புதிய பாதை சூப்பர் ஹிட்டுக்குப்பின் சில தோல்விப்படங்கள் கொடுத்த ஆர் பார்த்திபன் சுகமான சுமைகள் என்ற சமூக சீர்திருத்தப்படம் எடுத்து மேலும் கையை சுட்டுக்கிட்டார், அந்தக்கோபத்தில் தர லோக்கல் மசாலாவாக உள்ளே வெளியே என ஹிட் படம் கொடுத்து பேரைக்கெடுத்து பணத்தை சம்பாதித்தார்.
இப்போ சசிகணேசனின் திருட்டுப்பயலே பாணியில் ஒரு கில்மா க்ரைம் த்ரில்லர் தர முயன்றிருக்கிறார்
பார்த்திபன் ஒரு லேண்ட் புரோக்கர் கம் டிரைவர்.அவரோட சம்சாரத்தை ஒருத்தன் பின்னால லைட்டா டச் பண்ணதுக்கே ஓட ஓட விரட்டினவர். அப்பேர்ப்பட்டவர் வீட்ல ஒரு பணக்கார ஆள் தங்கும் சூழல்.தன்னை விட 20 வயசு இளமையான தன் மனைவியை அந்த பணக்கார ஆள் ஒரு டைம் கரெக்ட் பண்ணிடறார். என்ன ஆச்சு? என்பது மிச்ச மீதி கதை . க்ளைமாக்ஸ் ல ஒரு நல்ல ட்விஸ்ட் வருது. அந்த 5 நிமிச அருமைக்காக மீதி 115 நிமிஷம் பொறுமையா காத்துட்டு இருக்க வேண்டியதா இருக்கு
ஆர் பார்த்திபன் வழக்கம் போல் வம்படி வரதராஜன். மாற்றுத்திறனாளியாக அவர் கேரக்டரை வடிவமைச்சது எதுக்குன்னே தெரியலை. தேவையே இல்லை. சும்மா வயசான ஆள்னு காட்னா போதாதா?. சில வசனங்கள் மாற்றுத்திறனாளிகளை குறை சொல்வது போல் வருவது பின்னடைவு
நாயகியாக புதுமுகம் பார்வதி நாயர். வட்டமுகமாகவும் இல்லாமல் நீள்வட்ட முகமாகவும் இல்லாமல் கொஞ்சம் குழப்படியான முகம். அந்த முகத்தை ரசிக்கவே கொஞ்ச நேரம் பிடிக்கும் போல.
சாந்தனு கே பாக்யராஜ் ஹேர் ஸ்டைல் பக்கா, நடிப்பு முன்பை விட முன்னேற்றம். ஒரு டான்சில் பட்டாசைக்கிளப்பி இருக்கார். அதற்கான கொரியோகிராஃபி பிரபுதேவா போல் தெரியுது
வசனங்கள் பல இடங்களில் அத்து மீறல், குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் நெளிந்து கொண்டே பார்க்கனும்.
பாடல்கள் சுமார். ஆர்ட் டைரக்சன் பிரமாதம். ஒளிப்பதிவு சராசரி தரம்.
படம் பார்த்துக்கொண்டிருந்த பலர் என்னமோ அந்தக்கால கில்மா மலையாளக்கதை போல் இருக்கே என பாதிலயே கிளம்பிட்டாங்க. அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டும் இல்லைன்னா படம் படு டப்பா ஆகி இருக்கும். அந்த ட்விஸ்ட் தான் கடைசில காப்பாத்தி இருக்கு
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 பெண்களைக்கொச்சைப்படுத்தும் காட்சிகள் , வசனங்கள் வழக்கத்தை விட இந்தப்படத்தில் அதிகம், ஏன்?
2 அடிக்கடி வேணும்னே தன்னையும், ஆர் பார்த்திபன் மனைவியையும் தனியான சந்தர்ப்பத்தில் விட்டுட்டுப்போறாரே என சாந்தனுக்கு சந்தேகமே வர்லையே அது ஏன்?
3 அடிக்கடி வேலைக்காரி என வர்ணிக்கப்படும் பார்வதி நாயர் போட்டிருக்கும் டிரஸ் , மேக்கப் எல்லாம் மாடி வீட்டு மாடப்புறா போல் இருக்கே என அவருக்கு சந்தேகம் வர்லையே, பார்வதியின் சந்தன தேகம் தான் காரணமா?
4 அடிக்கடி ஃபோனில் ஆலோசனை சொல்லும் சிம்ரனுக்கு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் ஒரு முடிச்சு போட்டு விட்டிருக்கலாம். சிம்ரன் தேவை இல்லாத திணிப்பாக தோன்றி இருக்காது.
5 தம்பி ராமய்யா வேடிக்கை பார்க்கும் விதமாகத்தான் 2 பேரும் தப்பு பண்ணுவாங்களா? ரூம் தாழ்ப்பாழ் கிடையாதா?
6 நாக்கில் அலகு குத்தியதால் பேச முடியாத ராமய்யா அதை சொல்ல வந்த மேட்டரை ஒரு பேப்பரில் எழுதிக்காட்ட முடியாதா?
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
3 சிவ பக்தருக்குப்பிடிச்ச டீக்கடை எது?
பார்வதி நாயர் டீக்கடை
4 தான் பேய் இல்லைனு நிரூபிக்க நாயகி சேலையை கெண்டைக்கால் வரை தூக்கி காலை காட்டுது.பாதம் மட்டும் காட்னா பத்தாதா? டவுட் டேவிட் #கோ இ நி
5 கே பாக்யராஜ் சிஷ்யரான ஆர் பார்த்திபன் கே பாலச்சந்தர்தனமான ரிஸ்க் ஆன கதைக்கருவை கையாள்கிறார் # கோ இ நி
6
சுமார் வசனங்கள்
1 ஜட்ஜ் = எதுக்காக அவனோட விரலை கடிச்சு துப்பினே?
ஹீரோ = சனிக்கிழமை விரதம்.சைவம்.அதான் சாப்பிடாம துப்பிட்டேன் #கோ இ நி
2 ஜட்ஜ் = நீ செஞ்ச தப்புக்கு 6 மாசம் சிறை தண்டனை /10,000 ரூ அபராதம்.எது ஓக்கே?
ஹீரோ =10000 ரூ வே ஓகே எஜமான் .தாங்க #கோஇநி
3 எந்தா சேச்சி.முல்லைப்பூ தந்த மாதிரி முல்லைப்பெரியாறையும் தந்தா தேவலை #கோஇநி
4 THANKS FOR THE TEA
THANKS ALSO START BY T # K I N
5 நேத்து நைட் வெள்ளை சேலை கட்டின பெண்ணை பார்த்தேன்.அது பேயா?
6 கேரளப்பொண்ணுங்களோட அழகுக்கும் இளமைக்கும் காரணம் தேங்காய் தான்.ஐ மீன் தேங்காய் சமையல் தான் # கோ இ நி
7 மாவுக்கையால என்னை தொட்டுட்டா.அப்போ அவ மாவோயிஸ்ட்தானே? $கோ இ நி
8 கேக்க மறந்துட்டேன்
அதான் முறுக்கு சீடை இருக்கில்ல.எதுக்கு கேக்?
11 சேம் பிஞ்ச் னு சொல்லி அவ என்னை கிள்ளிங்
அது கிள்ளிங் இல்ல.ட்யூனிங் #K I N
12 நான் மட்டும் இல்ல.முழுமையான சந்தோசம்னா என்னன்னே தெரியாம நாட்ல பல பொண்ணுங்க வாழ்ந்துட்டு இருக்காங்க #கோ இ நி
13 தவறு செய்வது சகஜம்.ஆண்மைக்கு அடையாளமா நான் நினைப்பதே போல்டாக அவன் எடுக்கும் முடிவுகள் தான் # கோ இ நி
சி.பி கமெண்ட் - கோடிட்ட இடங்களை நிரப்புக - குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம் என ஊர் பூரா பரப்புக.விகடன் மார்க் =34 ,ரேட்டிங் = 2 / 5