ரேஷ்மா கட்டலா வின் கதை , திரைக்கதை யை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் என்பதால் ஹீரோயின் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணி விட்டாரோ என்னவோ? மலையாளத்தில் வெளியான ஜூன் , ஹிந்தியில் வெளியான ஓம் ஷாந்தி ஒசானா படத்தையும் ஆங்காங்கெ நினைவூட்டுகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சினிமா பைத்தியம், எல்லா ஹிட் படங்களையும் பார்த்து அதில் வருவது போல நமக்குக்காதல் வர வேண்டும் என நினைப்பவர்.ஸ்கூலில் படிக்கும்போது ஒருவனைக்காதலிக்கிறாள் , அவன் என்னடான்னா சாப்பாட்டு ராமனாக இருக்கிறான், நாயகியைக்கண்டு கொள்ளவில்லை .
அடுத்து காலேஜ் வாழ்க்கையில் ஒருவனைக்காதலிக்கிறாள் . அவனும்தான். இருவரும் காதல் வானில் சிறகடித்துப்பறக்கலாம் என நினைக்கும்போது ஒரு நாள் தன் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்க,மாக இருப்பதைப்பார்த்து விடுகிறாள் நாயகி
பிரேக்கப் பண்ணி விட்டு கொஞ்ச நாள் சோகமாக இருக்கிறாள் . பிறகு டேட்டிங் ஆப் மூலம் பல இளைஞர்களை இண்டர்வ்யூ எடுத்து எதுவும் தேறாமல் மீண்டும் சோகம் ஆகிறாள்
பெற்றோராகப்பார்த்து ஒரு அரேஞ்சுடு மேரேஜ் செய்து வைக்கிறார்கள் . அது சக்சஸ் ஆனதா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகி ஆக ரிது வர்மா . ஸ்கூல் லைஃப் , காலேஜ் லைஃப் இரண்டு கால கட்டங்களிலும் இவரது ஹேர் ஸ்டைல் சகிக்க வில்லை . பிறகு ஓரளவு பரவாயில்லை . பல இடங்களில் ஓவர் ஆக்டிங்
இவருக்கு ஜோடியாக வரும் அனிரூத் கனகராஜன் ,பவன் அலெக்ஸ் , அகிலன் மூவரும் பரவாயில்லை என்றாலும் கணவனாக வரும் வைபவ் கலக்கி விட்டார் . முழுக்கதையில் ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமான நடிப்பு இவருடையதுதான்
க்ளைமாக்ஸ் போர்சன் கச்சிதம்
ஜி வி பிரகாஷின் இசை பின்னணி இசை கனகச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 என் காதல் நிறைவேற எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போவேன்
சரி , அவனைக்கல்யாணம் பண்ணிக்குவியா? மாட்டியா? அதை சொல்லு
2 முட்டை பப்ஸ்ல பாதி முட்டைதான் இருக்கு என்பதற்காக அதை [பாதி முட்டை பப்ஸ்னு சொல்ல முடியுமா? அது மாதிரிதான் என் காதலும், ஒருதலைக்காதலா இருந்தாலும் அது முழுமையான காதல்தான்
3 உன்னை சரியாத்தெரியாதே? எப்படி டேட்டிங் வர ?
சரியாத்தெரிஞ்சுக்கத்தான் டேட்டிங்
4 பொண்ணுங்களுக்கு லவ் சாங்க்ஸ் ஆயிரக்கணக்கில் இருக்கு , ஆனா பிரேக்கப் பாட்டு ஒண்ணு கூட இல்லை
5 மோர் குடிச்சு உண்ணும் விரதத்தை முடிச்சுக்கறேன்
6 நான் ஒரு கதாசிரியர் , கதை தான் வரும் , என் கிட்டே கேஷ் வராது , பில்லை நீயே பே பண்ணிடு
7 சினிமா தான் உலகிலேயே சிறந்த அழகான ஃபிராடு
8 உன் வெட்டிங் நைட் இப்படி ஆகும்னு நீ எதிர்பார்த்து இருக்க மாட்டியே?
மேரேஜ் ஆகும்னே எதிர்பார்க்கலை
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - நம்ப முடியாத காட்சிகள் , செயற்கைத்தனமான நடிப்பு , ஓவர் ஆக்டிங் எல்லாம் மைனசாக இருந்தும் ரசிக்கும்படி இருக்கிறது என்பதுதான் பிளஸ் . ரேட்டிங் 2.75 / 5