1973 ல் ரிலீஸ் ஆன ஜூக்னு எனும் ஹிந்திப்படத்தின் அஃபிஷியல் ரீமேக் இது . இது தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இது தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. பாக்ஸ் ஆஃபீசில் 365 நாட்கள் ஓடிய படம் பட்டியலில் இடம் பிடித்தது. கதைக்கு சம்பந்தம் இருக்கோ , இல்லையோ பாடல் காட்சி , ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் ஹெலிகாப்டரில் அதிகம் படமாக்கப்பட்ட படமாக பேர் வந்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
முன் கதை- சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நடந்த சம்பவம் இது . நாயகனின் தாத்தா கோடீஸ்வரர், ஆனால் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக்கிடந்தவர், ஆனால் அவர் மகன் அதாவது நாயகனின் அப்பா புரட்சி வீரர், ஆங்கிலேயரை எதிர்த்துப்போராடியவர், ஆனால் அப்போதைய அரசாங்கத்தின் பார்வையில் அவர் தீவிரவாதி. போலீஸ் அவரைக்கைது செய்ய வரும்போது நாயகனின் அம்மா கர்ப்பவதியாக இருந்தார் , அப்பாவை போலீசின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். போலீஸ் அவரைத்துரத்துகிறது ஆனால் அவர் சிக்கவில்லை , அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? தெரியவில்லை
நாயகனின் அம்மாதான் பிரசவத்துக்குப்பின் நாயகனைப்படிக்க வைத்து பெரிய ஆள் ஆக்குகிறார். அம்மா இறந்து விடுகிறார். ( நாயகனின் அம்மாவை நாயகியின் அப்பா ரேப் செய்ய முயற்சித்த போது நாயகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகிறார்)
நாயகன் பெரியவன் ஆனதும் பார்வதி நிலையம் என்ற அம்மா பெயரில் அனாதை நிலையம் தொடங்கி 1000 குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகிறான். பெரிய செல்வந்தன் ஆக இருக்கிறான்
நாயகன் பெயர் அசோக். நாயகனின் முகச்சாயலில் ஒரு கொள்ளைக்காரன் இருக்கிறான், அவன் பெயர் குரு
நாயகன் அசோக்கிற்கு நாயகியுடன் காதல். நாயகியின் வீட்டுக்குப்போன போது அங்கே தன் மாமனார் ஃபோட்டோ பார்த்த பின் தான் தான் கொலை செய்த நபர் இவர் என அறிந்து குற்ர உணர்ச்சியால் காதலியுடனான சந்திப்புகளை தவிர்க்கிறார்
நாயகன் தன் அப்பாவை உயிருடன் சந்தித்தாரா?
நாயகியுடனான காதல் வெற்றி பெற்றதா?
நாயகனான அசோக்கிற்கும் , கொள்ளைக்காரனான குருவிற்கும் என்ன சம்பந்தம்?
இவற்றை எல்லாம் பின் பாதி திரைக்கதை விளக்குகிறது
நாயகனாக , கொள்ளைக்காரனாக இரு வேடங்களில் கமல் . ஸ்ரீதேவி யுடன் ஜோடி சேரும்போது மட்டும் இவர் முகத்தில் ஒரு கொண்டாட்டம் காணப்படும் ( ஒரு கால கட்டத்தில் ஸ்ரீ தேவியை பெண் கேட்டு அவர் அம்மாவிடம் பேசியதாகவும், அம்மா மறுத்ததாகவும் ஸ்ரீ தேவி ஸ்டார் டஸ்ட் ஹிந்தி பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்தார் )
ஸ்ரீ தேவி கிளாமராக ,அழகாக வந்து போகிறார். டூயட் பாடுவது போக இவருக்கு கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு உண்டு
நாயகனின் அப்பாவாக முத்து ராமன் , வில்லனாக நம்பியார் . அவரவர் பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்
ஜெயமாலினியின் அலங்கோலப்பாட்டு டான்ஸ் ஒன்று உண்டு
சபாஷ் டைரக்டர் ( ஐ வி சசி)
1 முதல் 10 நிமிடத்தில் ஃபிளாஸ் பேக் காட்சிகள் முடிவு பெற்று விடுகிறது. அதுதான் படத்தின் முக்கியக்கதை , ஆனால் அதற்குப்பின் வரும் ரெண்டே கால் மணி நேரக்காட்சிகள் நாயகன் சாக்சம், நாயகியுடனான டூயட் , ரொமான்ஸ் என ஜனரஞ்சகமாக செல்கிறது
2 ஓப்பனிங் ஷாட்டில் ஆள் மாறாட்டம் செய்து ரயிலில் வைரங்களை கொள்ளை அடிக்கும் காட்சி ஏ ஒன்
3 பலத்த பாதுகாப்பில் எலக்ட்ரிக் வேலி எல்லாம் போட்டு சேஃப் ஆக இருக்கும் தங்க மீனை நாயகன் கொள்ளை அடிக்கும் காட்சி அழகு. இதே காட்சி பின்னாளில் வந்த என் சுவாசக்காற்றே படத்தில் வந்தது
செம ஹிட் சாங்க்ஸ்
1 பறந்தாலும் விட மாட்டேன் ( ஹெலிகாப்டர் சேசிங் சாங் )
2 ஆடுங்கள் பாடுங்கள் , பிள்ளைப்பொன் வண்டுகள் ( ஹீரோ ஓப்பனிங் சாங்)
3 எந்தன் கண்ணில்
4 பேரைச்சொல்லவா அது நியாயம் ஆகுமா? ( ஸ்ரீ தேவி )
5 நான் வணங்குகின்றேன் சபையினிலே ( ஸ்ரீ தேவி அரங்கேற்ற பரதநாட்டியம் )
6 மாமனுக்கு பரமக்குடி ( ஜெயமாலினி அயிட்டம் சாங்)
ரசித்த வசனங்கள்
1 காதல் தான் ஒரு மனிதனின் பலவீனம்னு சொல்வாங்க ,ஆனா என் விஷயத்துல காதல் ஒரு வெறுப்பா மாறிடுச்சு
2 சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது , சில செயல்களுக்கு காரணம் சொல்ல முடியாது
3 காலம் யாருக்காகவும் காத்துக்கொண்டு இருக்காது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹெலிகாப்டர்ல இருந்து ஒரு வட்ட வடிவ காந்தம் வந்து ஒரு காரையே அலாக்கா தூக்கிடுது . காரோட வெயிட் எவ்வளவு ? அந்த காந்தத்தோட வெயிட் எவ்வளவு ? வாய்ப்பே இல்லை , ஏதோ இங்க்லீஷ் படத்தைப்பார்த்து அரைகுறையா உருவி இருக்காங்க
2 பரத நாட்டியக்கலைஞரான நாயகி ஸ்ரீதேவி லேடி ஜேம்ஸ்பாண்ட் போல க்ளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் சாக்சம் செய்வது எப்படி ? கன் ஃபைட் காஞ்சனா போல ஃபைட் எல்லாம் போடறார்
3 வில்லன் நம்பியார் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டிருக்கார் , கமல் அவரை சுட்டும் குண்டு ஒண்ணும் பண்ணலை, அவர் தலையை குறி பார்த்து சுடலாமே?
4 ஒரு துப்பாக்கில 6 புல்லட்ஸ் இருக்கும், 3 டைம் சுட்ட பின் கமல் துப்பாக்கி எம்ப்ட்டி ஆகிடுது
5 தங்க மீனைக்கடத்தி கமல் பைக்கில் பயணிக்கும்போது அந்த தங்க மீனை ஒரு ஹேண்ட் பேக்கிலோ , சூட்கேசிலோ போட்டு எடுத்துச்செல்ல மாட்டாரா? மீனவன் போல இடுப்பில் ஓப்பனாக அணிந்து செல்வது ஏன் ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அந்தக்கால படங்களில் உறுத்தலாக இருக்கும் ஓவர் மேக்கப் , விக் பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டால் ஜாலியான ஒரு மசாலா படம் . ரேட்டிங் 2 .25 / 5
Guru | |
---|---|
Directed by | I. V. Sasi |
Written by | Haasan Brothers (dialogues) |
Based on | Jugnu |
Produced by | Prakash R. C. |
Starring | |
Cinematography | Jayanan Vincent |
Edited by | K. Narayanan |
Music by | Ilaiyaraaja |
Production company | Shiv Sakthi Films |
Release dates |
|
Running time | 159 minutes |
Country | India |
Languages | Tamil Telugu |