பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு ? நல்ல சரக்கு எப்படியும் விலை போகும் என்பதெல்லாம் அந்தக்காலம் . குஷ்பூவை சீஃப் கெஸ்ட்டா வர வெச்சு குஷ் பூக்கடை என விளம்பரம் பண்ணி கல்லா கட்டுவது இந்தக்காலம் , இதை ஏன் இப்போ சொல்றேன்னா படம் நல்லா இருந்தா மட்டும் போதாது ப்ரமோஷன் பக்காவா இருக்கனும். இது இன்னவகைப்படம்னு தெளிவா ரசிகர்கள் கிட்டே சேர்த்தனும், கோர்ட் ரூம் டிராமா அல்லது க்ரைம் த்ரில்லர் அல்லது சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஏதோ கேட்டகிரில இது வ்ருதுனு அடையாளப்படுத்தனும், போஸ்டர் டிசைன் ல ஹீரோயின் முகம் மடும் க்ளோசப்ல சோகமா இருக்கு . எப்படி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்க ? கேரளா கோட்டயம் சங்கணாச்சேரி அப்சரா வில் ஷோவுக்கு போய் ஆடியன்ஸ் 6 பேர் தான் வந்ததால் ஷோ கேன்சல்., அட்லீஸ்ட் 12 பேராவது வேணுமாம். அப்றம் அடுத்த நாள் கோட்டயம் போய் பார்த்தேன்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோயின் ஒரு ஸ்கூல் டீச்சர் . அம்மா வீட்ல மாவு தயாரிச்சு பாக்கெட் போட்டு விக்கறாங்க ., அப்பா அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ? செக்யூரிட்டி. ஹீரோயினுக்கு 10 வயசுல ஒரு தங்கச்சி வேற இருக்கு
ஹீரோயினோட அப்பா வேலை செய்யற அப்பார்ட்மெண்ட்ல ஒரு 9 வயசுப்பெண்ணை கேங்க் ரேப் செய்ததா வட மாநிலத்தைச்சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதா நியூஸ் வருது. அடுத்து இன்னொரு ஷாக் நியூஸ் அந்த நாலு பேரோட அஞ்சாவது ஆளா ஹீரோயினோட அப்பாவும் குற்றவாளியா சேர்க்கப்படறாரு. ஹீரோயின் அப்பாவைக்காப்பாற்றக்களம் இறங்கறாரு. போலீசால் ஃபிரேம் பண்ணப்பட்ட கேஸ் இது அப்டினு அவர் நம்பறார். எந்த வித பின் புலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத சாதா நபரான ஹீரோயின் இந்த கேசை எப்படி டீல் பண்ணினார் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே கதை
ஹீரோயினா சாய் பல்லவி . அபாரமான நடிப்பு .இவரது கேரக்டர் ஸ்கெட்ச் டிசைன் ப்ண்ணப்பட்ட விதம் அருமை .படம் பார்க்கும்போது இவருக்கு நேரும் பதைபதைப்பு ஆடியன்சுக்கும் நேருது அதுதான் கேரக்டர் ஸ்கெட்ச் க்குகிடைத்த வெற்றி
ஹீரோயினுக்கு உதவும் வக்கீலாக காளி வெங்கட். இவர் ஒரு திக்கு வாய் கேரக்டர் சைடு இன்கம்க்காக மெடிக்கால் ஷாப் ல பார்ட் டைமா வேலை பார்க்கிரார் என்ப்தெல்லாம் கதைக்கு தேவை இல்லாத திணிப்பு . ஆனா அவர் நடிப்பு கனகச்சிதம் . கோர்ட்டில் அவர் வாதிடும் லா பாயிண்ட்ஸ் அபாரம்
தமிழ் சினிமாவில் திருநங்கை கேரக்டர் என்றாலே முகம் சுளிக்கும்படிதான் அமைக்கப்படும். பருத்தி வீரன் மெகாஹிட் படம் உட்பட பல படங்களில் அவங்களை வேஸ்ட் பண்ணி இருப்பாங்க, இதில் ஜட்ஜாக ஒரு திருநங்கை. அதகளம் பண்ணி இருக்கார்
கேரளாவில் ஆடியன்ஸ் எப்போதும் படம் முடிஞ்ச க்ளைமாக்சில் த எண்ட் போட்ட பின் எழுந்து நின்று கை தட்டுவாங்க . இந்தப்படத்தில் ஜட்ஜ் ஒரு பஞ்ச் டயலாக் பேசும்போது ஆரவாரமாக கை தட்டுனாங்க . சபாஷ் டைரக்டர்
பாதிக்கப்ப்ட்ட சிறுமியின் அப்பாவாக சரவணன், ஒரு சாயலில் இவருக்கு விஜயகாந்த்தை நினைவுபடுத்தும் முகம். நல்ல நடிப்பு
ஹீரோய்னின் அப்பாவாக அபூர்வ சகோதரர்கள் புகழ் எங்கேயோ போய்ட்டீங்க சிவாஜி . பரிதாபமான தோற்றம்
இன்னொரு வாட்ச்மேனாக கதைல ட்விஸ்ட் ஏற்படுத்தும் கேரக்டரில் லிவிங்க்ஸ்டன் . க்ச்சிதமான பங்களிப்பு
இந்த மாதிரி த்ரில்லர் படங்களின் உயிர் நாடி பிஜிஎம் தான் . பாடல்கள் ல ஸ்கோர் பண்ண முடியாத கதைக்களத்தில் பின்னணி இசையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா . ஒளிப்பதிவும் கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 எதுவுமே இல்லாம இந்த ஊருக்கு வந்தவன் நீ , கெட்ட பேரே சம்பாதிச்சாலும் அது உனக்கு லாபம் தான்
2 அய்யா மீடியாக்காரங்களே? நீங்க சொல்ல விரும்புவ்து நியூஸ் இல்லை நடந்ததை சொல்வதான் நியூஸ்
3 வேலைக்காரிக்குத்தெரியாத ரகசியம் இந்த உலகத்தில் உண்டா?
4 நேரம் . காலம் விதி எல்லாத்தையும் நம்பு ஆனா பெத்த பொண்ணு என்னை நம்பாத
5 மங்கயராகப்பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மானு சொல்வாங்க எதையும் நம்பிடாத. ஏகபப்ட்ட பிரச்சனைகளை டெய்லி ஃபேஸ் பண்ணனும்
சபாஷ் டைரக்டர்
1 கோர்ட்டில் ஒரு சமயத்தில் அரசுத்தரப்பு வக்கீல் நீதிபதியை கமெண்ட் அடிப்பார் , இதுவே நார்மல் ஜட்ஜா ( ஆணாகவோ பெண்ணாகவோ) இருந்தா இந்நேரம் டக்னு தீர்ப்பு வந்திருக்கும். அப்டினு முனகுவாரு
அப்போ ஜட்ஜ் பொங்கி எனக்கு ஆணோட பலாத்காரம் பற்றியும் தெரியும் , ஒரு பெண்ணோட வலியும் தெரியும் என பதிலடி கொடுக்கும் காட்சி ஆஹா அபாரம் உயிரோட்டமான சீன் அது
2 பலர் இப்பட விமர்சனங்களில் ஹீரோயின் சின்னப்பொண்ணா இருந்தப்ப அவருக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் ஃபளாஸ்பேக்காக ஆங்காங்கே வருது . மெயின் கதைக்கும் அந்த காட்சிக்கும் என்ன சம்பந்தம் ? என கேட்டிருந்தாங்க . அது நிச்சயம் வேண்டும், ஹீரோயின் சிறுமியா இருக்கும்போது ஸ்கூல் வாத்தியார் பாலியல் சீண்டல் செய்ய முற்படும்போது அப்பா வந்து ஹீரோயினை காப்பாத்தறார். அப்படிப்பட்ட சிறுமிகளின் வலி தெரிந்த அப்பா அந்த தப்பைப்பண்ணி இருக்க மாட்டார் என உறுதியாக அவர் நம்பறார் என்பதற்கு அந்தக்காட்சி அவசியம்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று . சிறுமியின் சித்தப்பா அல்லது ட்யூட்டி மாற்றி விட வரும் லிவிங்க்ஸ்டன் இருவரில் ஒருவர் தான் குற்றவாளி என நான் யூகித்திருந்தேன் ( சுழல் எஃபக்ட்)
லாஜிக் மிஸ்டேக்ஸ் . திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பல வீடுகள் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் மாலை 5.30 மணிக்கு சம்பவம் நடக்குது. 4 பேர் மாடிப்படிக்கட்டுல வெச்சு பாலியல் வன்முறை நிகழ்த்துவது நம்ப முடியாத இடம், ஏன்னா அவங்க தங்கி இருக்கும் வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் இருக்கலாம், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அது ரிஸ்க் ஆச்சே? ( எல்லாரும் லிஃப்ட்ல போய்டுவாங்க ஸ்டெப்ஸ் யாரும் யூஸ் ப்ண்றதில்லை என்ற சால்ஜாப் சொல்லப்பட்டாலும் ஏத்துக்க முடியல )
2 இப்போ சொல்லப்போற விஷய்ம் கொஞ்சம் சங்கடமா இருக்கும், ஆனாலும் சொல்றேன். ம்னோவியல் நிபுணர்கள் கூற்றுப்படி சிறுமியை வன்கொடுமை செய்பவர்கள் பெண் வாசமே படாமல் காய்ந்து கிடப்பவர்கள் அல்லது பெண் துணையே இல்லாமல் ரிமோட் ஏரியாவில் இருப்பவர்கள் தான் சைக்கோ போல அப்படி நடந்துக்குவாங்க ., ஆல்ரெடி மனைவி உள்ள குடும்பத்தில் உள்ள ஆண் அப்படி செய்ய மாட்டான். அதுவும் ஆல்ரெடி 4 பேர் பலாத்காரம் பண்ணி ரத்த வெள்ளத்தில் அப்டியே போட்டுட்டுப்போய் இருக்கும்போது அந்த உடம்பைப்பார்க்கும்போது பரிதாபமும் அசூயை ஆகவும் தான் இருக்கும் கிளுகிளுப்பு மூட் எப்படி வ்ரும்?
3 சிறுமிக்கு டேப்லெட் கொடுக்கும் போலீஸ் ஆஃபீசர் பெரியவங்களுக்குக்கொடுக்கும் அதிக டோஸ் கொடுத்துட்டார்னு லா பாயிண்ட்ல பிடிக்கறாங்க அப்போ அப்பா கூடதானே இருந்தார்? அவர் கிட்டே போலீஸ் ஏன் கலந்தாலோசிக்கலை ?
4 சபாஷ் டைரக்டர் போர்சன்ல நான் சொன்ன ஜட்ஜ் - வக்கீல் வாதம் கை தட்ற மாதிர் இருந்தாலும் லாஜிக்கலா கோர்ட் வளாகத்தில் ஒரு வக்கீல் ஜட்ஜை அப்படி எல்லாம் கமெண்ட் பண்ணவே முடியாது . நீதிம்ன்ற அவமதிப்பு வ்ழக்கில் லாடம் கட்டிடுவாங்க
5 பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகத்தில் முகமூடி அல்லது முகத்திரை போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்படியே ஓப்பனாக கூட்டி வருவது எப்படி ? அவர் முகம் வெளில தேரிஞ்சா பரவாயில்லையா?
6 லிவிங்க்ஸ்டன் மகளை பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரங்க வருவதால் அன்றைக்கு லீவ் என்பதால் ஷிஃப்ட் மாற்ற வரவில்லை சரி ஆனா ஆல்ரெடி பிளான் செய்யப்ப்ட்ட நிகழ்வு என்பதால் அவர் லீவ் என்பதை முன் கூட்டியே சொல்லி இருப்பாரே? திடீர்னு ட்யூட்டி டபுள் டியூட்டி பார்க்க வேண்டியதாகிடுச்சு என்பது எப்படி ?
7 பாதிக்கப்ப்ட்ட பெண் அலல்து சிறுமி வீட்டுக்கு ஹீரோயின் போய் விசாரிப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை ரிஸ்க் வேற சட்டப்படியும் தப்பு
8 லிவிங்க்ஸ்டன் பொண்ணு மாப்ளை வீட்டுக்காரங்க வரும் சமயத்தில் லவ்வரோட ஓடிப்போய்டுச்சு என செய்தி வரும்போது பதைபதைத்து பெண்ணைத்தேடும் வேலை போலீசில் புகார் தரும்வேலை யில் இறங்குவாரா? அல்லது ட்யூட்டிக்கு வர்லை என சொல்லிய அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி ரூமில் போய் தண்ணி அடிச்ட்டு படுத்து இருப்பாரா?
9 மாலை 7 மணிக்கு அபார்ட்மெண்ட்க்கு லிவிங்க்ஸ்டன் போலீசில் அதை மறைப்பது என்ன தைரியத்தில் . சிசிடிவி ஃபுட்டேஜ் காட்டிக்கொடுக்கும் என்பது தெரியாதா? அல்லது யாராவது பார்த்தவங்க சாட்சி சொன்னா மாட்டிக்குவோம்னு தெரியாதா?
10 சம்பவம் நடந்து 30 நாட்களுக்கு மேல் தான் குற்றவாளிகள் பிடிக்கப்படறாங்க. வடக்கே இருக்கறவங்க கெட்டப் மாத்திக்கலை ஓக்கே , ஆனா உள்ளூர் ஆளான ஐந்தாவது குற்றவாளி சிறுமி தன்னை அடையாளம் காட்டிட்டா வம்பு என கெட்டப் மாற்றாமல் அதே பழைய தோற்றத்தில் இருப்பது எப்படி ?
சி பிஎஸ் ஃபைனல் கமெண்ட் - பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம். கமர்ஷியல் அம்சங்கள் இல்லை . ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மதிப்பெண் , குமுதம் ரேட்டிங் யூகம் நன்று 43 அட்ரா சக்க ரேட்டிங் 3 / 5