Showing posts with label காவியத்தலைவன் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label காவியத்தலைவன் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, November 29, 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

 

 பொறாமை தான்  மனிதனின் ஆதார  கெட்ட  குணம். ஆதி காலத்தில்  இருந்தே ( விஜய் யின் ஆதி அல்ல ) மனிதனிடம்  பொறாமை  உணர்வு  தலைதூக்கி  பல  போர்களை காண வைத்திருக்கிறது.அப்படிப்பட்ட  பொறாமை  குணம் இருவர் வாழ்வில்  ஏற்படுத்தும்   மாற்றங்கள் ,பாதிப்புகள் தான்  கதை .

கே  பி  சுந்தராம்பாள் - கிட்டப்பா  வின்  காதல்  கதை தான்  இது  என  பலரும்  சொல்லி வருகின்றனர், 

ஆல்பம் , வெயில் , அங்காடித்தெரு , அரவாண்  என  தனக்கென  தனி  முத்திரை  படைத்த  இயக்குநர்  வசந்த பாலன் -ன் கலைப்பூர்வமான  கமர்ஷியல் படம்  தான்  இது. 



ஒரு நாடகக்குழு. அதன்  தலைவர்    நாசர்.   சித்தார்த் , பிருத்வி  இருவரையும்   சின்ன வயசில்  இருந்தே  வளர்த்து  வர்றார்,நாடகத்தில்   எப்போதும்  சித்தார்த்துக்கே  முதல் இடம். அசால்ட்டா பாராட்டு  பெற்று விடுகிறார். நல்ல  நடிப்புத்திறமை  இருந்தும்  பிருத்விராஜ்க்கு அங்கீகாரம்  கிடைக்கலை.குஷ்பூ  எண்ட்ரி ஆனதும் இளங்கோவன்க்கு காங்கிரஸ் ல  கிரேஸ்  குறைஞ்ச  மாதிரி   பிருத்விக்கு  மவுசு  இல்லை.


அந்த ஊர்  ஜமீன் ராணிக்கும்   சித்தார்த்துக்கும்  லவ்.இதை   நாசர்  கிட்டே  போட்டுத்தந்து  பிரச்னை கிளப்பறார்  பிருத்வி. இந்த  களேபரத்துல  அந்த   ராணி  தற்கொலை  பண்ணிக்குது. குற்ற  உணர்ச்சியில் நாசரும்  அவுட்,

 இப்போ  நாடக ட்ரூப்   பிருத்வி  கையில் . சித்தார்த்   தேவதாஸ்  மாதிரி ஆகிடறார்.


இருவர்  வாழ்க்கையும்   என்ன ஆச்சு? என்பது  மிச்ச  மீதிக்கதை

ஹீரோவாக  சித்தார்த்  கலக்கலான நடிப்பு . இவரது நடிப்பில் நாளுக்கு நாள்  மெருகேறி வருது . இவரது  ஒல்லியான  உடல் அமைப்பு  முன் பாதியில்   கை  கொடுத்தாலும்  பின்  பாதியில்  பகத் சிங்காக  வருகையில்  , இன்ன  பிற காட்சிகளில்   எடுபடவில்லை. ஆனாலும்  திரைக்கதை  பலமாக  இருப்பதால்  பெரிய அளவில்  குறை  தெரியவில்லை . புது நாயகியுடனான   ரொமான்ஸ் காட்சியில்  ”ஸ்ருதி” தப்பாத  முத்த நயம்.நாசரிடம்  கொந்தளிக்கும் காட்சியில்  அப்ளாஸ் அள்ளுகிறார்,


வில்லனாக / 2வ்து நாயகனாக  பிருத்வி . தமிழ்  சினிமா அதிகம் பயன் படுத்தத்தவறிய ஒரு நல்ல நாயகன் . அட்டகாசமான  நடிப்பு . இவரது  வசன  உச்சரிப்பு  பெரிய  பலம் .


ஜமீன்  ராணியாக  வரும் (தமிழுக்கு) புதுமுகம் Anaika Soti (mumbai)கொள்ளை அழகு. பஞ்சு  மிட்டாய்  மாதிரி  ரோஸ்  கலர்  உதடு ( அது ஏன்  பஞ்சு  மிட்டாய்  ரோஸ் கலர்ல மட்டும்  வருது?அதை  முதன்  முதல் ல  கண்டு  பிடிச்சது  ரோஸ்மேரியா   இருக்குமோ? )


வேதிகா  தான்    2 வது நாயகி . இவருக்கு   மேக்கப்  ஓவர் . இன்னும்   கம்மி  பண்ணி  இருக்கலாம். ஆனால்  நடிப்பில்  குறை  இல்லை  ( பொண்ணுங்களை நாம  என்னைக்கு  குறை  சொல்லி  இருக்கோம் ?


நாசர்  , தம்பி   ராமைய்யா,மன்சூர் அலிகான் இன்ன பிற   நடிகர்களின்   குணச்சித்திர நடிப்பு   அருமை
ஒளிப்பதிவு  , இசை  , எடிட்டிங்   எல்லாம்  தரமோ  தரம்.



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  அவபேரு எனக்குத் தெரியாது, ஆனா அவள நான் ராசாத்தின்னுதான் கூப்புடுவேன்"


"ஏன்"


 "நான் ராசாமாதரி இருப்பனா, அவ தீ மாதி ரி இருப்பாளா-அதான் ராசாத்தி"


2   அப்ப மதுரை ஜில்லாவுலயே நாந்தான்யா பேர் போன பாகவதரு"


 "அப்பவே பேரு போச்சா" ;-)


3  கூத்தாடியை   கூத்து  மேடையிலேயே  கவுரவிக்கனும்.அதுதான்  சாஸ்திரம் # கா த 


4  வெற்றி என்பது எனக்கொரு கொண்டாட்டமே அல்ல; அது என் அன்றாட வாழ்க்கை! - சூரபத்மன் ! #கா.த


5 சின்ன  நடிகனோ , பெரிய நடிகனோ  தினமும் ஒத்திகைக்கு  வரனும்.அதுதான்  நல்ல நடிகனுக்கு அழகு @ கா த 



6 மகாராணியா இருக்குறது வாழ்க்கை இல்லை, மனசுக்குப் புடிச்சவன்கூட இருக்குறதுதான் வாழ்க்கை !


7  குரு தான்  சாபம்  இடனுமா? நான்  குருவுக்கே  சாபம்  இடறேன் # கா த 



8  பெண் சாபமும்  , குரு சாபமும்  என் வாழ்க்கையை  சுத்தி  சிதறடிச்சிடுச்சு # கா த 


9 காசுன்னு  சொன்னதும்   பொண்ணுங்க  உன்  பின்னால  ஓடி  வந்துடுவாங்கனு  நினைச்சுடாத #  கா த


10 எந்தத்தகுதியும்  இல்லாத நீ  ஜெயிச்சுக்கிட்டே இருப்பே!  எல்லாத்தகுதியும்  இருந்தும்  நான்   தோத்துகிட்டே   இருக்கனுமா? #  கா த






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  டைட்டில்   டிசைன்  . அந்தக்கால  பட ஸ்டைலில். இளைய தலைமுறைக்கு  புதிய  அனுபவம் # கா த






2  வாங்க  மக்கா  வாங்க , எங்க  நாடகம் பார்க்க  வாங்க -ஓப்பனிங் சாங் .ஏ ஆர் ஆர்  ராக்ஸ்.இளையராஜாவால் தான்  இது  போல் இசை அமைக்க  முடியும்




3  ஆர்ட்   டைரக்டர்  ,  காஸ்ட்யூம்  டிசைனர்  , ஒப்பனைக்கலைஞர் என   எல்லா   டெக்னீஷியன்களுக்கும்  செம  தீனி  # கா த

4  மிக  எளிமையான  ஒப்பனைக்குப்பதில் அனைவருக்கும்  மிக் அதீதமான  ஒப்பனையில்  இயக்குநர்  லேசாக  சறுக்கி விட்டார் @ கா த்




5 மலையாளப்படமான  நடன்  படத்தின் சாயலில்  திரைக்கதை  பயணிக்குதே. ம் ம் .


6  இருவர்  படத்தில்  வரும்  தீம்  மியூசிக்  அங்கங்க  வருது


7    ஏய்  மிஸ்டர்  என்னை என்ன  பார்க்கறே   பாட்டு   அப்பட்டமான   உல்டா ஆஃப்  இருவர் பட பாட்டான   ஹலோ மிஸ்டர்  எதிர்க்கட்சி  # கா த 


8 மெலோடி  இசை  வர வேண்டிய  இடங்கள் பலவற்றில்  ரஹ்மான் தன்னையும்  அறியாமல்  தன்  பாணி  மேற்கத்திய இசையைப்புகுத்தியது  பலமா? பலவீனமா?


9   பாடலின்  இடை இடையே அபாரமான  சிறப்புச்சத்தம் சேர்ப்பதில்  விற்பன்னரான  ரஹ்மான்  வசனக்காட்சிகளில்   பின்னணி  இசை  அமைப்பதில்   இளையராஜா   போல கலக்க  முடியவில்லை


10  சித்தார்த்தின்   கமல்  டைப்  நடிப்பை   தூக்கி  சாப்பிடுது  - பிருத்விராஜ்-ன்  ரஜினி  டைப்  வில்லன்  நடிப்பு


11  டெக்னிக்கல் அம்சங்களை  நம்பி  , திரைக்கதையில்  கே  பி  சுந்தராம்பாள்  உண்மைக்கதையுடன்  சுவராஸ்யமாய்  இது வரை. இடைவேளை


Anaika Soti








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  சித்தார்த்  , பிருத்விராஜ்  இருவ்ருக்கும்  பிரமாதமான  ரோல் கொடுத்து  இருவரிடம் இருந்தும்  அபாரமான  நடிப்பை  வர வைத்த  இயக்கம் 


2  ஏ ஆர்  ரஹ்மான் -ன்  கலக்கலான  இசை . 3 பாட்டு  சூப்பர்  ஹிட் . சர்வதேச மார்க்கெட்டிங்க்கு உதவும் 



3  வழக்கமான  காதல்  கதையை  நாடகக்கலைஞர்களின்  பின்னணியில்   சொன்ன விதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1    யார்   போனாலும்   , ஆடியன்ஸ் வர்லைன்னாலும் நான் நாடகம்  நடத்துவேன்  என   பிருத்வி  சொல்வது   புன்னகை  மன்னன் படத்தில்  வரும் கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பாட்டு  லீடு  சீனை  நினைவு படுத்துது. 


2   படத்தின்  ஜீவ நாடியான  ஜமீன்  ராணி  தற்கொலை காட்சி  நாசூக்காக  சொல்லப்படுகிறது. இன்னும்    விஸ்தீரணமாக   காட்டி இருக்கனும் . ஆடியன்ஸ்  மனசில்  அது  பதியவே  இல்லை 


3   சித்தார்த்  கோபமாக  போலீஸ் ஆஃபீசரிடம்  சவால்  விடும்  காட்சியில்  இடது  கையில்  சொடக்குப்போடுவது   செயற்கை. அவர்  இடது கைபழக்கம்  உள்ளவர்  அல்லவே?


4   படத்தின்  ஆரம்பக்காட்சிகள்   மலையாளப்படமான  நடன்  காட்சி அமைப்பை  நினைவுபடுத்துது


5  மணிரத்னம்  இயக்கிய  இருவர்  படத்தின்  சாயல் ஆங்காங்கே  வருவது , சூர்யா  ரகுவரன் நடித்த  படத்தின்  சாயல்   என  சில  அது  போல  சாயல்




சி  பி  கமெண்ட் - காவியத்தலைவன் - அபாரமான நடிப்பு , நல்ல  இசைக்காக பார்க்கத்தூண்டும் கலைப்பூர்வமான  கமர்ஷியல் படம் - விகடன்  மார்க் = 46 . ரேட்டிங்= 3.25/5.முன் பாதி  நல்ல திரைக்கதை , பின் பாதியில்  தடுமாற்றம்.ஏ செண்ட்ட்டரில் மட்டும்  நல்லா போகும் .விமர்சகர்கள் , மீடியாக்கள் பாராட்டைப்பெறும்,ஆனால் வசூலில்  சுமாராய்த்தான் கல்லா கட்டும்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங் -  3.25 / 5