திருடர்களில் பல வகை உண்டு . விஜய் மல்லய்யா மாதிரி லோன் வாங்கும்போதே இதை ஆட்டையைப்போடப்போறோம்னு திட்டம் போட்டு திருடறது ஒரு வகை . உழைக்க வக்கில்லாம அரசியலுக்கு வந்து ஊரான் ஊட்டு சொத்தைக்கொள்ளை அடிக்கறது ஒரு வகை ( எல்லா அரசியல்வாதிகளும் அல்ல, 98% பேர் மட்டும் தான் திருடனுங்க) ஆடம்பர வசதி வாய்ப்புக்காக தொழில் ரீதியாவே திருடனா இருப்பது .
மேலே சொன்ன இந்த 3 வகையும் சட்டத்தின் பிடியில் அதிகம் மாட்டிக்க மாட்டாங்க , ஏன்னா சாமார்த்தியமா , விஞ்ஞானப்பூர்வமா திருடி தப்பிச்சிடுவாங்க . ஆனா மிடில் கிளாஸ் ஃபேமிலி முன் பின் திருடி அனுபவம் இல்லாம புதுசா திருடும்போது மாட்டிக்குவாங்க . அப்படிப்பட்ட ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி ல நடந்த ஒரு சம்பவம் தான் இந்த படம்
spoiler alert
இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம் . சுத்து வட்டாரம் 4 கிமீ ரேடியஸ்ல ஜன நடமாட்டமே இல்லாத இடத்துல ஒரு வீடு , மிடில் கிளாஸ் ஃபேமிலி , அம்மா, அப்பா , வயசுக்கு வந்த மகள் . இவங்க வீட்ல பசு , ஆடு எல்லாம் இருக்கு , கொஞ்சம் நிலம் இருக்கு , விவசாயக்குடும்பம், கொஞ்சம் கடன் இருக்கு
அந்த ஊருக்கு ஒரு ஆள் கைல 2 சூட்கேசோட வர்றாரு , ஒரே ஒரு நைட் மட்டும் இங்கே தங்கிக்கறேன், காலைல கிராமத்துல போய் தங்கிக்கறேன்கறாரு. அப்போ ஆடியன்ஸ் எண்ணம் இவரு இந்த குடும்பத்தை என்ன பண்ணப்போறாரோ?னு பதை பதைப்பா இருக்கும்போது திரைக்கதை யு டர்ன் அடிச்சு திரும்புது.
அந்த சூட்கேஸ்களில் நகை , பணம் இருப்பதைத்தெரிந்து கொண்டு அவனைப்போட்டுத்தள்ளிட்டு அதை சொந்தம் கொண்டாடிடலாம்னு நினைக்கறாங்க . அவங்க எண்ணம் நிறைவேறுச்சா? இல்லையா? என்பதே மீதி திரைகக்தை
மொத்தமே ஒண்ணே முக்கால் மணி நேரம் தான் பட,ம். அதுல முதல் 20 நிமிசம் தேவை இல்லாத காட்சிகள் ., இண்ட்ரோ சீன்கள் . கதை 21 வது நிமிசத்துல தான் ஆரம்பிக்குது . 45 வது நிமிசத்துல தான் பரபரப்பு ஸ்டார்ட் ஆகுது. ஒரு தேவை இல்லாத நாயகி சோலோ சாங்க் இருக்கு , சகிச்சுக்கனும் , மோசம் இல்லை
நாயகியாக வரலட்சுமி சரத் குமார். கிராமத்துப்பெண்ணாக கச்சிதமான ஒப்பனை , உட்ல் மொழி , வ்ல்லி ரோல் இவருக்கு கைவந்த கலை நாயகியின் அப்பாவாக சார்லி , அம்மாவாக ஈஸ்வரி ராவ் கொடுத்த கேரக்டரை கச்சிதமாக திரை மொழியில் கொண்டு வந்திருக்கிறார்கள் .,ஊருக்கு வரும் இளைஞனாக சந்தோஷ் பிரதால் கனகச்சிதம் . போஸ்டர் டிசைன்களில் இவர்தான் வில்லன் என்பது போல் காட்டி விட்டு ஹீரோ மாதிரி கேரக்டரை வடிவமைத்தது அருமை .
சார்லி பொறுப்பில்லாத குடிகார ரோலில் கச்சிதமாக நடித்திருக்கிறார், விழி ஒளி இழந்தவராக சென்றாயன் அற்புதமான நடிப்பு. சாராயக்கடை பார் ஒனராக வரும் இயக்குநர் சுப்ரமணியம் சிவா இரண்டே காட்சிகளில் வந்தாலும் சிக்சர் அடிக்கிறார்
1981 காலகட்டத்தில் கதை நடப்பதால் ஆர்ட் டைரக்சனுக்கு ஓவர் லோடு ஒர்க்
இசை ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாம் தரம். சாம் சி எஸ் பின்னணி இசையில் பரபரப்பைக்கூட்டி இருக்கிறார்.
தயாள் பத்மனாநாபந்தான் இயக்கம். பெரும்பாலான காட்சிகள் நைட் எஃபக்டில் எடுக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலை தான்
சபாஷ் டைரக்டர் ( தயாள் பதமனாபன்)
1 யாராலும் யூகிக்க முடியாத அபாரமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
2 பணம் கிடைக்குது என்றதும் சராசரி மனிதனின் மனம் பேராசைப்படும் விதம் பற்றிய காட்சி அமைப்புகள்
லாஜிக் ,மிஸ்டேக்ஸ்
1 புது ஊருக்கு வரும் ஹீரோ கைல உள்ள 2 சூட்கேஸ்லயும் நகை , பணம் வெச்ட்டு தைரியமா ஆத்துல குளிப்பது எப்படி? கரைல அசால்ட்டா வெச்ட்டு இவரு பாட்டுக்கு தண்ணிக்குள்ளே 10 நிமிசம் யோகா பண்ணிட்டு இருக்காரு , அப்டியாவது நீச்சல் அடிக்கற மாதிரி காட்டி இருந்தாக்கூட ஒரு பார்வை கரை மீது இருக்கும்
2 முன் பின் தெரியாத ஆள் திடீர்னு வந்து டீத்தூள் வாங்க காசு தர்றேன், போய் வாங்கிட்டு வாங்கன்னா யாராவது வீட்ல மனைவி , மகள் இவங்களை தனியா விட்டுட்டுப்போவாங்களா? அக்கம் பக்கம் யாரும் இல்லா இடம் வேற
3 ஒரு பொண்ணு ஒரு ஆளை தன் வயப்படுத்தனும்னு நினைச்சா அதை சாதிக்க 1008 வழி இருக்கு, பொதுவா பொண்ணு அதை பூடகமாதான் வெளிப்படுத்துவா , இப்டி பட்ட வர்த்தனமா வெளிப்படுத்த மாட்டா . அதுவும் கிராமத்துப்பொண்ணு வேற
4 விருந்தாளியைக்கொலை செய்ய முடிவெடுத்த நாயகி நைட் அவன் தூங்கும்போது போட்டுத்தள்ளுவதுதானே ஈசியானதாக இருக்கும்?
5 கிராமங்களில் இருக்கும் நாய் பொதுவா அரளி விதை மாதிரி விஷம் கலந்த உணவை மோப்பம் பிடிச்சிடும், சாப்பிடாது
6 வீட்டுக்கு வரும் போலீஸ் என்கொயரிக்கு முன் புது பூட்ஸ் வாசலில் இருப்பதைப்பார்க்கலையே ஏன்/?
7 வீடு செட்டிங்ல போட்டது நல்லா தெரியுது
நச் டயலாக்ஸ் ( ஜான் மகேந்திரன் )
1 கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை இப்படி யாரும் அநாவசியமா செலவு பண்ண மாட்டாங்க , இது திருட்டுப்பணமாதான் இருக்கும்
2 ஒரு உயிர் வாழ இன்னொரு உயிர் சாகனும் , இது இயற்கையின் நியதி
3 ஒரு உயிருக்கு பசி அசங்கனும்னா இன்னொரு உயிருக்கு மூச்சு அடங்கனும், கொன்றால் பாவம் தின்றால் போச்சு பழமொழி நீ கேட்டதில்லை ?
4 தான் ஆசைப்பட்ட ஆம்பளை இவ்ளை வேண்டாம்னு தட்டிக்கழிப்பது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?
5 பெரிய மிருகம் சின்ன மிருகத்தை வேட்டை ஆடுவதும், சின்ன மிருகம் அதை விட சின்ன மிருகத்தை வேட்டை ஆடுவதும் சகஜம்
6 கண்ணு தெரியாதவன் குருடன் இல்லை , கண் தெரிஞ்சும் வழி மாறி தவறான பாதையில் போகிறவன் தான் குருடன்
சி.பி ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் விரும்புகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் , டோண்ட் மிஸ் இட் , . ரேட்டிங் 3.25 , ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 44
சில சுவராஸ்ய தகவல்கள்
1 இது 14 நாட்களில் உருவான மினிமம் [பட்ஜெட் படம்
2 இது / 2018ல் கன்னடத்தில் உருவான ஆ கராலா ராத்ரி படத்தின் அஃபிசியல் ரீமேக்
3 கன்னடம் , தெலுங்கு இரு மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப்பெற்ற படம்
3 இயக்குநர் தயாள் பதமனாபன் ஒரு தமிழர் கன்னடத்தில் இதுவரை 18 படங்களையும் தெலுங்கு , தமிழ் ஆகிய மொழ்களில் தலா ஒரு படமும் இயக்கி உள்ளார். தெலுங்கு , தமிழ் இரு படமுமே கன்னட ரீமேக் தான் இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் . கதைக்களம் த்ருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் கிராமத்தில் நடைபெறுவதாக இருக்கிறது ,
4 இந்தப்படத்தின் ஒரிஜினல் வெர்சன் 2018ஆம் ஆண்டின் சிறந்த படமாக மாநில அரசின் விருது பெற்ற படம்
5 ரூபர்ட் ப்ரூக் 1918ல் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது
6 இதன் ஒரிஜினல் வெர்சன் கன்னடப்படம் யூ ட்யூப்ல, டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது