1 நிலவு தூங்கும் நேரம் இரவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் நினைவு தூங்கிடாது , இது ஒரு தொடர்கதை தினம் தினம் வள்ர்பிறை
2 கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திடுச்சு காதல் செய்வதற்கு இடம் காலியாய் இருக்கு
3 கை வலிக்குது கை வலிக்குது மாமோய்
4 பூங்காற்றே தீண்டாதே
5 வெச்சாளாம் நெத்திப்பொட்டு தன் கையால அத்தானின் நெஞ்சைத்தொட்டு
முதல் 3 பாடல் மோகன் -இளவரசி ஜோடிக்கு அடுத்த 2 பாடல்கள் மோகன் ரேவதி ஜோடிக்கு
அந்தக்காலத்துல டபுள் ஹீரோயின் சப்க்ஜெக்ட்ல ஹீரோ யார் கூட க்ளைமாக்ஸ்ல சேருவார்? என்பதற்கு இந்த ஜோடிப்பாட்டு கவுண்ட்டிங் ஹெல்ப்பா இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓப்பனிங் சீன்ல ஹீரோயினை சிலர் துரத்திட்டு வர்றாங்க. வேகமா ஓடி வரும் ஹீரோயின் கிடைச்ச பஸ்ல ஏறிக்குது . அதுல ஹீரோ இருக்காரு . இருவருக்கும் அறிமுகம் ஆகுது. சென்னைல இறங்கி இருவரும் ஒரு இடத்துல அடைக்கலம் ஆகி ஒண்ணா தங்கறாங்க . ஹீரோ வேலை தேடிக்கிட்டு இருக்கார் கைல இருக்கும் காசெல்லாம் கரையுது
ஹீரோயினுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு அவர் நர்சா இருந்தவர் . கோடீஸ்வரர் ஒருத்தர் விழி சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் வந்தப்போ அவரோட பார்ட்னர் அவரை ஏமாற்றி வெற்று பாண்ட் பேப்பர்ல சைன் வாங்க ட்ரை பண்றார் அதை ஹீரோயின் காட்டிக்கொடுக்கிறார் கோடீஸ்வரர் சொத்துக்கள் காப்பாற்றப்படுது . அதுக்கு நன்றிக்கடன் பட்டவரா அந்த கோடீஸ்வரர் ஆகறார்
ஹீரோயினை வளர்த்து வந்த சித்தி ஹீரொயின் பெரிய மனுஷி ஆனதும் தன் தம்பிக்கு மேரேஜ் பண்ணி வைக்க ட்ரை பண்றாரு அது பிடிக்காம ஓடி வந்தவர் அப்டி ஓடி வந்துதான் அந்த ப0ஸ்ல ஏறி ஹீரோ கிட்டே அறிமுகம் ஆனது
இப்போ ஹீரோ ஹீரோயின் இருவரும் லவ்வர்ஸ் ஆனா பூவாவுக்கு வழி இல்லை அதனால ஒரு ஐடியா பண்றாங்க இருவரும் பிரிவது அவரவர் வழியில் வேலை தேடுவது ஆறு மாசம் கழிச்சு இதே இடத்தில் சேர்வது
அதன்படி ஹீரோ ஒரு கம்பெனில இண்ட்ட்டர்வ்யூக்கு போறார் அதுல சேரனும்னா டெபாசிட் பணம் 10.000 ரூபா கட்டணும், கரெக்டா பஸ்ல யாரோ ,மிஸ் பண்ணுன பணம் ஹீரோக்குக்கிடைக்குது . அதைக்கட்டி வேலைல சேர்றார். ஒரு எஸ்டேட் ல மேனேஜர் வேலை . அந்த எஸ்டேட்டோட ஓனர் ஹீரோயின் சொத்துக்களைக்காப்பாத்துனாரே அந்த கோடீஸ்வரர் தான்
மேனேஜரா ஆனதும் ஹீரோ இன்னொரு ஹீரோயினை சந்திக்கறார். இவரும் ஏழை . இவரது மேரேஜ் திடீர்னு நின்னு போச்சு காரணம் மேரேஜ்க்கு வரதட்சணையா தர்றதா சொன்ன பணம் கடைசி டைம்ல மிஸ் ஆனதால இந்த ஹீரோயினோட அப்பா மன நலம் பாதிக்கப்படுகிறார். அந்த மிஸ் ஆன பணம் தான் ஹீரோ டெபாசிட் கட்ட கிடைச்ச பணம்
இப்போ தெரிஞ்சோ தெரியாமயோ ஹீரோ அந்த பெண்ணின் திருமணம் தடை பட்டதுக்கு கார்ணமா ஆகிட்டார் அதனால அவருக்கு குற்ற உணர்வு
இப்போ ஹீரோ எந்த பெண்ணை மேரேஜ் பண்றார்? இதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா மோகன் . பாடகரா நடிக்காம மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் இது எந்த வித பில்டப்பும் இல்லாம ரிலீஸ் ஆகி செமயா ஓடுன படம் . மோகன் நடிப்பு இதுல செமயா இருக்கும் . பெண்களை கவரும் நடிப்பு. மோகன் ஏழையா நடிச்ச படங்கள் எல்லாமே பெண்களைக்கவரும் படமாகவே அமைஞ்சிடும் /
ஹீரோயினா இளவரசி எளிமையான தோற்றம் அடக்கமான அழகு . கண்ணியமான உடை . அந்தக்காலத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாங்க. பாடல் காட்சிகளிலும் சோகக்கட்சிகளில் மிளிர்வார்
இன்னொரு ஹீரோயினா ரேவதி . சுட்டிப்பொண்ணு கேரக்டர் . துறுதுறு நடிப்பு
ரேவதியை ஆசைப்படும் கேரக்டரில் வாகை ச்ந்திர சேகர் . கச்சிதமான நடிப்பு
ரேவதியின் அப்பாவாக டெல்லி கணேஷ் . எனக்கு ஒரு பெண்ணு இருக்கு அவளைக்கல்யாணம் ப்ண்ணிக்கறேளா? என எல்லாரிடமும் கேட்கும் மனநி லை தவறிய கேரக்டரில் அச்த்தி இருப்பார்
ராஜராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் குளுமையா இருக்கும். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே செம ஹிட்டு .
சபாஷ் டைரக்டர் ( ஆர் சுந்தர்ராஜன் )
1 ஓப்பனிங் சீன்ல ஹீரோ ஹீரோயின் இருவருக்குமான அறிமுகம் மிக மாறுபட்டு இருக்கும். ஹீரோயினுக்கு ஹெல்ப் பண்ணப்போய் இவருதான் என் புருசன்னு மாட்டி விடும் சீன் செம ட்விஸ்ட்டா இருக்கும் , இருவருக்குமான பாண்டிங் கச்சிதமா இருக்கும்
2 ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒரே இடத்தில் குடி இருந்தாலும் கண்ணியம் காக்கும் பழக்கம் மனம் கவர்வதா இருக்கும்
3 யார்னே தெரியாத விட்டுக்கல்யாண மண்டபத்தில் போய் சாப்பிட்ட அனுபவம் எல்லாருக்குமே இருக்கும். இந்தப்பட்த்தில்; அறிமுகம் இல்லாத அழைப்பில்லாத மேரேஜ்க்கு சாப்பிடப்போய் இருவரும் அவமானப்படும் இடம் டச்சிங்கா இருக்கு,ம்
4 வாகை சந்திர சேகர் ரேவதி இருவரும் சந்திக்கும் இடம் கனகச்சிதாம இருக்கும் இருவர் நடிப்பும் செமயா இருக்கும்
5 க்ளைமாக்சில் யார் கூட ஜோடி என்பதில் ஒரு ஆச்சரியம் இருந்தாலும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஷாக் சர்ப்பரைசா இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஓப்பனிங் சீன்ல ஹீரோ சூட்கேஸ்ல இருந்து பணம் எடுக்கும்போது சில நோட்டுக்கள் கீழே விழும் அதை ஹீரோ ஹீரோயின் இருவரும் கவனிக்கலை என்பதை சரியாக காட்சிப்படுத்தாம இருப்பாங்க . சாப்பாட்டுக்கே வழி இல்லாத வேலை இல்லாத இளைஞன் இருக்கற கொஞ்ச காசையும் அவ்ளோ அசால்ட்டாவா விடுவாங்களா ?
2 பஸ் டிக்கெட் எடுத்து உதவி செய்யும் ஹீரோ டீ பிரேக்கில் எல்லாரும் போய் டீ டிஃபன் சாப்பிட ஹீரோவும் போறார் அப்போ ஃபார்மாலிட்டிக்குக்கூட ஹீரோயினிடம் டீ குடிக்கறீங்களா?னு கேட்க மாட்டார்
3 ஓப்பனிங் சீன்ல இளவரசி கைல ஒரு சூட்கேசோட ஓடி வர்றார். வில்லன் துரத்திட்டு வர்றான். ஒரு பெண்ணை துரத்திப்பிடிப்பது ஈசி ., அதுவும் கைல சூட்கேஸ் வெயிட் வேற ஆனா வில்லன் அரை பர்லாங் தூரம் கேப் விட்டுதான் துரத்துவான் அவ்ளோ டம்மி வில்லன் போல
4 ஹீரோ ஹீரோயின் இருவரும் பல நாட்கள் ஒன்றா பழகியும் டெலிஃபோன்ல குரல் இருவருக்கும் தெரியாமல் இருப்பது எப்படி ?
5 , மிக கஷ்டப்பட்டு பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருந்து மேனேஜராக வரும் ஹீரோ அவரைப்போலவே ஏழ்மை நிலையில் இருக்கும் ரேவதியை அற்பக்காரணத்துக்காக வேலையை விட்டு தூக்குவது எப்படி ? ஒரு ஏழையோட கஷ்டம் இன்னொரு ஏழைக்குதானே தெரியும் ?
6 வேறு யாரையோ பெண் பார்க்கப்போகும் வழியில் சந்திர சேகர் ரேவதியைப்பார்த்து அவர் மேல் அன்பு கொள்கிறார் ஓக்கே ரேவதியிடம் கருத்து கேட்காமயே தன் பெற்றோரிடம் ரேவதிதான் வேணும் இல்லைன்னா எனக்கு உங்க சொத்து பத்து எதுவும் வேணாம்னு வெளில வருவது நம்பவே முடியல. இருவரும் லவ்வி இருந்தா அது ஓக்கே அந்தப்பக்கம் எந்த சிக்னலும் வராம எப்படி எதுக்காக அந்த முடிவு ? அவ்ளோ சொத்தை உதறிட்டு சாதா டிரைவராக காலம் தள்ளுவது வெரி வெரி ரேர் கேஸ் நம்ப முடியல
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மோகன் , இளையராஜா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் டோண்ட் மிஸ் இட் யூ ட்யூப் ல கிடைக்குது ரேட்டிங் 3 / 5
Kunguma Chimil | |
---|---|
Directed by | R. Sundarrajan |
Written by | R. Sundarrajan |
Produced by | Durai Rasappan Srinivasan |
Starring | Mohan Ilavarasi Revathi Chandrasekhar |
Cinematography | Rajarajan |
Edited by | Srinivas–Krishna |
Music by | Ilaiyaraaja |
Production company | Sunflower Creations |
Release date |
|
Country | India |
Language | Tamil |