Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Saturday, February 04, 2012

செங்காத்து பூமியிலே- மதுரை உசிலம்பட்டி மண்வாசனை,இளையராஜா இசை ரசனை -சினிமா விமர்சனம்

http://www.desiboost.com/tamil/wp-content/uploads/2011/04/sengathu-bhoomiyile-audio-songs.jpg 

ஆண்களின் அவசர முடிவால் பெண்களுக்கு ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.. ஆத்திரத்தில், கோபத்தில் , பழி வாங்கும் உணர்வில் ஆண் செய்யும் சில செயல்கள் அந்த நொடியில் சரியானதாகத்தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் காலம் பூராவும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் தான் இருக்கும்.. அந்த மாதிரி ஒரு குடும்பப்பகையின் ஆராத ரணம் தான் செங்காத்து பூமியிலே.. 

பாரதிராஜாவின் சீடரான ரத்னகுமார் மண்ணுக்குள் வைரம் படத்திலேயே கண் கலங்க வைத்தவர்.. இந்தப்படத்துக்கு கதைக்கு பெரிதாக மெனக்கெடவில்லை.. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே தோசையை திருப்பி போட்டா அது செங்காத்து பூமியிலே ... தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற "கிழக்குச் சீமை‌‌யிலே",விருது வாங்குன  "கருத்தம்மா", சுமாரா ஓடுன "கடல் பூக்கள்", ஃபிளாப் ஆன "தமிழ்ச்செல்வன்" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் தான் இவர்.. 

படத்தோட கதை என்ன? பவன், செந்தில் 2 பேரும் மாமன் மச்சான்ஸ்.. இவர் தங்கச்சியை அவரும், அவர் தங்கச்சியை இவரும் லவ்விங்க்.. ஒரு அடிதடி தகராறுல கொலை கேஸ்ல  பவன் ஜெயிலுக்கு போயிடறாரு.. கொலையை பார்த்த சாட்சி செந்திலும், செந்திலோட அப்பாவும்.. பவனோட அப்பா கெஞ்சறாரு.. என் பையன் உசுரு உங்க கையில தான் இருக்கு.. பொய் சாட்சி சொல்லி காப்பாத்துங்கன்னு.. கேட்கலை.. உண்மை விளம்பிகளா இருக்காங்க.. கோர்ட்ல உண்மையை சொன்னதும் பவன் வீட்ல பிரச்சனை.. உன்னால தானே பையன் ஜெயில்ல இருக்கான், நீ ஏன் உசுரோட இருக்கே, நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதானேன்னு சம்சாரம் திட்ட பவனோட அப்பா தூக்கு போட்டு சாகறாரு.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh79kQLlijDP0BomOytw8gSuFh-LNNywgR_kNcoPVDx_dMeMRE4siBDn7IuYxFUs-w94YCUZiZSxnthyJGdOpC4tVw1PxzvovI_b1M81a2MplxmUxwAEd3jUHgwUUrJjmhwyEoGt33U1G4/s1600/Sengathu+Bhoomiyile+Stills+%252814%2529.jpg

அப்பாவோட இறுதி சடங்குல கலந்துக்க ஜெயில்ல இருந்து போலீஸ் பாதுகாப்புல வர்ற  பவன் தன் அப்பாவின் சாவுக்கு மறைமுகமான காரணமா இருந்த செந்திலோட அப்பாவை சதக்..ஆள் க்ளோஸ்.. ஜென்மப்பகை ஆகிடுது.. 2 லவ்வும் பணால்.. 

பல வெட்டு குத்து கொலைகளுக்குப்பிறகு காதல் ஜோடிகள் இணைஞ்சாங்களா? வீணா போனாங்களா? அப்படிங்கறதுதான் கதை..

பவன் நடிப்பு கன கச்சிதம்.. முறைப்பு, விரைப்பு,கோபம், வஞ்சம் என எல்லா உணர்வுகளையும் கண்களிலேயே காட்டி விடுகிறார்.. ஆனா எப்போ பாரு அவர் அருவா , ஆக்ரோஷம் காட்டிட்டே இருப்பது சலிப்பா இருக்கு.. 

மிர்ச்சி செந்தில் வாய்ப்பு கம்மி என்றாலும் வந்த வரை ஓக்கே.. இவர் காதல் காட்சியில் பரிமளிக்கிறார்..

பிரியங்கா மஞ்சள் கிழங்கையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் கலப்பினம் செய்து தயாரிக்கப்பட்ட கலப்பின கிழங்கு வகை மாதிரி தள தள என்று இருக்கிறார்.. ஆல்ரெடி வெய்யில் படத்தில் நடிச்சிருக்கார்.. இவர் தன் மாமனுடன் செய்யும்  குறும்புகள் ஓக்கே ரகம்.. 

சுனு லட்சுமி மாநிறமாக இருந்தாலும் களையான கிராமத்துமுகம்,.,. இவர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கு..  சோகமான காட்சியில் கூட ஜொலிக்கிறார்.. மேக்கப்பே இல்லாமல், சில இடங்களில் மிக சொற்ப ஒப்பனையில் அவர் பிரியங்காவை முந்துகிறார்.. 

சிங்கம்புலி சீரியஸ் ஆன கதையில் இளைப்பாற கொஞ்சம் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு.. அவர் வாய்ஸ் மாடுலேஷன் மாபெரும் பிளஸ் என்றாலும் அவர் லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது போர்..

பவனின் அப்பாவாக வரும் நடிகர் புதுமுகம் போல .. நீட் பர்ஃபார்மென்ஸ்.. அதே போல் செந்திலின் அப்பாவாக வருபவர் நிதானமான நடிப்பு, அதுவும் கோர்ட் சீன்ல் செம கலக்கல்  நடிப்பு.. 

படத்துக்கு பெரிய பிளஸ் இசை ஞாநி இளையராஜா..  படத்தோட ஓப்பனிங்க்ல வரும் ஓரம் போ ரீமிக்ஸ் செம ரகளை.. ஒரே பைக்கில் 2 காதல் ஜோடிகளும் ஊர் உலா போவது செம கிளு கிளு.. ( அவங்க போனா நமக்கு ஏன் கிளு கிளு? ஹி ஹி அவங்க போனா நாம போன மாதிரி ஹி ஹி )

சிக்கிக்குங்க..... பாட்டு செம மெலோடி.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்த இசை ஞானி ஹிட்..  காத்திருப்பேன் காத்திருப்பேன் என் கண் ரெண்டும் உள்ள வரை க்கும் பாட்டு அழகான டூயட் பாடல்.. கிராமிய இசை..  க்ளைமாக்ஸ் சோகப்பாட்டான என் உசுரு என்னை விட்டுப்போனாலும் உன்னை விட்டு போகாது உருக்கம்.. தியேட்டரில் யாரும் கிளம்பிப்போகாமல் பார்க்க வைக்கிறது.. கிராமத்து திருவிழாவில் பின்னணி இசையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.. வழக்கமாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் பண்ணும் இசை ஞாநி இதில் பாடல்களுக்கான இசையில் அதீத கவனம் செலுத்தி உழைத்திருப்பது தெரிகிறது

http://mimg.sulekha.com/tamil/sengathu-bhoomiyile/stills/sengathu-bhoomiyile-movie-photos-0115.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  நாயகிகள் தேர்வு கன கச்சிதம்.. இருவரும் படத்துக்கு முக்கிய பிளஸ்..

2. ஒளிப்பதிவு, இசை படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். சூர்யோதய, அஸ்தமன காட்சிகள் கிராமத்துக்கொள்ளை அழகு.. 

3. இரண்டு நாயகிகள் இருந்தும் மிக கண்ணியமாக காதல் காட்சிகள் வைத்தது.. 

4. அப்பா கேரக்டரில் வரும் இருவரும் மிக இயல்பான நடிப்பை தந்தது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzoBISdrbDrm_Qz2rCBrp5RofifnCaixwQe38Q3i27UidtTd9xp0eiPIphZmriYcuZtHjNF_3tjUpeHZT4wTuuRPGUY8rQHBxLY-kzI8wmvy1MO09uAgw6lVMYWHj3n8MaOSh0oJiUPwF1/s1600/sengathu-bhoomiyile+_25_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தில் எதற்கு இத்தனை கேரக்டர்கள்? யார்  யார் யாரோட சொந்தம்? என்று கண்டு பிடித்து புரியறதுக்குள் இடைவேளையே வந்துடுது.. 

2.  நகராட்சி கழிப்பறை வாசலில்  சேர் போட்டு அமர்ந்து வசூல் செய்யும்  ஒரு ஹீரோவின் அம்மா கேரக்டர் உடல் முழுக்க 70 பவுன் நகை போட்டு இருக்கே? ஒரு சாதாரண ஊர்ல ஒரு பொண்ணு அவ்ளவ் நகை போட்டுட்டு மேரேஜ்க்குதான் போவாங்க.. 

3. அதே பெண் வாசலில் அமர்ந்து வசூல் பண்ணி விடுகிறார்.. அடுத்த கட்சியில் அவர் கணவர் உள்ளே போய் ஸ்பாட் வசூல் பண்றார்.. போதாததுக்கு சிங்கம் புலி வேற உள்ளே போய்  வசூல் பண்றார்.. ஏன்?

4. இயற்கை உபாதைகள் கழிப்பதை, அந்த இடத்தை வைத்து காமெடி பண்ணத்தான் வேண்டுமா?

5. கிராமம் என்றாலே வன்முறை கொலை, வெட்டு, குத்து மட்டும்தானா? அதன் மறுபக்கம் ஏதும் இல்லையா?

6. பரோலில் வரும் கைதி உடன் காவலுக்கு 4 போலீஸ் பக்கத்துலயே இருக்காங்க.. தன் அப்பாவின் சடலத்துக்கு தீ வைத்து விட்டு ஒருத்தனை வெட்ட அரிவாள் எடுத்து பாய்வதை அந்த போலீஸ் பார்த்துக்கிட்டே இருக்கு.. அந்த போலீஸ்க்குப்பின்னால நிக்கற கிராமத்து ஆளுங்க பாய்ந்து வந்த பின் தான் போலீஸ் நகர்ந்து வர்றாங்க.. ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ_Sc7lj8iurPFJQSV42aXx61Adzt8kAihyphenhyphenbCfBjrv9-rk8-Gtz92JfNGWDT9YHuH9HHJBB8aovm-c1oAZvOX83H0TVkYIRGvIa5ODlg-Xtf2di8xgMVrfEy7O2EvxB3PVYn1ZAgT2Xvw/s640/sengathu-bhoomiyile+_44_.jpg


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -  கிராமத்து கதை ரசிப்பவர்கள், இசைஞானி ரசிகர்கள், பெண்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்.