1.என் பேரு சஞ்சய் சரக்கு சாமி,என் பொழுதுபோக்கு ,தொழில் ரெண்டுமே குடிதான்,என்னோட லட்சியம் எல்லா சரக்கும் அடிக்கனும்,முடியாதுன்னு நினைக்கறீங்களா?தன்னம்பிக்கைக்கும்,தலைக்கனத்துக்கும் ஒரு கட்டிங்க் அளவுதான் வித்தியாசம்,என்னால எல்லா சரக்கையும் ராவா அடிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை.என்னால மட்டும்தான் ராவா அடிக்கனும்னு சொல்றது தலைக்கனம்,கஷ்டப்பட்டு குடிச்சா வாமிட் வரும்,இஷ்டப்பட்டு அடிச்சா போதை வரும்..
2. தண்ணி அடிச்சுட்டு ரகளை பண்ற தண்ணி வண்டி கேஸூங்க....பொதுவா சொல்ற டயலாக்ஸ்----
1. மாப்ளே,நீ என் தம்பி மாதிரிடா....
2.நான் வண்டி ஓட்டறேண்டா...
3. எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏர்றது இல்லையே...(மப்பு)
4.நான் போதைல உளர்றேன்ன்னு நினைக்காதே...(எப்பவும் அவரு உளறுவாய்தான்)
5.இன்னொரு பெக் அடிச்சா செமயா இருக்கும் .
6.என்ன வேணும்னு சொல்லு,உனக்காக நான் உயிரையே குடுப்பேன்.
7. மச்சி,நாளைல இருந்து நான் சரக்கு அடிக்க மாட்டேன்.
3. எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...
4. MANAGEMENT STUDENT KISSES A GIRL.
GIRL - WHAT IS THIS?
BOY - IT IS CALLED DIRECT MARKETTING,
GIRL SLAPS THE BOY.( பளார்னு விட்டா பாரு ஒரு அறை)
BOY - WHAT IS THIS?
GIRL- THIS IS CALLED CUSTOMER FEED BACK.
டிஸ்கி 1 - இந்தப்பதிவு வடக்குப்பட்டி ராமசாமியின் போதைக்கதை,இதற்கும் பன்னிக்குட்டி ராமசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ராம்சாமியின் நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தபந்தங்கள் இப்பதிவைக்கண்டு என் மேல் கோபித்துக்கொண்டால் அதற்கு.....
ஒண்ணும் பண்ண முடியாது.
டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க.