அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி மதுரையை அடக்கி ஆண்டது போல் ஒரு காட்டு யானை ஒரு மலைவாழ்கிராமத்து மக்களை துவம்சம் பண்ணிட்டு இருக்கு.அறுவடை நடக்கும் டைம்ல வந்து எல்லாத்தையும் அழிக்குது. அந்த யானையை விரட்டி அடிக்க ஒரு கும்கி யானை தேவை. இந்த மாதிரி காட்டு யானைகளை விரட்டுவதற்காகவே சின்ன வயசுல இருந்தே பழக்கபட்ட யானை தான் கும்கி யானை .
ஹீரோ ஒரு கோயில் யானையை வெச்சிருக்காரு. எதேச்சையா அந்த கிராமத்துல எண்ட்டர் ஆகறாரு. ஹீரோயின் அந்த மலைவாழ் ஜாதிப்பொண்ணு. பார்த்ததும் ஹீரோவுக்கு லவ். அதனால கும்கி யானைன்னு பொய் சொல்லி மெயிண்ட்டெயின் பண்றாரு. அவங்க காதல் நிறைவேறுச்சா? காட்டு யானை வால்மார்ட் மாதிரி ஆக்ரமிச் சுதா அந்நியன் சுதா என்பதை படத்தில் காண்க.
படத்துக்கு முதல் ஹீரோக்கள் டி இமான் + தஞ்சை இளவல்யுகபாரதி . என்னமா பாட்டு போட்டிருக்காங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல் ஒலி அள்ளுது.இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் பட்டியலில் நிச்சயம் முதல் இடம்.
அடுத்து ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன்ஸ். ஹாலிவுட் படமான எமர்ஃபால்டு ஃபாரஸ்ட்க்குப்பின் நான் பார்த்த அட்டகாசமான அருவிகள் சூழ் மலை வாசஸ்தலம் பிரமாதம்.கேமரா கலக்கல்.
ஹீரோயின் ஆல்ரெடி சுந்தர பாண்டியன்ல அறிமுகம் ஆன லக்ஷ்மி மேணன். கொள்ளை அழகு. மலை வாழ் பெண் போல வே கெட்டப் , பாடி லேங்க்வேஜ் ஆஹா! ஒரு காட்சியில் க்ளோசப்பில் அவர் புருவத்தை காட்டும்போது எந்திரிச்சுப்போய் நீவி விடலாமா? என எண்ண வைக்கும் அழகு .. சரி சரி கண்ட்ரோல்
ஹீரோ சிவாஜியின் பேரன் .முதல் படம் என்ற அளவில் ஓக்கே . பிரமாதம் என சொல்லும் அளவு இன்னும் வரலை. வந்த வரை ஓக்கே .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. மைனா படத்துல எப்படி ஜிங்கி ஜிங்கி பஸ் பாட்டு படத்தை ஒரு ஜாலி மூடுக்கு கொண்டாந்துச்சோ அதே போல் இதுல சொய் சொய் பாட்டு . க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னால வருது. அறுவடைக்காட்சி , கிராமத்து மக்களின் பாரம்பரிய நடனத்துடன் துள்ள வைக்கும் இசையில் அபாரமான பிக்சரைசேஷன்.
2. நாயகிக்கும் நாயகனின் யானைக்கும் இடையே மலரும் நட்பு . யானை என்றாலே மம்மியைக்கண்ட ஓ பி எஸ் மாதிரி பம்மும் சுபாவம் உள்ளவர் நாஞ்சில் சம்பத் ஜெ மாதிரி சர்வ சாதாரணமாக நட்பு பாராட்டுவது அழகு .
3. மலை கிராமம் , அவங்க உடைகள் எல்லாம் யதார்த்தம்
4. கிராமத்து மக்கள் ராமையாவை தெய்வமாக நினைப்பதும் , உண்மை தெரிஞ்சுட்டா துவம்சம் பண்ணிடுவாங்க என்று அவர் தொடை நடுங்குவதும் செம காமெடி டிராக். தனி காமெடி டிராக்காக இல்லாமல் கதையுடன் பயணிக்கும் யதார்த்த காமெடி பிளஸ்
5. சொல்லிட்டேனே என் காதலை பாட்டு செம ஹிட் மெலோடி . அந்தப்பாட்டில் ஹீரோயின் முக பாவங்கள் , க்ளோசப் காட்சிகள் கொள்ளை அழகு
மனம் கவர்ந்த வசனங்கள்
1.விவசாயத்தை கண்டுபிடிச்ச கடவுள் மாதிரி பேசாதே. கட்டடத்தை கட்டி கட்டி கடைசில கல்லை உடைச்சு சாப்பிடும் சூழல் வரத்தான் போகுது
2. உனக்குன்னு ஒரு காலம் உடைச்சுக்கிட்டு வரும்
3. 52 வயசு வரைநாய் படாத பாடு படுவீங்க. அதுக்குப்பின்? பழகிடும் # கும்கி ( வால் பையன் எஸ் வி சேகர் மொக்கை உல்டா)
4. சார்! நீங்க மாமா தானே?
போலீஸ் - வாட்?
ஐ மீன் உங்க தங்கச்சி பையனுக்கு மாமா தானே?
5. ஆ ஆள்ட்ட நான் சம்சாரிக்கனும்.
யானைக்கு சம்சாரம் இல்லைன்னு ஃபீல் பண்றீங்களா?
6. சார், நீங்க ஏன் மேரேஜ் பண்ணிக்கலைன்னு தெரியும், யானைப்பாகன் நீங்க, யானை மிதிச்சு செத்துட்டா? மனைவி சின்ன வயசுல விதவை ஆகிடுவா அதானா?
அடேய்
7. பன்னிப்பயலே! உன்னை எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும்போது ஆரம்பிக்கும்போது பக்க வாதம் வந்துடனும்
8. கொசுக்கடி இந்த காட்ல ஜாஸ்தி போல
2 மணி வரை பொறுத்துக்குங்க
அதுக்குப்பின் வராதா?
கொசுக்கடி பழகிடும் ( 1987 தினத்தந்தி மொக்கை ஜோக்)
9. எனக்கு அவளைத்தெரியும் , அவளை மட்டும் தான் தெரியும்
கவித கவித
இப்போ வெல்லாம் நான் எது பேசுனாலும் அது கவிதை மாதிரியே இருக்குனு எல்லாரும் சொல்றாங்க.
10. நிஜ்மா சொல்றேன் , எனக்கு கல்யாணமும் நடக்கலை, ஒரு ஃபர்ஸ்ட் நைட் கூட ந்டக்கலை
11. உனக்கு சாபம் விடறேன் , நீ எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது டைவர்ஸ்ல தான் போய் முடியும்
12. சென்னிமலை மாப்ளை கட்னா இவளைத்தான் கட்டனும்னு அடம் பிடிக்கறாளாமெ? ( எங்க ஊர்ப்பேருக்காக )
13,. முகறையைப்பாரு , மூஞ்சூறுக்கு முதப்பிள்ளை மாதிரி
14. சார்ஜ் ஏறிடுச்சா?
ஹூம், ஃபுல்லா ஏறிடுச்சு
15. யானையோட பலம் பாகனோட தைரியத்துல தான் இருக்கு
16. இப்போ நாட்ல அமைச்சருங்க எல்லாம் 9 ஓட்டைகளையும் அடைச்சுக்கிட்டு அமைதியா இருக்காங்க. ஏன்? ( ஏன்னா நடப்பது அம்மா ஆட்சி ஹி ஹி )
17. மனிஷனாப்பிறந்தா மானம் , ரோஷம் முக்கியம்
மனுஷனுக்குத்தானே, நமக்கென்ன?
நக்கல் பண்ணி நகர்த்தப்பார்க்கறே, நடக்காதுடி
18. கம்பளியைப்போர்த்திக்கிட்டு குனிஞ்ச வாக்குல இருக்கியே , ஏன்?
யானை என்னைப்பார்த்தா யானைக்குட்டின்னு நினைச்சு விட்டுடும்
19. காட்டோட கலாச்சாரத்தையும் , நம்பிக்கையையும் மாத்தவே முடியாது .அப்படி யாராவது மாத்தினா , மாத்த நினைச்சா அவன் நம்பிக்கைத்துரோகி . எங்க கூட்டத்துல நம்பிக்கைத்துரோகி .யே கிடையாதுங்க ( நல்லா பாருங்க சம்பத் மாதிரி ஒரு ஆள் எல்லா ஜில்லால்யும் உண்டாம்)
20. அஞ்சு நிமிஷம் அவ அ ப்பா கிட்டே பேசுனதுக்கே நம்பிக்கைத்துரோகம் பண்ண மாடேன்னு சொல்லிட்டியே , 20 வருஷம் வளர்ந்தவ எப்டி உன் கூட வருவான்னு எதிர்பார்க்கறே?
21.
ஆம்பளை உடனே லவ்வை சொல்லிடலாம், ஆனா பொம்பளை உடனே லவ்வை சொல்லிட மாட்டா, அப்படி சொல்லிட்டா அது காதலே இல்லை
22. யோவ், ஒரு லைன் மேன் இப்டித்தான் ஒரு பெண் கிட்டே சவுக்கியமா இருக்கியா?ன்னு தான் கேட்டான், அதுக்கே அவன் ஆள் அட்ரஸை காணோம், நீ எபடி? அட்ரஸ் இல்லாம போகனுமா?
23. என் மேல வெச்சிருக்கும் நம்பிக்கையை அப்படியே என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு
24. நீ என் ரத்தம்மா , தப்பு பண்ண மாட்டே
/.
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. மலைஜாதி மக்கள் வெளி ஆட்களை சேர்த்துக்க மாட்டாங்க என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டறாங்க வசனத்துல . ஆனா ஹீரோ அண்ட் கோவுக்கு சாப்பாடு போடும்போது அவங்க பிளேட்ல சாப்பாடு போடறாங்க அது எப்படி? பொதுவா கிராமங்கள்ல வாழை இலை சர்வ சாதாரணமா கிடைக்கும். விருந்தோம்பல்க்கு அதுதான் யூஸ் பண்ணுவாங்க. ஆனா வாழை இலையே யூஸ் பண்ணலை
2. ஹீரோயின் தண்ணீர் எடுக்க வரும்போது கீழே ஸ்லிப் ஆகி விழப்போறார். அப்போ யானை ஆயிரத்தில் ஒருவன் ல எம் ஜி ஆர் ஜெவை காப்பாத்துன மாதிரி டக்னு துதிக்கைல் தடுத்து நிறுத்தி காப்பாத்துது அது வரை ஓக்கே , அனா குடத்துல தண்ணீர் முகண்டு அது எடுத்து தர்றதெல்லா ம் ஓவர் , ராமநாராயணன் படம் மாதிரி இருக்கு. செம காமெடி
3.ஹீரோவோட மாமா ஃபோன் பண்ணி கும்கி யான்பையோட அங்கே வர்றேன்னு சொல்லும்போது ஹீரோ ஏன் வேணாம்கறார்? வந்தா இவர் கிளம்ப வேண்டியதிருக்கும்னு ஒரு சாக்கு. தேவையே இல்லை. 2 பேரும் சேர்ந்து விரட்றோம்னா மேட்டர் ஓவர். படத்துல மிகப்பெரிய லாஜிக், ஓட்டையே இதுதான். தன் யானை கும்கி இல்லை. இன்னொரு யானை ஒரிஜினல் கும்கி கொண்டு வரவேணாம்னு ஏன் சொல்லனும்?
4. ஹீரோ பல காட்சிகளில் தான் ஒரு ஜிம் பாடின்னு காட்டிக்க டைட் பண்ணிட்டே இருக்காரே? எதுக்கு? நரம்பெல்லாம் புடைக்குது. முடியல
5. படம் போட்டு சரியா 124வது நிமிஷத்துல அதாவது 2 மணி நேரத்துக்கும் மேல தான் ஹீரோ ஹீரோயின் கிட்டே தன் லவ்வையே சொல்றாரு. அதுக்குப்பின் 37 நிமிஷம் . அந்த 37 நிமிஷம் தான் கதையே . ஏன் ஓப்பனிங்க்ல மெயின் கதைக்கு வர்லை?
6. லவ் சொன்னதும் ஹீரோயின் நம்பியாரைப்பார்த்த சரோஜாதேவி மாதிரி ஓடிடறார். அடுத்த நிமிஷமே பாட்டு , பதில் சொல்லு பதில் சொல்லு தொனில “ எப்போ சொல்லப்போறே” பாட்டு. பாட்டு நல்லாருக்கு, ஆனா மிஸ் பிளேஸ். இன்னும் 4 சீன் காட்டி அதாவது ஹீரோ இன்னும் 4 டைம் ஹீரோயின் கிட்டே பேசிய பின் அந்த பாட்டைப்போட்டிருக்கனும்.
7. அந்த போலீஸ் ஆஃபீசர்ஸ் 2 பேரும் எப்போ பாரு கிராமத்து மக்களை மிரட்டிட்டே இருக்காங்க. இடத்தை காலி பண்ணிடுங்கன்னு. ஏதோ பெரிய ட்விஸ்ட் வரப்போகுது, அந்த மலைப்பகுதில போலீஸ் ஏதோ தகிடு தித்தம் பண்ணுது அவங்க தான் மெயின் வில்லன் அப்டிங்கற மாதிரி பில்டப் பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் கொடுத்துட்டு கடைசில சப்
8. ஹீரோ அடிக்கடி யானையின் தந்தத்தை புல் அப்ஸ் பார் மாதிரி நினைச்சு டபுள் பார்மாதிரியூஸ் பண்ணி எக்சசைஸ் பண்றது மட்டும் 6 இடங்கள் ல வருது.
9. தன் மேல ஹீரோயின் அப்பா பரிபூரண நம்பிக்கை வெச்சிருக்காரு அப்டினு ஹீரோவும் , ஹீரோயினும் பரஸ்பரம் நான் உன்னை மறந்துட்டேன் அப்டினு சொல்றது காதலுக்கு மரியாதை படத்துல ஷாலினி சொல்வது போல் அழுத்தமா வந்திருக்க வேண்டிய காட்சி. ஆனா ஏனோதானோன்னு சாதாரணமா இருக்கு.
10. படத்தின் மிக முக்கியமான யானை VS காட்டு யானை மோதல் மிகச்சாதாரணமா காட்டி இருக்காங்க. இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்.
11. கதை சொல்லும் உத்தி ரொம்ப சாவதானமா கேரளா மக்களுக்கு சொல்வது போல் இருக்கு
12, கார்த்திக் நடிச்ச சோலைக்குயில் படத்துல இருந்து 20% காட்சிகள் , மலைச்சாரல் அப்டினு ஒரு மலையாள கில்மாப்படம்ல இருந்து 30 % காட்சிகள் சுடப்பட்டிருக்கு ( அதுக்காக சீன் இருக்கா?ன்னு கேட்கப்படாது , இது குடும்பப்படம் )
13. நல்ல நேரம் எம் ஜி ஆர் படம் பார்ப்பது மாதிரி ஆரம்ப யானைக்காட்சிகள் ஆயாசத்தை வர வைக்குது . இயக்குநர் அட்டகாசமான இசை ஆல்பம் , அற்புதமான ஒளிப்பதிவு இரண்டையும் விழலுக்கு இரைத்த நீர் ஆக்கிட்டார்.
14. ராமைய்யா பேசும் பல வசனங்கள் அரதப்பழசான மொக்கை ஜோக்குகள், நாகெஷ் , எஸ் வி சேகர் காலத்து வசனங்கள் . முடியல. அவரை ஓவரா நம்பிட்டீங்க போல
15. மலை கிராமத்து மக்கள் ல கன்னிப்பெண்கள் காதுல தோடு மட்டும் தான் போடுவாங்க , காது மடல்ல காது ஃபுல்லா என்னென்னெமோ குத்தி இருப்பது மேரேஜ் ஆன பொண்ணுங்க தான். ஆனா ஹீரோயின் அப்டித்தான் இருக்கு , அதே போல் ஜரிகை வெச்ச ஜாக்கெட் கரை எல்லாம் அவங்க போட மாட்டாங்க , மற்ற எல்லாப்பெண்களும் அப்படிப்போடலை, ஹீரோயின் மட்டும் .அதே போல் ஸ்டிக்கர் பொட்டு வெச்சிருக்கு. மற்ற எல்லாப்பெண்களும் குங்குமம் வெச்சிருகாங்க, ஹீரோயின் மட்டும் ஸ்டிக்கர் பொட்டு
16. மலை வாழ் கிராம மக்கள் கிட்டே செல் ஃபோன் எல்லாம் கிடையாது. யாரும் வெச்சிருக்கலை, ஆனா சார்ஜ் இருக்கா? அப்டினு ஒருத்தன் ஹீரோ கிட்டே கேட்கறான் , சார்ஜர் எடுத்தும் தர்றான் ஹி ஹி
எதிர்பார்க்கும் ஆனந்த விக்டன் மார்க் - 41
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - ஒளிப்பதிவு , லொக்கேஷன், பாட்டு ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி படம் மாமூல் சாதா படம் தான். 200 ரூபா , 150 ரூப்பாக்கு எல்லாம் ஒர்த்தே இல்லை. 3 நாள் வெயிட் பண்ணினா கவுண்ட்டர் டிக்கெட்ல பாதிதான் வாங்குவாங்க . ஏ செண்ட்டர்ல மட்டும் ஜனவரி 10 வரை ஓடும் , பி சி செண்ட்டர்ல எல்லாம் அடுத்த வாரம் ஜாக்கி சான் படம் மாத்திடுவாங்க ( நான் சொல்லலை, தியேட்டர் ஓனரே சொன்னார் )