கனி வகைகள் என்றாலே அதிக இனிப்புடன் இருக்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு கனி வகையிலும் இருக்கும் இனிப்பு வித்தியாசப்படும். அதிக இனிப்புச் சுவையுள்ள மாங்கனி, வாழைப்பழம் போன்ற கனிகளைத்தான் பலரும் விரும்புகின்றனர். காயாக இருக்கும்போது கொஞ்சமாகத் துவர்ப்புச் சுவையுடனும் கனியானவுடன் லேசான இனிப்புச் சுவையையும் கொண்டது கொய்யா. கனிகளில் மற்றக் கனிகளுக்குச் சற்றும் குறையாத மருத்துவக் குணங்களைக்கொண்டது கொய்யா.
l ஒருசிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று ஒருவேளை, இரண்டு வேளை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவார்கள். இப்படி முழுவதுமாக உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதுபோல் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது கொய்யா. உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து கொய்யாப்பழத்தில் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும் கிடைக்கும்.
l பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.
l கொய்யாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுகள் மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றன.
l உடலுக்குள் இருக்கும் நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது கொய்யா.
l உடலுக்குள் இருக்கும் நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது கொய்யா.
l தினமும் ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுவதன்மூலம் உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும்.
நன்றி - த இந்து