Showing posts with label சகாப்தம் - சினிமா விமர்சனம் ( மா தோ ம ) சகாப்தம். Show all posts
Showing posts with label சகாப்தம் - சினிமா விமர்சனம் ( மா தோ ம ) சகாப்தம். Show all posts

Thursday, April 02, 2015

சகாப்தம் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் சகாப்தம்.
தமிழ் சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகர் உருவாகி இருக்கிறார். படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அலையடித்தன. சகாப்தம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
கிராமத்தில் இருக்கும் சண்முக பாண்டியன் தன்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத நண்டு ஜெகனுடன் சுற்றித் திரிகிறார். பவர் ஸ்டாரை நம்பி வேலை தேடி மலேசியா செல்கிறார்கள். அங்கு வேலைக்கு வந்து அடிமையாக அவதிப்படும் தமிழர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார் சண்முக பாண்டியன். இறுதியில் பகை முடித்தாரா? பழி தீர்த்தாரா? தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது க்ளைமாக்ஸ்.


கோயிலில் காணாமல் போன முருகன் சிலையைக் கண்டுபிடித்து தரும் அறிமுகக் காட்சியிலேயே சண்முக பாண்டியனுக்கு விசில் பறக்கிறது.
ஊருக்குப் பெருமை உன்னாலே உற்சாகம் மலரும் தன்னாலே என்று ஊரே கொண்டாட அசத்தலான பாட்டுக்கு கொஞ்சம் முன்னே பின்னே டான்ஸ் ஆடி டயர்ட் ஆக்கி டரியல் பண்ணுகிறார் சண்முக பாண்டியன். ஆனாலும், சண்முக பாண்டியன் என்ட்ரிக்கு கிளாப்ஸ் காதைக் கிழித்தது.
அத்தைப் பெண் நேகா ஹிங் பிறந்தநாள் அன்று காதல் கண்களோடு பார்க்காமல் வெறுமனே அட்டென்ஷனில் நின்று கொண்டு அவர் கொடுத்த ஸ்வீட்டை அவருக்கே ஊட்டிவிட்டு தேமே என்று நிற்கிறார் ஹீரோ.
பவர் ஸ்டாருடன் அடிக்கும் ரகளை, டீக்கடை காமெடி கலாட்டா என்ற பெயரில் செய்யும் மரணக் கடி, நண்டு ஜெகன் காமெடி என்ற பெயரில் பெண்களை கேவலமாகப் பேசுவது என முகம் சுளிக்கும் காட்சிகளே அதிகம்.





மன்னிப்பு என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை என்று பெட்ரோல் பங்க் சண்டைக் காட்சியில் பேசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட அவரது ஆட்களை வெளுத்து வாங்கும் சண்முக பாண்டியனுக்கு அடித்த விசில் சத்தம் காதை ஜிவ்விடவைத்தது.
எதற்காக சண்டை போட்டோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் சொல்லாமல் மவுனம் காக்கும்போது, தேவயானி உண்மை சொல்லும் இடத்தில் 'நீ உன் அப்பா மாதிரி' என உதவி செய்யும் குணத்தைப் பாராட்டும்போது ரசிகர்கள் வலிக்க வலிக்க கை தட்டுகிறார்கள்.
ஆனால், அதே போலீஸ் ஸ்டேஷனில் தான் சண்முக பாண்டியன் அப்பா இருக்கிறார். ரெண்டடி தள்ளி உங்க பையன் உங்களை மாதிரின்னு தேவயானி டயலாக் பேசி இருக்கலாம். இதுல கூட குறியீடு வெச்சிருக்காங்க பாஸ் என முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் முணுமுணுத்தார்.
மலேசியாவில் வேலை செய்யப் போகிறோம் என்கிற கெத்தொடு பவர் ஸ்டாரிடம் வாங்கிய கைலியைக் கட்டிக்கொண்டு சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் அலப்பறை என்கிற பெயரில் அநியாயம் செய்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு வடிவேலு பாணியில் காமெடி பண்ண டிரை பண்ணியிருக்கீங்க சாரே. இதை கேப்டன் எப்படி கவனிக்காம விட்டார்?
சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் ஒரு வழியாக மலேசியா புறப்படுகிறார்கள். மலேசியாவில் காலடி எடுத்துவைக்கும்போது விமான நிலையத்திலேயே போலீஸ் கைது செய்கிறது. இடைவேளை.
இடைவேளையில் ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டிருந்தவர்களிடம் காதைக் கொடுத்தோம். படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று எல்லாருமே அவசர கதியில் நடித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியன் தலை வகிடு கலையாமல் அவ்வளவு கவனமாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட்டும், தேவயானியும் சீரியலை மிஞ்சிய ஓவர் ஆக்டிங்கில் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள். தலைவாசல் விஜய் மட்டும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கிறார் என்கிற பேச்சுகள் காதில் விழுந்தன.
இரண்டாவது பாதி எப்படி இருக்குமோ என்ற திகிலுடன் உட்கார்ந்தோம். பக்கத்து இருக்கையில் படம் பார்த்தவர் தூங்கியேவிட்டார்.
இன்னொருவர் ஒலிச்சித்திரம் மட்டும் கேட்கிறேன் என்று கண்களை மூடிக்கொண்டார்.
சிங்கம் புலி கூட வேண்டா வெறுப்பில் நடித்திருப்பார் போல. படம் முழுக்க காமெடி என்று கடுப்பைக் கிளப்புகிறார்கள் மை டியர் ஆடியன்ஸ். தாங்க முடியவில்லை. வாய்விட்டு கதறும் அளவுக்கா கலங்கடிப்பது? நீங்களே சொல்லுங்கள்.
அதுவும் மலேசியாவில் நடக்கும் சண்டைக் காட்சியில் குதிப்பதும், தாவுவதுமாக சின்ன குட்டிக்கரணம் கூட அடிக்கிறார் நம்ம ஜூனியர் கேப்டன். ஆனால், ரசிக்கதான் முடியவில்லை. நாமெல்லாம் பாவம்தானே.
நடை, உடை, பாவனை என எதிலும் தன்னைப் பொருத்திக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறார் சண்முக பாண்டியன். சஜஷன் ஷாட்டில் கூட அவர் பார்வை வேறு எங்கோ உள்ளது.
நேகா பேசுவதற்கும், டப்பிங்கும் ஒத்துப்போகவே இல்லை.
நேகா ஹிங்கும், சுப்ரா ஐயப்பாவும்போனில் பேசிக்கொண்டதும் ஒரு குத்துப்பாட்டுக்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. அந்த அடியே ரதியே குத்துப்பாடலை சிம்பு பாடி இருக்கிறார். சிம்புவின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்? நீங்களே யோசிச்சுப் பாருங்க.
டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலைக்கு சேருவதும், உடனுக்குடன் பல சாகசங்கள் செய்து போலீஸ் நண்பனாக சண்முக பாண்டியன் மாறுவதும் பக்கா டிராமா.
வில்லனிடம் சண்முக பாண்டியன் சிக்கிய நிலையில், கேப்டன் தரிசனம் தருகிறார். அவர் பங்குக்கு கொஞ்சம் அட்வைஸ் செய்து மகனுடன் கைகோர்த்து எதிரிகளைப் பந்தாடுகிறார்.
வில்லன்களிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறார் சண்முக பாண்டியன்.
இதுக்கு மேல முடியல... மன்னிச்சுக்குங்க ஃப்ரெண்ட்ஸ்...



தியேட்டரில் ஒரு குரூப் ஆரம்பத்துல இருந்தே காதைப் பிளக்குற மாதிரி விசில் அடிச்சது. கைதட்டி ஆரவராம் செய்தாங்களே. படம் முடிஞ்சதும் ஏன்? என்னாச்சுன்னு ஒருவரிடம் கேட்டேன்.
படம் சூப்பர் என்றார். நிஜமாவா? என கேட்டதும், 'படம் ஹிட்' என்று சொல்லிவிட்டு சரசரவென கடந்துபோய்விட்டார் ஒருவர்.
வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். என்ன சொல்கிறார்கள் என்று உற்றுக் கவனித்தோம்.
சண்முக பாண்டியன் சூப்பர். கேப்டனைப் பார்த்ததே போதும் என்று சிரித்த முகத்தோடு சொல்லிக் கடக்கிறார்கள்.
நமக்குதான் பிரச்சினையோ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். அமைதியா இருங்க பாஸ். எல்லாம் கும்பலா வந்திருக்காங்க. படம் நல்லாயில்லைன்னு சொன்னா அவ்ளோதான் என்றார் இன்னொருவர்.
இவங்கள்லாம் குரூப்பா அலையுறாங்களாமாம்.
மக்களே உஷார்!


நன்றி  - த  இந்து  


 மா தோ  ம  =  மாற்றான்  தோட்டத்து  மல்லிகை