பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம்; விவசாயம், தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவை நிறைவேற்றப்படும்; காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு ஆகிய இடங்களில் தமிழ்நாட்டின் உரிமை மீட்கப்படும்.
"மாற்றத்துக்காக- அன்புமணி" (Anbumani- for change) என்ற கைபேசி செயலி சேவை செப்டம்பர் 2-ம் தேதி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் சமூக ஊடகங்களைக் கொண்டே வியத்தகு வெற்றியை பெற்றனர். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட திமுகவின் இணையதளம், தேமுதிகவின் கேப்டன் செயலி ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்போது பாமக கட்சியின் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் வகையிலேயே கைபேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது. வருங்கால முதல்வர் என்று பாமக கட்சி அறிவித்த, அன்புமணி ராமதாஸை முதன்மையாகக் கொண்டே இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
'படித்தவர்களே அரசியலுக்கு வரவேண்டும்' என்பதை முன்னிலைப்படுத்தும் பாமக, செயலியில் அன்புமணியின் சுயவிவரப் பக்கத்தில் அவரின் மருத்துவக் கல்வித்தகுதியை இணைத்திருக்கிறது. அவர் மருத்துவம் படித்ததையும், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறது.
அட்டவணை என்னும் ஐகானில் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின் இடம், தேதி மற்றும் நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்சி விவரங்கள் என்னும் ஐகானில், பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு, கட்சியின் தலைவர்கள் விவரம், ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை, சட்டமன்ற, மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் வெற்றி பெற்ற, பாமக உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளின் தொகுப்புகளும் உள்ளன. 'பாமக குறிப்பிட்ட இன மக்களின் நலனுக்காகவே இயங்கும் ஜாதிக்கட்சி' என்னும் பெயரை உடைக்கும் விதமாக, கட்சியின் முக்கியப் பொறுப்புகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரின் இனங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
வழக்கம்போலவே, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் இணைப்புகளும் தரப்பட்டிருக்கிறது.
புகைப்படங்கள், காணொளிகளைக் காணும் வகையில் தனித்தனியே ஐகான்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அன்புமணி நேரலைகளில் பங்கு கொள்ளும் நேரங்களில், அதைக் காணும் வகையில், நேரடி ஒளிப்பரப்புக்கு எனத் தனியாகவே ஓர் ஐகான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துபவர்கள், தங்களின் எண்ணங்களையும், யோசனைகளையும் புகைப்படமாகவோ, ஒலி, ஒளி வடிவிலோ தெரிவிக்கலாம். இதற்கெனத் தனியாக ஐகான் உள்ளது.
கட்சியில் சேர விரும்பும் நபர்கள், உறுப்பினர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைனிலேயே சமர்ப்பித்து பாமக உறுப்பினராகும் வசதியும் இதில் இருக்கிறது.
மது ஒழிப்புப் போராட்டத்தையே தன் முதன்மைப் பிரச்சாரமாக மேற்கொண்டு வரும் பாமக, தன் செயல்திட்டத்திலும் அதையே கூறியிருக்கிறது. அத்தோடு ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.
பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம்; விவசாயம், தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவை நிறைவேற்றப்படும்; காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு ஆகிய இடங்களில் தமிழ்நாட்டின் உரிமை மீட்கப்படும் என்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
நன்றி - த இந்து
- Sathyapriyanநிச்சயம் மற்றம் நிச்சயம், வாழ்த்துக்கள்Points2420(2) · (4)reply (0)
- RRamaswamy"ஒரு சொட்டு சாராயம் இல்லாத.. ஒரு ருபாய் ஊழல் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்...." இந்த வாக்குறுதி உங்களுக்கே ஓவரா தெரியவில்லை ?about 15 hours ago
- Ssathyapriyanஎதுங்க ஓவராஹ் தெரியது, நம்பிக்கை வையுங்கள் அதற்கான செயல் திட்டங்களையும் அனைவரிடமும் கட்டிக்கொண்டு தன இருக்கிறோம், வைப்பு கிடைத்தால்தான் அது நிறைவேறும்about 12 hours ago
- AAnbanகுட்டி மருத்துவர் : அந்த வயிறு வலி பேஷன்ட் என்ன கண்டிசன்ல இருக்கார் நர்ஸ் : நீங்க கொடுத்த மருந்து ஒரு வாரமா சாப்பிட்டும் குனமாகவில்லையாம் ஐயா ? குட்டி மருத்துவர் : உடனே 5ம் நம்பர் பெட் ரெடி பண்ணுங்க ஆபரேஷன் பண்ணனும் நர்ஸ் : ஐயா இது சாதாரண வயிறு வலி கேசு தானே குட்டி மருத்துவர் : மாற்றம் முன்னேற்றம் (நம்ம பேஷன்ட்க்கு சொன்னேன்)about 16 hours ago
- KK.Rajaramமருத்துவர் அன்புமணி அவர்களே, உங்கள் கட்சி ஜாதிக்கட்சி இல்லை என்று நீங்கள் சொல்லகூடாது, அதை மக்கள் சொல்லவேண்டும். உங்கள் பெயர் சொன்னாலே உங்கள் ஜாதி பெயரும் மக்கள் நன்றாக அறிவார்கள். நீங்கள் ஜாதிக்கட்சி இல்லை என்றால் முதல்வர் வேட்பாளாராக வேறு ஜாதி நபரை அறிவியுங்கள். மேலும் நீங்கள் குடும்ப அரசியல் கட்சி இல்லை என்றால் உங்கள் உறவு இல்லாத வேறு குடும்பத்தை சார்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளாராக அறிவியுங்கள்...பேசுவதற்கு உரிமை உள்ளதால் நீங்கள் நன்றாக பேசுகிறதாக நீங்கள் நினைக்கிறீர்கள்..about 18 hours ago
- Ssathyapriyanஎதை வைத்து சொல்கிறிர்கள் நங்கள் ஜாதி கட்சி என்று , உங்களுடைய ஜாதிவேரித்தான் எங்களை ஜாதிவெறி என்கிறது , மற்ற விஷயங்களை சிந்தித்து பாருங்கள் , தமிழகத்தில் மற்றதை ஒரு படித்த தமிழரை வைத்து ஈற்படுதுவோம்about 12 hours ago
- Natrajan Natarajanதன்னை புலி என்று நினைத்து புனை சூடுபோட்டது போல் உள்ளது.Points630
- R.M.Manoharan Manoharanமக்கள் திராவிடக்கட்சியைத்தவிர வேறு எந்த கட்சி மாற்றத்தையும் விரும்பவில்லை அன்பு.Points15145
- Bbalasubramaniyanஉங்கள் தந்தையும் குடும்ப அரசியல் தானே நடத்துகிறார்? 1. ஏன், உங்களைவிட்டால் ராஜ்ய சபைக்கு செல்ல தகுதியான ஆட்களே உங்கள் கட்சியில் கிடைக்கவில்லையா? 2. உங்களைவிட்டால் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியான, படித்த புத்திசாலி மனிதர் உங்கள் கட்சியில் இல்லையா? ஏன் இப்படி எல்லாருமே திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள்? உங்கள் ஜாதியினை சேராத ஒருவரை , அட்லீஸ்ட் உங்கள் குடும்பத்தை சேராத ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள், பிறகு பார்க்கலாம்..Points105
- VRV. Ramaswamyஇத்தகைய வீர வசனங்களோடு நீங்கள் சொல்லும் அத்தனை உறுதிமொழியையும் அதனோடு, இவற்றில் ஏதாவது ஒன்றைக் கூட இரண்டாண்டிற்குள் செயல் படுத்த இயலாவிட்டால், உடன் எம் எல் எ பதவியை ராஜினாமா செய்வதாகவும் அந்த இடத்தை நிறப்ப ஆகும் தேர்தல் செலவை உங்கள் கட்சி ஏற்கும் என்றூம் கையொப்பமிட்டு உறுதியளியுங்க்கள், மக்கள் உங்களுக்கு ஆதரவு செய்வார்கள்.Points1230
- Bala Sundramஅன்பு மணி முதலவராக ஆசை படுவதில் தவறு இல்லை .இதில் இவருக்கு உள்ள இடர்பாடுகளை எண்ணி பார்த்து அடுத்த நடவடிக்கைகளை முன் எடுக்க வேண்டும்.முதலில் இவரது கட்சியில் இருந்து பிரிந்து போன உடன் பிறப்புகளை மீண்டும் கட்சிக்கு இழுக்க நேரத்தை செலவிட வேண்டும். கட்சியில் ஒரு அன்புமணி தான் இபொழுது தெரிகிறார். பல அன்புமணிகளை கட்சி உருவாக்க முடிந்தால் இவரது மாற்றத்திற்கான முயற்சி எளிதில் வெற்றி காண உதவும் இவர் இன்னமும் பல தடங்கல்களை கடந்தாக வேண்டும் சுந்தரம்