Showing posts with label கில்மா நடந்தாலே தம்பதிதானா? கோர்ட் தீர்ப்பு - காமெடி கலாட்டா. Show all posts
Showing posts with label கில்மா நடந்தாலே தம்பதிதானா? கோர்ட் தீர்ப்பு - காமெடி கலாட்டா. Show all posts

Tuesday, June 18, 2013

கில்மா நடந்தாலே தம்பதிதானா? கோர்ட் தீர்ப்பு - காமெடி கலாட்டா

சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். 



 அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்


.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”சுற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை



.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். 



எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து 


1. நீதிபதி அவர்களே சம்ப்ரதாயம் சடங்கு ஆகியவை உங்கள் சட்டங்களால் எழுதப்படாமல் காலம் காலமாய் நடைமுறையில் உள்ளது. அதை உங்கள் தீர்புக்களில் கொண்டு வராமல் வர்ணனைக்கு அப்பால் இருந்து இந்த கேசுக்கு தீர்ப்பு கொடுத்திருக்கலாம். Anyhow standards differ person to person



2. தீர்ப்பு சரிதான். கணவன் மனைவி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.. வாசக பெருமக்கள் உடனடியாக வெறுப்பாகி விடுகிறார்கள் ... உடனே லாட்ஜ்,, அது இது என்றெல்லாம் பாடுகிறார்கள்... தீர்ப்புக்கள் வாதத்தின் அடிப்படையில் சட்ட நுணுக்க எங்களுடன் சொல்ல வேண்டும்... எதிரி எனக்கே ஆயிரம் தான் கிடைக்கிறது நானும் ஏழை என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்...அதனால் தான் மாதம் 500 கொடுக்கச்சொல்லி இருக்கலாம். என்னவோ மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு பாராட்டுக்குரியதே...



3. நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு மட்டுமே சொல்லியிருக்கிறார். சட்டம் இயற்றவில்லை. ஆகையால் வரிக்கு வரி இதை சட்டம் என்று நினைக்கக் கூடாது. கணவன் மனைவி என்ற நம்பிக்கையில் சேர்ந்து வாழபவர்கள் அவர்கள் எல்லா திருமண சடங்குகளையும் கடைப் பிடிக்காமல் இருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி என்று கருதப்படுவார்கள். இது இந்த வழக்கு அல்லது இது போன்ற வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். விதண்டாவாதமாக விலை மாதர்களிடம் உறவு கொள்வதையும், வெறும் உடல் பசிக்காக சேர்ந்து வாழ்வதையும், திருமணத்தை தாண்டிய சட்ட பூர்வமற்ற உறவுகளையும் இதனுடன் ஒப்பிட்டு வாதம் செய்யக்கூடாது. 



4.  திருமணம் என்பது வேண்டுமானால் அவரவர் முறைப்படி நடக்கட்டும், ஆனால் ரெஜிஸ்ட்ரேஷன் என்பது அரசு அலுவலகத்தில் தான் நடை பெற வேண்டும். நீதியரசரே, நீங்க என்ன மாண்டேக் சிங் தம்பியா? மாதம் 500 அப்படீன்னா டெய்லி 16 ரூபாய், கொஞ்சம் கண்ணை திறந்து உலகத்தையும் பாருங்க, அதோட குடும்ப நல கோர்டுக்கு, அங்கு அன்வருக்கு சாதகமாய் தீர்பளித்த கேவலமான "பிறவி"க்கு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன். இல்லை மண்டையில் ஏற வில்லையா, ஒன்னாம் கிளாஸ் முதல் மீண்டும் படித்து வர வேண்டும் என்று தீர்ப்பு சொல்லுங்களேன்.


5. அதெப்படி ? அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர் ? அப்போ ஒரு பெண் மறைமுக வீடியோ எடுக்க வேண்டுமா ? நிருபிப்பதற்கு ? ஒரு ஆணை பழிவாங்க கூட இனிமேல் பலபெண்கள் வீடியோ ஆதாரத்துடன் நீதிமன்றம் வருவார்கள். அதை நீதிபதிகள் கண்டு மகிழுங்கள் ..இந்திய சட்டங்களையும் தீர்ப்பையும் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த 500 ரூபாயை வைத்து பல் துலக்க பேஸ்டும் பிரசும் தான் வாங்க முடியும் .

thanx - dinamalar