Showing posts with label கொம்பன். Show all posts
Showing posts with label கொம்பன். Show all posts

Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            Monday, December 29, 2014

            பொங்கல் ரேஸ் - ஜெயிக்கப்போகும் குதிரை எது?

            • 'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
              'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
            சமீப காலமாக பண்டிகை தினங்களில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தன. ஆனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த நிலை மீண்டும் மாறியிருக்கிறது. ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, வெள்ளக்கார துரை’ என்று நான்கு படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக, அடுத்ததாக வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கின்றன. 


            பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள். இதனால் எந்தப் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் குழம்பிப் போய் உள்ளனர். இந்நிலையில் நிஜமாகவே இப்படங்கள் பொங்கல் ரேஸுக்கு தயாராக இருக்கிறதா என்று கோலிவுட்டில் விசாரித்தோம். 



            ‘ஐ’
            விரைவில் வெளியீடு என்று பலமுறை விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஐ’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டே தீருவது என்ற தீர்மானத்துடன் உள்ளார்கள் இப்படக் குழுவினர். ‘ஐ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தற்போது ‘யு’ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு கிடைக்காவிட்டாலும் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. “பொங்கலுக்கு முன்பு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடுவோம். இதிலிருந்து எந்த காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை” என்கிறார்கள் இப்படக் குழுவினர். மிக விரைவில் ‘ஐ’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 



            ‘என்னை அறிந்தால்’
            படத்தின் முதல் பாதியின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இரண்டாம் பாதிக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்துவருகின்றன. அதையும் விரைவில் முடித்து ஹாரிஸ் ஜெயராஜிடம் பின்னணி இசைக் கோப்பு பணிக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். “ஜனவரி 15-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் அதற்குள்ளாகவே முடிந்துவிடும்” என்கிறார்கள் ‘என்னை அறிந்தால்’ படக் குழுவினர். 



            ‘ஆம்பள’
            படப்பிடிப்பு தொடங்கும்போதே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரு கின்றன. இத்தாலியில் பாடல் காட்சிகளை படமாக்கி திரும்பியுள்ள நிலையில் டிசம்பர் 27-ம் தேதி இசை வெளி யீட்டு விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்கிறார்கள் படக் குழுவினர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது இப்படக்குழு. 



            ‘கொம்பன்’
            ‘கொம்பன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு 26-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் உள்ளிட்டவற்றையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ‘கொம்பன்’ குழுவினர் உறுதியாக இருக்கிறார்கள். 



            ‘காக்கி சட்டை’
            டிசம்பர் வெளியீட்டில் இருந்து பொங்கல் ரேஸில் புதிதாக இணைந்துள்ள படம் ‘காக்கி சட்டை’. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் அப்பணியும் முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறுகிறது ‘காக்கி சட்டை’ படக் குழு. 


            மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் ‘ஐ’, ‘ஆம்பள’, ‘காக்கி சட்டை’ ஆகியவை பொங்கல் வெளியீட்டில் இருந்து எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் அட்மஸ் நிறுவனம் ஜனவரி 14-ம் தேதி படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி என்றால் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. 


            நன்றி- த இந்து