கோட்டையப்பட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான் தன் படை வீரர்களுடன் போருக்குப்போறார். அங்கே வஞ்சகமா எதிரி நாட்டு ஆட்களால் விஷம் வெச்சு அவர் வீரர்கள் சாகும் தருவாயில் இருக்காங்க . விஷ முறிவு மூலிகை மருந்துக்கு முயற்சி பண்றப்போ எதிரி “ படை வீரர்கள் எனக்கே கொடுத்துடனும், டீ லா? நோ டீலா? என்கிறார்.வீரர்களை தானமா கொடுத்துட்டு நாட்டுக்குத்திரும்பும் தளபதி தன் மன்னனால் தேச துரோகி பட்டம் சுமத்தப்படறார்.
அதிமுக ல ஓபிஎஸ் ஜெ வை விட நல்ல பேர் எடுத்தா ஜெ வுக்கு பிடிக்குமா? அது மாதிரி மன்னரை விட தளபதிக்கு நாட்டில் நல்ல பேரு. இது மன்னருக்கு பிடிக்கலை . சமயம் பார்த்திட்டிருக்காரு த்ளபதியைப்பழி வாங்க . இந்த சான்ஸ் கிடைச்சதும் த்ளபதிக்கு மரண த்ண்டனை விதிக்கறார்.
கோச்சடையான் -ன் மகன் எதிரியை எப்படிப்பழி வாங்கறார் ? என்பதே மீதிக்கதை .
சுருக்கமாச்சொல்லப்போனா அப்பாவை அநியாயமாக்கொன்னவங்களை ப்பழி வாங்கும் மாமூல் ப்பழைய கதைதான் .
ஆனால் சவுந்தர்யா வின் உழைப்பு , முயற்சி , பட்ட பாட்டுக்கு எல்லாம் நல்ல பலன் . கே எஸ் ரவிக்குமாரின் திரைக்கதை , வசனம் வரலாற்றுப்பின்னணியில் இருந்தும் போர் அடிக்காமல் போகிறது
ஹீரோ வா த ஒன் & ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி . ஓப்பனிங்க் ஷாட்டில் குதிரையில், வரும்போது , அப்பா ரஜினி ஓப்பனிங்க் சீன் , க்ளைமாக்ஸில் 3 வது ரஜினி ஓப்பனிங்க் சீன் என தான் ஒரு மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார் . அவர் நடை , தோற்றம் எல்லாம் முடிந்தவரை அப்படியே இருக்கு . குறிப்பா அவர் கம்பீரக்குரல் , ஸ்டைலிஸ் கலக்கல் . அவர் பஞ்ச் டயக்லாக் பேசும்போது மட்டும் சவுண்ட் எஞ்சினியர் ஸ்பெஷல் எஃபக்ட் கொடுத்து ரசிகர்களைக்கை தட்டத்தூண்டுகிறார்
ஹீரோயினாக தீபிகா படுகோன் . மெழுகு பொம்மை மாதிரி அழகிய வடிவழகு கொண்டவரை நிஜமாகவே பொம்மை மாதிரி ஆக்கி விட்டார்கள் . அய்யோ பாவம்
பாடல் காட்சிகள் பிரம்மாண்டம் . லொக்கேஷன் செலக்சன் குட்
ஏ ஆர் ரஹ்மாந்ன் இசை குட் . பின்னணி இசை யில் எப்போதும் இரைச்சல் . கொஞ்சம் அமைதியா விடவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்
சரத் குமார் வந்து திரையில் தோன்றும்போது ராதிகாவுக்கே அடையாளம் தெரியாது . என்ன கொடுமை மாயா இது ?
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. கோச்சடையான் கேரக்டர் வடிவமைப்பு , அவர் பேசும் கூர்மையான டயலாக்ஸ் கலக்கல் ரகம்
2 படம் போட்ட 10 நிமிடங்களில் இது அனிமேஷன் படம் என்பதை மறந்து கதைக்குள் ஆடியன்சை அழைத்துச்செல்லும் லாவகம்
3 இண்ட்டர்நேசனல் மார்க்கெட்டுக்காக புக் செய்தாலும் ஏ ஆர் ரஹ்மானிடம் ட்யூன் வாங்கிய சாமார்த்தியம் . பார்த்தாயா? என் ரத கஜ துரக பதாதிகளை என ரஜினி பேசும்போது பின்னணி இசை கலக்கல் . அரங்கம் அதிர்கிறது . குட் பிஜிஎம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. எதிரியின் மகன் என்பது தெரிந்தும் நாசர் ஏன் ரஜினியை த்ளபதியாக தன்னுடன் வைத்திருக்கிறார் ? அவர் பழி வாங்க வருவார் என தெரியாதா?
2 என் தங்கச்சி உனக்கு , உன் தங்கச்சி எனக்கு என பொண்ணு குடுத்து பொண்ணு எடுப்பதில் என்ன தியாகம் இருக்கு ? வீரம் இருக்கு ?
3 பொண்ணைப்பெத்த சாதா ஆளே இப்பவெல்லாம் ஜாக்கிரதையா இருக்கும்போது ஒரு மன்னர் இளவரசியை அப்டி அசால்ட்டா தளபதியை லவ்வ விடுவாரா?
4 விஷம் வைப்பவன் வெச்சுடறான். எல்லாரும் சாப்பிடறாங்க . டக்னு சாகாம எதிரியிடம் போய் ரஜினி டயலாக் எல்லாம் பேசும்வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் எப்படி உயிரோட இருக்காங்க ? அது என்ன ஸ்லோ பாய்சனா?
5 எல்லா கேரட்கர்சும் நடக்கும்போது காலை அகட்டி வெச்சு நடப்பது ஏன் ? டெக்னிகல் ஃபால்டா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஒரு வேளை உணவுக்கே இப்படி ஓடுறாங்களே, இவங்களுக்கு 3 வேளை உணவு கொடுத்துப் பாருங்க.. எப்படி ஓடுறாங்கண்ணு #கோச்சடையான்"
2 கோச்சடையான் தனிமனிதன் அல்ல,.. அவன் ஒரு நாடு -//"
3 தெளிவுரையும், முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்தபிறகு முன்னுரை எதற்கு?
#கோச்சடையான்"
4 வாய்புகள் அமையாது- நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும்!
#கோச்சடையான்"
5 : மண்ணை ஆள்பவன் மன்னனல்ல; மண்ணில் இருக்கும் மக்களின் மனதை ஆள்பவனே மன்னன் !
#கோச்சடையான்"
=========
6 "ராணா, நீ பகல் கனவு காண்கிறாய்..
"
"ஹாஹாஹா... கனவு காண்பவனுக்கு பகலென்ன இரவென்ன? "
#கோச்சடையான்"
--------------
7 நாகேஷ் - நீ சும்மா வந்து நின்னாலே போதும்
============
8 நாசர் - ராணா! நீ புத்திசாலி.எதை யாரிடம் எப்போ எப்படி கேட்கனும் எனும் சூட்சுமம் அறிந்தவன்
9 உங்க நாடு தேவை இல்லை.நாடி வந்தவளே போதும் # சரத்
10 ரஜினி - (இடைவேளை பஞ்ச்) = என்னிடமிருந்து நீ தப்பவே முடியாது # வெளில கேட் சாத்தி இருக்கு தியேட்டர்ல.வாட் எ டைமிங்
11 ஆட்சியில் இருப்பவர்கள் அஞ்சக்கூடாது.நம்மை விஞ்சக்கூடியவர்கள் தடுமாறும் நாள் வரும்.அது வரை காத்திருப்போம் # நாசர்
12 எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழி உண்டு.முதல் வழி மன்னிப்பு # ரஜினி
13 எதிரியிடம் உதவி கேட்பது சரியா?
ரஜினி - எனக்கு என் மக்களின் உயிர் தான் முக்கியம்
14 நாசர் - இனி நீ கனவே காணமுடியாது
ரஜினி - உறங்கினால்தானே கனவு வர/? உன்னை ஒழிக்கும் வரை எனக்கு உறக்கம் இல்லை
15 ரஜினி - நாடகத்தை ஆரம்பித்தது நீ! அதை கீழே இருந்து நடத்தி முடிக்க இருப்பவன் நான்
16 நாசர் - நீ தண்ட.னைக்கைதி
ரஜினி - நீ தண்டனை பெறப்போகும் கைதி
17 நாம் நண்பர்கள் என்பதை மறந்து விடாதே
ரஜினி - நட்பை விட எனக்கு நாடு முக்கியம் # மோடி ,ஜெ ,ராஜபக்சே ரிலேட்டட் டயலாக்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. இது ஒரு பொம்மைப்படம் என பகடி செய்பவர்களுக்கு ரஜினி யின் பஞ்ச் பாடல் -
நீயும் பொம்மை .நானும் பொம்மை .நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை
2 ஒரு ரஜினி ரசிகர் " தலைவரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பிரமாதம்" கறார்.ரஞ்சித்தை சொல்றாரா? ஜீவா வை சொல்றாரா?
3 கோச்சடையான் ரிலீஸ் க்கு முன் = ரஜினி த மாஸ்
ஆன பின் = ரஜினி தமாஸ் # சும்மா\\\
4
கூட்டத்தைப்பார்த்துட்டு ஒரு பைக்வாலா " அட.இன்னைக்கு டோரா புச்சி ரிலீசா?" ன்ட்டுப்போறாரு.அடங்கோ
கூட்டத்தைப்பார்த்துட்டு ஒரு பைக்வாலா " அட.இன்னைக்கு டோரா புச்சி ரிலீசா?" ன்ட்டுப்போறாரு.அடங்கோ
5 டைட்டில் ல ஏ ஆர் ரஹ்மான் பேர் போடும்போது ஒரு " கொடி பறக்குது # # சவுந்தர்யா சூட்சுமம்
6 ஓப்பனிங் சீன் ல ஒரு அதல பாதாளத்தை அசால்ட்டா குதிரை ல ரஜினி தாண்டறாரு # ஏதோ குறியீடு
7 ஒளிப்பதிவு ,3 டி எபக்ட் ,காஸ்ட்யூம் டிசைன்ஸ் கனகச்சிதம்
8 ரஜினி யின் குரலுக்கு மட்டும் 16 வயதினிலே
9 இடையில் இருந்து உடைவாளை உருவும் சீன் அக்மார்க் ரஜினி பிரான்ட்
10 சரத்குமார் ,தீபிகா படுகோனே இருவர்க்கும் வார்ப்பு சரி இல்லை.சரத் அடையாளமே தெரியவில்லை.நாகேஷ் பாடிலேங்க்வேஜ் குட்
11 பாடல் காட்சியில் ஆர்ட் டைரக்சன் ஷங்கர் படத்துக்கு இணையான அழகியல் ரசனை # வெல்டன் சவுந்தர்யா
12 ரஜினியைத்தவிர வேறு யாருக்கும் தோற்றம் ,வார்ப்பு எடுபடாதது படத்துக்குப்பின்னடைவு # பொம்மைகள் போல்
13 கோச்சடையான் = இடைவேளை .ஏ சென்ட்டர் ரசிகர்கள் ,குழந்தைகளை கவரும்
14 பொம்மை தீபிகா வை லோ கட் ஜாக் ல காட்டும்போது அதை ரசிக்கலாமா? கூடாதா? னு குழப்பம் அடைவான் மிடில் கிளாஸ் தமிழன்
15 ரஜினி சீரியசா பரத நாட்டியம் ஆடறாரு.சலங்கை ஒலி கமல் பாத்தா வருத்தப்படுவார்
16 துயில் எழுவதில் சூரியனை ஜெயிப்போம் னு ரஜினி சாதாரணமாதான் சொல்றாரு.திமுக வை சொல்றாரோனு டவுட்
17 படம் 118 நிமிடங்கள்
18 சூப்பர் ஸ்டார் டைட்டில் அதகளம் இன் 3 டி
19 அண்ணன் சேனா ,தம்பி ராணா ( ஹீரோ) ,அப்பா கோச்சடையான் # 3
20 பலரும் கிண்டல் செய்தது போல் கோச்சடையான் பொம்மைப்படம் போல் எல்லாம் இல்லை. நல்ல மசாலாப்பாடம் போல் இருக்கு.ஓடி விடும்.வசூல் அள்ளிடும்
சி பி கமெண்ட் -கோச்சடையான் - சவுந்தர்யாவின் உழைப்பு, ரஜினி மாஸ், வாய்ஸ், வசனம், திரைக்கதை + ,
பொம்மை ப்படம் என்ற மக்கள் மவுத் டாக் -
விகடன் மார்க் =42 ,ரேட்டிங்க் =2.75 / 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.75 / 5
கோச்சடையான் திரைக்கதை நல்லாஇருக்குனு பாரீன் ரிசல்ட் ;-)))
thanx - for first 6 dialogues -
கருத்து கந்தன்©
@karuthujay
·
a
கோச்சடையான் @ ரம்பா தியேட்டர்,சத்திரம் பஸ் நிலையம் எதிரே,திருச்சி.ரசிகர் ஷோ @ 10 15am
a
ரஜினி த மாஸ்.2 போலீஸ் வேன் பாதுகாப்புக்கு
ரஜினி ரசிகர்கள் உற்சாக டான்ஸ் pic.twitter.com/brtLojkX5u
ரஜினி ரசிகர்கள் உற்சாக டான்ஸ்aa
a
a
a
a