1990கள்ல எல்லாம் சின்சியரான லவ் நிஜமாவே இருந்துச்சு. காதல் நிறைவேறலைன்னா தற்கொலை பண்ணிக்குவாங்க , இப்போ எல்லாம் அது வழக்கொழிந்து போய் விட்டது , ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம் பாலிசிதான், பிரேக்கப் என்பது சர்வ சாதாரணமா நடக்குது. ஆண்கள் தரப்புல என்ன தப்புன்னா அழகை பார்த்துதான் லவ் பண்றாங்க.பொண்ணுங்க சேஃப்டி சைடு, சொந்த வீடு , வசதி வாய்ப்பு எல்லாம் பார்க்கறாங்க நடிகைகள் பெரும்பாலும் தொழில் அதிபரைக்காதலிப்பது இந்த ஃபார்முலால தான்
படத்தோட நாயகி 3 விதமான தொடர்புல இருக்குது. முதல்ல ஒருத்தனை லவ்வுது அவன் பொருளாதார ரீதியில் செட் ஆக மாட்டான் அது போக அவனுக்கு உடல் ரீதியா ஒரு குறை இருக்குனு தெரிஞ்சதும் ஓப்பனா அவன் கிட்டே சொல்லிட்டு அவனைக்கழட்டி விட்டுடுது , பிறகு ஒரு பசை உள்ள பார்ட்டியா பணக்கார வீட்டுப்பையனை லவ்வுது . மேரேஜ்க்கு முன்னேயே என்னென்ன நடக்கனுமோ அது எல்லாம் நடந்துடுது. நாயகி ஒரு தொழில் அதிபர் கம்பெனில செகரட்ரியா ஒர்க் பண்ணுது, அவர் வேலை விஷயமா நாயகி வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கறாரு
ஒரு கட்டத்தில் நாயகி கொலை செய்யப்படறா. அந்தக்கொலையை செஞ்சது யாரு? என்பதுதான் திரைக்க்தை ட்விஸ்ட். திரைக்கதையின் சுவராஸ்யமே சம்பந்தப்பட்ட 3 பேருல 2 பேர் அந்தப்பொண்ணு இறக்கும் முன் அவ வீட்ல இருந்து வெளில வர்றதை ஒருத்தன் பார்த்துடறான். அவங்க 2 பேரையும் இதை வெச்சு மிரட்டி பணம் கறக்கப்பார்க்கிறான். நிஜக்கொலையாளியை எப்படி கண்டு பிடிச்சாங்க? அல்லது கடைசி வரை கண்டு பிடிக்கவே இல்லையா? என்பது படத்தில் காண்க
யார் யார் என்ன கேரக்டர் அப்டினு ஓப்பன் பண்ணினா சஸ்பென்ஸ் உடைஞ்சிடும் அபாயம் இருப்பதால் பொத்தாம் பொதுவா பார்ப்போம்
புதுப்புது அர்த்தங்கள் ரகு என்கிற ரகுமான் ஜெண்டில்மேனா வந்துட்டுப்போறார் .கொலை நடந்த வீட்டில் இருந்து அவர் வெளில வரும்போது எதிர் வீட்டு ஆள் பார்த்து விடுவது திடுக் திருப்பம்
நாயகியின் 2 வது காதலனா , பணக்கார பார்ட்டியா வரும் ஆள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் , அந்த ரோலுக்கு பிரபல ஹீரோ அல்லது அறிமுகம் ஆன ஒருவரை புக் பண்ணி இருந்திருக்கலாம்
விதார்த் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வரும் விழி ஒளிக்குறைபாடு உள்ள கேர்கடரில் வருகிறார். பாந்தமான நடிப்பு . ஆபரேஷனுக்கு 3,20,000 ரூபா தேவைப்படும் என டாக்டர் சொன்னதும் அதற்கு வழி இல்லாமல் திண்டாடுபவர் ஒரு ஜாக்பாட் அடித்து எவ்ளோ பணம் வேணும் என ஒருவர் கேட்கும்போது கரெக்டா அதே 3,20,000 ரூபா தேவை என அதிகம் ஆசைப்படாத நல்ல கேரக்ட்ரா வருகையில் ஆச்சரியபப்டுத்துகிறார். நாமா இருந்தா ரவுண்டா 5 லட்சம் அல்லது 7 லட்சம் கேட்டிருப்போம்
விதார்த் உடன் பணி ஆற்றும் அந்தப்பெண் யாரோ? அருமையான நடிப்பு , ஓப்பனிங் சீனில் இருந்து கடைசி வரை அவரது கண்களில் விதார்த் மீதான காதல் கலந்த பார்வை அற்புதம், மதியம் லஞ்ச் ஷேர் ப்ண்ணும்போது விதார்த்க்கு மட்டும் கொடுக்காமல் இன்னொருவருக்கும் கொஞ்சம் கொடுக்கும் பாங்கும் ரசிக்க வைக்கிறது . கிளாமரை நம்பாமல் முகபாவனையை நம்பும் இது போன்ற நடிகைகள் கவனிக்கப்பட வேண்டும்
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நல்லாருந்தது. கொலைகாரன் யார்? என பூடகமாகத்தான் சொல்லப்பட்டிருக்கும். கொலை நடக்கும்போது கொலையாளியை காட்டும் வழக்கமான பாணி இதில் இல்லை , அதனால தம் அடிக்க வெளில போனா மிஸ் பண்ணிடும் அபாயம் உண்டு
ஐஸ்வ்ர்யா ஒரு ரோலில் வருகிறார், ஆனா அவருக்கு வாய்ப்பு குறைவு , வந்தவரை ஓக்கே
ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் போன்ற தொழில் நுட்ப அம்சங்கள் கச்சிதம்
சபாஷ் இயக்குநர்
1 டன்னல் விஷன் எனும் புதுமையான குறைபாட்டை தமிழ் சினிமாவுக்குப்புதிய அறிமுகம் தந்தவர் என்ற அளவில் பாராட்டலாம்
2 டாக்டருக்கும் நோயாளிக்குமான ஒரு உரையாடலில் வசனகர்த்தா அப்ளாஸ் வாங்கறார்
“ எத்தனை வருசமா இந்தக்குறைபாடு இருக்கு ?
சின்ன வயசுல இருந்தே
ஏன் முதல்லயே டாக்டர்ட்ட காட்டலை?
எல்லாருக்கும் இப்டிதான் இருக்கும்னு நினைச்ட்டேன் டாக்டர்
3 ஆபரேஷனுக்கான பணத்தைக்கட்டிய நபரை வழியில் பார்க்கும் டாக்டர் காரிலிருந்து இறங்கி அவரிடம் இந்த நோய்க்கு ட்ரீட்மெண்ட்டே கிடையாது , நிர்வாகம் உங்களை எமாத்துது , எனக்கு மன்சு கேட்க்லை என சொலவ்து டச்சிங்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்:
1 போலீஸ் டிபார்ட்மெண்ட்ல மோப்ப நாய் மோப்பநாய்னு ஒண்ணு இருக்கு , அது டைரக்டருக்கு தெரியுமா? தெரியாதா?10 நிமிசத்துல கேஸ் முடிஞ்சிருக்கும், அதை விட்டுட்டு போலீஸ் அந்த ஏரியா பூரா தண்டமா விசாரிச்ட்டு இருக்கு
2 இது ஒரு திட்டமிட்ட கொலை , ஆனா கொலை காரன் பட்டப்பகல்ல கொலை செய்வது ஆச்சரியம். கொலை செய்யப்படும் நபருடன் தான் சுற்றியதை , லவ்வியதை பார்த்த சாட்சிகள் இருக்கும் என அவன் பயப்படாதது ஏன்?
3 கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டுக்கு வந்து போனதைப்பார்த்த சாட்சி சம்பந்தப்பட்ட ஒருவரிடமும் பேரம் பேசி பணம் பெறுவது எல்லாம் போலீஸ் கண்காணிப்பில் மாட்டாத அளவில் என்பது நம்பும்படி இல்லை
4 மூணே கால் லட்சம், 5 லட்சம் என ஓப்பன் செக் கிடைக்குது. அதை எல்லாம் பேன் கார்டு இல்லாம ஈசியா கேஷ் பண்றாரு ஒருவர். இந்த கேஷ் ஏது > எப்படி வந்தது ? என போலீஸ் கேட்டா அவர் கிட்டே சரியான பதில் இல்லை
சிபி ஃபைனல் கமெண்ட் = நம்ப முடியாத சில பல லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உள்ள ஒரு நல்ல கரைம் த்ரில்லர் ,யூ ட்யூப்ல ஹிந்தி டப்பிங் ல கிடைக்குது , தமிழ் வெர்சன் பிளாக்ட். ரேட்டிங் 2.75 . 5