ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பிரபலமான தாதா .அந்த விஷயம் தெரிந்தே அவரை மணக்கும் நாயகி குழந்தை பிறந்ததும் நாயகனுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறார் .போலீசில் சரண்டர் ஆகி தண்டனை பெற்று பின் ரிலீஸ் ஆகி வா , அதுவரை குழந்தையைத்தொடக்கூடாது என்கிறார் .
அதன்படி நாயகன் ஜெயிலுக்குப்போய் 18 வருடங்கள் கழித்து வெளியே வரும்போது நாயகனின் 18 வயது மகன் ஜெயிலுக்குப்போகிறான் . தனது எதிரிகளில் யார் இந்த சதியை செய்திருப்பார்கள் என்பதைக்கண்டுபிடித்து நாயகன் தன் மகனை நிரபராதி என நிரூபிப்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக அஜித் . நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் திரையில் கலக்கி இருக்கிறார் .நெகடிவ் ஷேடில் அவர் நடித்த வில்லன் ,மங்காத்தா ரேஞ்ச்சுக்கு இல்லை என்றாலும் பல இடங்களில் அப்ளாஸ் அள்ளும் நடிப்பு .
நாயகி ஆக த்ரிஷா .ஓவர் மேக்கப் .கொஞ்சம் குறைத்திருக்கலாம் . நடிப்பு ஓகே ரகம் . வில்லன் ஆக அர்ஜுன் தாஸ் . நடிப்புக்கு 60 மார்க் எனில் அவரது குரலுக்கு 75 மார்க் தரலாம் .ரகுவரனின் பேஸ் வாய்ஸ் இவருக்கு
பிரபு , பிரசன்னா ,,சிம்ரன் , சுனில் , ஜாக்கிஷெராப் , சைன் டாம் சாக்கோ , ரெடின் கிங்க்ஸ்லி போன்றவர்கள் சும்மா வந்து போகிறார்கள் . யோகிபாபு ஒரே ஒரு சீனில் வருகிறார்
ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை . கிரீடம் (2007) படத்துக்குப்பின் அஜித் உடன் இவர் இணையும் இரண்டாவது படம் இது . . த்ரிஷா இல்லைனா நயன் தாரா (2015),மார்க் ஆண்டனி (2023) ஆகிய படங்களுக்குப்பின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் காம்ப்போவில் 3 வது படம் இவருக்கு . பிரித்து மேய்ந்திருக்கிறார் . பாடல்கள் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் பிஜிஎம் அடிபொழி
அபிநந்தன் ராமானுஜம் தான் ஒளிப்பதிவு . அனைவரையம் அழகாகக்காட்டி உள்ளார் , கலர்புல்லாக இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 கமல் ரசிகர்களும் , அஜித் ரசிகர்களும் கொண்டாடும் விதத்தில் அவர்கள் இருவரது படங்களில் இருந்தும் பாடல்கள் ,காட் சிகளின் ரெபரண்ஸ் வைத்து தியேட்டரை கொண்டாட வைத்த விதம்
2 சிம்ரன் அஜித் உடன் இணைந்து நடித்த வாலி படத்தின் சீனை கனெக்ட் பண்ணி வரும் முக்கியமான சீன கலக்கல் ரகம் .ட்ரெய்லரில் வில்லி போலக்காட்டி இருந்தார்கள்
3 தொட்டுத்தொட்டுப்பேசும் சுல்தானா? ஒத்த ரூபாயும் தாரேன்,இளமை இதோ இதோ , ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை பிளேஸ் செய்த விதம்
4 தீனா , பில்லா படங்களின் சீன்களை இந்தக்கதையோடு கனெக்ட் செய்த தாட் பிராசஸ்
5 ஹீரோ ஓப்பனிங்க் சீன் ,இன்ட்டர்வெல் பிளாக் சீன இரண்டும் தரம்
6 படம் முடிந்த பின் ஜாக்கிசான் படங்களில் வருவது போல ஷூட்டிங்க் டைமில் நடந்தவைகளை காட்டும் 4 நிமிட சீன்கள்
77 விஸ்வாசம் படத்தின் கதையையே பட்டி டிங்கரிங்க் பண்ணி புதுக்கதையாகக்காட்டிய விதம்
ரசித்த வசனங்கள்
1 டெத்தே நம்ம முன் வந்து நின்னாலும் நம்ம கெத்தை மட்டும் விடக்கூடாது
2 என் கூட இருக்கறவங்களுக்கு ஒண்ணுன்னாலே இற ங்கி செய்வேன் , என் குடும்பத்துக்கே ஒண்ணுன்னா செய்ய மாட் டேனா?
3 பிரியா , உன் இடுப்பைப்பார்த்துக்க
வாட்?
சாரி , உடம்பைப்பார்த்துக்கோ
4 உன் புருசனுக்கு ஒரு கிஸ் கொடுத்துக்கலாமா?
லேசா ;லேசா
5 உங்க கூட 100 வருசம் சந்தோஷமா வாழனும்
உருட்டு உருட்டு .எந்த பொண்டாட்டி தன புருஷன் கூட அவ்ளோ வருஷம் வாழணும்னு சொல்லுவா?
6 நீங்க எந்த மீட்டிங்க்கும் பக்க மாடதீங்க , நீங்க இருக்கும் இடம் தான் மீட்டிங்க்
7 பாம்பே பார்க்கணும்னு ஆசைப்பட் டீ ங்க , இப்போ மொத்த பாம்பேயு ம் உங்களைத்தான் பார்க்குது
8 லோ கார்ப் டயட் டை க்கூட விட்டுடலாம் , ஆனா நான் வயலென்ஸை விட முடியாது
9 அவன் நமக்கு பயம் காட்டும் முன் நாம அவனுக்கு பயத்தைக்காட்டிடனும்
அவனுக்கு பயத்தைக்காட்டிடனும் என சொல்லிட்டு நீங்க ஏண்டா பயந்து நடுங்கறீங்க ?
10 அவரை கரெக்ட் பண்ணிடலாமா?
கரெக்ட் டாக இருப்பவரை எப்படிக்கரெக்ட் பண்ணுவ ?
11 தல இருக்கக்கூ டாது
என்னு தா? உ ன்னு தா?
12 வாழ்க்கைல பிரச்சனை வந்தா ஓடக்கூடாது எதிர் கொள்ளனும்
13 காசு வாங்கற போலீசுக்கு காசு . வாங்காத போலீசுக்கு சூப்பு
சூப்பு குடிக்க நான் என்ன சூப்பு பாயா?
14 தலை சுத்தி இருக்குமோ?
இனிமே தான் தல சுத்தும்
15 எதுக்கு டிபன் பாக்ஸை ஓப்பன் பண்ண வேணாம்னு சொல்றே?
அந்த கேரியரை ஓப்பன் பண்ணினா உன் கேரியர் க்ளோஸ்
16 நாம எவ்ளோ குட் ஆக இருந்தாலும் இந்த உலகம் நம்மை பேட் ஆக்கிடும்
17 அப்பா சேர்த்து வைத்ததுதான் பிள்ளைக்குக்கிடைக்கும்
18 பல வருடங்கள் வெயிட் பண்ணி பின் எடுக்கும் ரிவெஞ்ச்சுக்கு தான் கிக் அதிகம்
19 உன் பாசை மீட் பண்ணனும்
அவரு டேஞ்சரான ஆளு
அதை நான் முடிவு பண்ணிக்கறேன்
20 வேற ரூட் டா? எப்பவும் என் ரூட் ஒண்ணுதான்
21 உயிரைக்கொடுப்பேன் என சொல்பவர்களை நம்பக்கூடாது
22 உனக்கும் எனக்கும் எந்த பம்மல் கே சம்பந்தமும் இல்லை
23 என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் பேடா இருக்கும்போது நான் மட்டும் குட் ஆக எப்படி இருக்கறது ?
24 நீ எனக்கு ஆப்சன் தர்றியா? நான் தான் எல்லாருக்கும் ஆப்சன் தருவேன்
25 அவர் யாரு ?
வரலாறு க்கே வரலாறு கேட்கறியா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விஸ்வாசம் பட த்தில் அப்பா -மகள் பாசம் கனெக்ட் ஆன அளவு இதில் அப்பா - மகன் பாசம் கனெக்ட் ஆகவில்லை
2 போலீசில் சரண்டர் ஆகும் முன்னரே தனக்கு 18 வருடங்கள் தான் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்பது நாயகனுக்கு எப்படித்தெரியும் ? மகனிடம் 18 வருட ங்கள் கழித்து வருகிறேன் என எப்படி சொல்கிறார் ?
3 அப்பா தன்னைப்பார்க்க 18 வருடங்களாக வரவில்லை பிஸ்னெசில் பிசி என அம்மா சொல்வதை எப்படி மகன் நம்புகிறான் ?
4 இறந்ததாக சொல்லப்படும் ஒரு பெண் உயிருடன் இருப்பது போல ஒரு வீடியோ காட்டும்போது அது பழை யதாக இருக்கலாம் என எதனால் சந்தேகம் வரவில்லை ? லைவ் ஷோ கிடையாதே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குட் பேட் அக்லி (2025)-.கதை வழக்கமான சாதா கேங்க்ஸ்டர் கதை தான் , ஆனால் ரசிகர்களைக்கவரும் மாஸ் காட்சிகள் படம் முழுக்க உண்டு , மார்க் ஆண்டனி அளவுக்கு மெகா ஹிட் ஆகாது , அஜித் ரசிகர்கள் அமர்க்களம் எனக்கொண்டாடுவார்கள் . பொது ரசிகர்கள் இது ஒரு சராசரி ஆக்சன் மசாலாப்படம் என்பார்கள் ..ஜி வி பிரகாஷின் பிஜிஎம் அட்டகாசம் ,ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 41, ரேட்டிங் - 2.75 / 5
குட் பேட் அக்லி | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆதிக் ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | நவீன் யர்னீ இரவி சங்கர் குல்சன் குமார் பூஷன் குமார் கிருஷ்ணன் குமார் |
கதை | ஆதிக் ரவிச்சந்திரன் இரவி கந்தசாமி ஹரிஷ் மணிகண்டன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அபிநந்தன் இராமானுஜம் |
படத்தொகுப்பு | விஜய் வேலுகுட்டி |
கலையகம் | மைத்ரி மூவி மேக்கர்ஸ் டீ-சீரீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 10, 2025 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹225–270 கோடி[1][2][3] |