Showing posts with label குறிஞ்சாக்கீரை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?. Show all posts
Showing posts with label குறிஞ்சாக்கீரை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?. Show all posts

Monday, November 06, 2023

குறிஞ்சாக்கீரை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?




 நம்மில்  பலரும்  இந்தக்கீரை  பற்றிக்கேள்விப்பட்டிருக்கவே  மாட்டோம், பார்த்திருக்கவும்  மாட்டோம், ஆனால்  இதன்  மருத்துவப்பயன்கள்  அளப்பரியது சர்க்கரை  நோயாளிகளுக்கு  இக்கீரை  ஒரு  வரப்பிரசாதம்.  இன்சுலீன்  ஊசி   போட்டுக்கொள்பவர்கள்  கூட  தொடர்ச்சியாக  இக்கீரை  சாப்பிட்டு  வந்தால்  சர்க்கரை  அளவு  குறைவதைக்காணலாம் 

 சர்க்கரை  நோயாளிகள்  பலருக்கும்  ஏதாவ்து  இனிப்பு  சாப்பிட  வேண்டும்  என்ற  எண்ணம்  தோன்றிக்கொண்டே  இருக்கும், இக்கீரை  கசப்பு  சுவை  உடையது   என்பதால் இதை  அடிக்கடி  சாப்பிட்டு  வந்தால்  இனிப்பு சுவையின்  மீது  நாட்டம்  போய்  விடும்


 சிறு  குறிஞ்சான் , பெரும்  குறிஞ்சான்  என  இக்கீரை  இரு வகைப்படும் . இரண்டுமே  மருத்துவக்குணங்கள்  உடையவைதான் . இது  பார்ப்பதற்கு  வெற்றிலை  போல  தோற்றம்  கொண்டிருக்கும் , வேலிகளில்  தானாகவே  விளையக்கூடியவை 


ப்ரீ டையபடிக்  என  சொல்லபப்டும்  ஆரம்ப  நிலை  சர்க்கரை  நோயாளிகள்  இக்கீரை  சாப்பிட்டு  வந்தால்  சர்க்கரை  வரவே  வராது . ஃபாஸ்ட்டிங்   பிளட் சுகர்  லெவர்  அதாவது  காலை  வெறும்  வயிற்றில்  ரத்தம்  எடுத்து  சோதனை  செய்யும்போது அதன்  அளவு  100  முதல்  124 வரை இருந்தால்  அது  ப்ரீ  டயபடிக்  என  சொல்லப்படும், இவர்களுக்கு  மூன்று  வருடங்கள்  முதல்  ஏழு  வருடங்களுக்குள்  சர்க்கரை  நோய்  வர  வாய்ப்பு  இருக்கிறது  என  அர்த்தம். இவர்கள்  இக்கீரை  சாப்பிடுவது  மிகவ்ம்  நல்லது 


நேரடியாக இக்கீரை  சாப்பிட  பிடிக்காதவர்கள் தண்ணீரில்  கீரையைப்போட்டு  5  நிமிடம்  கொதிக்க  வைத்து  ஆறிய  பின்  சூப்  போலக்குடிக்கலாம் இது  குடல்  புண்களை  ஆற்றும்  வல்லமை  கொண்டது