Showing posts with label கூகுள் சிஇஓ. Show all posts
Showing posts with label கூகுள் சிஇஓ. Show all posts

Thursday, August 13, 2015

கூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்னை பள்ளிகள் -கவிதா கிஷோர் ரம்யா கண்ணன்


சுந்தர் பிச்சை | கோப்புப் படம்
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சையின் அடையாளத்தை தங்கள் கல்வி நிறுவனத்துடன் சேர்த்து பெருமை தேடிக் கொள்ள சென்னையில் நேற்று (செவ்வாய்கிழமை) சுவாரசியமிகு கடும் முயற்சி நடந்திருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில் அந்தத் தேடல் தொடங்கிவிட்டது.
ஆம், சென்னையில் பிரபல பள்ளிகள் சிலவும், மீடியாக்கள் சிலவும் இணைந்து சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை வேரைத் தேடத் தொடங்கின.
சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் 1989-க்குப் பிறகு சுந்தர் பிச்சை சென்னை நகரைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலே முதலில் கிடைக்கப்பெற்றது.
அடுத்தபடியாக சென்னை ஜவஹர் வித்யாலயா பள்ளியில் சுந்தர் பிச்சை படித்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து, சென்னை அசோக்நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆலிஸ் ஜீவன் கூறும்போது, "ஊடகங்கள் மூலமே சுந்தர் பிச்சை கூகுள் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர் எங்கள் பள்ளி ஆவணங்களை சரி பார்த்தபோது சுந்தர் பிச்சை கடந்த 1979 முதல் 1987 வரை எங்கள் பள்ளியில் படித்தது உறுதியானது. அவரது மாற்றுச் சான்றிதழ் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது அவரைப் பற்றிய வேறு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சுந்தர் பிச்சை ஒருவேளை சுட்டிக் குழந்தையாக இருந்திருந்தால் அவர் நினைவில் நின்றிருப்பார். அவரோ அமைதியான பையனாக இருந்தார்" என்றார்.
11 மற்றும் 12-ம் வகுப்பை சுந்தர் பிச்சை தங்களது பள்ளியில் தான் படித்தார் என வேளச்சேரி வனவாணி பள்ளி தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு இன்னமும் சுந்தர் பிச்சை தங்கள் படித்ததற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.
பள்ளிகள் ஒருபுறம் சுந்தர் பிச்சை குறித்த தகவல்களைத் தேடிக் கொண்டிருக்க, ஜவஹர் வித்யாலயா பள்ளி மாணவர் ஏ.எஸ்.குமார் என்பவர் ஜெ.வி. பியாண்ட் பேட்சஸ் (JV Beyond Batches) என்ற ஃபேஸ்புக் குழுமத்தை இயக்கி வருகிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் சுந்தர் பிச்சையின் பெற்றோர் அந்த ஃபேஸ்புக் குழுமத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் சென்னையில் உள்ள சுந்தர் பிச்சையின் பாட்டி ரங்கநாயகியை சந்தித்துள்ளார். ஆனால் 91 வயதான ரங்கநாயகியால் தனது பேரனின் பதவி உயர்வுக்கு மகிழ்ச்சி தெரிவிக்க முடிந்ததே தவிர பெரியளவில் தகவல்களை தர முடியவில்லை.
அசோக் நகரில் உள்ள அவரது பூர்விக வீட்டின் அருகே வசிப்பவர்கள் சுந்தர் பிச்சை இந்த வீட்டில் இருந்தபோது எப்போதாவது பேட்மிண்டன் விளையாட வெளியே வருவார் மற்றபடி அவருடன் பெரியளவில் நட்பு இல்லை என்றனர்.
திணறடிக்கப்பட்ட விக்கிப்பீடியா:
சுந்தர் பிச்சையின் புதிய பதவி குறித்த தகவல் வெளியான பிறகு விக்கிபீடியாவில் அவர் கல்வி குறித்த தகவல்களை பதிவு செய்யும் வகையில் அந்த குறிப்பிட்ட பக்கம் 100-க்கும் மேற்பட்ட முறை 'எடிட்' செய்யப்பட்டிருக்கிறது. கே.கே.நகர் பி.எஸ்.எஸ்.பி பள்ளி, அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா, வேளச்சேரி வனவாணி, ஆல் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என பல்வேறு பள்ளிகள் சுந்தர் பிச்சைகு சொந்தம் கொண்டாடியிருந்தன.
திணறடிக்கப்பட்ட விக்கிப்பீடியா ஒரு கட்டத்தில் சுந்தர் பிச்சையின் பக்கத்தை தனது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தது. அதன் பின்னர் சுந்தர் பிச்சையின் விக்கிபீடியா பக்கத்தை எடிட் செய்ய விரும்பியவர்களுக்கு "இந்த பக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது" என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
சுந்தர் பிச்சையின் அடையாளத்தை தங்கள் கல்வி நிறுவனத்துடன் சேர்த்து பெருமிதம் தேடிக் கொள்ள பலரும் அலைந்து திறிய, சத்தமே இல்லாமல் அந்த முயற்சிகளுக்கு இடைக்கால முற்றுப்புள்ளி வைத்தது விக்கிபீடியா.
ஆம்... சுந்தர் பிச்சை குறித்த பக்கத்தில், "சுந்தர் பிச்சை தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் சென்னையில் மேற்கொண்டார்" என பொத்தாம் பொதுவாக எடிட் செய்துவிட்டது விக்கிபீடியா!


  • Dandy  
    அமெரிக்கா என்றால் ஆ வென்று வாயை பிளப்பது ஏன்????தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டம்
    Points
    32405
    about 14 hours ago
     (2) ·  (0)

    Ram · reefa Up Voted
    • IIshaq  
      எப்ப பாரு அமெரிக்க போனதன் பெரிய ஆளா. அந்த ஆளு நம்ம நாட்டுக்கு செய்யுற தொரோகம்யா.
      about 15 hours ago
       (1) ·  (1)

      reefa Up Voted
      Mavala Down Voted
      • கண்ணன்  
        நாம்தான் விரட்டினோம் இங்கு IIT படிப்புக்கேற வெளி கிடைத்திருந்தால் ஏன் போகிறார் 20 ஆண்டுகளுக்கு முன் உலோகவியல் படித்தவர்களுக்கு அதுவும் முறப்ட்டவர்களுக்க்கு அரசுப்பணி கிடைப்பது கடினம் அதனால்தான் (தனியார கம்பெனி) தனது ஓராண்டு சம்பளத்தை டிக்கெட் வாங்கவே செலவழித்து அமெரிக்கா அனுப்பினார் அவரது தந்தை நாம் ஒரு அறிவாளியை இழந்தோம் .இவரைப்போல பல்லாயிரம் உண்டு
        about 13 hours ago
         (2) ·  (0)

        sundadararajan · RAJARAMANV Up Voted
      • TT.  
        கண்ணன் !! நீங்க எப்படி இதுல இட ஒதுக்கீடு கொண்டிவறீங்க. பிச்சை என்பதை வைத்து வேறு ஏதாவது சொல்லிவிட போறீங்க. நன்கு தெரிந்தால்., விளக்கவும். தெரிந்து கொள்ள ஆசை !!. - இரவி
        Points
        2985
        about 16 hours ago
         (0) ·  (0)

        • கண்ணன்  
          முந்தைய தலைமுறைவரை ஏதோ ஒரு அரசு கிளார்க் வேலை கிடைத்தால்போதும் என்று போதுமென்ற மனதோடு இருந்தார்கள் சுந்தர் பிச்சையின் இனத்தவர்!.இட ஒதுக்கீடு அவர்கள் கனவை சிதைத்துவிட்டது .எனவே வயிற்றை காயப்போட்டவது(பிச்சைபுகினும் கற்கை நன்றே) அவரது கீழ் நடுத்தரக்குடும்ப தந்தை.சுந்தர் பிச்சையை IIT ஸ்டான்போர்டு என அனுப்பி உயர்த்தினார் இவரென்னவோ பிழைத்துவிட்டார் இன்னும்கூட அதே இனத்தில் சமையல் பிணம்தூக்கிகள் காரியம் செய்பவர்கள் எனும் பெரும் பிரிவு மறைமுக தீண்டாமையை சந்தித்துக்கொண்டிருக்கிறது .அரசும் அவர்களை மனசாட்சியே இல்லாமல் முற்பட்டவராகக் கருதுகிறது
          about 13 hours ago
           (0) ·  (1)

          RAJARAMANV Down Voted
        • RRamana  
          பள்ளி கல்வி விவரம் கிடைத்தால், குறிப்பிட அந்த பள்ளி கல்வி கட்டணத்தை உயர்த்தும்.
          about 16 hours ago
           (1) ·  (0)

          reefa Up Voted
          • கண்ணன்  
            கலைஞர் மற்றும் பெரியாருக்கு நன்றி .அவர்களது இட ஒதுக்கீடு மட்டும் இல்லாமலிருந்தால் இவரும் முன்னோர் போலவே ஒரு UDC கிளார்க் ஆக இங்கேயே செட்டில் ஆகியிருப்பார் .இட ஒதுக்கீடு இவரை அமெரிக்காவுக்கு விரட்டியது உயரவும் வைத்தது .நட்டம் நமக்கு .லாபம் கூகிளுக்கே ! இட ஒதுக்கீடு வாழ்க !
            Points
            7990
            about 17 hours ago
             (6) ·  (0)

            sundadararajan · RAJARAMANV · rajesh · Raj · Mavala · JB Up Voted
            • VVottriyuraan  
              ஒரு பிச்சை போனால் பரவாஇல்லை.இரண்டு தலைமுறை முன்னேறியது பெரிது. இட ஒதிக்கீடு இல்லை என்றால் இன்னும் எங்களை அடிமையாகவே வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம்.
              about 16 hours ago
               (7) ·  (5)

              Raja · செ · sundadararajan · Sundaravathanan · Sivasankaran · Jerry · anitha Up Voted
              reefa · RAJARAMANV · rajesh · Mavala · JB Down Voted
              • கண்ணன்  
                யாரை யார் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்? தலிதுக்களிக் கேளுங்கள் யார் வன்கொடுமைகளில் மிக மிக மிக அதிகமாக ஈடுபட்டு கொடுமைபடுத்துகிரார்கள் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் என்று !
                about 13 hours ago
                 (2) ·  (0)

                RAJARAMANV · Raj Up Voted
              • கிரிஷ்  
                இவரைப் போல நிறைய பேர் இட ஒதுக்கீடு இருப்பதால் அமெரிக்க சென்று நாசாவில் சேர்ந்து விட்டதால் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் இஸ்ரோவில் சேர்ந்து வெற்றிகரமாக மங்கல்யான் சாதனை படிகிறார்கள்,
                about 13 hours ago
                 (2) ·  (1)

                reefa · Sundaravathanan Up Voted
                RAJARAMANV Down Voted
              • MMari  
                அவர் முன்வந்து அவருடைய பள்ளி கல்வி அனுபவங்களை பகிர வேண்டும் விடை கிடைக்கும் மாணவர்களுக்கு உத் வேகம் கிடைக்கும்