Showing posts with label காதல் கவிதை (1998) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்). Show all posts
Showing posts with label காதல் கவிதை (1998) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்). Show all posts

Saturday, October 22, 2022

காதல் கவிதை (1998) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ ஜெ மூவிஸ்


 ஒரு  கே  பாலச்சந்தருக்கோ , பாரதிராஜாவுக்கோ  கிடைக்காத  பெருமை  இயக்குநர்  அகத்தியனுக்கு  உண்டு . இந்திய அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  தேசிய  விருதைப்பெற்ற    முதல்  தமிழ்  இயக்குநர்  என்ற  பெருமைதான்  அது . 1996ல்  ரிலீஸ்  ஆன  காதல்  கோட்டை  என்ற  படத்துக்குக்கிடைத்தது. அந்தப்படத்தின்  பிரம்மாண்ட  வெற்றி  1997-1998  ஆகிய  இரு  வருடங்களில்  டைட்டிலில்  காதல்  என்ற   சொல்லை  வைத்து  34  படங்கள்  ரிலீஸ்  ஆகக்காரணமாக  அமைந்தது . 


இவரது  முதல்  படம்  மாங்கல்யம்  தந்துனானே  சுமாராப்போனாலும்  அடுத்த படமான   வான்மதி  கமர்ஷியல்  சக்சஸ். மூன்றாவது  படமான  காதல் கோட்டை  அதிரி  புதிரி  ஹிட்  ஆகி  கமர்ஷியலாகவும்  கலெக்சன்  விமர்சனரீதியாகவும்  பாராட்டுக்களைக்குவித்தது. நான்காவதாக அதே  1996ல்  குறுகிய  கால  தயாரிப்பாக  கோகுலத்தில்  சீதை  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆனது . . ஐந்தாவது  படமான  விடுகதை  ஒரு  பரிசோதனை  முயற்சி . அட்டர்  ஃபிளாப். 


ஆறாவது  படம்  அவருக்கு  புக்  ஆகறப்போ  காதல்  கோட்டை  டைப்லயே  ஒரு  கதை  ரெடி  பண்ணுங்கனு  கேட்டிருப்பாங்க  போல 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  பெரிய  தொழில்  அதிபர் , ஏகப்பட்ட  பிஸ்னெஸ்  பண்றவர்.  ஹீரோயினும்  வசதிதான்  , அசிஸ்டெண்ட்  கமிஷனரின்  மகள் . இருவரும்  அடிக்கடி  மீட்  பண்ணிக்கறாங்க . ஒவ்வொரு  சந்திப்பின்  இறுதியும்  மோதலில் தான்  முடியுது . 


ஹீரோ  லண்டன்  போறாரு , அங்கே  டயானா  கல்லறைக்குப்போறாரு. ஆனந்த  விகடன்  சொல்வனம் , கணையாழி  இந்த  இரண்டிலும்  கவிதை  வந்தா  அது  படைப்பாளிக்குப்பெருமை. நல்ல  நல்ல  கவிதைகள்  எல்லாம்  வரும். அதுல  வந்தாலே  ஒரு  கெத்துதான், ஆனா  தினத்தந்தி  குடும்ப  மலர்ல  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும்


அன்பே!  அன்னக்கொடி , உன்  இதயச்செடியில்  பூக்கும்  காம்பாக  நினைத்தேன் , நீ என்னை  வேம்பாக  நினைத்தாய்  அலட்சியம்  என்னும் அம்பால்  துளைத்தாய்... இந்த  மாதிரி  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும் . இதை  விட  மொக்கையா  டயானா  பற்றி  ஒரு  கவிதை  எழுதி  ஹீரோ  அந்த  சமாதில  வெச்சுட்டு  வர்றாரு. அதே  சமாதிக்கு  ஹீரோயின்   வந்து  கேவலமான  மொக்கைக்கவிதையைப்படிச்சுட்டு  ரொம்ப  சிலாகிச்சு  அதுக்கு  பதில்  கவிதை  எழுதி  வெச்சுட்டு  வருது 


அந்த  பதிலைப்பார்த்து  ஹீரோ மறுபடி ஒரு  கவிதை  எழுதி  வைக்க  என்ன  படம்  இப்படியே  இழுத்துக்குமா? என  நினைக்கும்போது    யூ டர்ன்  அடிக்குது


  காதல்  கோட்டை , மூன்றாம்  பிறை  இந்த  மாதிரி  மெகா  ஹிட்  காதல்  படங்களில்  எல்லாம்  திரைக்கதைல  ஒரு  பக்கம்  தெய்வீகக்காதல்  ஓடிட்டு  இருக்கும்  , இன்னொரு  பக்கம் ஹீரோவை  வாலண்ட்டிரியா  விரட்டி  விரட்டி  காதலிக்கும்  ஒரு  டிராக்  ஓடிட்டு  இருக்கும்


 ஆனா  நிஜ  வாழ்வில்  எனக்குத்தெரிஞ்சு  எந்தப்பெண்ணும்  ஆம்பளையைத்தேடிப்போய்  மேல  விழுந்து  விழுந்து  எல்லாம்  லவ்  பண்ணிட்டு  இருப்பதில்லை 


 ஹீரோ  ஆஃபீஸ் ல புதுசா  வேலைக்கு  சேர்ந்த  பெண்  ஹீரோவை  ஒருதலையா  லவ்வுது .ஆனா  ஹீரோ  கண்டுக்கவே  இல்லை 


ஹீரோயினும்  இந்த   ஆஃபீஸ்  பொண்ணும்  ஆல்ரெடி  தோழிகள் . ஹீரோ  கிடைக்காததால  அந்த  ஆஃபீஸ்  பொண்ணு  ஹீரோயின்  கிட்டே  இவன்  யாரையும்  காதலிக்க  மாட்டான் ,  அலைய  விடுவான்  அப்டினு  சர்ட்டிஃபிகேட்  தர்றா 


நிஜ  வாழ்வில்  நேருக்கு   நேர்  ஆல்ரெடி  சந்திக்கும்போது  எலியும்  பூனையுமா  அடிச்சுக்கிட்டு  இருக்கும்  இவர்கள்  இருவரும்  அந்த  மொக்கைக்கவிதையால   இவங்க  தான்  தான்  தேடும்  துணை  என்பது  தெரியாமல்  காதலிக்கறாங்க . இவங்க  காதல்  எப்படி  வெற்றி  பெற்றது  என்பதுதான்  திரைக்கதை 


 ஹீரோவா  பிரசாந்த் . வைகாசி  பொறந்தாச்சுனு  ஒரு  படம்  ஈரோடு  ரவில  ரிலீஸ்  ஆகி  75  நாட்கள்  ஹவுஸ்ஃபுல்லா  ஓடுச்சு . அப்பவே  பிரசாந்த்  பரபரப்பா  பேசப்பட்டாரு .  தமிழ்  சினிமாவில்  மீசை  இல்லாமல்  நடித்து  ஹிட்  படங்கள்  கொடுத்த  ஹீரோக்கள்  இருவர்தான்  1  கமல்  2  பிரசாந்த் 


  கண்டு  கொண்டேன்  கண்டு  கொண்டேன்  படத்தில்  அஜித்  ரோலில்  முதலில்  புக்  ஆனவர்  பிரசாந்த்தான்  ஆனா  ஐஸ்வர்யா ராய்  தான்  தனக்கு  ஜோடியா  வேணும்  தபு  வேணாம் என்றதற்காக  அந்த  வாய்ப்பை  இழந்தவர் (  எனக்கு  ஒரு  டவுட்  அதுதான்  ஆல்ரெடி  ஐஸ்  கூட  டூயட்  பாடிட்டமே  தபு  கூட  புதுசா    டூயட்  பாடலாம்கற  தொலை  நோக்கு  சிந்தனை  ஏன்  அவருக்கு  இல்லாம  போச்சு  தெரில , தட்  மொமெண்ட்  பெட்ரோமாக்ஸ்  லைட்டேதான்  வேணுமா? }


பிரசாந்த்  மீசை  இல்லாமல்  நடித்ததில்  மிக  அழகா  தோன்றிய  படங்கள் 3    தான்  கண்ணெதிரே  தோன்றினாள்  , ஜீன்ஸ்  ,  காதல்  கவிதை 


  ஹீரோ  நடிப்பு  நல்லாருக்கும் 


ஹீரோயினாக  இஷா  கோபிகர் . இவரது  அழகு  விசித்திரமானது . சைடு  போசில்  லாங்க்  ஷாட்டில் அழகாக  இருப்பார் , ஆனா  க்ளோசப்  ஷாட்டில்  என்னமோ  மாதிரி  இருப்பார் . இவரது    ஹேர்  ஸ்டைல்  நல்லாருக்கும் 


 ஆஃபீஸ்  லேடியாக  கஸ்தூரி . இவர்  பாடும்  தத்தோம்  தகதிமித்தோம்  பாட்டு  ரிலீஸ்  டைமில்  தியேட்டரில்  அதகளமான  ஆர்வாரத்துடன்   ஒன்ஸ்மோர்  கேட்கப்பட்ட  பாடல் . கண்ணியமாக  படமெடுக்கும்   அகத்தியன்  கிளாமரை  நம்பிய  பாடல்  அது 


ஹீரோவின்  அம்மா, அப்பாவாக  அம்பிகா  மணிவண்னன்  கச்சிதமான  நடிப்பு . அதில்  அம்பிகா  ஆரம்பத்தில்   ஹிஸ்டீரியா  வந்த  மாதிரி  கேரக்டராக  டிசைன்  பண்ணப்பட்டிருப்பார் .


 ஹீரோயின்  அம்மா  அப்பாவாக  ஸ்ரீவித்யா  - ராஜீவ் கச்சிதமான  நடிப்பு ‘’


 சார்லி  ஹீரோவுக்கு  நண்பனாக  வருகிறார் 


 படத்தில்  வில்லன்  , ஃபைட்  எதுவும்  கிடையாது 


ஓப்பனிங்கில்  ராஜூ  சுந்தரம்  -  ரோஜா  கெஸ்ட்  அப்பியரன்சில்  ஆளான  நாள்  முதலா  யாரையும்  நான்  தொட்டதில்லை  என  சூப்பர்  கிட்டான  பாடல்  உண்டு  அந்தப்பாடலில்  வரும்  “ உன்னை  நான்  கட்டிக்கிட  என்னைக்குமே  நினைச்சதில்லை  என்ற  வரி  மறைமுகமாக  அப்போது  ராஜூ  சுந்தரம்  காதலித்து  வந்த  சிம்ரனுக்கான  செய்தி  என்ற  கிசு  கிசு  உலா  வந்தது 


  ரவியாதவின்  ஒளிப்பதிவு  பிரம்மாண்டம் . இசை  இளையராஜா . 7  பாட்டில் 3  பாட்டு  செம  ஹிட்டு 



 சபாஷ்  டைரக்டர் 


1   இந்தக்கதையை  சென்னையிலேயே  எடுத்து  முடிச்சிருக்கலாம், ஆனா  லண்டன் , இத்தாலி  டோக்கியோனு    ஊர்  சுத்திப்பார்க்க  ஆசைப்பட்டு  தயாரிப்பாளர்  செலவில்  ஓ சி    டூர்  போன  சாமார்த்தியம், 


2   கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  ரோஜா -  ராஜூ  சுந்தரம்  சாங்கை  திரைக்கதையில்  இணைத்த  விதம் 

3  மொக்கைக்காமெடி  டிராக் ,  வில்லன் , ஃபைட்  எல்லாம்  எதுவும்  வைத்து  நம்மை  சோதிக்காமல்  இருந்தது 


ரசித்த  வசனங்கள் 


1   ஒருத்தர்  ஒரு  பிஸ்னெஸ்  பண்ணி  அதுல  நட்டம்  வந்துட்டா  வேற  யாரும்  அந்த  பிஸ்னெஸ்  பண்ண  முன்  வர்றதே  இல்லையா? அது  போலதான்  காதலும், சில  பேர்  காதலில்  தோத்துட்டாங்க  என்பதற்காக  காதலே  இல்லைனு  ஆகிடாது 


2   தங்கத்துல  செஞ்சாலும்  விறகு  விறகுதான். அது  மாதிரி  தான்  கோடிக்கணக்கா  சொத்து  வெச்சிருந்தாலும்  வீட்டுப்பெண்களை  வீட்டுலயே  அடைச்சு  வெச்சிருக்கக்கூடாது  . நாலு  இடத்துக்கு  வெளில  கூட்டிட்டுப்போகனும்


3  ஆண்கள்  பெண்களுக்கு  உதவி  பண்றப்போ  அவன்  ஜொள்ளு  கேஸ்னு  கிண்டல்  பண்றதை  எப்போ பெண்கள்  நிறுத்தறாங்களோ  அப்பதான்  உருப்படுவாங்க 


4   சில  நேரங்களில்  நாம்  சொல்வது  , செய்வது  இதெல்லாம்  பைத்தியக்காரத்தனமாத்தெரியும் , ஆனா  அதை  செஞ்சு  முடிச்ச  பின்  நம்ம  மனசுக்கு  ஒரு  திருப்தி  கிடைக்கும்   அதுதான்  ஜாப்  சேட்டிஸ்ஃபேக்சன்

 5  உங்க  கனவுல  நான்  வர  முடியாது , ஏன்னா  மத்தவங்களால  அடைய  முடியாத  கனவு நான் 


6   வீட்ல அழகான  பொண்டாட்டி  இக்ருக்கும்போது  நீங்க  இப்படி  தப்பு பண்ணலாமா? 


 ஏம்மா  மின்னல், நீ  வந்த  மேட்டரை  மட்டும்  சொல்லு , பொண்டாட்டி  அழகா? இல்லையா?னு  எங்களுக்குத் தெரியும் 


7   கடைக்காரரே   குடிக்கத்தண்ணி  கிடைக்குமா?  ‘


  பாக்கெட்ல  வேணா  வாங்கிக்குங்க 


  பாக்கெட்ல  தண்ணீர்  வாங்கினா  ஒழுகுமே?


  யோவ்  பாக்கெட்  வாட்டர்


8  சார்  நான்  வாழ்க்கைல  உயரனும்  ஹெல்ப்  பண்ணுங்க 


 உதவின்னா  ஒரு  எம் ஜி யார்  அளவு  வளர்த்து  விட்டா  போதுமா? 


9  அழகான  பொண்ணுங்களுக்கு  ரோட்ல  போற  எல்லா  வண்டிகளுமே  சொந்த  வண்டி தான்  லிஃப்ட்  கேட்டா  கிடைக்கும் 


10   அவ  காதலிக்கறது  உண்மையா  இருந்தா  இன்னைக்கு  நைட்  நல்லா தூங்க  முடியாது. அப்படி  இல்லாம  அவ  தூங்கிட்டா  அது  உண்மையான  காதலா  இருக்காது 


11  மிஸ் , இப்போ எதுக்கு  உங்க  பர்சை  வெளில  எடுக்கறீங்க > 


  யோவ்  அது  சாப்பாடு  , டிஃபன்  பாக்ஸ் 


12  தமிழ்  நாட்டோட  மக்கள்  தொகை  50  கோடி  இருந்தா  அதுல  49  கோடிப்பேரு  கவிதை  எழுதறவனாத்தான்  இருக்காங்க 


13  நான்  எப்பவோ  சொன்ன  ஒரு  பொய்க்காக  என்னை  வெறுக்கறீங்க , ஆனா  எப்பவுமே  பொய்  சொல்ற  கவிதைகளை  ரசிக்கறீங்க 


14  நான்  உங்களை  மாப்ளைனு  ஒரு  விளையாட்டுக்குத்தான்  கூப்பிட்டேன் , சீரியசா  எடுத்துக்காதீங்க 


நான்  ஒரு  பெண்ணை  ஆல்ரெடி  லவ்  பண்றதா  சொன்னேனே  அது  சீரியஸ்  தான்  விளையாட்டா  எடுத்துக்காதீங்க 


15 நான்  எழுதுன  கவிதைகளை  தர்றேன்  படிச்சுப்பாருங்க ‘


 அழகானதை  ரசிக்கலாம்  புத்திசாலித்தனம்  இருந்தா  பிரிண்ட்  பண்ணலாம் 


லாஜிக்  மிக்ஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயின்   லண்டன்ல  டயானா  சமாதில  தன்  கைப்பட  தான்  கவிதை  எழுதி  பேப்பர்ல  வைக்கறாங்க.  அதே  ஹீரோயின்  தன்  கவிதைகளைப்படிச்சுப்பாருங்கனு  குடுத்ததும்  அவர்  கைபப்ட  எழுதுனதுதான்  .  டைப்பண்ணதுனு  சமாளிக்க  வழி  இல்லை, ஏன்னா  க்ளோசப்  ஷாட்ல  சிக்னேச்சர்  தெரியுது , அப்போ  ஹீரோவுக்கு  இரண்டும்  ஒரே  ஆள்  தான்  என்பது  தெரியலையா? 


2  ஹீரோவுக்கு  கஸ்தூரியைப்பிடிக்கலை . அதை  அவர்  ப்ரப்போஸ்  பண்ணப்பவே  தேங்காய்  உடைச்ச  மாதிரி  சொல்லி  இருக்கலாமே?  ஹோட்டலுக்கு  வாங்கனு  நடக்கடிச்சு   ஒரு  பாட்டுப்பாடி  எதுக்கு  இழுக்கனும் ?


3    கஸ்தூரி  ஹீரோவை  லவ்  பண்றதா  சொல்ற  சிச்சுவேஷன்ல  லவ்  மூட்  சுத்தமா  இல்லை , சில்க்ஸ்மிதா  ஹஸ்கி  வாய்ஸ் ல  நேத்து  ராத்திரி  யம்மா  தூக்கம்  போச்சுடி  சும்மா  அப்டினு  விரகதாபத்துல  பேசற  மாதிரி தான்  ஐ  லவ்  யூ  சொல்லுது 


4   கவிதை  பேப்பர்  வைக்கும்  ஹீரோயின்  யார்  என  கண்டுபிடிப்பது  ஈசி ,  ஹீரோ  அங்கேயே  வெயிட்  பண்ணினா  ஹீரோயின்  வரும்  வைக்கும்  பார்த்து இருக்கலாம், அதை  விட்டுட்டு  50,000  ரூபா  செலவு  பண்ணி  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சி  வெச்சு  அதுக்கு  தலைவாசல்  விஜயை  புக் பண்ணி  அவருக்கு  வேற  தண்டமா சம்பளம் 


5  டயனா  சமாதில  லட்சக்கணக்கான  பூ  பொக்கேக்கள்  கவர்கள்  எல்லாம்  வரிசையா  இருக்கு , இவங்க  வைக்கற  லவ்  லெட்டர்  கரெக்டா  எப்படி  அவங்க கைக்கு  சேருது?


6  ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு  பேர்  எழுதுன  மொக்கைக்கவிதைகளும்  இங்க்  பேனாவில் தான்  எழுதி  இக்ருக்காங்க  லண்டன்ல  எப்பவும்  மழை  அல்லது  பனி  இருக்கும், இங்க்  அழிஞ்சிடாதா?  லெட்  பேனாவில்  எழுதி  இருக்கலாம் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்=  சும்மா  கலாய்ப்புக்காக  கிண்டலா  சில  விஷயங்கள்  எழுதி  இருந்தாலும்  இது  ஒரு  ஹிட்  படம் , ஈரோடு  ஆனூரில் 40  நாட்கள்  ஓடிய  படம்,  பார்க்காதவங்க  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75  / 5   விக்டன்  மார்க்  43 







Kaadhal Kavithai
Kaadhal Kavithai poster.jpg
Poster
Directed byAgathiyan
Produced byMurali Manohar
Starring
CinematographyRavi Yadav
Edited byLancy-Mohan
Music byIlaiyaraaja
Production
company
Metro Film Corporation
Release date
  • 25 December 1998
Running time
145 minutes
CountryIndia
LanguageTamil