Showing posts with label கொட்டுக்காளி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( டிராமா). Show all posts
Showing posts with label கொட்டுக்காளி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( டிராமா). Show all posts

Tuesday, August 27, 2024

கொட்டுக்காளி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( டிராமா)

       

         


  கேட்கறவன்  கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கேபிள் கனெக்சன்  இல்லாமலேயே  கே  டி வி  தெரியும்னு சொன்ன கதையா  திரை உலக பிரபலங்கள் இந்தப்படத்துக்குக்கொடுத்த பிரமோஷன்கள் ஓவர் ஆக்டிங் ஓமனா  வகையறா . பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு இணையான  திரை உலக அனுபவம் மிக்க சாய் வித் சித்ரா  எம் டி சித்ரா லட்சுமணன் சாரே இப்படத்தை சிலாகித்ததும் , கதையே கேட்காம படத்தை தயாரிக்க  முன் வந்த சிவகார்த்திகேயன் பிராண்ட்  ஆகியவை தான் இப்படத்தைக்காண வைத்த காரணிகள்    

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் ஓரூ கிராமத்தான் .பட்டிக்"காட்டான்" . வில்லனின்  முறைப்பெண்ணான நாயகி கல்லூரி மாணவி . வேறு ஒரு சாதிக்காரனை லவ்  பண்ணுவதால்  அவள் மனசை மயக்கி  இருப்பதாக சொந்தக்காரர்கள் எண்ணுகிறார்கள் .அந்த ஊர் வழக்கப்படி  ஊர் எல்லையில் இருக்கும் பூசாரியிடம் அழைத்து சென்று  பேய் ஓட்டி விட்டால் அவள் மனசு மாறும் என மடத்தனமாக எண்ணுகிறார்கள் .வில்லன் , நாயகி , நாயகியின்  பெற்றோர் , சொந்தபந்தங்கள் சிலர்  இவர்கள் அனைவரும்  மேற்கொள்ளும் பயணம்  தான்  மொத்தக்கதை யுமே 


வில்லன் ஆக  புரோட்டா சூரி , கச்சிதம் .மொக்கைக்காமெடி நடிகராக இருந்தவர்  சமீபகால  விடுதலை , கருடன் படங்கள் 


மூலமாக கதையின் நாயகன் ஆக மாறுபட்ட  நடிப்பைத்தந்தவர்  இந்தப் படத்தில்  வில்லன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் 


நாயகி ஆக   அன்னா  பென் . முழுப்படத்திலும்  ஒரே ஒரு வரி டயலாக் தான் . பார்வை மட்டுமே பேசுகிறது .

மற்ற அனைவரும் புது முகங்கள் . அனைவரின் நடிப்பும் கச்சிதம் 


படத்தில்  இசை , பின்னணி இசை இல்லை . வாகனங்களின் ஒலி  மட்டுமே ஓசை . புதுமைதான் 


டைட்டிலுக்கான அர்த்தம் அடங்காப்பிடாரி + அடமண்ட் கேர்ள் 


சபாஷ்  டைரக்டர்

1   பல விருதுகளை வென்ற  தன  முதல் படமான கூழாங்கல் என்ற விஸிட்டிங்க் கார்டை வைத்து   சிவகார்த்திகேயன்  மனதை கலைத்து தயாரிப்பாளர் ஆக்கிய சாமர்த்திய,ம் 



2   படம் வெளியாகும் முன்பே  அனைத்து மீடியாக்கள் , விஐபிக்கள்  பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க வைத்தது 



3  இசை அமைப்பாளர் , திரைக்கதை ஆசிரியர் இருவர் சம்பளத்தை மிச்சம் செய்ய படத்தில்  இரண்டையும் ஆப்சென்ட் ஆக்கியது 



4    முக்கியமான இடத்தில் படத்தை நிறுத்தி க்ளைமாக்ஸை  உங்கள் யூகத்துக்கே  விடுகிறோம் என எஸ்கேப் ஆன விதம் 


5  விடுதலை , கருடன் இரண்டு படங்களின் ஹிட்டால் சூரி மார்க்கெட்  உயர்ந்திருப்பதை  உணர்ந்து சாமார்த்தியமாக  அவரை  வில்லனாக புக் செய்தது 

  ரசித்த  வசனங்கள் 

1   எருக்கம்பாலை வெச்சா  எந்த விஷமா இருந்தாலும்  முறிந்துவிடும் 


2 நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் நாம் பேசவே கூடாது 


3  கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது 


4  லவ் பண்ணுனவனையே  நீ யாரு? என அவளையே கேட்க வெச்சிடும் சாமி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   மனசாட்சியே இல்லாம 15  நிமிட குறும்படத்துக்கான கண்டடெண்டடை   ஒன்றே  முக்கால் மணி நேர படமாக எடுத்தது  எதனால் ? 


2  திரைக்கதை சுவராஸ்யமாக எழுத  வரவில்லை   என்பதற்காக    பயணத்தின் போது  சிறுவன்  பாத்ரூம்   போவதை ,  பெண்ணுக்கு  மென்சஸ் ஆனதால்  ஒதுங்கி காட்டின் மறைவில்   கேர்ப்ரீ  வைப்பதை . குடிகாரர்கள்  சரக்கு அடிக்க முயல்வதை  என நம் பொறுமையை சோதித்தது எதனால் ? 


3  அனைவரும் சேலை அணிந்திருக்கும்போது  நாயகியை மட்டும் சுடிதார்  அணிய விட்டது எப்படி?  வில்லன் தான் கட்டுப்பட்டி ஆச்சே? ? 


4    வில்லன் கண்ணில் காற்றில்  தூசியுடன்  முடி வந்து ஒட்டிக்கொள்ளும்போது  சொந்தக்காரப்பெண்   தன்  நாக்கால்  எடுப்பது  ஓகே . எதுக்கு அவ்ளோ கஷ்டம் ? ஒரு பாக்கெட்டில்  தண்ணீரில்  கண்ணை திறந்தபடி முகத்தை முங்கினால் வந்துடும் 


5  மிக மிக ஸ்லோ  மூவியான இதில்  ஓப்பனிங்  டயலாக்  - சீக்கிரம் வாப்பா.    என்ன கொடுமை சார் இது ? 



6  வில்லன்  நாயகி ஒரு பாட்டு முணுமுணுத்தாள் என்பதற்காக அவளை , குடும்பத்தை அடித்து நொறுக்குவது ஓவர் . இப்படிப்பட்ட முரடனுக்கு  எந்தப்பெற்றோர்   தன்  மகளை  கல்யாணம் பண்ணி வைப்பார்கள் ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட்ட   முயற்சிதான் , ஆனால் விருதுக்கான  படம் . இந்தப்படத்துக்கு   பொய்யான ;பாசிட்டிவ்   ரிவ்யூஸ் கொடுத்து மக்கள்  பணத்தை தண்டம் ஆக செலவு செய்ய வைப்பது  குற்றம், பாவம் , இப்படி எல்லாம்  ஏமாற்றி சம்பாதித்தால் அந்தப்பணம் ஒட்டாது .  நாசமாபோகும் .


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் 41 

 குமுதம் ரேங்கிங்க் - ஓகே 

  ரேட்டிங்  2 / 5