குஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது
முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
Posted Date :
07:33 (20/12/2012)Last updated :
12:33 (20/12/2012)
அகமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள
நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால்,
ஆளும் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
குஜராத் முன்னணி
நிலவரம்
பா.ஜ. க
- 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)
காங்கிரஸ் - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )
மற்றவை - 6 ( 3 வெற்றி + 3 முன்னிலை )
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை
துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக்
கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.
மோடி வெற்றி
மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இமாச்சல்
முன்னணி நிலவரம்:
காங்கிரஸ்
- 39 ( 13 வெற்றி + 26 முன்னிலை )
பா.ஜ.க. - 24 ( 7 வெற்றி + 17 முன்னிலை )
மற்றவை - 6 ( 1 வெற்றி + 5 முன்னிலை )
இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில்
முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஆளும் பா.ஜ. க
பின்னடைவை சந்தித்துள்ளது.
முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை
வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்
என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று
தெரிவித்தார்.
சிம்லா:
இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக
இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து
ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க. வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.பகல் 12 மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும், மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும் காணப்பட்டன.

திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர்
சட்டத்திலும் திருத்தம்!
Posted Date :
07:42 (20/12/2012)Last updated :
07:42 (20/12/2012)
சென்னை:
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம்
செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே
அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும்
ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.
மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.
புதிய திட்டங்கள்
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர்
வெளியிட்டார்.
டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.
இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.
பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.
அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.
தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.
அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.
விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.
புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.

நன்றி - விகடன்
மக்கள் கருத்து
1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து
வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என்
நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு
இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து
கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என்
வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி
தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் ....
மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில்
நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
.. வழியில் ஒரு உடுப்பி
ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி
கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும்
அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014
தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற
என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் ....
மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே
அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை
தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
எஸ்.
மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
2. முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின்
வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய
ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி
கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி
ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன்
தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம
ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES
NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி)
வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும்
கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின்
ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார்.
இதன் மூலம் என்ன
தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து
மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட
இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும்
பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50%
மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின்
வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங்
ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது.
ஆனந்த ரீஜனில்
சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது.
(5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது.
தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும்
அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும்
உண்மையில் இது வெற்றி இல்லை.
3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார்.
மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும்
நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை
இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற
அளவில் வெற்றி பெறுகிறார்.
ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது
பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப்
பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து,
மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை
ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத்
தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி
அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு,
முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர்
பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர்.
4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி...
இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது..
நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை (
மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு
எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து
தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே
சமயத்தில்...
பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு
பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்..
இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு...
வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது
மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில
கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி
ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன்
ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும்.
5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி
ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக
காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக
வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர்.
இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால்
அது ஆச்சரியமான விசயமே
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
.
தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான
கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும்.
அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான
கூட்டனியாக இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான்
முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல.
தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட
நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது....
இரண்டு விசயம் தான்
உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல்
இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்
இருப்பது.
திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என்
மனமார்ந்த வாழ்த்துகள்...
6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ்
பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை
அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார்
அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான்
நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால்
நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது
திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல்
கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும்
எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல
பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால
நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்
வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.?
நன்றி - விகடன் , தினமலர்
New Delhi: BJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.
He said it was a vote for "development and Mr Modi's leadership."
"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said
Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari
New Delhi: BJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.
He said it was a vote for "development and Mr Modi's leadership."
"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said
"People have voted for the BJP for the fifth
time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

THANX - NDTV