புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை,
நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில்
அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.
அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.
"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே
2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?
3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்
4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....
5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள்
அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில
வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும்
நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .
6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று.
காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான்
இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள்
மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.
7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ?
இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான
குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு
அனுமதி அளிக்கலாமா ?
8.
ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை
எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய
காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம்
அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான
படங்களை கொடுப்பர்
9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி
சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை
தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.
10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில்
பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய
ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில்
ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக
இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப்
பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில்
தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு
எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட
வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர்
குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..
11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள
வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி,
வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ்
பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட
படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது
செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட
ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை
12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல
விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத
விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான
சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே
இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை.
அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள்,
மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்?
ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு
வழிகோலும்
நன்றி - தினமலர்