நல்ல வேளை , எம் ஜி ஆர் உயிரோடு இல்லை , இருந்திருந்தா ஒரு நல்ல டைட்டில் ஆன குடி இருந்த கோயில் இப்படி குய்கோ என கொத்து புரோட்டா ஆனதைக்கண்டு மனம் வெதும்பி இருப்பார். ஆனால் டைட்டிலில் சொதப்பிய இயக்குநர் திரைக்கதையில் கலக்கி விட்டார். வன்முறை இல்லாத ஒரு கிராமியக்கதையை நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்த திருப்தி..லோ பட்ஜெட் பட்ங்கள் , திரைக்கதையை நம்பும் படங்கள் , யதார்த்தப்பட்ங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான தமிழ் சினிமா உலகுக்கு ஒரு வரப்பிரசாதம். கோடிகளில் சம்பளம் வாங்கும் நாயகர்களுக்கும் ஒரு பின்னடைவு
சமீபத்தில் தான் ச்ந்தானம் நடிப்பில் எய்ட்டீஸ் பில்டப் என்ற படம் சாவு வீட்டில் நடக்கும் சம்பவங்களைச்சொல்லும் திரைக்கதையுடன் வந்து தோல்வி அடைந்தது, ஆனால் அதே கான்செப்ட்டில் ஒரு ஹிட் படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
மூன்று நாயகர்களின் வெவ்வேறு வாழ்க்கைத்தடம் ஒரே பாதையில் பயணிக்கும்போது நிகழும் சம்பவங்களைப்படம் சொல்கிறது
நாயகன் ஒரு கணக்கு வாத்தியார். எல்லா சப்ஜெக்ட்சிலும் ஜஸ்ட் பாஸ் வாங்கவே சிரமப்பட்டபோது கணக்கில் மட்டும் செண்டம் அடித்தவர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கிராமத்துக்குப்போய் சில நாட்கள் தங்க நேரிடுகிறது . அங்கே அவருக்குக்கிடைக்கும் அனுபவங்கள் தான் கதை
காமெடியன் ஊரில் ஆடு , மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒரு பெண்ணைக்காதலிக்கிறார். பெண்ணின் அண்ணன் காமெடியனை அவமானப்படுத்தி விரட்டி விடுகிறார். இதனால் வெகுண்ட காமெடியன் சவுதி அரேபியா போய் ஒட்டகம் மேய்த்துப்பணம் சம்பாதித்து ஃபாரீன் ரிட்டர்ன் ஆக தன் சொந்த ஊருக்கு வருகிறார். இறந்து போன தன் அம்மாவை அடக்கம் செய்ய கிராமத்துக்கு வந்த போது நிகழும் நிகழ்வுகள் தான் கதை
குணச்சித்திர நடிகர் ஊரில் எந்த நல்லது கெட்டது நட்ந்தாலும் அதை இழுத்துப்போட்டு செய்பவர். கணக்குப்பிள்ளை . யதார்த்தவாதி . நல்லவர் இவர் நாயகன் , காமெடியன் வாழ்வில் என்ன செய்தார் என்பது கதை
பெரிய திருப்பங்களோ , விறுவிறுப்போ இல்லை என்றாலும் சுவராஸ்யமான , யதார்த்தமான கிராம மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த விதத்தில் இயக்குநர் அருள் செழியன் வெற்றி பெற்று இருக்கிறார்
நாயகன் ஆக விதார்த். மைனா உட்பட இவர் நடித்த பல பட்ங்கள் மாறுபட்ட கதைகளாக அமைந்தும் கமர்ஷியல் ஆக பெரிய வெற்றி நாயகனாக வலம் வர முடியாமல் போனது ஏன் என தெரியவில்லை . அடக்கி வாசித்து அண்டர் ப்ளே ஆக்ட் கொடுத்து இருக்கிறார். நாயகன் சரக்கு , தம் அதிகம் அடிக்காமல் விட் அடிக்கும் இது மாதிரி கதைகளை வரவேற்கலாம்
காமெடியன் ஆக யோகி பாபு . படம் முழுக்க வரும் கேரக்டர் .சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் தெனாவெட்டு காட்டுகிறார். சில இடங்களில் நல்ல குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவர் மனசுக்குள் தான் பெரிய கவுண்டமணி ரேஞ்ச் என்ற நினைப்பு ஓடுகிறது , அதைத்தவிர்த்தால் அல்லது குறைத்தால் நலம்
குணச்சித்திர நடிகர் ஆக இளவரசு. ஒளிப்பதிவாளராக இருந்தாலும் டயலாக் டெலிவரியில் அசத்துபவர் . இவரது யதார்த்தமான பேச்சுக்கள் பெரிய பலம்
நாயகி ஆக ஸ்ரீ பிரியங்கா. ஆனால் அதிக வாய்ப்பில்லை .ஸ்கூல் யூனிடார்மில் பார்ப்பதை விட தாவணியில், சேலையில் அழகாக இருக்கிறார். விதார்த் - ஸ்ரீ பிரியங்கா ஜோடிக்கு இன்னும் சில காதல் காட்சிகள் ., ஒரு டூயட் வைத்திருக்கலாம்
யோகி பாபு க்கு ஜோடியாக துர்கா . இவர் ஒரு சில காட்சிகளில் தான் வருகிறார்
வினோதினி வைத்யநாதன் சிறந்த டயலாக் டெலிவரி கொடுக்கும் ஒரு சில நடிகைகளில் ஒருவர். கலக்கி இருக்கிறார்
நாயகர்களான விதார்த் - யோகிபாபு வை விட இளவரசு-வினோதினி வைத்யநாதன் இருவரும் தான் பர்ஃபார்மென்சில் , பட்டையைக்கிளப்பி இருக்கிறார்கள்
அந்தோணி தாசன் , கவின் மிராண்டா இருவரும்தான் இசை. 2 சூப்பர் ஹிட் பாட்டுக்கள் உண்டு . பின்னணி இசையும் சிறப்பு
எடிட்டிங் ராம் பாண்டியன் . 2 மணி நேரத்தில் ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார்
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் கிராமிய அழகை , மலைப்பிரதேசங்களின் அழகை சிறப்பாகக்காட்சிப்படுத்தி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (அருள் செழியன் )
1 போலீஸ் டிபார்ட்மெண்ட் மீது என்ன கோபமோ செம நக்கல் அடித்திருக்கிறார் இயக்குநர். ஊரில் எந்த கேஸ் பதிவானாலும் போலீஸ் அதன் மூலம் ஆதாயம் தேட நினைப்பதை காமெடியாக சொன்ன விதம் பிரமாதம். பொதுவாகவே போலீசை நக்கல் பண்ணினால் ஆடியண்ஸ் ரசிப்பார்கள்
2 திரைக்கதை முழுக்க யதார்த்த கிராமிய மக்களின் வாழ்க்கையைப்பதிவு செய்த விதம்
3 இளவரசு ,வினோதினி வைத்யநாதன் இருவரின் கலக்கல் ஆன நடிப்பு
4 வசனகர்த்தாவின் பங்கு படத்துக்குப்பெரிய பலம்
5 நடிகர் வடிவேலுவை மறைமுகமாக அட்டாக் பண்ணிய சாமார்த்தியம்
6 அட்டாக் பாண்டி என்ற கேரக்டருக்கு ஓவர் பில்டப் கொடுத்து பின் அந்த கேரக்டரை இண்ட்ரோ பண்ணும்போது தந்த காமெடி கவுண்ட்டர் அபாரம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 என் சிகப்பழகி , என்னைப்பிடிக்கலையா?
2 அடிப்பெண்ணே , உன்னைக்கண்டால் இன்பம் கூடுதடி
ரசித்த வசனங்கள்
1 காவல் துறை உங்கள் நண்பன்னு அவங்களும் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துட்டுதான் இருக்காங்க
2 ஆடு மேய்ச்ச ஏசுவையே ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க , மாடு மேய்க்கற என்னை மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டீங்களா?
3 அட்டாக் பாண்டி அட்டாக் பாண்டி என ஓவரா பில்டப் தந்தீங்களே? இப்படி அட்டாக் ஆன பாண்டியா? அட பரிதாபமே
4 அது பே சேனல்
என்னது? பேய் சேனலா?
பே சேனல்னா பணம் கட்டி பார்க்கும் சேனல்
5 ஏண்டி உனக்கு எத்தனை பாட்டி? போன வாரம் தான் பாட்டி இறந்துட்டானு லீவ் கேட்டே?
அது தாத்தாவோட வைப்”பாட்டி” ஐ மீன் கீப்
6 காண்டா மிருகம் காண்டாகிடுச்சு
7 புகையை வெச்சே பிராண்ட் நேம் சொல்லும் அள்வு ஸ்மோக்”கிங்க்” கா?
8 சிகரெட் பாக்கி பெட்டிக்கடைல வெச்சதை எல்லாம் சிபில்ல போட்டு பங்கம் பண்ணிடாதீங்கடா
9 தம் பழக்கம் உள்ளவன்தான் பிரச்சனையைக்கூட புகை மாதிரி ஊதித்தள்ளிடுவான்
10 வடிவேலு , என் பேரைக்கேட்டாலே காண்டாகிடுவானே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இரு நாயகர்கள் , இரு நாயகிகள் இருந்தும் ரொமாண்டிக் போர்சன் சரியாக வைக்கவில்லை .இன்னுமே இம்பாக்ட் ஆக அமைந்திருக்கும் அப்படி வைத்திருந்தால்
2 யோகிபாபு அம்மா இறந்த சோகத்தை சரியாக வெளிப்படுத்தவே இல்லை . என்னதான் காமெடியன் என்றாலும் சோகம் காட்டாமல் நடிக்க வேண்டுமா? என்ன?
3 நாயகன் விதார்த் அந்த கிராமத்தில் ஒரு நாள் தங்க வந்து விட்டு பல நாட்கள் தங்குவதற்கு சரியான காரணம் இல்லை . டிரஸ்க்கு எல்லாம் என்ன செய்வார்?
4 யோகிபாபு இருந்தது சவுதி அரேபியாவா? துபாயா? ஆங்காங்கே குழப்பங்கள்
5 யோகிபாபு தாம் தூம் என செலவு செய்வதைப்பார்த்தால் ஃபாரீன் ரிட்டர்ன் ஐ டி ஊழியர் மாதிரி இருக்கனும், ஆனால் ஒட்டகம் தானே மேய்த்தார்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கிராமிய மணம் கமழும் நல்ல காமெடி மெலோ டிராமா , அவசியம் பார்க்க வேண்டிய படம் . ரேட்டிங் 3 / 5
Kuiko | |
---|---|
Directed by | T. Arul Chezhian |
Written by | T. Arul Chezhian |
Starring | |
Cinematography | Rajesh Yadav |
Edited by | Ram Pandian |
Music by | Anthony Daasan Kevin Miranda |
Production company | AST Films |
Release date |
|
Country | India |
Language | Tamil |