ஸ்பாய்லர் அலெர்ட்
சின்ன வயதிலேயே பெற்றோரால் கை விடப்பட்ட நாயகன் சிறுவன் ஆக இருக்கும்போதே தன 8 வயது தங்கையையும் வளர்க்கிறான் ,ஆளாக்குகிறான் . சிரமப்பட்டு உழைத்து அவளுக்கு ஒரு கல்யாணத்தை யும் பண்ணி வைக்கிறான் . நாயகனையே சுற்றி சுற்றி வரும் நாயகியை அவன் கண்டு கொள்ளவே இல்லை . ஒரு கட்டத்தில் அவனது 26 வது வயதில் ஓடிப்போன தன் அம்மாவை மன நலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரியாக ஒரு கோயிலில் காண்கிறான் . அப்பாவை கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில் வேறொரு இடத்தில் , சந்தர்ப்பத்தில் சந்திக்கிறான் .அவர்களை அவன் ஏ ஏற்றுக்கொண்டானா? இல்லையா?என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக ஏகன் நடித்திருக்கிறார் .இவர் ஏற்கனவே ஜோ (2023) படத்தில் நாயகனின் நண்பனாக வளம் வந்தவர் . ஓப்பனிங்கில் கொஞ்ச்ம சிரமப்படுகிறார் . போகப்போக சரி ஆகி கடைசி 30 நிமிடங்களில் நல்ல நடிப்பு
நாயகி ஆக பிரிகிடா சகா நடித்திருக்கிறார் . நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி ரோல் தான் , ஓகே ரகம் .. நாயகனின் தங்கையாக சத்யா தேவி ஒப்பனை இல்லாமல் யதார்த்த அழகுடன் நடித்திருக்கிறார்
நாயகன் , நாயகனின் தங்கை இருவரையும் வளர்க்கும் கார்டியன் ஆக யோகிபாபு நடித்திருக்கிறார் , குணச்சித்திர நடிப்பு குட் பவா செல்லத்துரை ஒரு சின்ன ரோலில் வருகிறார்
இசை ரகுநந்தன் , பாடல்கள் , பின்னணி இசை இரண்டும் சுமார் ரகம் தான் ஒளிப்பதிவு . பரவாயில்லை /. எடிட்டிங்க் ஸ்ரீகர் பிரசாத் .2 மணி நேரம் படம் ஓடுகிறது . திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சீனு ராமசாமி
சபாஷ் டைரக்டர்
1 முக்கிய கேரக்ட்டர்கள் அனைத்தையும் புதுமுகங்களாக தேர்வு செய்த தைரியம் , அவர்களுக்கு ஒப்பனை இல்லாமல் பார்த்துக்கொண்டது
2 படத்தின் ஜீவன் ஆக அமைந்த கடைசி 30 நிமிட உயிரோட்டமான காட்சிகள்
3 பாசிட்டிவ் ஆன கருத்தை க்ளைமாக்சில் சொன்ன விதம்
ரசித்த வசனங்கள்
1 உன் பேரு என்ன?
செல்லத்துரை
பேரு தான் செல்லத்துரை , ஆனா செல்லமா வளர்க்கலை
2 என்னதான் ஆம்பளை விறைப்பா இருந்தாலும் நாக்கு ருசிக்குக்கீழே விழுந்துடுவான்
3 பரம்பரை பரம்பரையா கறிக்கடை வெச்சிருக்கறவங்களைப்பார்த்திருக்கியா/ பாதிப்பேருக்கு பல விரல்கள் இருக்காது . கத்தி பிடிக்கற தொழில்லஜாக்கிரதையா இருக்கணும்
4 லவ் என்பதும் பேய் பிடிப்பது போல த்தான் , அதுவும் உன்னை மாதிரி வசீகரமான பேய் பிடிச்சுட்டா அவ்ளோ தான்
5 24ந்தேதி கல்யாணமா? அன்னைக்கு சடடமன்றம் இருக்குமே?
எதிர்க்கட்சி என்றாலே வெளிநடப்புத்தானே?
6 கண்டவனையும் வீட்டுக்குள்ளே விடாதே, களவாண்டு ட்டுப்போயிடுவான்
களவாட வீட்டில் என்ன இருக்கு ? தக்காளி கூட இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கள்ளக்காதலில் ஈடுபட முடிவெடுக்கும் பெண் காலை 10 டூ மாலை 3 இந்த நேரத்தை தேர்ந்தெடுப்பாரா? மாலை 5 மணிக்கு தன வாரிசுகள் ஸ்கூலில் இருந்து வந்த பின் வெளியில் போய் விளையாடிட்டு வாங்க என சொல்லி விட்டு பின் அந்த 5 டூ 6 ல் ஈடுபடுவாளா? எதில் ரிஸ்க் குறைவு ?
2 சின்ன வயசில் இருந்து 13 வருடங்களாக நாயகன் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை ட்ரங்க் பெட்டியில் வைத்த்திருப்பது போல் ஒரு காட்சி .அதை வங்கியில் சேமித்து வைத்திருந்தால் வட்டியாவது கிடைத்திருக்கும்
3 காதலுக்கும் , கள்ளக்காதலுக்கும் நாயகனுக்கு வித்தியாசம் தெரியவில்லை .தங்கையிடம் நீயும் அம்மா மாதிரி அவிசாரி என பட்டப் பெயர் வாங்கிக்குவியோன்னு பயந்தேன் , நல்ல வேளை , அப்படி எதுவம்நடக்கலை என டயலாக் பேசுகிறார்
4 நாயகனின் அம்மா மன நிலை சரி இல்லாதது போல நடிக்கிறாரா? நிஜமாவே அப்படியா? என்பதை தெளிவாக சொல்லவில்லை
5 2மணி நேரப்படத்தில் முதல் 20 நிமிடங்கள் , கடைசி 30 நிமிடங்கள் தான் மனதைக்கவர்கிறது .,இடைப்பட்ட 70 நிமிடக்காட்சிகள் ஏனோ தானோ என நகர்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . டி வி ல போட்டா பார்க்கலாம் ஆனந்த விகடன் மார்க் 41 , குமுதம் ரேட்டிங் - சுமார் .,மாய் ரேட்டிங் 2.25 / 5 .