பாலாவும், கௌதம் மேனனும் இல்லையென்றால் இன்று சூர்யா வீட்டில் சும்மா இருந்திருப்பார் ஜோதிகாவும் சூர்யாவுக்கு கிடைத்திருக்க மாட்டார். ‘நந்தா’ படத்தின் மூலம் சூர்யாவை கௌரவத்துக்குரிய நடிகராக மாற்றிக் காட்டினார் பாலா. அதன்பிறகு பாலாவின் நண்பரான அமீர், மவுனம் பேசியதே மூலம் மீண்டும் சூர்யாவுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், நந்தா, மௌனம் பேசியதே ஆகிய இரண்டு படங்களுமே மண்ணைக் கவ்விய படங்கள். பணம் போட்டத் தயாரிப்பாளர்கல் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு போனார்கள். இந்த நேரத்தில்தான் ‘காக்க காக்க’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக சூர்யாவை மாற்றிக் காட்டினார் கௌதம் மேனன்.
சூர்யா, ஜோதிகாவை காதலிக்கிறார் என்பதை அறிந்து, அவரையே காக்க காக்க படத்தில் கதாநாயகி ஆக்கி, இருவரும் மேலும் நெருங்கிப் பழக காரணமாக இருந்தது மட்டுமல்ல… தனது அப்பா, பத்திரிகைகளில் கிசுகிசுக்களை படித்து தெரிந்து கொண்டபோதெல்லாம் , தைரியாமாக அவரிடம் தனது காதலைச் சொல்லாத சூர்யாவுக்கு உதவும் விதமாக, “ சூர்யா , ஜோதிகாவை காதலிக்கிறார்!” என்று கௌதம் மேனன் சிவகுமாரிடம் சொல்ல, அவர் என் வீட்டுக்குள் எந்த நடிகையையும் அனுமதிக்க மாட்டேன் என்று குதிக்க, அந்த நேரத்தில் சூர்யா, வீட்டுக்குப் போகாமல் 2 மாத காலம், கௌதம் மேனனில் பெசண்ட் நகர் கடற்கரை குடியிருப்பில் தங்கியிருந்தாரா ம்.
சூர்யா, ஜோதிகாவை காதலிக்கிறார் என்பதை அறிந்து, அவரையே காக்க காக்க படத்தில் கதாநாயகி ஆக்கி, இருவரும் மேலும் நெருங்கிப் பழக காரணமாக இருந்தது மட்டுமல்ல… தனது அப்பா, பத்திரிகைகளில் கிசுகிசுக்களை படித்து தெரிந்து கொண்டபோதெல்லாம்
பிறகு கௌதம் மேனன் தனது அம்மாவுடன் சென்றே சிவகுமாரையும், அவரது மனைவியையும் சமாதானம் செய்தாராம்.. சூர்யாவின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல… அடுத்து கஜினி என்ற மிகப்பெரிய படம் சூர்யாவுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் கௌதம் மேனன்தான். தீனாவுக்கு பிறகு தமிழில் ரமணாவையும் தெலுங்கில் ஸ்டாலின் என்ற படத்தையும் மட்டுமே இயக்கியிருந்த முருகதாஸ், அடுத்து தனது ‘கஜினி’ படக்கதையை விக்ரமிடம் கூறினார். ஆனால் விக்ரமுக்கு ஏனோ கதை பிடிக்கவில்லை.
அந்த நேரத்தில் சூர்யா -விக்ரம் இடையே பூசல் இருந்து வந்தது. இதை திரையுலகில் இருந்தவர்களும் கொம்பு சீவி விட்டு வந்தனர். இந்த நேரத்தில் கஜினி படத்தை விக்ரமின் எதிரியாக பார்க்கப்பட்ட, சூர்யாவை வைத்து இயக்கி வெற்றி கொடுத்து , விக்ரம் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று நினைத்தார் முருகதாஸ். இந்தநேரத்தில், கௌதமின் டிஸ்கசன் குழுவில் இருந்த நாகராஜ் என்ற உதவியாளர் மூலம், கௌதம் மேனனை சந்தித்து , கஜினியின் கதையைச் சொன்னார் முருகதாஸ். கௌதம் மேனனுக்கு கதை பிடித்து விட்டதால், உடனடியாக சூர்யாவை, சூட்டிங் ஸ்பாட்டிலேயே கதை கேட்க வைத்தது மட்டுமல்லாமல் ,இந்தப் படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி ‘கஜியில்’ சூர்யா நடிக்க காரணமாக இருந்ததும் கௌதம் மேனன்தானாம். அதன்பிறகு ’வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவை மறுபடியும் கௌரவப்படுத்தினா ர் கௌதம் மேனன்.
ஆனால் வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் தயாரிப்பில் குதித்தபோதுதான் தலைவலி ஆரம்பித்தது. , வெப்பம், அழகர்சாமியின் குதிரை, நடுநிசி நாய்கள் என பல தோல்விப்படங்களை தயாரித்து கடனில் சிக்கிக்கொண்டார ். கௌதம் மேனன் தொடங்கிய போட்டான் கதாஸ் நிறுவத்தின் பங்குகளை வால் ஸ்ரிட் பங்குச்சந்தையில ் பட்டியல் இட்டபிறகு கௌதமுக்கு மேலும் நெருக்கடிகள் ஆரம்பித்தன. இதற்கிடையில் சிம்பு – த்ரிஷா நடித்த, ’வின்னத்தாண்டி வருவாயா’ படம் கௌதம் மேனனை கொஞ்சம் காப்பாற்றியது. ஆனால் பொன்வசந்தம் கௌதம் மேனனை 25 கோடி ரூபாய்க்கு கடனாளி ஆக்கியது. இந்த நேரத்தில் கடனில் இருந்து மீண்டு வர, பாக்ஸ் ஆபீஸில் 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகும் சூர்யா கால்ஷீட் கொடுத்தால் மீண்டு வந்துவிடலாம் என்று எண்ணி, சூர்யாவிடம் போய் நின்றார் கௌதம்.
துப்பறியும் ஆனந்த் கதையைக் கேட்ட சூர்யா, இதை சிங்கம் படம்போல ஆக்ஷன் கதையாக மாற்றுங்கள். “ இத்தனை ஷட்டிலாக நான் இனி நடிக்க முடியாது!” என்றாராம். ஆனால் கௌதம் “ என்ன நம்புங்கள்.. காக்க காக்க, கஜினி போல உங்களுக்கு இந்தப் படம் பெயர் வாங்கித் தரும்” என்று சொல்லியிருக்கிற ார். ஆனால் சூர்யாவோ “ கதையை மாற்ற 6 மாதம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் நான் லிங்குசாமி படத்தில் நடித்துவிட்டு வந்து விடுகிறேன்!” என்றார். இதற்கிடையில் துருவநட்சத்திரம ் பூஜை போடப்பட்டதும், கௌதம் மேனனுக்கு 20 கோடி ரூபாய் விநியோகஸ்தர்கள் மற்றும், தியேட்டர் உரிமையாளர்களிடம ் இருந்து அட்வான்ஸ் கிடைத்தது. இதில் 5 கோடியை மட்டும் வைவசம் வைத்துக் கொண்டு, 15 கோடியை கடனாக அடைத்தார் கௌதம் மேனன். இதை கேள்விப்பட்ட சூர்யா, கதையை மாற்றுவதை விட்டுவிட்டு கடைனை அடைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டீர்க ளே..? இந்தப் புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? உடனடியாக வாங்கிய அட்வான்ஸ் அத்தனையையும் செட்டில் செய்யுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாராம். இதில் நொந்துபோன கௌதம், சூர்யாவா இப்படி மாறிப்போனார் என நொந்துபோய், தனது பெசண்ட் நகர் கடற்கரை வீட்டை விற்றுவிட்டு, துருவநட்சத்திரம ் படத்துக்காக வாங்கிய, அத்தனை அட்வான்ஸ்களையும ் செட்டில் செய்தவர், மனம் வெறுத்துப் போய் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டு, மும்மைக்கு சென்று விட்டார் என்கிறார்கள்.
காரணம் பிரபல பத்திரிகையாளரும ், சினிமா விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான சுதிஷ் காமத் தயாரிக்க இருக்கும், ‘எக்ஸ்’ என்ற ஆங்கிலப்படத்தின ் ஒருங்கிணைப்பாளர ாகவும், இணைத்தயாரிப்பாள ர்களில் இருவராகவும் இருக்கும்படி கௌதம் மேனனைக் கேட்டுக்கொண்டார ாம் காமத். மேலும் எக்ஸ் படத்தின் திரைக்கதையை உருவாக்குவதில் பங்கு வகிக்கும் அதேநேரம், படத்தின் ஒருபகுதியை இயக்கும் பொறுப்பையும் கௌதம் மேனனிடம் ஒப்படைத்தாராம். இந்தப் படம் 12 இயக்குனர்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையில் கௌதம் மேனன் அட்வான்ஸ் செட்டில் செய்த விவகாரம், சூர்யாவின் ஈகோவை சுரண்டிப் பார்க்க கடுப்பாகிவிட்டா ராம். மேலும் இது பற்றி கேள்விப்பட்ட சியான் விக்ரம், மும்மையில் எதிர்பாராமல் கௌதம் மேனனனை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கவும் ஒப்பு கொள்ள, உற்சாக மடைந்த கௌதம் மேனன் இதை, சென்னையில் இருந்த தனக்கு பைனாஸ் உதவி செய்யும் நண்பர்களிடம் சொல்லியிருக்கிற ார். இது மெல்ல காட்டுத்தீயாக பரவி, சூர்யா காதுக்கும் போக, கடுப்பாகியிருக் கிறார் இருக்கிறார் நம்ம கஜினி.
நமது பரம எதிரியான விக்ரமை இயக்க ‘ இந்த ஆள் எப்படி ஒத்துக் கொள்ளலாம்’ என்பதுதான் தற்போது நீண்ட அறிக்கை மூலம், கௌதம் மேனன் மீது சேறு பூசியிருக்கும் சூர்யாவின் சுய முகம் என்கிறார் திரையுலகில் வலுவான தொடர்புகளை திரையுலகில் பேணிவரும் நம்ம பரட்டையார்! தற்போது முதுகில் குத்து வாங்கிய கௌதம் மேனன், சூர்யாவின் இந்த எட்டப்பன் மனப்பான்மையை எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை. ஆனால் இண்ரு எப்படியும் கௌதம் இதற்கு எதிர்வினையாற்று வார்!.
முக்கிய குறிப்பு:
இளையதளபதி விஜய், தல அஜித், உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பாக்ஸ் ஆபீஸின் சக்கரவர்த்திகளா க இருக்கும் இந்த நால்வருக்கும் இதைவிட பெரிய படங்கள் டிராப் ஆன போதெல்லாம், இவர்கள் ; இந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்த இயக்குனருக்கு வேலை தெரியல, கதை சரியில்ல என்று சொன்னதே கிடையாது. இப்படி அறிக்கை விட்டு அசிங்கப்படுத்தி யது கிடையாது. சூர்யாவின் இந்த அறிக்கையின் பின்னணியில் அவரது அகந்தையும் பொறாமையும் மட்டுமே பச்சையாகவெளிபடு வதைப் பார்க்க முடியும்.
THANKS
thanks - the hindu
கெளதம் மேனன் படத்திலிருந்து விலகுகிறேன்: சூர்யா
கெளதம் மேனன் இயக்கும் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.
சூர்யா
- கெளதம் மேனன் இருவருமே இணைந்து படம் செய்தால் அப்படம் மக்களிடையே
பெருத்த எதிர்பார்ப்பு கிடைக்கும். இருவரும் இணைந்து 'காக்க காக்க',
'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
மீண்டும்
’துருவ நட்சத்திரம்' என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக
அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம்
மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின்
போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
அதற்குப்
பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து
நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்தது. இந்நிலையில்
தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக
அறிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம்
மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக
முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது
நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய
திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை,
மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை
முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும்
அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல்
கடமையாக கருதுகிறேன்.
இயக்குநர்
கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச்
சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து
பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம்.
ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள்
இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.
சிங்கம்
2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து
காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில்
அதற்கும் ஒத்துழைத்தேன். 'ஒரு டெஸ்ட் ஷுட்' செய்து 'கெட்டப்' மாற்றங்களை
முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது
இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக
ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து,
நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை
காத்திருந்தேன். அது நடக்கவில்லை.
முன்பே
கெளதம் அவர்கள் 'சென்னையில் ஒரு மழைகாலம்' படத்திற்கு பூஜை போட்டு, ஒரு
வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த
படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து
ஏற்படுகிறது.
ஆறுமாத
கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும்
ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில்
பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து
பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.
ஒரு
திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும்
இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான
பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன்
இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன்.
இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம்
அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
redaers views
1.காக்க
காக்க நடித்ததினால் கிடைத்த நல்ல பெயர் இன்றும் சூர்யாவிற்கு இருக்கிறது.
இருவரும் மிக நல்ல நிலையில் இருக்கும் கலைஞர்கள். கௌதமும் இவ்வளவு நாள் தன்
கதையை மாற்றி அமைக்க நேரம் எடுத்திருக்கக் கூடாது. என்ன ஆச்சு? இருவரும்
சுமூகமாக பேசி கதை விவாதத்தில் பங்கேற்ற்று தேவைப்படும் மாற்றங்களை செய்து
படபிடிப்பை துவங்கி இருக்கலாம். இப்படி படத்தில் இருந்து விலகுகிறேன் என
அறிக்கை விடும் அளவிற்கு வளர்ந்தது அவர்களின் நட்பிற்கு உகந்ததாக
இருக்காது. இருப்பினும், தன் கதையில் மாற்றம் செய்ய மாட்டேன் என நினைக்கும்
இயக்குனர் வேறு ஒரு நடிகரை வைத்து அதே கதையை படமாக்கி வெற்றிபெற்று தன்
கதையின் பலத்தை உணர்த்தலாம். டீசெண்டா முடிவு எடுத்தாச்சு... இனிமே
நிரூபிக்க வேண்டியது கௌதம்தான். பாப்போம், சூர்யா எந்த கதையை நடிக்க
முடியாதுன்னு சொன்னாப்ப்லன்னு. படம் எப்படியும் வரும்தானே?!!!
2 ஒரு
நடிகனாக நடிப்பிற்கு தீனி உள்ள படங்களை சூர்யா நடித்தவை மிக குறைவே.
அவ்வரிசையில் நந்தா, காக்க காக்க, மௌனம் பேசியதே, பிதாமகன், கஜினி, வாரணம்
ஆயிரம், 7ஆம் அறிவு மட்டும் தான் அவருடைய பெயரை இன்றும் நிலை நாட்டி கொண்டு
இருக்கின்றன. மற்ற ஆறு, அயன், சிங்கம் 1,2, மாற்றான் - இவை எலாம் சுமார்
படங்கள் தான் என்பது சூர்யாக்கு நன்றாய் தெரியும். சிங்கம் படத்துக்கு ஒரு 6
மாசம் வேலைசெஞ்சு நேரத்தை வீண் செய்த சூர்யா இதனை பெரிதாய் பார்க்க
வேண்டாம். அதே சமயம் நீ தானே பொன்வசந்தம் வந்தே 10 மாசம் ஆகுது. சூர்யா
போன்ற நல்ல நடிகர்களின் நாட்களை வீண் செய்ய கூடாது என்று கௌதம் இப்போது
நன்கு உணர்ந்து இருப்பார் இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும்
புல்லென்னும் நட்பு. இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு
இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு
அற்பமானதாகப் போய்விடும்.
3 என்ன
ஆச்சு கௌதம்? சூர்யாவை விட நல்ல ஹீரோ கிடைப்பார்....உங்கள் திரைப்படம்
சூப்பர் ஹிட் ஆகும்...எனக்கு உங்க மேல பயங்கர நம்பிக்கை இருக்கிறது.
எல்லாம் நன்மைக்கே......