கிராமத்து அத்தியாயம் (1980 )– சினிமா விமர்சனம் ( எ
ருத்ரய்யா ஃபிலிம்)
இயக்குநர் ருத்ரய்யா எடுத்தது
ரெண்டே படங்கள் அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம். 2 படங்களுமே வணிக ரீதியில்
வெற்றி பெறா விட்டாலும் இன்றளவும் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் இவர் படங்கள் பாடமாக
வைக்கப்பட்டுள்ளது, முன்னணி இயக்குநர்களான கே பாலச்சந்தர் , பாரதிராஜா உட்பட பலரும் இவர் திறமையை
வியந்து பாராட்டியதுண்டு
ஒரு கிராமத்துல ஒரு
காதல் ஜோடி , நாயகனும், நாயகியும். நாயகியின்
அப்பா திடீர்னு வேற பக்கம் மாப்ளை பார்த்துடறார்.
நாயகிக்கு மறுக்க இயலாத சூழல், நாயகனுக்கு
நடக்க இருக்கும் கல்யாணத்தை தடுக்க
முடியாத சூழல்
கல்யாணத்துக்கப்புறமும், என்னை மறந்துட
மாட்டியே? எப்பவும் போல பழகுவே இல்ல? அப்டினு வினோதமான ஒரு கேள்வியை
காதலன் முன் வைக்கிறான், ஏதோ காதல் மயக்கத்துல
நாயகியும் ம் ம் அப்டிங்கறா.
மேரேஜ் நடந்த பின்
காதலிக்கு பழைய காதலன்
நினைவால் கணவனுடன் கூட முடியா
மனநிலை. கணவன் நல்லவன் , மவுன ராகம் மோகன் மாதிரி பொறுமையா
இருக்கான். கணவனின் நல்ல குணம் கண்டு நாயகி மனம் மாறி கணவனுடன்
சிரித்துப்பேச ஆரம்பிக்கிறாள்
குறுக்கால காதலன்
வந்து குட்டையைக்குழப்பறான், இன்ன இடத்துக்கு
இன்ன சமயத்துக்கு நீ தனியா என்னைப்பார்க்க வரனும், இல்லைன்னா தற்கொலை பண்ணிக்குவேன்னு மிர்ட்றான், ஏற்கனவே ஒரு டைம்
காதல் தோல்வில தற்கொலை முயற்சித்து தப்பியவன் தான் அவன், அதனால்
நாயகி பயந்து அவன் சொன்ன இடத்துக்கு
வருகிறாள்
அதற்குப்பின் நடந்த சுவராஸ்யமான
சம்பவங்கள் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் முக்கியமான
விஷயங்கள்
ஹீரோவா வருபவர் புதுமுகம்
போல , சுமார் தான், நாயகி நடிப்பு , முகத்தோற்றம் அருமை .
கணவன் கேரக்டரில் நடித்திருப்பவர் சுந்தர்னு நினைக்கறேன், நல்லா பண்ணி இருக்கார்
பூட்டாத பூட்டுக்கள் படத்தில்
நாயகிக்கு கள்ளக்காதலனாக வந்தாரே
அவர் தான்
சபாஷ் டைரக்டர்
1
நாயகி தேர்வு , பாடல்களுக்கான சிச்சுவேஷன், பாடல்கள், இசை இவை எல்லாம்படத்தின் +
2
ஆத்து மேட்டுல ஒரு
பாட்டு கேட்குது,
ஊதக்காத்து வீசையில , உடம்பு கூசயில ,
வாடாத ரோசாப்பூ எல்லாமே
கலக்கல் சாங்ஸ், அதுக்கான பிக்சரைசேஷனும் குட்
3 கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வளிக்க
முன் வரும் ஆள், அந்த வாழ்க்கை பற்றி நாயகி கேட்கும்
கேள்விகள், அந்தப்பெண்ணின் பதில்கள் எல்லாம்
யதார்த்தம்
நச் வசனங்கள்
1
உன் கண்ணைப்பார்த்ததும் ஒரு நல்ல
கவிதையைப்படிச்ச மாதிரி இருந்தது
ஓ, கவிதைன்னா என்னய்யா?
உன் கண்
அப்டின்னா?
அழகு ( ஏப்பா , அசிஸ்டெண்ட்
டைரக்டர்ஸ் , நோட் பண்ணுங்கப்பா நோட்
பண்ணுங்கப்பா மொமெண்ட்)
2
பட்டினியே இருந்தாலும் கடன் இல்லாம இருப்பதுதான் முக்கியம்
3
நல்ல பாம்பை
ஒரு பொண்ணு தன் கனவில் கண்டா கூடிய விரைவில்
குழந்தை பிறக்கும்னு ஐதீக்ம்
4
ஒரு பெண்ணை எப்படி
மதிக்கனுமோ அப்படி மதிக்கற ஆம்பளையை நாம மதிக்கறது தப்பில்லை
5
நான் கூத்துல பல வேஷம் போட்டவன்,
ஒரு வேஷத்துக்கு மேல சிரமம்,
மனசுக்கு குழப்பமா இருக்கும் , வாழ்க்கையும் அப்படித்தான், அதிக வேஷம் போட்டா பிரச்சனை
லாஜிக் மிஸ்டேக்ஸ்
, திரைக்கதையில் சில நெருடல்கள்
1 காதலியை நிஜமாக நேசிக்கும்
காதலனாக சித்தரிக்கப்படும் கேரக்டர்
திடீர் என வில்லன் ரேஞ்சுக்கு
காட்டுவதை ஜீரணிக்க முடியலை
2 யதார்த்தமான திரைக்கதை அமைப்பில்
ட்விஸ்ட் வைக்கிரேன் பேர்வழி என கொலை எல்லாம்
ஓவர், அது கதையோடும், கேரக்டரோடும் பொருந்தவே இல்லை
3
கல்யாணம் ஆகி முதல் சில நாட்கள்
மனைவி இல்லறத்துக்கு தயங்குவது
ஓக்கே , நீண்ட நாட்களாக கணவனை நெருங்க
விடாதப்ப கணவனுக்கு சந்தேகம் வராமல் இருப்பது எப்படி?
4
க்ளைமாக்ஸ் சீனில் காதலன்
வரச்சொன்ன இடத்துக்கு போகும் நாயகி
கணவன் பணி செய்யும் இடத்துக்கு
அருகில் இருக்கும் ரூட்டிலா போவாள்?, சுத்து வழி, மாற்று வழியில் தானே போகனும்?
சி.பி ஃபைனல் கமெண்ட்
– இது பாடல்களுக்காகவும் , ருத்ரய்யா பேருக்காகவும்
பார்க்கறதுன்னா பார்க்கலாம், கிராமங்களில் நடக்கும்
கதைக்களம் பிடிக்கும் என்பவர்களும் பார்க்கலாம், ரேட்டிங் 2.5 / 5