Showing posts with label கோச்சடையான். Show all posts
Showing posts with label கோச்சடையான். Show all posts

Tuesday, September 10, 2013

கோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி

 
 
சுல்தான் தி வோரியர் அனிமேஷன் ட்ரெயிலர் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது கோச்சடையான் ட்ரெயிலர். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாவதால் சிஜியில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரெயிலரை பார்த்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கும்போல இருக்கு. அதை பற்றி கொஞ்சம் டீப்பா நோண்டுவோம்

பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் என்றால் என்ன ?

அனிமேஷன் காட்சி ஒன்றில் பாத்திரம் ஒன்றை அசைவிப்பதற்கு 2 வழிகளை பின்பற்றுவார்கள். ஒன்று Key frame அனிமேஷன். அதாவது பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் Frame by Frame ஆக கணினி மூலமாகவே உள்ளிடுவார்கள். சாதாரணமாக திரைப்படங்களில் 24 frame per second என்ற வகையில் ஒரு செக்கன் காட்சிக்கு 24 key frame வழங்கப்படும். மிகவும் கடினமான பணி இது. இரண்டாவது முறை மோஷன் கப்சரிங். மோஷன் கப்சரிங் என்பது நுண்னிய சென்சார்களை ஒரு நடிகரின் உடலில் பொருத்தி நடிக்கவைத்து அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக கணினியில் பதிவுசெய்து, அதனை வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவத்திற்கு உள்ளிடுவதன் மூலம் அவ் உருவத்தினை அசையவைப்பது. ஹாலிவூட்டில் நெடுங்காலமாக இந்த முறைதான் உபயோகிக்கப்படுகிறது. நாம் அறிந்த ஸ்பைடர்மேன் 2, மேட்ரிக்ஸ், லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ், கிங்காங் படங்களில் இதே தொழில்நுட்பம்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ் இன் கோலும் பாத்திரம், கிங்காங் எல்லாமே மிகத்துல்லியமான கிராபிக்ஸுடன் உயிரோட்டமாக நடமாடியதற்கு மோஷன் கப்சரிங் தொழில்நுட்பமே உதவிபுரிந்தது.

இது இலகுவான முறையாக இருந்தபோதும் இதன்மூலம் மிக துல்லியமாக ஒரு நடிகரின் அசைவுகளை பிரதியெடுக்க முடியாது. மோசன் கப்சரிங் மூலம் பதிவுசெய்யப்பட்ட நடிகரின் அசைவுகளை மேலும் துல்லியமாக்க keyframe மூலம் மேலும் மெருகூட்டப்படும். இதனால் அறிமுகப்படுத்தப்பட்டதே பெர்ஃபோமன்ஸ் கப்சரிங். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. மோஷன் கப்சரிங்கின் மேம்பட்ட வடிவமே. நடிகரின் அசைவுகளை துல்லியமாக பதிவுசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்ட Lycra எனப்படும் ஆடையை நடிகருக்கு அணிவித்து நடிக்க வைப்பார்கள். இந்த பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் தொழில்நுட்பம்தான் கோச்சடையானில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெயிலரை பார்க்கும்போது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் அல்ல, மோஷன் கப்சரிங் தொழில்நுட்பம் கூட பயன்படுத்தாமல் வெறும் Keyframe அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதுபோன்றே தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்தளவுக்கு கார்டூன்தனம் தெரிகிறது.

விளம்பரத்திற்காக பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் பெயரை பயன்படுத்திவிட்டு படம் முழுவதும் keyframe அனிமேஷன் முறையில்தான் எடுத்தார்களா? அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா ? அவர்களுக்குத்தான் வெளிச்சம். கப்சரிங் முறை சொதப்பியது இருக்க, படத்தின் கிராபிக்ஸ் இன்னொரு சொதப்பல். ஐந்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாமல் அதேபோல்தான் இருக்கிறது. பாத்திரங்களின் வடிவமைப்பு, முக்கியமாக ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றம் பெருத்த ஏமாற்றம்

ஒரு நபரை கிராபிக்ஸில் உருவாக்கும்போது முகம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவரை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து கிராபிக்ஸ் முகத்துடன் பொருத்திவிடுவார்கள். உதாரணத்திற்கு ஸ்பைடர்மேனில் வரும் octopus என்னும் பாத்திரம் இப்படி வடிவமைக்கப்பட்டதே. ஆனால் அது கிராபிக்ஸ்தான் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோல கஜினி கம்பியூட்டர் கேமில் வரும் அமீர்கானின் முகம். சில கோணங்களில் மட்டும் படம்பிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக வந்திருக்கும். ஒரு கம்பியூட்டர் கேமில் காட்டியிய தத்ரூபத்தை, மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் காட்டாதது கவலைக்குரிய விடயம். environment வடிவமைப்பு மட்டும் மொத்தமாக பார்க்கும்போது ஓரளவு நன்றாக உள்ளது. இவற்றைவிட நிறைய சொதப்பல்கள். 46 ஆவது செக்கனில் வரும் குதிரைக்கூட்டம், 48 ஆவது செக்கனில் வரும் பெண்கள்கூட்டம் (பாடல் காட்சி) 56 ஆவது செக்கனில் வரும் பாடல் காட்சி, இந்த காட்சிகளில் மக்கள் கூட்டத்தை காண்பித்திருப்பார்கள். எல்லோரது அசைவுகளும் செக்கன் மாறாமல் அச்சில் வார்த்ததுபோல இருக்கும். இவற்றை எல்லாம் விட உச்சக்கட்டமான பொறுப்பற்ற செயல் தெரிவது ட்ரெயிலரின் 56 ஆவது செக்கனில். ரஜினி முன்னோக்கி நடந்துவந்துகொண்டிருப்பார். காமெரா கோணத்தில் ரஜினியின் அளவு மாறுபடாது. அதாவது காமெரா ரஜினியோடு சேர்ந்து பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன்படி பின்னால் இருக்கும் கோட்டையும் ரஜினிக்கு பின்னால் இருப்பவர்களும் பின்னோக்கி நகரவேண்டும். ஆனால் இங்கே அப்படியே நிற்கிறார்கள்

சரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சுல்தான் தி வோரியர் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியும். அதுபற்றிய மேலதிக தகவல்கள் இல்லாமலே கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்டது. சுல்தான் தி வோரியரில் ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றத்துக்கான அசைவுகளை ரஜினியின் டூப் நடிகர் ஜீவா வழங்குவதாகவும் ஒரு செய்தி அடிபட்டது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது கோச்சடையானில் உண்மையாகவே ரஜினியின் பங்கு இருக்கிறதா? அல்லது குரலை மட்டும் கொடுத்துவிட்டு வெறும் வியாபாரத்துக்கு ரஜினியின் பெயர் பயன்படுத்தப்படப்போகிறதா ?????
 
 
thanx -Mathuran Raveendran fb page

Thursday, April 11, 2013

கோச்சடையான் - இயக்குநர் சௌந்தர்யாவின் பேட்டி

'கோச்சடையான்' - இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர, ரஜினியின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. இதோ... ஸ்கூப் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் 'கோச்சடையான்’ இயக்குநர் சௌந்தர்யா!

''இது 100 பெர்சன்ட் ரஜினி ஃபார்முலா கமர்ஷியல் படம். அப்பாவைவெச்சு ரெண்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள்தான் இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட். ரஹ்மான் சாரின் மியூஸிக்ல ஆறு பாடல்கள். தீபிகா ஹீரோயின்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, படத்தில் இன்னொரு மெயின் ஹீரோயின்... ஷோபனா!''

''என்ன சொல்றீங்க... அப்போ டபுள் ஆக்ட் ரஜினியா?''

''ஆஹா... நானே சஸ்பென்ஸ் உடைச்சுட் டேனே! யெஸ்... படத்தில் சீனியர் ரஜினிதான் கோச்சடையான். அவர் ஒரு  தளபதி. நாட்டின் மன்னன் ரஜினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த நண்பனுக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர். அதே சமயம், 'கோச்சடையான்’... ஒரு பரதக் கலைஞனும்கூட. போர்க்களத்தில் ஆக்ரோஷமா சண்டை போடும் கோச்சடையான், அடுத்த காட்சியிலேயே அசத்தலா அபிநயம் பிடிச்சு ஆடுவார். அப்படியரு கேரக்டருக்கு யாரை ஜோடியா ஃபிக்ஸ் பண்ணலாம்னு யோசிச்சா, ஷோபனா மேடம் தவிர, யாரும் என் மனசுல தோணவே இல்லை!''


''அப்ப கோச்சடையான் மகனுக்குப் படத்தில் என்ன வேலை?''

''மொத்தக் கதையையும் கேப்பீங்க போல. சரி... இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் தகவலும் சொல்லிடுறேன்... கோச்சடையான் பையன் கேரக்டர்தான் 'ராணா’. ஒரு தலைவனுக்குத் தேவையான அத்தனை தகுதிகளும் திறமைகளும் கோச்சடையானிடம் இருக்கும். என்ன சொல்றோமோ அதன்படி வாழணும்கிற கொள்கையோட இருப்பார் கோச்சடையான். அவர் பையன் ராணா, அவரைவிட நூறு மடங்கு வேகமானவன். ஆனா, இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்களே... அப்படிப் பரபரனு இருப்பார் ராணா.  தன் ஜூனியரின் ஆற்றலை விவேகமான பாதையில் திருப்புவார் கோச்சடை யான். அதனால் கோச்சடையான்தான் படத்தின் ஹீரோ. ஒரு ரஜினி ரசிகையா சொல்றேன்... அப்பா இதுவரை பண்ணினதிலேயே கோச்சடை யான்தான் பெஸ்ட் கேரக்டரா இருக்கும். அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்ஷியல் கலாட்டாக்களும் படத்தில் இருக்கு. க்ளைமாக்ஸ்ல ஒரு பஞ்ச் அடிச்சிட்டு, செம கெத்தா ஒரு நடை நடப்பார் பாருங்க... ஸ்பாட்ல நான் 'கட்’ சொல்ல மறந்து பார்த்துட்டே இருக்க, மொத்த யூனிட்டும் கிளாப்ஸ் அள்ளிட்டோம். இதெல் லாம் போக, அப்பா படத்தில் ஒரு பாட்டும் பாடியிருக்கார். இப்போதைக்கு அவ்வளவுதான்... இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க... ப்ளீஸ்!''

''ஒரு ரசிகையா ரஜினியைக் கொண்டாடியிருப்பீங்க. ஒரு இயக்குநரா ரஜினியின் ப்ளஸ், மைனஸ் என்ன?''  

(யோசிக்கிறார்) ''மைனஸ்னு சொல்ற அளவுக்கு எனக்கு எதுவும் தோணலை. மத்தபடி... எல்லாமே ப்ளஸ்தான். அதிலும் முக்கியமா, அவரோட டெடிகேஷன்! பட வேலைகள் ஆரம் பிச்சதுல இருந்து நாங்க ரெண்டு பேரும் எப்போ பேசினாலும் அது 'கோச்சடையான்’ சப்ஜெக்ட்டாதான் இருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த் துட்டு, தாங்க முடியாம ஒருநாள், 'டைனிங் டேபிள்ல இனி சினிமா பத்திப் பேசாதீங்க’னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அப்பா... சிம்ப்ளி சூப்பர்ப் ஆக்டர்!''


''ஒரு இயக்குநரா அப்பாகிட்ட பாராட்டு வாங்கினீங்களா?''

''நல்லவேளை இந்தக் கேள்வி கேட்டீங்க!
ஒரு சீன்ல அப்பா கேரக்டரும் தீபிகா கேரக்டரும் உணர்ச்சிபூர்வமாப் பேசிக்கணும். வசனங்கள் கொஞ்சம் தூய தமிழ்ல இருக்கும். அதனால், தீபிகாவுக்கு சிச்சுவே ஷனை விளக்கிட்டு நானே 'இந்தந்த ரியாக்ஷன் இப்படி எல்லாம் வேணும்’னு சின்னதா நடிச்சுக் காமிச்சேன். அப்போ அப்பா என்னைக் கவனிச்சுருக்கார்போல! ராத்திரி வீட்டுக்கு வந்ததும், 'நடிச்செல்லாம் காமிக்கிறீங்க கண்ணா... நல்லா நடிக்கிறீங்க... சூப்பர்... சூப்பர்’னு சொல்லிட்டுப் போயிட்டார். தலைவரே நம்மளைப் பாராட்டிட்டாரேனு எனக்கு சர்ப்ரைஸ் ஷாக். அன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே பிடிக்கலை!''

 ''ஆல் இஸ் வெல். ஆனா, அனிமேஷன் படங்கள் ஒரு லுக்குக்கு கார்ட்டூன் மாதிரி இருக்கும்னு கமென்ட்ஸ் கிளம்புமே?''

'' 'அவதார்’ என்ன கார்ட்டூன் படமா? நாமளே 'அவதார்’ பண்ற அளவுக்கு டெக்னாலஜி இங்கேயே வந்திருச்சு. பல காலமா நாம தயங்கிட்டு இருக்கிற 'பொன்னியின் செல்வன்’கூட இந்த டெக்னாலஜியில் ஈஸியாப் பண்ண முடியும். 'சுல்தான் த வாரியர்’ வேலைகள் ஆரம்பிச்சப்போ, இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. அப்ப அந்தப் படம் பண்ணியிருந்தா, கார்ட்டூன் மாதிரிதான் இருந்திருக்கும். அதான் அந்த புராஜெக்ட்டையே கேன்சல் பண்ணினோம். ஆனா, இப்போ 'கோச்சடையான்’ல எந்த இடத் திலும் உங்களுக்கு கார்ட்டூன் ஃபீல் வராது. ரொம்ப சின்ன வயசுல அப்பா எனக்குச் சொன்ன அட்வைஸ் இது... 'உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்கதான் அதுல வரணுமே தவிர, நீ அடுத்தவங்க பாதையில போகக் கூடாது’. என் வழி... அப்பா சொல்லித் தந்த அதே தனி வழி!''

நன்றி - ஆனந்த விகடன்

Sunday, April 08, 2012

கோச்சடையான் பிரமோஷன் வீடியோவுக்கு இப்போ என்ன அவசரம்? ஐஸ்வர்யா தனுஷ் ஆவேசம்




'சுமைதாங்கியே சுமையானதே... எந்தன் நிம்மதி போனதே... மனம் வாடுதே...’ - 'அண்ணாமலையில் மனம் வெதும்பி ரஜினி பாடும் இந்தப் பாட்டுதான் தற்போது ரஜினியின் நிஜ மனநிலையும் என்கிறார்கள், ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், நம்பத்தான் முடியவில்லை. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா அஸ்வின் இருவருக்கும் இடையில் கடும் பனிப்போராம்!
 காதல் மோதல், கடன் சிக்கல் என மகள்களைச் சுற்றிப் படர்ந்த சிக்கல் முடிச்சுக்களை லாகவமாக அவிழ்த்த ரஜினியால், தன்னை முதலீடாகவைத்து அவர்கள் சினிமாவில் நடத்தும் யுத்தத்தைத்தான் பொறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'அப்படி எல்லாம் இருக்காதுங்க... பெரிய இடத்துல சின்ன பிரச்னைன்னாலும் ஊதிப் பெருசாக்கக் கூடாது!’ என்று நாம் சமாதானம் சொன்னால், சில வருடங்களுக்கு முன் பிருந்தே தொடர் சங்கிலிச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள்!

''ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்த சமயம் ரஜினி 'சந்திரமுகிபடப்பிடிப்பில் இருந்தார். அப்போது ரஜினி குரு ஸ்தானத்தில்வைத்து மதிக்கும் அந்த சினிமாவுலகப் பிதாமகர் ரஜினியைச் சந்தித்தார். அப்போது அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, 'எதுக்கு இப்படி ஒரு ஸ்டார் ஆனோம்னு தினமும் நினைச்சு நினைச்சுக் கஷ்டப்படுறேன். பேசாம பழைய மாதிரி கண்டக்டரா இருந்தா, ரொம்ப நிம்மதியா சந்தோ ஷமா இருந்திருப்பேன்என்று கண் கலங் கினார் ரஜினி. அவரைச் சமாதானப்படுத் தவே முடியவில்லை அவரால்!

சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோஸ் ஆரம்பிச்சு, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டு இருந்தாங்க. நிறுவனத்துக்குப் பெரிய பிராண்ட் இமேஜ் உண்டாக்குறதுக்காகத் தன் அப்பா ரஜினியை வெச்சே 'சுல்தான் தி வாரியர்பட வேலைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, தயாரிப்பாளர், தியேட்டர்காரங்க, ரசிகர்கள்னு எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு நினைக்கிறவர் ரஜினி. தன் வழக்க மான பாணியில் இருந்து வெளிய வந்து படம் பண்றதுக்கு ரொம்பவே யோசிப்பார். அதனாலேயே பரிசோதனை முயற்சியா ஆரம்பிச்ச 'சுல்தான் தி வாரியர்அனிமேஷன் படத்தில் நடிக்க அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இல்லை.


 ஆனாலும், சௌந்தர்யாவுக்காகச் சம்மதிச்சார். ஆனா, என்னென்னவோ நடந்து கடன், வட்டி, கோர்ட், கேஸ்னு ஆச்சு. அந்தப் படம் பாதி யிலேயே நின்னுடுச்சு.
தொடர்ந்து 'கோவாபட விவகாரத்திலும் லதாம்மா, சௌந்தர்யா ரெண்டு பேர் மீதும் பிடிவாரன்ட் போடுற அளவுக்கு விஷயம் போனப்ப, ரஜினி நொறுங்கிப் போயிட்டார். 'அனிமேஷனும் வேணாம்... சினிமா தயாரிப் பும் வேணாம். பேசாம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிடுனு சொல்லித்தான் சௌந்தர்யாவுக்கு நல்லபடியாக் கல்யாணத்தை முடிச்சுவெச்சார் ரஜினி.

இதுக்கு நடுவில் ஐஸ்வர்யா, செல்வராகவன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராகி, அடுத்தடுத்த வருஷத்தில் தனியா ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளைப் பண்ணிட்டு இருந் தாங்க. அப்போதான் 'ராணாபட வேலைகள் தொடங்குச்சு. பட விளம்பரத்தில் தயாரிப் பாளர்னு சௌந்தர்யா பேர் இடம் பிடிச்சது. ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் இல்லை. மறுபடி ஏதேதோ பிரச்னைகள்.


 'ராணாபட பூஜையை தனுஷ் புறக்கணிச்சுட்டார்னு சொல்வாங்க. அப்போ யாருமே எதிர் பார்க்காம ரஜினிக்கே உடல்நிலை மோசமாகி, சிங்கப்பூர் வரை போய் சிகிச்சை எடுத்துட்டு வந்தார். மருத்துவமனை, ஓய்வுனு இருந்த ரஜினி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்திருக்கார்.
இதுக்கு இடையிலேயே ஐஸ்வர்யா '3’ படக் கதையை அப்பாகிட்ட சொல்லி, இயக்குநராவதற்கு அனுமதி வாங்கினாங்க. படத்தை தனுஷே சொந்தமா தயாரிச்சு நடிக்கிறார்னு தகவல் வந்தது. நடுநடுவுல 'என்னை ரஜினியின் மாப்பிள்ளையாகப் பார்க்காதீர் கள்னு தனுஷ் பேச ஆரம்பிச்சார்.
தனுஷ§க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே குழப்பம் எனப் பேச்சு வந்தது. ஆனாலும் '3’ பட வேலைகள் பரபரப்பாக நடந்தன. 'ஒய் திஸ் கொல வெறிபாட்டு உலக மகா ஹிட் அடித்தது.
இது எல்லாமும் சேர்ந்து சௌந்தர்யாவின் மனசுல மறுபடியும் இயக்குநர் ஆசையை விதைச்சது. 'அப்பா நானும் என்னை நிருபிக்கணும். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவணும்னு வேண்டிக் கேட்டு ரஜினியின் சம்மதம் வாங்கினார் சௌந்தர்யா. 'சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான்னு விளம்பரம் வந்தது. தேங்கித் தேங்கி நின்ன வேலைகள் விறுவிறுன்னு வேகம் பிடிச்சு, சட்டுனு வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக்குப் பறந்தது 'கோச்சடையான்யூனிட்.
அதே சமயம் '3’ படம் வெளியானது. சேனல் சேனலா '3’ பட புரொமோஷனுக்காக தனுஷ§ம் ஐஸ்வர்யாவும் பேசிக்கிட்டு இருக்க, திடீர்னு 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்வீடியோ வெளியாகி பரபரப்பாச்சு. பொதுவா, தனது எந்தப் படம்பற்றியும் ரிலீஸுக்கு முன்னாடி ஒரு வார்த்தைகூடப் பேசாத

ரஜினி, 'கோச்சடையான்படம்பற்றிப் பேசினார். லண்டன்ல 'கோச்சடையான்பிரஸ்மீட்டும் நடந்தது. '3’-ல் இருந்து விலகி மீடியாவின் கவனம் 'கோச்சடை யான்மேல் மையம்கொண்டது. '3’ பட சிறப்பு நிகழ்ச்சிகளை நிறுத்தி 'கோச்சடையான் ஸ்பெஷல்னு எல்லா சேனல்களும் அலற ஆரம்பித்தன.  
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த ஐஸ்வர்யா, 'கோச்சடையான் புரொமோஷனுக்கு இப்போ என்னப்பா அவசரம்? '3’ படம்பத்தி நல்ல செய்திகள் கிளம்புறதுக்கு முன்னாடி நீங்களே அது திசை திரும்பக் காரணமா இருக்கலாமா?’னு போன்ல ரஜினிகிட்ட மனம் திறந்து அழுதிருக்காங்க. அப்புறம் ரஜினி, ஐஸ்வர்யா, சௌந்தர்யா மூணு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுனு தெரியலை. ரஜினி உடனடியா லண்டன் ஷூட்டிங்கை முடிச்சுக்கிட்டு சென்னை திரும்பிட்டார். 'நானும் உங்களைப் போல ரஜினி சார் ரசிகன். நான் அவருடைய வாரிசாக முடியாதுனு சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் தனுஷ் சொல்றதுலகூட அர்த்தம் இருக்கு.
எந்தப் பிரச்னையையும் சட்டுனு சமாளிச்சு வந்திருவார் ரஜினி. இதுல இருந்தும் அப்படியே மீண்டு வருவார் சூப்பர் ஸ்டார்!'' என்று முடித்தார்கள் அவர்கள்!
ஆனந்த விகடனில் வந்த மேட்டர் இது