Showing posts with label கும்மி. Show all posts
Showing posts with label கும்மி. Show all posts

Tuesday, February 08, 2011

ரஜினி நடிக்கும் ராணா - காமெடி கும்மி

http://www.media.desicolours.com/2009/february/Deepika%20Padukone01.jpg 
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்




.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?

ரஜினியோட புதுப்படம் ராணா ஷூட்டிங்க் ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.


--------------------------------------------------------------------------------------

2.  ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.

அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)

--------------------------------------------------


3. ரஜினி ரசிகர்களிலேயே  நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?

ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,

-----------------------------------------------------

4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும்  ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?

-------------------------------------------------------------

5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.

--------------------------------------------------
http://wallpapers.oneindia.in/d/126211-6/deepika-padukone08.JPG

6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.

அப்படியா? என்ன பஞ்ச்?

என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...

-------------------------------------------------

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?

அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன்  கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.

---------------------------------------------------

8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?

அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்த ராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.


-------------------------------------------------------

9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?

அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...

----------------------------------------------

10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?

தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.

Friday, October 22, 2010

கோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி



1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .

நயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.

2.  ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே?இது தப்பில்லை?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.

3.  ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே?

நயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.

4. ஜட்ஜ் - உங்க  காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.


5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.


நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.


6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க?

நயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்?மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா?




7.  வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி?

நயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்?


8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

நல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.

9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா?

அவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.

10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.



11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க?

ஜட்ஜ் -  என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.

டிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள்  கேட்டது.

டிஸ்கி 2 :  நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின்  வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்

Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்



1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.


ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.


2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)


4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.



5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?


மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.




6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.


7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?



8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)


டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?


Tuesday, October 12, 2010

இளைய தளபதியா? இளைச்ச தளபதியா? (காமெடி கும்மி)


 
1. விஜய்+சித்திக் காம்பினேஷன்ல ஃப்ரண்ட்ஸ் ஹிட் ஆச்சு. காவலன் ஏன் ஹிட்  ஆகாது?

விளையாடறியா? அதுல சூர்யா இருந்தாரு. படத்தை காப்பாத்துனாரு.



2. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு லவ் சப்ஜெக்ட் பண்றாரு.க்ளிக் ஆகாதா?


30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன்   டூ லேட்.



3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.



4.ஒரிஜினல் மலையாள பாடிகார்டுல நயன்தாரா தானே ஹீரோயின்?ஏன் தமிழ்ப்படத்துல அவர் இல்லை?

ஏற்கனவே அவர் கூட நடிச்ச வில்லு முறிஞ்சு போச்சே,அதான் அவரப்பத்தி பேசுனாலே டைரக்டர் எரிஞ்சு விழறாராம்.


5. ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.



6. அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா  வர்றாராமா??




 


7. இந்தப்படத்துல இடைவேளை வரை சிரிப்பா இருக்குமாம். பிறகு ஆக்‌ஷனாம்.

ஓஹோ... 1st half comedy; 2nd half trajedy? (முதல் பாதி காமெடி,பின் பாதி டிராஜடி?)



8. விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.



9. காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?



10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.



11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?


அவரு   எப்பவும் படத்தோட கதையையே  200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)



12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.




13. கிளைமாக்ஸ்ல வில்லனை விஜய் கொன்னுடறாரு.

ஆனா படம் போட்டதுல இருந்து ஆடியன்ஸை கொன்னெடுத்துடறாரே?



டிஸ்கி 1     -13 என்பது ராசி இல்லாத எண்,ஏன் அப்படி 13 ஜோக் எழுதுனீங்க?னு கேக்காதீங்க?படமே ராசி இல்லாத படம்தான்,சோ நோ செண்ட்டிமெண்ட்ஸ்.

டிஸ்கி 2       - கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன் இருவரும் ஆலமரம் போல் வேரூன்றியவர்கள்நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கள் எல்லாம் அவர் பெயரை யூஸ் செய்யலாமா என சிண்டு முடிபவர்களுக்கு ஒரு நியூஸ்,இதற்கு 2 பேரிடமும் அனுமதி வாங்கிட்டேன்


டிஸ்கி 3 -   விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)



டிஸ்கி 4 -   விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, September 24, 2010

எந்திரன் - காமெடி ,ஜோக்ஸ்,கும்மி

1.எதுக்காக எந்திரன் பட ரிலீஸை அக்டோபர் -1 ல வெச்சிருக்காங்க?

சம்பள நாள் அன்னைக்கு ரிலீஸ் பண்ணுனாத்தானே ரசிகர்கள் பாக்கெட்டை காலி பண்ண முடியும்?


2.லயன்ஸ் கிளப் மீட்டிங்க்ல என்ன பிரச்சனை?

அதை அரிமா சங்கம்னு பெயர் மாத்தனுமாம்.(அரிமா அரிமா பாட்டு ஹிட் ஆகிடுச்சே)

3.ஷங்கர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

எந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்.  

4. டிக்கெட் கவுண்ட்டர்ல வேலை செய்யறவங்களுக்கு தியேட்டர் நிர்வாகம் ஒரு மாசம் லீவ் குடுத்துடுச்சாமே,ஏன்?

எந்திரன் படம் ரிலீஸ் ஆனதும் ஒரு மாசம் பிளாக்லதான் விக்கப்போறாங்க,எதுக்கு வீணா சம்பளம்?

5.சன் டிவியை விட கேப்டன் டி வி தான் டேலண்ட்னு எப்படி சொல்றே?

எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா,இசை வெளியீட்டு விழா அப்படினுதானே புரோக்ராம் போட்டாங்க சன் டிவில?கேப்டன் டி வி ல எந்திரன் படம் ரிலீஸ்க்கு முன்னமே படத்தோட ஒரிஜினல் டிவிடியே வெளியிடப்போவுதாம்.

 6.திருப்பதி தேவஸ்தானம் மாதிரி இந்தத்தியேட்டர்ல 7 பெரிய ஹால் கட்டி வெச்சிருக்காங்களே,எதுக்கு?


எந்திரன் படம் ரிலீஸ் ஆகுதே,டிக்கெட் எடுக்க க்யூல நிக்கற ரசிகர்களோட தள்ளுமுள்ளுவை குறைக்கத்தான்.


7.எந்திரன் படக்கதையை ரொம்ப ரகசியமா வெச்சிருக்காங்களாம்.


இருக்கட்டும்,அதுக்காக படம் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஆகற வரை படத்தோட விமர்சனத்தை யாரும் எழுதக்கூடாதுனு ஸ்டே ஆர்டர் வாங்கறதா?


8.ஹீரோவுக்கு வயசு 64,ஹீரோயினுக்கு வயசு 37,கதைப்படி......


சார்,ஒரு நிமிஷம்,இது எந்திரன் படக்கதை மாதிரி இருக்கே,நாம வேற டிரை பண்ணலாமே?


9.எந்திரன்ல ரோபோ,சயிண்ட்டிஸ்ட் இந்த 2 கேரக்டர் போக 3வதா ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர்(சந்திரமுகி வேட்டையன் மாதிரி) ஷங்கர் சொல்றாரே?


ம்க்கும்,ரஜினிக்கே இது சர்ப்பரைஸாம்.


10.எந்திரன் படத்துக்கு முதல் ஷோ டிக்கட் ரிசர்வ் பண்ணனும்,அதுக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்.


ஸாரி,அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது,அவ்வளவு பெரிய தொகையை லோனா வாங்குனா எப்படி உங்களால் திருப்பிக்கட்ட முடியும்?


11.பட இடைவேளை டைம்ல கூட உள்ளே டிக்கெட் தர்றாங்களே?


படத்தோட ஸ்டில்ஸை வேடிக்கை பார்க்கக்கூட தனி டிக்கெட்டாம்.


12.ஈரோட்ல மொத்தமே 16 தியேட்டர்ஸ்தான் இருக்கு.


அதுக்கென்ன இப்போ?


எந்திரன் ஈரோட்ல மட்டும் 25 தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போவுதுனு சன் டிவில சொன்னாங்களே?