 'கோடுகள் இல்லாத அணிலா?' என்று இன்னொருவர் கவலைப்பட்டார்.  'அட, விடுய்யா! நம்ம ஊர்ல இதுக்கு ஒரு கதையே உண்டு. ராமர் இலங்கைக்குப் போக பாலம் கட்டுறப்போ அணில் உதவினதால, நன்றியோட அதன் முதுகுல தடவுனாராம்; அதனால கோடு விழுந்துச்சாம். ராமர்தான் அமெரிக்கா போயிருக்கமாட்டார்ல... அதனாலதான் அங்கே கோடு இல்லாத அணில்' என்று ஒருவர் விளக்கம் தந்தார். எல்லோரும் கைதட்டினார்கள்.


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_800x600/Lord-Krishna-wallpaper-855.jpg



'இவர் சொல்லுறதுகூட நல்லாதான் இருக்கு'' என்று பாராட்டிய நான், ''அணில் முதுகுல இருக்குற கோட்டுக்கு ராமர்தான் காரணம் என்பதை வெச்சு ஒரு புதுக்கவிதை வந்திருக்கு, தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியுமே..! 'இந்த அரசாங்க ஆட்கள் எதைத் தொட்டாலும் வரிதான்!’ என்று சட்டென எங்கள் நண்பர் கவிதைப் பித்தன் தாடியை வருடியபடி சொல்ல, எல்லோரும் அவருக்கு சபாஷ் சொன்னோம்.



பேச்சு வேறெங்கெங்கோ திசைதிரும்பிற்று. 'அமெரிக்காவில் இருக்கிற மாநிலங்கள் எத்தனை என்பதை ஈஸியா நினைவில் வெச்சுக்க ஒரு 'ஐடியா’ இருக்கு, தெரியுமா?' என்று புதிர் போட்டார் வரலாற்றுத்துறை பேராசிரியரான நண்பர்.



'மேப்பைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே?' என்று ஒருவர் அலுப்புடன் கேட்க, 'அது தேவையே இல்லை. அமெரிக்கக் கொடியில் நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைதான் அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக்கை' என்று அவர் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.


அந்த நேரத்தில் ஜில்ஜில் ஜிகர்தண்டா குளுமையான மணத்தோடு ஐஸ்கிரீம் கப்புகளில் வந்து சேர, அத்தனை பேரும் அமெரிக்காவை மறந்து ஜிகர்தண்டாவில் ஐக்கியமானார்கள்.


 நன்றி - சக்தி விகடன்